Friday, March 30, 2012

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால்.........

ஒரு வேளை நரேந்திர மோடி இலங்கை அதிபராக இருந்திருந்தால், ஐ நாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அது இராமர் பிறந்த மண். அதை உலகிற்கே உலக சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ நாவிற்கு காவடி எடுத்து இருக்கும்.

இதே பாணியில் தமிழகம் இத்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி கிடையாது, எல்லை பாதுகாப்புக்காக அந்த பகுதியை நாங்கள் சேர்த்துக்கொண்டோம். வேண்டும் என்றால் இலங்கையுடன் தமிழக அரசியல் தலைவர்களையும் கூட தூக்கில் போடுங்கள் என்று இந்தியா சொன்னாலும் சொல்லும் போலும்.

இப்படி ஒரு காலம் வரும் போது தமிழர்கள் அன்டைய மாநிலங்களில் அகதிகளாக தங்கிக்கொண்டு, இந்திய அரசங்கத்திடம் நாங்கள் வெளி நாட்டில் இருந்து பிழைக்க வரவில்லை, இந்த மண்ணின் பூர்வாங்க குடி என்று ஊர்வலம் நடத்துவார்கள். பிரதமருக்கு தந்தி அனுப்புவார்கள்.

தமிழக அகதிகளை ஒன்றாக இருக்க விட்டுவிட்டால் இப்படி புறா விடு தூது அனுப்பி தொல்லை கொடுப்பார்கள் என்று ஒரு பகுதியரை இராம பக்தர்களாகவும் மற்றபகுதியில் ஒரு தமிழர் இன தலைவரை வளர்த்து, வாய் சொல்லில் வீரராக மாற்றி வேடிக்கை பார்க்கும்.

ஆமாம் தமிழர்களை கர்னாடகா மக்களுக்கு பிடிக்காது, இப்போது கேரளமும் அவர்களோடு சேர்ந்துக்கொண்டது. ஆந்திராவிலோ அங்கே இருப்பவர்களுக்கு அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்ள நேரம் இல்லை. இதிலே தமிழர்களை என்ன செய்ய போகிறார்கள். அதனால் ஆந்திரத்தில் தான் தஞ்சம் புகுவார்கள்.

அங்கே உள்ள திராட்சை தோட்டம் எல்லாம் நல்ல விலைக்கு போகும்.

இந்த மா நிலங்கள் தாண்டி தமிழர்கள் எங்கும் போய் தங்க முடியாது. அப்படியே சென்று தங்கினால், வட நாட்டில் பழங்குடிகளுக்கு எதிராக நடத்தபடும் வன்முறைகளை தமிழர்கள் மேல் ஏவி இராம பக்தர்கள் மகிழ்வார்கள். ஏன்டா அடிக்கிறீங்க என்று கேட்டால், கடவுள் இல்லை என்று சொன்ன கூட்டம் அல்லவா இது என்று போட்டு மிதிப்பார்கள்.

இப்படியே பார்த்தால் தமிழர்களுக்கு சீனாவின் எல்லையில் இருக்கும் சிக்கிம், மிசோராம், அசாம் போன்ற மாநிலம் தான் தங்க தகுந்த இடமாக இருக்கும்.

தமிழர்களும் இந்திய அரசை அது செய் இது செய் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் சீனர்களாகிவிடுவோம் என்று மிரட்டலாம்........

அப்போது தமிழகமாக இருந்த இடத்தில் யார் இருப்பார்கள்................

நல்லவேளை நரேந்திர மோடி இலங்கையின் அதிபராக இல்லாமல் போனார்..................

7 comments:

Anonymous said...

இந்தப் பித்துக்குளித் தனமான ஒப்பீட்டுக்குக் காரணம் என்ன? எதை விளக்க இதைச் செய்திருக்கிறீர்கள்?

Anonymous said...

சம்பந்தமில்லாமல் எதையோ எழுதி இருக்கிறீர்கள். ஒரு வேலை நரேந்திர மோடியும் ஒரு பெரியார் பக்தராக இருந்திருந்தால் உங்கள் கருத்து வேறு மாதிரியாக இருக்கும். அது சரி, உங்களை போன்ற பெரியார் விசுவாசிகள் இலங்கைக்காக என்ன செய்தார்கள், வாய்ச்சொல்லில் வீரராக இருந்தது தவிர?

')) said...

அப்படித்தான் நடக்கும் என்பதில் என்ன ஐயம்? இருக்கும் மண்ணை எல்லாம் பிழைக்கவந்தவனிடம் பறி கொடுத்துவிட்டு 'ஒட்டுக் குடி'யாய் "வாழும்-கலை' தமிழர்களுக்கே உரித்தானது! இலங்கை மண் சிங்களவனிடம் கொள்ளை போனது போல, சென்னை இன்று பாதி கொள்ளை போய்விட்டது! வடவர்கள் இது எங்கள் நாடு என்று சொல்லி தமிழர்களை மூன்றாம்தர குடிகளாக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை! நீங்கள் சொல்வது யாவும் நகைச்சுவை போல மேலுக்கு தெரிந்தாலும் கசப்பான 100% உண்மை அதுவே!
YozenBalki
www.yozenmind.com
Counseling Psychologist/Yozen Therapist, Chennai-17

நீங்கள் சொல்வது போலக் கூட நடந்திருக்கலாம் !!! மோடியை விட ராஜபக்ஷா தேவலை என்று சொல்ல வருகின்றீர்களா ?

')) said...

இப்பால் நான் அப்படி சொல்லவில்லை, என்மீது வீண் பழி சுமத்துகிறீகள்.