டர்ட்டி பிக்ச்சர்
இந்த படம் தயாராகிறது என்றதும், நடிகையாக இருந்தாலும் அதுவும் அந்த மாதிரியான படங்களாக நடித்தாலும் அவளும் ஒரு பெண் என்ற கோனத்தில் தான் படம் தயாரித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் படத்திலோ அவள் ஒரு பெண்ணாக தோற்றுப்போகும் இடங்களில் எல்லாம் அவள் எப்படி தன்னை சமாதான படுத்துக்கொண்டாள் என்று தான் காட்டினார்களே அன்றி அந்த பெண்ணின் மனது படும் பாட்டை அவர்கள் பதிவு செய்ய மறந்துவிட்டார்களா அல்லது மறுத்துவிட்டார்களா புரிய இல்லை.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின்னர் அவன் நல்லவன் ஆவதும் கெட்டவன்னாவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற வார்த்தைகளின் அடைப்படையை சொல்லாமல் தோற்று போன படம் இந்தியின் வண்ணத்தில்.
ஒரு நடிகையின் வாக்குமூலத்தில் அம்மாவின் கவனம் பணத்தின் மேலும் வசதியின் மேலும் ஆளாய் பறக்கும் போது தனக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்று ஏங்கும் அந்த மனித உள்ளத்தின் ஓசை அனைவரின் மனதிலும் பிரதிபலிக்கும் விதமாக அமைத்துள்ள்மைக்கு பாராட்டுவோம்.
வித்தியா பாலன் பார்த்து சங்கடப்பட்டு இருப்பார் ஏமாந்து போனோமே என்று.
காதலனாக நினைக்கும் இயக்குனர் திரைமறைவில் இவளை விலை பேசும் செயல்கள் சகிக்கவில்லை. என்ன தான் கற்பனை என்று இருந்தாலும் காண சகிக்கவில்லை.
பதிவர் அகிலா "மயக்கம் என்ன" படத்தை அண்ணன் தம்பி இருவரும் சேர்த்து சோனியாவை சாட படத்தை பயன் படுத்தியுள்ளார்கள் என்று எழுதி இருந்தார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு சோனியா எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று சொல்வாரா.
வெகு நாட்களாக மனதில் தொக்கி நிற்கும் கேள்வி இது. தனக்கு பெண் வேண்டும் என்று இந்த பணமும் பலமும் படைத்தவர்கள் நினைத்தால் அதற்கு என்று இருக்கும் மக்கள் கிடைப்பார்கள். அதைவிடுத்து சிறுவர் சிறுமியர்களை வன்கொடுமை செய்வது போல் விருப்பம் இல்லா இந்த மாதிரியான பெண்களை அழிப்பதில் இவர்கள் இன்பம் காண்பதாக தெரியவில்லை, மாற்றாக அவர்களின் மனதின் வக்கிரபுத்திக்கு தீணிபோடுவது தான் விளங்குகிறது. மனித வடிவில் உலவும் விலங்குகள்.
படத்தில் எடுத்து வெட்டியது தான் அதிகம் போலும், இன்னமும் திரையில் சொல்லாமல் விட்ட செய்திகள் தெரியாமலே போகட்டும்.................
Saturday, March 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment