Tuesday, November 26, 2013

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் என்ன அவரது சொந்த படைப்பா ????????

இணையத்தில் பேபி ஆனந்தும் அவரை போல் செல்வராகவனை தீவிரமாக இரசிக்கும் இரசிகர்களும் அதிகமாக குறிபிட்டு பேசுவதும் சிலாக்கித்து கொள்வதும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தான்.

மற்றவர்கள் அந்த படைப்பின் மேல் வைக்கும் விமர்சனங்களும் அவைகளுக்கு இவர்கள் சொல்லும் சமாதானங்களும் பார்க்கும் போது உண்மை என்ன என்று தெரியாமல் இவர்கள் இருவரும் சண்டை இட்டுக்கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும்.

இதற்கு முன் பல தடவைகள் எடுத்து எழுதியது போல், கதையை அடிப்படையாக கொண்டு திரைகதை எழுதி படம் எடுப்பது வேறு. ஆங்கிலத்தில் வந்த படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் தமிழில் மட்டும் மாற்றி இன்னும் கொஞ்சம் தமிழ் மக்களையும் அவர்களது பழக்கங்களையும் மட்டும் திணித்து அசலை அப்படியோ கொடுக்கும் ஒரு கொடூரம் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

இத்த சூத்திரத்தை கையாண்டு பெரிய அளவில் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் எல்லா பெயரையும் வாங்கிக்கொண்டு தமிழ்படைப்புலகின் தன்னிகரில்லா நீவீன படைப்பாளி என்று பெயர் பெற்று இருக்கும் மணிரத்தினம் தான் அவர்.

மணிரத்தினம் சொந்தத்தில் கதை எழுதி படம் எடுத்தது ஆரம்ப காலங்களில் மட்டுமே, அதற்கு பிறகு மிகவும் புகழ் பெற்ற ஆங்கில மற்று ஐரோப்பிய திரைபடைப்புகளை அப்படியே தமிழுக்கு உருட்டி எடுத்து கொடுப்பதும் அதுவும் நல்லபடியாக வியாபாரம் ஆகுவதுமாக இருந்தது.

இந்த வகையில் மணிரத்தினம் எழுதி இயக்கி தயாரித்த இராவணன் மிகவும் பிரபலம் அடைந்த லெசு மிசரிசு Les Misérables படத்தை அப்படியே தமிழில் எடுத்துவிட்டு. இது இராமாயணம், மகாபாரதம், சீதை, இராமன், அனுமன் என்று பத்திரிக்கைகளில் ஒரு தொடுப்பும் கொடுப்பார்.

2012ல் இந்த படத்தை ஆங்கிலத்தில் மீண்டும் எடுத்தார்கள் அந்த படைப்பை கௌரவிக்கும் விதமாக.

பாத்திரபடைப்புக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் என்று அனைத்து ஒற்றுமையையும் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் காணலாம் இந்த படங்களில்.

உமா துருமேனும் ஐசுவரியாவும் சரியாக அந்த பாத்திரத்திற்கு பொருந்தினார்கள். மற்ற எல்லா பாத்திரங்களும் அவர்களுக்கு துணையாக வரும் பாத்திரம் ஆனதால் மணிரத்தினமும் ஐசுவரியாவை வைத்துக்கொண்டு மற்றவர்களையும் அது போல தேர்ந்து எடுத்துகொண்டார். இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகளை காட்சிக்கு காட்சி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வழியில் செல்வராகவனும் குதித்து தனது திறமையை காட்ட துவங்கிய போது தான் அவருக்கு சரிவு துவங்கியது.

ஆங்கிலத்தில் காங்கோ  Congo (1995) என்று ஒரு படம்
http://www.imdb.com/title/tt0112715/?ref_=nv_sr_1
இத்த படத்தை தான் ஆயிரத்தில் ஒருவனாக செல்வராகவன் எடுத்துள்ளார்.

புதைந்து கிடக்கும் சாலமன் குகையில் கிடக்கும் வைரங்களையும் பொருட்களையும் மனதில் கொண்டு ஆப்ரிக்கா பயணபடும் ஒரு செல்வந்த கும்பலும். தான் வளர்க்கும் செல்ல குரங்கை அதன் காட்டிற்கு கொண்டு காட்டிவிட்டு திரும்பி வரும் ஒருவரும். வரலாற்று ஆராய்சியில் சாலமனின் குகைபற்றி அறிந்து அதன் செல்வத்தை கொள்ளை கொள்ள வரும் ஒரு நபரும் என்று ஆப்ரிக்க காடுகளில் பயணிக்கும் காங்கோ கதை.

காங்கோவில் வரும் அந்த கருங்குரங்கு பாத்திரத்தை தமிழில் கார்திக்காகவும், ஆங்கில கதாநாயாக வரும் பாத்திரத்தை ரீமாவாகவும் மாற்றி இருப்பார் தமிழில்.

இதைவிட கொடூரம் அந்த சாலமன் குகையை காக்க எண்ணிய மன்னன் அங்கே சில குரங்குகளை கொடூரமாக பழக்கி அங்கு வரும் ஆட்களை கொன்று குவிக்க என பழக்கப்படுத்து பிறகு தலைமுறை தலைமுறையாக அவைகள் கொடூர விலங்கினமாக பரிணாமித்து இருக்கும் என்று காட்டியதை தான் தமிழ்ல் பழங்கால மன்னராகவும் தமிழர்களாகவும் படம் எடுக்கும் கொடுமையும் துணிவும் செல்வராகவனுக்கு மட்டும் தான் வரும்.

அந்த கொடிய குரங்குகள் அங்கு வந்த புதையல் கொள்ளை காரர்களை தாக்கும் போது உடன் சென்ற குரங்கு அங்கே குரங்குகளுடன் காப்பாற்றும் காட்சிதான் கார்த்திக் இறுதி காட்சியில் சண்டியிடும் காட்சிகள்.

புதயலை நோக்கி இரவில் ஒரு படகு பயணம் இருக்கும் அந்த படகுகளை நீர் யானை கடித்து நாசம் செய்வதாக காங்கோவில் வரும் அந்த காட்சிகளை கூட விட்டு வைக்காமல் மணிரத்தினம் போல் மொழி மாற்றும் கலாச்சார மாற்று மட்டு செய்து ஏதோ ஒரு வகையான் மீன் துரத்துவதாக காட்டியுள்ளது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்க ஆனந்தும் மற்றவர்களும் ஒரு உண்ணத படைபாளியின் படைப்பு கேவலப்படுத்த பட்டுவிட்டதே என்று புலம்புவதை பார்த்து சகிக்கமுடியாமல் இவைகளை எழுதுகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் வந்ததும் இவைகளை எழுதவேண்டு என்று இருந்த என்னை தமிழர்களின் வரலாறை போற்றி படங்களே வருவது இல்லை அந்த வகையில் இதுவும் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டு வைத்தே. ஆனால் செல்வராகவனே அந்த படைப்பை கொளுத்த வேண்டும் என்று சொல்லும் போது எழுதினால் தவறு இல்லை என்று தான் தோன்றுகிறது எழுதுகிறேன்.

பரீட்சையில் பார்த்து எழுத துவங்கிவிட்டால் தனக்கு என்று எதுவும் மனதில் தோன்றாது. கொஞ்சன் நஞ்சம் படித்தவைகள் கூட மறந்து போகும். அந்த நிலைதான் அடுத்தவரின் படைப்பை அப்படியே உருட்டி எடுக்கும் வேலையும். அந்த மூலத்தை தான் அவர்களுக்கு எந்த சிந்தையும் வருவது இல்லை. மணிரத்தினம் அப்படி தான்.

என்ன மணிரத்தினம் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் பெயர் வாங்கிவிட்டார், அவரை பார்த்து அதே முயற்சியில் இறங்கி நன்றாக தன்னை தொலைத்துவிட்டு அலைகிறார் முகத்தை தேடி செல்வராகவன். இந்த வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள் செல்வராகவன், உங்களுக்கு இயக்க தெரியும். நல்ல கதையை தேடி பிடித்து அழகாக எடுங்கள், கதையா இல்லை, இல்லை உங்களுக்கு தான் கற்பனை வற்றிவிட்டதா...........உங்களால் முடியும் மீண்டும் மீண்டு வந்து மக்கள் இரசிக்கும் வண்ணமாக ஒரு நடுத்தர வர்க கதை எடுங்கள்.................மீண்டும் பழைய செல்வராகவனாக வலம் வரலாம்..............மணிரத்தினமே இப்போது அந்த யோசனையில் தான் இருப்பார்.........

9 comments:

Anonymous said...

Its main theme was taken from novel 'Time Line' not Congo as you mentioned.Time line and Congo both are written by Michael Crighton.

')) said...

இப்போதுதான் இதைப் பற்றி அறிந்து கொண்டேன்

Anonymous said...

நோகாமல் நொங்கு திங்க ,இதெல்லாம் சகஜமப்பா ...

Anonymous said...

Ravanan and les miserables are in no way connected,have you read the book or seen the movie,it was actually made a long time ago beautifully in Tamil with Nagaiah as the protagonist .(ehlzai padum padu).

')) said...

லெசு மிசரிசு - Les Misérables இதை லெ மிசரபிள் என தானே குறிப்பிடவேண்டும்.

இந்த அளவு நம் இயக்குநர்கள் மௌனத் திருட்டுக்களை அலசியுள்ளீர்கள். கலக்குங்கள்.

')) said...

எனக்கு ஆங்கில படம் தான் தெரியும், ஒரு பக்கம் காங்கோவையும் மற்ற பக்கம் ஆயிரத்தில் இருவனையும் ஓடவிட்டு பார்த்தால், மொழியும் ஆட்களும் தான் மாறி இருப்பார்கள். மற்றபடி செயல் எல்லாம் ஒரு போல இருப்பதை காண முடியும். முயற்சித்து பாருங்கள். அதை தான் திரைபட மொழியில் திரைக்கதை என்று சொல்வார்கள். ஒரு வெற்றி கண்ட படத்தை அப்படியே மொழிமாற்றி அவர்களுக்கே சொல்லாமல் உருட்டிக்கொடுப்பது இப்படிதான். ஆனானி வருகைகும் மைக்கேல் கிரிங்குடன் பற்றிய தகவலுக்கும் நன்றி.

')) said...

யோகன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சமீபத்தில் இதுபோல் ஏறாளமாக வந்துக்கொண்டு இருக்கிறது.

')) said...

வாங்க அனானி, நோகாமல் நொங்கு எல்லாம் கிடையாது செல்வராகவனை கேட்டு பாருங்கள் எவ்வளவு இவைகளுக்காக நொந்தார் என்று சொல்வார். ஒரு படத்தை அப்படியே திருப்பி எடுக்கவும் ஒரு திறமை வேண்டும், அதுவும் மொழிமாற்றி கலாச்சாரம் மாற்றி எடுக்க நிறைய திறமை வேண்டும். ஆனால் எல்லாம் விழலுக்கு விட்ட நீராகி போனதே என்று வருத்தமாக இருக்கிறது.

')) said...

இராவணனையும் லெசு மிசரபில்சுகும் ( நன்றி யோகன்) இருக்கும் கதையில் மட்டும் இல்லை எல்லா காட்சி வசனங்களிலும் தான் அவைகள் தெரிகின்றது. எப்படி எல்லாம் மாற்றி கொடுத்து இருக்கிறார் என்று விரிவாக எழுதி இருக்கிறேன் பார்க்கவும் http://panimalar.blogspot.com/2010/08/blog-post.html எனது பார்வையில் தவறு இருந்தால் கட்டாயம் சுட்டிக்காட்டவும்.