ஒரு கலைஞனை பாராட்டும் போது மற்று ஒருவரை தாழ்த்தி தான் அடுத்தவரின் உயர்வை சொல்ல வேண்டும் என்ற தேவை எங்கு துவங்கியது என்று தெரியவில்லை.
விசுவநாதனின் சாதனைகளையும் அவரது பாடல்களையும் ஆராய வேண்டும் என்றால் நமக்கும் நாட்கள் பத்துமா. எத்தனை பாடல்கள் எத்தனை வித்தியாசங்கள். வள்ளல் போல் அவர் கொட்டிக்கொடுத்தவைகளுக்கு என்னத்தை நாம் பதிலாக அவருக்கு கொடுக்க முடியும் இல்லை என்ன மரியாதை செய்த்து அவைகளை ஈடுகட்ட முடியும்.
அவருக்கு திரையுலகம் கொடுத்துள்ள மரியாதை மெல்லிசை மன்னர், இன்னமும் எத்தனை காலம் சென்றாலும் அவரது இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும் வேறு ஒருவரும் அவரது இடத்தை பிடிக்கவே முடியாது.
அனேகமாக பழையபாடல்கள் என்றால் அதில் அதிகம் வானொலியில் இடம் பிடிப்பது இவரது பாடல்களே. இப்போது கிடைக்கும் தொழில் நுட்பங்களின் உதவி இல்லாமலே அந்த அளவிற்கு இசைத்தவர் அவர்.
காலத்தின் ஓட்டத்தில் திரையிசையில் வந்த மாறுதலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் தனது பாணியில் இருந்து சற்றும் விலகாது நின்றவர் அவர். அடுத்து வந்த இசை வடிவங்களை கேலி பேசாமல் வரவேற்ற அவரது மனது அவருக்கு மட்டுமே வரும்.
வெறும் குரலும் வார்த்தைகளும் மட்டுமே போட்டி போட்டு வந்த பாடல்கள் அவைகள். அவரது காலத்தில் கண்ணதாசனின் பங்களிப்பு போல் ஒரு அமைப்பு வராதா என்று மனம் ஏக்கம் கொள்ளாத நாட்கள் இல்லை.
இப்படி இருந்த காலகட்டத்தில் இவரை போல இளையராசாவும் தனது பங்கிற்கு வள்ளல் போல் வாரிவழங்கி அவரது இளவலாக நின்றார் என்றால் அது மிகையாகாது என்று தான் தோன்றுகிறது.
இராசா இராசா தான் என்று எத்தனை முறை நிறுபித்து இருக்கிறார், அவரும் அவர் பங்கிற்கு எத்தனை ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ளார்.
இப்படி எல்லாம் வழங்கியதால் இராசா விசுவநாதனைவிட மிக பெரியவர் என்று நாம் சொல்லாமா என்றால் அது அபத்தம் என்று இராசாவே சொல்வார். சங்கதி அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலைகள்.
இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு, இருவரும் அவர் அவர் காலங்களில் கோலோச்சியவர்கள். அவர்களது சாதனைகளை அவர்களாக மட்டுமே பார்க்கவும் பழகுவோம்.
இவர்களின் சாதனைகளை இவர்களின் சாதனைகளாகவே சொல்வது தான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. அதைவிடுத்து இகழ்ந்தால் அது நம்முடைய குறுகிய மனட்பாண்மையை தான் காட்டுமே அன்றி அவர்களை இழித்து பேசியதாக அமையாது. இந்த எல்லையில் நிறுத்திக்கொள்வோம் விவாதங்களை.
இந்த கருத்துக்களை இராசாவும், விசுவநாதனும் பலமுறை மேடையில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள்.

4 comments:
So many spelling mistakes!!!!!!
"அடுத்து வந்த இசை வடிவங்களை கேலி பேசாமல் வரவேற்ற அவரது மனது அவருக்கு மட்டுமே வரும்."
இல்லை கேலி பேசாமல் இருக்கவில்லை. ஆனா கொஞ்சம் அடக்கி வாசித்தார்.
இளையராஜாவின் ஆரம்பகாலங்களில் விஸ்வநாதன் "அவன் இசையில் அப்படி என்னாதான்யா இருக்கு எல்லோரும் அங்கே போறாங்க என்று பாலச்சந்தர் முன்னிலையில் கூறினார். (அப்போ பாலச்சந்தர் இளையராஜாவிடம் வரவில்லை )
நான் ஆரம்பகாலத்தில் விஸ்வநாதன் சாருக்கும் வயலின் வாசித்திருக்கின்றேன்.
நாகூர் கனி
எழுத்து பிழையை திருத்திக்கொள்கிறேன், சுட்டலுக்கு நன்றி நண்பரே....
நாகூர் கனி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் கொடுத்து இருப்பது புது தகவல், தகவலுக்கு நன்றி.
Post a Comment