Thursday, May 30, 2013

மூன்று பேர் மூன்று காதல் - விமர்சனம்

கடலும் கடல் சார்ந்த பகுதியின் படங்கள் தொடர்சியாக வருகிற காலம் போலும்.

கடல் படத்தில் காட்டாமல் போன உணர்சிகளை அருமையாக காட்டியுள்ளார் வசந்து, வாழ்த்துகள்.

தனது எல்லா படங்களிலும் ஒரு செய்தியை சொல்லி படம் கொடுப்பது வசந்தின் வழி அந்த வழியில் இந்த படத்திலும் ஒரு அருமையான செய்தியை சொல்லி சென்று இருக்கிறார்.

அந்த உப்பு காத்து கதை மனதில் ஒட்டும் அளவிற்கு மத்த இரண்டு கதைகளும் ஒட்டவில்லை, காரணம் விமல் கதையில் சொல்லும் சம்பவங்கள் முழுக்க சித்தரிப்பது போலே வருகிறது, அதுவும் பாலசந்தரின் 80களில் வந்த படங்களில் காட்டும் உத்திகளை கொண்டு அமைந்துள்ளது வெளிப்படையாகவே தெரிகின்றது.

மூன்றாவது கதை அப்படியே மில்லியன் டாலர் பேபியில் இருந்து எடுத்து ஆண்டு இருப்பது அப்படியே தெரிகின்றது. என்ன ஆங்கிலபடத்தில் அந்த பெண்ணிடம் கிளின்ட் காட்டும் குரு நண்பன் தந்தை என்ற கலவையை காதலனாக மாற்றி குழப்பியுள்ளார் வசந்து. ஆங்கில படத்தில் சாகும் தருவாயிலும் அந்த பெண் கிளின்டுடன் வாதாட தவிர்ப்பது கவிதை அந்த உணர்வுகள் இந்த தமிழ் படத்தில் காணாமல் போனது ஏமாற்றமே.

உப்பு காத்து கதையவே முழுமையாக எடுத்து இருந்தால் அது இன்னமும் ஒரு கடல் படம் போல் இருக்கும் என்று நினைத்து இருப்பார் போலும். குணா - மல்லிகா கதை அருமை அதுவும் சேரன் சுருக்கமாக வசனங்கள் பேசிச்செல்லும் இடங்கள் அருமை. சாந்தி வில்லியம்சை இவ்வளவு சாந்தமாக காட்டவும் முடியுமா என்ன, மன்னித்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு எல்லாம் இன்னமும் மெட்டி ஒலி மறக்கவில்லை. அதுவும் சேரனின் பிரியாவிடை நிகழ்ச்சியில் இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு என்று சொல்லும் இடங்கள் மனதை வருடிச்செல்லும் காட்சிகள், இன்னமும் இது போல் பாத்திரங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்..... அருமை.

மல்லிகா தாமிரபரணியின் நாயகியை நினைவில் கொண்டுவருவது தவிற்க முடியவில்லை, அதே முக அமைப்பு அதே வசன உச்சரிப்புகள் அதே கோணங்கள் என்ன பெண் தான் வேறு.

பாடலில் ஒரு பாடல் கேட்டவுடன் பிடிக்கின்றது மற்ற பாடல்களைவிட பின்னணி இசை நன்றாக வந்து இருக்கிறது.

எத்தனை தான் இல்லாமல் போனாலும் நல்லதை சொல்லும் படங்கள் என்ற தொகுப்பில் இது ஒரு நல்லபடம், வாழ்த்துகள் வசந்து.

1 comments:

')) said...

எத்தனை தான் இல்லாமல் போனாலும் நல்லதை சொல்லும் படங்கள் என்ற தொகுப்பில் இது ஒரு நல்லபடம், வாழ்த்துகள் வசந்து.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள்