Thursday, May 30, 2013

மூன்று பேர் மூன்று காதல் - விமர்சனம்

கடலும் கடல் சார்ந்த பகுதியின் படங்கள் தொடர்சியாக வருகிற காலம் போலும்.

கடல் படத்தில் காட்டாமல் போன உணர்சிகளை அருமையாக காட்டியுள்ளார் வசந்து, வாழ்த்துகள்.

தனது எல்லா படங்களிலும் ஒரு செய்தியை சொல்லி படம் கொடுப்பது வசந்தின் வழி அந்த வழியில் இந்த படத்திலும் ஒரு அருமையான செய்தியை சொல்லி சென்று இருக்கிறார்.

அந்த உப்பு காத்து கதை மனதில் ஒட்டும் அளவிற்கு மத்த இரண்டு கதைகளும் ஒட்டவில்லை, காரணம் விமல் கதையில் சொல்லும் சம்பவங்கள் முழுக்க சித்தரிப்பது போலே வருகிறது, அதுவும் பாலசந்தரின் 80களில் வந்த படங்களில் காட்டும் உத்திகளை கொண்டு அமைந்துள்ளது வெளிப்படையாகவே தெரிகின்றது.

மூன்றாவது கதை அப்படியே மில்லியன் டாலர் பேபியில் இருந்து எடுத்து ஆண்டு இருப்பது அப்படியே தெரிகின்றது. என்ன ஆங்கிலபடத்தில் அந்த பெண்ணிடம் கிளின்ட் காட்டும் குரு நண்பன் தந்தை என்ற கலவையை காதலனாக மாற்றி குழப்பியுள்ளார் வசந்து. ஆங்கில படத்தில் சாகும் தருவாயிலும் அந்த பெண் கிளின்டுடன் வாதாட தவிர்ப்பது கவிதை அந்த உணர்வுகள் இந்த தமிழ் படத்தில் காணாமல் போனது ஏமாற்றமே.

உப்பு காத்து கதையவே முழுமையாக எடுத்து இருந்தால் அது இன்னமும் ஒரு கடல் படம் போல் இருக்கும் என்று நினைத்து இருப்பார் போலும். குணா - மல்லிகா கதை அருமை அதுவும் சேரன் சுருக்கமாக வசனங்கள் பேசிச்செல்லும் இடங்கள் அருமை. சாந்தி வில்லியம்சை இவ்வளவு சாந்தமாக காட்டவும் முடியுமா என்ன, மன்னித்துக்கொள்ளுங்கள் எங்களுக்கு எல்லாம் இன்னமும் மெட்டி ஒலி மறக்கவில்லை. அதுவும் சேரனின் பிரியாவிடை நிகழ்ச்சியில் இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு என்று சொல்லும் இடங்கள் மனதை வருடிச்செல்லும் காட்சிகள், இன்னமும் இது போல் பாத்திரங்கள் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்..... அருமை.

மல்லிகா தாமிரபரணியின் நாயகியை நினைவில் கொண்டுவருவது தவிற்க முடியவில்லை, அதே முக அமைப்பு அதே வசன உச்சரிப்புகள் அதே கோணங்கள் என்ன பெண் தான் வேறு.

பாடலில் ஒரு பாடல் கேட்டவுடன் பிடிக்கின்றது மற்ற பாடல்களைவிட பின்னணி இசை நன்றாக வந்து இருக்கிறது.

எத்தனை தான் இல்லாமல் போனாலும் நல்லதை சொல்லும் படங்கள் என்ற தொகுப்பில் இது ஒரு நல்லபடம், வாழ்த்துகள் வசந்து.

Friday, May 24, 2013

பரதேசி - விமர்சனம்

விமர்சனம் பிடித்த பிடிக்காத செய்திகளை பகிர்ந்துக்கொள்ள மட்டுமே, மற்றபடி படைப்பாளியை இகழ்ந்து போசும் நோக்கோடு அல்ல. படைப்புகளை படைக்க திறமை அவசியம் அது அனைவருக்கும் கைவந்த கலையல்ல.

படம் துவங்கிய காட்சியில் இருந்து கடைசிவரை என்ன நடக்குமோ என்று தவிக்க வைப்பதில் பாலா என்றைக்குமே ஏமாற்றியவர் அல்ல என்று மீண்டும் நிறுபித்து இருக்கிறார்.

இனி தேனீர் அருந்தும் போது எல்லாம் அந்த காட்சிகள் மனதுக்குள் வந்து போவதை தவிர்கமுடியாமல் போகும்.

சூது வாது தெரியாதவர் பாதிக்கப்படும் போது தான் அந்த பாதிப்பின் வீரியம் நன்றாக விளங்குகிறது. அதுவும் வரியோரை ஏய்த்து பிழைப்பு நடத்தும் நம்மோரை திரையில் பார்க்கும் போது மிகவும் கேவலமாக தோன்றுகிறது.

அவன் இவன் படம் இப்படி வந்திருக்க வேண்டிய படம் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், மூலைக்கு மூலை அன்னிய மூதலீட்டில் தொழில்கள் வந்தாலும் எளியோரின் வாழ்க்கையில் மாற்றமே இல்லையே என்ற கருத்து நன்றாக விதைக்கப்பட்டிருக்கும் பரதேசி போல். ஏனோ தவற விட்டுவிட்டார் பாலா.

துவக்க காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை அதர்வாவின் பங்களிப்பு அபாரம். முகத்தில் அப்படி ஒரு அப்பாவி தனம், அவர் அப்பாவை போல. முரளியின் போக்கிற்கு இவரையும் வைத்து சொல்லாத காதல் கதைகள் வராமல் இருந்தால் சரி தான்.

படத்தில் அதர்வா படும் வேதணைகளின் உக்கிரம் படம் பார்பவர்கள் நெஞ்சை பிசையாமல் இல்லை. குறிப்பாக சாப்பிட உட்கார்ந்தவனை விரட்டும் காட்சி கொடுமை.

படம் தேயிலை தோட்டத்தை தொடும் வரையில் அந்த வறுமையிலும் வசந்தம் வீசியதாக தோன்றவைகிறது.

சாப்பாட்டுகே இல்லை என்றாலும் நிம்மதியாக இருந்ததாய் காட்டும் கதையமைப்பு அருமை.

தேயிலை தோட்டத்தில் நிகழும் கொடுமைகள் தோட்டத்தில் இருந்து இன்றைய வேலை பார்க்கும் இடங்கள் வரை தொடர்வது கொடுமையே. குறிப்பாக வெளி நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு தெரியும் என்ன சொல்ல வருகிறேன் என்று.

சார்லி சாப்ளினின் மார்டன் டைம்சு படத்தில் காட்டுவது போல் வெளியே ரொட்டிக்கே திண்டாட்டம் அதிலே கொடுக்கிற காசுக்கு எப்படி எப்படி எல்லாம் வேலை செய்ய சொல்கிறார்களோ அப்படி எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்ற கொடுமை. அதுவும் ஓய்வறையில் இரண்டு நிமிடம் நிற்கிறான் என்று பார்த்து விரட்டும் காட்சிகளை போல் மிகவும் எதார்த்தமான காட்சிகள் தேயிலை தோட்ட காட்சிகள்.

என்ன தேயிலை தோட்டத்தில் காட்டும் பெண்ணின் பாத்திரம் இன்னமும் மனதில் அழகாக பதியும் படி படைத்து இருக்கலாம். சீறும் பாம்பாக அவளை காட்டியதோடு நிப்பாடியது ஏமாற்றமாக அமைந்தது.

முதலாளிகளின் கொடுமை ஒரு புரம் என்றால் குட்டி முதலாளிகளின் கொடுமை அதைவிட கொடுமையாக இருக்கும் என்றதை அருமையாக காட்டியுள்ளார்.

காமம், கூலி கொள்ளை, இயந்தரம் போல் வேலை வாங்குதல், அடி பணியாதவர்களை முடமாக்கி அடுத்தவர்களுக்கு பாடம் புகட்டுதல் என்று ஏகப்பட்ட வன் கொடுமைகளை படத்தின் பின் பாதியில் அள்ளி கொட்டிவிடுகிறார் பாலா. முதல் பாதியில் பார்த்தவைகளை இவைகள் மறக்க அடித்துவிடும் நொடியில் படம் முடிகின்றது.

இதை விட சிறந்த முடிவு படத்திற்கு வேறு எதுவுமாக இருக்கமுடியாது. எதற்காக இவ்வளவு கொடுமைகளையும் அனுபவிக்கிறானோ அதுவே வீணாகி போனால் எப்படி இருக்கும் முடிவு என்ற வேதணையை அழகாக காட்சியாக்கி கொடுத்திருக்கிறார்.

கருத்தபையா பாடல் அருமையாக பொருந்துகிறது மற்றபடி இராசா இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டார் பாலா. குறிப்பாக சோகம் கொட்டும் இடங்களில் சத்தமே இல்லாமல் மழை பொழிவது போல் ஒரு உணர்வு வருகிறது. பல இடங்களில் பின்னணி இசை வெறும் சத்தமாக மட்டும் வந்து போகிறது. பிரகாசு பாட்டோடு முடிந்துவிடுவது இல்லை வேலை என்று என்றைக்கு தான் உணர்வாரோ........

வாழ்த்துகள் பாலா படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.

Saturday, May 18, 2013

பாலாவுக்கு செயமோகன் மோல் உள்ள கோபம் - பரதேசியாக

பரதேசி படத்தை பார்க்கத்துவங்கியதுமே சம்பவங்கள் எல்லாம் எங்கேயோ பார்த்தவைகளாகவே இருக்கிறதே என்று தான் தோன்றியது.

அதுவும் குறிப்பாக தேயிலை தோட்டத்திற்கு ஆள் எடுக்கும் காட்சியில் இருந்து மக்கள் தேயிலை தோட்டத்தில் தங்க வைக்கும் இடத்தை பார்க்கும் காட்சிகளும் சரி, அதன் பிறகு வேலையில் நடத்தப்படும் கொடுமைகளும் சரி அப்படியே அங்காடி தெருவில் பார்த்தை போல் இருக்கிறது.

சொகுசானவர்களின் வசதியான வாழ்க்கை ஆடம்பர தேவைக்கு வசதியற்ற வரியவர்களின் வாழ்க்கை பலிகொடுக்கப்படுகின்றது என்ற கதை தான் இரண்டுமே.

அந்த சோகம் நிறைந்த கதையுனுள் ஒரு அழகான மற்றும் ஆழமான காதலை கலந்து கொடுக்கும் திரைகதையாக இரண்டும் அமைத்து இருக்கிறார்கள்.

அங்காடி தெருவில் நாயகியின் கால் போகும், பரதேசியிலோ நாயகனின் கால் நரம்புகள் வெட்டப்படும்.

அ தெ வில் தைரியம் நிறைந்த பெண்ணாக குடும்ப சுமையை சுமக்கும் பெண்ணாக அஞ்சலி தோன்றுவார், பரதேசியில் அவைகள் இரண்டையும் இரு பெண்களாக பாலா அமைத்துள்ளார்.

இரண்டு படத்திலும் காதலில் சிக்கி படாத பாடு படுவார்கள் இப்படி காட்சிக்கு காட்சி, பாத்திரத்திற்கு பாத்திரம் விவாதித்துக்கொண்டே போகலாம்.

அங்காடி தெருவை பார்த்தபோது பாலாவிற்கு தோன்றி இருக்கும் அடடா இந்த கதையை விட்டுவிட்டோமே என்று. செயமோகன் இப்படி ஒரு நல்ல கதையை இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime படத்தில் இருந்து எடுத்து அழகாக தமிழக கதையாக கொடுத்ததும், அதை வசந்த பாலன் அருமையாக இயக்கியதும் பார்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதே கதையையும் கருத்தையும் பரதேசியாக கொடுத்து இருக்கிறார் போலும்.

http://www.imdb.com/title/tt0395125/



Thursday, May 16, 2013

இளையராசாவும் - விசுவநாதனும் - செழியன் கொளுத்தி போட்ட திரி வெடிக்க துவங்கியுள்ளது

ஒரு கலைஞனை பாராட்டும் போது மற்று ஒருவரை தாழ்த்தி தான் அடுத்தவரின் உயர்வை சொல்ல வேண்டும் என்ற தேவை எங்கு துவங்கியது என்று தெரியவில்லை.

விசுவநாதனின் சாதனைகளையும் அவரது பாடல்களையும் ஆராய வேண்டும் என்றால் நமக்கும் நாட்கள் பத்துமா. எத்தனை பாடல்கள் எத்தனை வித்தியாசங்கள். வள்ளல் போல் அவர் கொட்டிக்கொடுத்தவைகளுக்கு என்னத்தை நாம் பதிலாக அவருக்கு கொடுக்க முடியும் இல்லை என்ன மரியாதை செய்த்து அவைகளை ஈடுகட்ட முடியும்.

அவருக்கு திரையுலகம் கொடுத்துள்ள மரியாதை மெல்லிசை மன்னர், இன்னமும் எத்தனை காலம் சென்றாலும் அவரது இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும் வேறு ஒருவரும் அவரது இடத்தை பிடிக்கவே முடியாது.

அனேகமாக பழையபாடல்கள் என்றால் அதில் அதிகம் வானொலியில் இடம் பிடிப்பது இவரது பாடல்களே. இப்போது கிடைக்கும் தொழில் நுட்பங்களின் உதவி இல்லாமலே அந்த அளவிற்கு இசைத்தவர் அவர்.

காலத்தின் ஓட்டத்தில் திரையிசையில் வந்த மாறுதலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல் தனது பாணியில் இருந்து சற்றும் விலகாது நின்றவர் அவர். அடுத்து வந்த இசை வடிவங்களை கேலி பேசாமல் வரவேற்ற அவரது மனது அவருக்கு மட்டுமே வரும்.

வெறும் குரலும் வார்த்தைகளும் மட்டுமே போட்டி போட்டு வந்த பாடல்கள் அவைகள். அவரது காலத்தில் கண்ணதாசனின் பங்களிப்பு போல் ஒரு அமைப்பு வராதா என்று மனம் ஏக்கம் கொள்ளாத நாட்கள் இல்லை.

இப்படி இருந்த காலகட்டத்தில் இவரை போல இளையராசாவும் தனது பங்கிற்கு வள்ளல் போல் வாரிவழங்கி அவரது இளவலாக நின்றார் என்றால் அது மிகையாகாது என்று தான் தோன்றுகிறது.

இராசா இராசா தான் என்று எத்தனை முறை நிறுபித்து இருக்கிறார், அவரும் அவர் பங்கிற்கு எத்தனை ஆயிரம் பாடல்களை வழங்கியுள்ளார்.

இப்படி எல்லாம் வழங்கியதால் இராசா விசுவநாதனைவிட மிக பெரியவர் என்று நாம் சொல்லாமா என்றால் அது அபத்தம் என்று இராசாவே சொல்வார். சங்கதி அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலைகள்.

இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பதே தவறு, இருவரும் அவர் அவர் காலங்களில் கோலோச்சியவர்கள். அவர்களது சாதனைகளை அவர்களாக மட்டுமே பார்க்கவும் பழகுவோம்.

இவர்களின் சாதனைகளை இவர்களின் சாதனைகளாகவே சொல்வது தான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. அதைவிடுத்து இகழ்ந்தால் அது நம்முடைய குறுகிய மனட்பாண்மையை தான் காட்டுமே அன்றி அவர்களை இழித்து பேசியதாக அமையாது. இந்த எல்லையில் நிறுத்திக்கொள்வோம் விவாதங்களை.

இந்த கருத்துக்களை இராசாவும், விசுவநாதனும் பலமுறை மேடையில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள்.