Monday, November 30, 2009
விசாரணை அறிக்கையை அரசுக்கு தெரியாமல் வெளியிடுவது அரசியல் அமைப்புக்கு எதிரான செயல் - செயலலிதா அறிக்கை
டான்சி நில வழக்கில் சாட்சியாக இருந்த ஆவணங்களை எல்லாம் இவரது கைகூலிகளை வைத்து அழிக்க செய்துவிட்டு, திரைமறைவில் எத்தணை காரியங்களை எல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிட்டு மாலை தீர்ப்பு வந்தது ஆள் காட்டி விரலை வானுக்கு காட்டி 'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லு' என்று நமக்கு எல்லாம் தர்மத்திற்கு பாடம் எடுத்த பாட்டி ஆயிற்றே இவர். இவர் இதுவும் சொல்வார் இன்னமும் சொல்வார்.
கொஞ்சம் விட்டால் 1 இலட்சம் பேரை ஒரே நாளில் வேலையை விட்டு துரத்தியது கூட அராசகம் என்றும் கூட அறிக்கைவிடுவார் போலும், கழக கண்மணிகளே கவனம்.......
தினமணியின் நம்பிக்கை துரோகம் தலையங்கமும் BJP யின் கொள்கையும்
கட்டுரையாளர் இதிலே அதிகம் குறை சொல்லி இருப்பது என்னவோ திமுகவை தான். அவர்களால் தான் கோவில்கள் எல்லாம் அழிந்து வருவதாகவும். தமிழை அழிப்பதும் அவர்களே என்றும், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் எப்படி கோவிலின் நிர்வாகத்தை சரிவர கவனிக்கமுடியும் என்றும் கேட்டு எழுதியுள்ளார்.
சரியாகத்தான் சொல்லியுள்ளார் என்று தோன்றுகிறது, இங்கே அவருக்கு தெரியாமலே இரு உண்மையை சொல்லி உள்ளார். ஆத்திகவாதியாக அவர் சொன்ன வாசகமே இப்போது அவருக்கு எதிராக அமைவதை அவர் கவனிக்கவில்லை போலும்.
அவர் சொன்ன இந்த கருத்துக்கு ஏகப்பட்ட பின்னூட்டங்கள், அவைகளில் ஆமாம் ஆமாம் அப்படி தான். அப்படி போடு, இப்படி போடு என்று வகை தொகை இல்லாமல் பின்னூடம் இட்டவர்கள் தான் அதிகம்.
இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வியை கேட்போம். ஆத்திகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அரசாண்டால் கோவில்களையும் அதன் புனிதத்தையும், பண்பாட்டையும் காக்கமுடியாது என்று மிகவும் ஆணித்தனமாகவும் திடமாகவும் நம்பும் உங்களால், சமுதாய சமுத்துவத்தில் அணுஅளவும் நம்பிக்கை இல்லாத பசகவால் (BJP) மட்டும் எப்படி ஒரு ஒன்று பட்ட சமுதாயத்தை கட்டி எழுப்பமுடியும் என்று நம்புகிறீர்கள் என்று சொல்ல முடியுமா.
அல்லது பசக மறைமுகமாக எப்பொழுதும் சொல்வது போல் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாகவாக இருக்கிறது என்று மேடைக்கு மேடை கேட்குமே. அதிலே ஒளிந்து இருக்கும் பதில் எல்லோருக்குமே ஐந்து விரல்கள் தானே இருக்கிறது என்ற உண்மையை முழு பூசனிகாயை சோற்றில் மறைப்பது போல் மறைக்குமே. அதில் எல்லாம் உங்கள் அனைவருக்கும் விருப்பம் தான் போலும். காந்தியும் நேருவும் கனவு கண்ட நாட்டை, கூறு போட்டு நார் நாராக பிரித்து நெருப்பில் போட்டு குளிர் காய நினைக்கும் கூட்டத்திற்கு வால் பிடிக்கும் உங்களையும் தான் அவர்கள் தீயில் இட நினைகிறார்கள். பாவம் இது புரியாமல் அடுத்தவன் தான் அழிகிறான் நமக்கு என்ன என்று நினைகிறீர்கள் போலும்......
Sunday, November 29, 2009
பழசி இராசா - திரைவிமர்சனம்
அதிலும் காட்சிகளில் களரியில் உயர குதித்து தாக்கும் காட்சிகளில் மட்டும் சிறிது உயரம் கூட்டி இருக்கிறார்கள். அதும் கவனித்து பார்த்தால் தான் தெரியும், இல்லை என்றால் சண்டைக்காட்சிகளில் கூட மிகையாக சொல்லாத படம் என்று செல்லிவிடலாம்.
உலகத்தின் அத்தணை வீரர்களையும் வென்ற ஒரே வீரன் துரோகம் தான் போலும். வரலாற்றில் ஏசு முதல் அனைத்து மன்னர்களையும் வீழ்த்தியது இந்த துரோகம் ஒன்றே தான்.
அதிலும் இந்த கதையில் பார்த்து பார்த்து வளர்த்தவனே முன்னில் நின்று அனைவரையும் கொல்ல துணை போகும் காட்சிகளுக்கு கடைசியில் சாகும் போது சரத்துகுமார் சொல்லும் வசனங்கள் நல்ல பதிலடி.
