Sunday, November 15, 2009

மத்திய இல்லினாய் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா 2009

மத்திய இல்லினாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தீபாவளி விழா 2009 அக்டோபர் மாதம் 24ஆம் நாள் அர்பானா சமூகக்கூடத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவை துவங்கி வைத்து துவக்க உரையாற்றிய தலைவர் திரு கல்யாண சுப்பு அவர்கள், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று 2009 ஆம் ஆண்டிற்கான செயல்வடிவங்களின் முடிவுகளை தொகுத்து வழங்கினார்.

ஆசை(ASHA) இயக்கதினுடன் இணைந்து அவர்களது முயற்சிகளுக்கு ஒருங்கிணைப்புகளை வழங்கியதும். சேம்பைன் நகரத்தில் புதிதாக அமைந்து வரும் கோவில் வளாகத்தின் மரம் நடு வேலைகளை தமிழச்சங்கம் பொறுபேற்றுக்கொண்டு நடத்திகொடுத்தவைகள். மற்றும் தமிழச்சங்கத்தின் 2009ஆம் செயலாண்டுக்கான நிகழ்ச்சிகளின் நிறைவுகளையும் தெரிவித்து விழாவை தொடங்கிவைத்தார்கள்.




கலை நிகழ்ச்சிகளின் துவக்கமாக இல்லினாய் பல்கலைகழத்து மாணவி செல்வி சுபாலட்சுமி 2 பரதம் வழங்கினார்கள். பாடலில் வரும் வார்த்தைகளை அவர் பரதத்திலும் முக அசைவுகளிலும் வழங்கியது அருமை.




செல்வி சுருத்தி வழங்கிய நாட்டிய ஓரங்க நாடகம், கண்ணனின் குறும்புகளை அருமையாக படம்பிடித்து காட்டினார். அந்த கதையில் வரும் 3 நபர்களின் செயல்களையும் தனி ஒரு ஆளாக பரத கலையின் நுணுக்கங்களுடன் அருமையாக வழங்கினார். 12 நிமிடங்கள் நடந்த இந்த நாடகம் அரங்கின் அனைவரது மனதையும் கவர்ந்தது.





இவர்களை தொடர்ந்து, பல்கலை மாணவர்கள் மெல்லிசை விருந்தினை வழங்கினார்கள். 3 பாடல்களை பின்னனி இசைக்கு பாடலாக (Karoke) பாடினார்கள்.


இதை தொடர்ந்து மத்திய உணவு பரிமாறபட்டது. சங்கத்தின் பெண்கள் அணியினரின் சீரிய முயற்சியினால் அருமையானதொரு வீட்டு தயாரிப்புகளாக, உணவு வகைகள் அமைந்து இருந்தது. கூட்டத்திற்கு வந்து இருந்த அனைவரும் உணவு தயாரிப்பையும் உபசரிப்பையும் மனதார புகழ்ந்து சென்றார்கள். உணவு வேலைகளை செவ்வனே நடத்திகொடுத்த பெண்கள் அணியினருக்கு பாராட்டுகள்.


இந்த பெண்கள் அணியினரது முயற்சியில் ஆசை இயக்கத்தினர்களுடன் இணைந்து 2009ஆம் ஆண்டுக்கான நிதியாண்டின் பொருள் சேகரிப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்டோபர் மாத சாம்பார் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக பல்வேறு வேலைகளுக்கு நடுவில் நடத்திகொடுத்தார்கள்.


இந்த சிறப்பு ஒத்துழைப்புக்கு ஆசை இயக்கம் தீபாவளி கொண்டாத்தில் நன்றியினையும் பாராட்டுகளையும் தமிழ்ச்சங்கத்தின் மேடையில் தெரிவித்துக்கொண்டது. ஆசை இயக்க நிறுவாகிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சங்கத்திற்கு கொடுத்தமைக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டோம். வாழுகின்ற சமூதாயத்தின் முன்னேற்ற பணிகளுக்கான பொருள் சேகரிப்பில் பங்கு கொண்டது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.

இதை தொடர்ந்து செல்வி நவீணா மற்றும் சிரேயா வழங்கிய கலப்பிசை நடனம். 5 பாடல்களின் தொகுப்பில் இந்த நடனம் அமைந்து இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் தகுந்தாற் போல், இசையின் வலைவு நெளிவுகளுக்கு தகுந்தாரற் போல் அழகாக நடனமாடினார்கள்.



இதை தொடர்ந்து செல்வி பிரித்தி மற்றும் பிரித்திகா வழங்கிய தமிழ் பாட்டிற்கு நடிப்பு மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது. பாட்டில் வரும் செல்ல விலங்குகளின் செயல்களையும், பாட்டின் சொற்களையும் அழகான உச்சரிப்பு பிரித்திக்கு, மிகவும் அழகான நடிப்பு பிரித்திகாவிற்கு.






தொடர்ட்ந்து செல்வன் பிரித்திவி வழங்கிய மெல்லிசை. வந்தே மாதரம் பாடலை கருவி இசையாக அழகாக வாசித்து காட்டினான்.





இதை தொடர்ந்து செல்வி ஆராதணா வழங்கிய வயலினிசை, 2 ஆங்கில பாடல்களை மேற்கத்திய இசையில் வாசித்துக்காட்டினார்.





தொடர்ந்து செல்வன் கவி வழங்கிய புல்லாங்குழல் இசை. இதுவும் மேற்கத்திய இசையில் அமைந்த பாடல் தான். பாடலுக்கு முன்னர் கவி வழங்கிய தமிழ் முன்னுரை அவரது இசைக்கு மெருகேற்றியது. இளைய தலைமுறைக்கு தமிழ் கற்பிப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது.





கவியை தொடர்ந்து செல்வன் சூர்யா, 2 பாடல்களை கருவி இசையாக வாசித்து காட்டினான். இவைகள் இரண்டும் மேற்கத்திய இலக்கண இசை வடிவங்களாகும். பியானோவில் வாசிப்பவர்களுக்கு ஒரு வசதி உண்டு, தனது பாட்டுக்கு வேண்டிய தாளத்தை தன்னாலே வாசித்துக்கொள்ள முடியும். அந்த முறையில் தாளத்தோடு 2 பாடல்களையும் அருமையாக வாசித்து அசத்தினான் செல்வன் சூரியா.


சூர்யாவை தொடர்ந்து சுருத்தி, மற்றும் ஒரு பியானோயிசை, ஆனால் இந்த பாடல் கர்னாடக இரகத்தில் வாசித்து காட்டினார். கருவி இசையிடன் மெட்டை கூடவே பாடியும் காட்டியது அருமை.




ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விழாவில் செம்பைன் தமிழ் பள்ளியின் சார்பாக, தமிழில் மேடையில் குழந்தைகளை பேச வைப்பது வழக்கம். இந்த முறையும் தலைப்பை தானாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டு பேசும் படி மாணவர்கள் பணிப்பக்கட்டார்கள். இதோ அந்த மாணவர்கள் பேசும் காட்சிகள்.


செல்வன் சிபி தனது இந்திய பயணத்தை பற்றி விவரிக்கும் போது.

செல்வன் கிருடிணா தனது ஐரோப்பிய பயணத்தை விவரிக்கும் போது.


செல்வன் சித்தார்த் கணணியையும் அதன் பயனையும் விவரிக்கும் போது.

குமாரி சிவானி தனது பாட்டி தங்களோடு வந்து தங்கி இருந்ததையும், அவர் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் நாடு திரும்புகிறார் என்றும் உருக்கமாக உரை வழங்கியபோது.




செல்வன் தேசிக மூர்த்தி தனது இந்திய பயணத்தை விவரிக்கும் போது, இந்தியாவில் தான் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்த காணொளியை சுவாரசியமாக குறிப்பிட்டான்.


செல்வி நித்திலா பருவகாலங்கள் என்ற தலையில் அமெரிக்காவின் பருவ காலங்களையும் இந்தியாவின் பருவ காலங்களையும் விளக்கி உரையாற்றும் போது.


பாலாசி மற்றும் தருமராசு வழங்கிய பல்சுவை நிகழ்ச்சி. நகைசுவையாக அமைந்த நிகழ்ச்சி இது. செம்பைன் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான நிகழ்வுகளையும், அவ்ர்களே இந்தியா சென்ற பொழுது நடந்த செயல்களையும் நகைசுவையோடு விளக்கி பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.



செம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களுக்கா நடத்திய காணொளி வினாடி வினா. காட்சிகளை காட்டி அதில் இருக்கும் இந்திய பிரபலங்களை அடையாளம் கானும் படி நடத்திய நிகழ்ச்சி. இதில் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகையில் பெற்றோர்களுக்கு நல்ல விளையாட்டாகவும் அமைந்தது. குறிப்பாக இரவீந்திரனாத் தாகூரின் சிறியவதது படத்தை காட்டி இவர் யார் என்று கேட்டதற்கு பொதுவாக அனைவருமே ஏசு என்றும் விவேகாணந்தர், அரவிந்தர் என்றும் சொன்னார்களே தவிர அவர்களுக்கு தாகூரை குறித்த எண்ணம் கூட வரவில்லை. அருமையாக இருந்த நிகழ்ச்சி இது.



சமார் அமைபின் சார்பில் சங்க உருப்பினர்கள் இரவிசந்திரன் மற்றும் மருத்துவர் சரவணன் இருவரும் நடத்திய எலும்பு மஞ்சை தான பதிவு நிகழ்ச்சி. இந்த அமைப்பு தென்னாசியாவின் மக்கள் அனைவரது மஞ்சை மாதிரிகளையும் சேகரித்து புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு வருகிறது. தென்னாசியர்களுக்கு தேவை என்று வந்தால், எந்தெந்த மக்களின் மஞ்சைகள் கேட்போருக்கு பொருந்தும் என்ற முன்கூடிய தகவல்கள் கிடைக்க செய்கிறார்கள். இந்த பதிவு நிகழ்வை, தமிழ்ச்சங்க விழா முடிந்து மாலை நடந்த ஆசை இயக்க நிகழ்விலும் நடத்தினார்கள்.


பனிமலருக்காக செம்பைன் தமிழ்ச் சங்கம்.

1 comments:

')) said...

நிகழ்வு குறித்த அழகான பகிர்வு. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி நண்பர்களே!