படம் முழுவதும் வசனம் மிகவும் அருமையாக வருகிறது, குறிப்பாக "மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றால் நம்மை தானே சொல்வார்கள்" அருமை.
பதுங்கி தாக்குதலின் அவசியத்தை மிகவும் அருமையாக விளக்கியுள்ளார்கள் படத்தில்.
பழசியை பிடிக்கும் முன், அவனது படைகளில் உள்ள ஒரு ஒருவரையும் விலைக்கு வாங்கும் காட்சிகளில் மனம் பதறத்தான் செய்கின்றது.
வில்லெடுத்து விளையாடும் பெண்ணாய் பத்மபிரியா, அவரது ஒப்பணையும் முக அசைவுகளும் கிங்கு ஆர்த்தரில் வரும் அந்த பெண்ணை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்கமுடியவில்லை. அதிலே அவள் அரசகுமாரி, இதிலோ இவள் ஆதிவாசி பெண்.
முகபூச்சி கொஞ்சமும் இல்லாமல் கொள்ளை அழகாக கனிகா, கணவனை பிரியும் தருணங்களிலும் சரி மற்ற காட்சிகளிலும் சரி. வெறும் முக அசைவுகளிலே நடிப்பை காட்சியுள்ளார். நாட்டின் அரசி இவ்வளவு தான் அழமுடியும் போலும். அந்த மௌன அழுகைகள்................அபாரம் அவரது நடிப்பு.
படத்தின் சிறப்பு ஒலி அமைப்பு பூக்குட்டி என்று ஏகப்பட்ட விளம்பரம்..............அதிலும் வலைஞர்களின் விமர்சனங்களில் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட விமர்சனங்களை படித்த பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பார்த்தேன். நிறைய இடங்களில் காட்சிகளில் தெரியும் அசைவுகளுக்கு கூட ஒலி இல்லை.
குறிப்பாக கோவிலில் குறிகேட்க்கவந்தவர்களை தூக்கில் போடும் காட்சியை பார்த்துவிட்டு அந்த வெள்ளைகாரரின் காதலி விட்டு ஓடும் பொழுது, அந்த வெள்ளைகாரர் வீட்டிற்கு குதிரையில் போய் இறங்கும் காட்சியில் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆட்கள் தரையில் கால்களை அடித்து வணக்கம் சொல்வார்கள். அந்த காட்சிகளில் வெள்ளைகாரனின் காலனி ஓசையை தவிர வேறு ஒன்றும் கேட்க்காது. ஒரு உதாரணத்திற்கு சொன்னேன், இது போல் பல இடங்களில் மனித கோட்டை விட்டுள்ளார்.
கட்டபொம்முவை ஒரு 10 போர் மட்டும் கொண்டு பிடித்து சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாக நமக்கு காட்டியது போல், பழசியையும் அவரது படையையும் வெறும் ஒரு 50 பேர் கொண்டு பிடித்தாக கடைசியில் காட்டுவது ஏமாற்றமாக இருக்கிறது.
டிராய் என்று ஒரு ஆங்கில படம் உண்டு, அதிலே பேரரசன் தனது மகனின் உடலை வாங்க எதிரியிடம் வந்து பேசுவான் அந்த காட்சிகளில் வரும் வசனங்கள் எதிரிக்கு எதிரி பேசிக்கொள்ளும் வசனங்களாக இருக்காது. ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் வசனமாகவும், பொறுப்பு மிக்க படை தளபதியின் வசனமாக இருக்கும். அந்த கம்பீரம் இந்த படத்தின் அனைத்து காட்சிகளிலும் வருகிறது, அரிகரனின் அசத்தும் இயக்கம்.
படம் துவங்கி குன்னத்தே பாடல் வரும் வரையில் படத்திற்கு இசை என்ற ஒன்று இருப்பதாக கூட தெரியவில்லை. அப்படி ஒரு அமைப்பு இந்த படத்திற்கு, அந்த பாடல் வந்த பிறகு தான் படத்தில் இசையும் இருக்கிறது என்று தெரிய துவங்குகிறது. காட்சிகளோடு அப்படி ஒன்றி இருக்கிறது இசை.
அம்பும் கொம்பும் பாடல் படத்தில் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது. அந்த பாடல் மட்டும் இருந்து இருந்தால் அனேகமாக அடுத்து இளைஞர்களுக்கு தெருவெங்கும் இந்த பாடலாகத்தான் இருந்து இருக்கும்.
பாடல்கள் மலையாளத்தில் கேட்டது போல் இல்லை என்று சொல்லாம், அதற்கு வாலியை மட்டும் பலியாக்க முடியாது. மலையாளத்தில் வரும் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை போட்டதால் மனிதன் வம்பில் மாட்டிக்கொள்கிறார். மலையாளம் போல் சங்கத வார்த்தைகளை அப்படியே போட்டிருந்தான் மெட்டுக்குள் இன்னமும் அருமையாக பொருந்தி இருக்கும் போலும்.
படம் மற்றபடி நல்ல வரலாற்று பதிவு.
மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, எனக்கு என்னவோ படத்தை பார்க்கும் போது காட்சிக்கு காட்சி இலங்கையில் நடந்தது தான் நினைவில் வந்து வந்து சென்றது. ஒப்பந்தம் போடுவதும், பிறகு காற்றில் பறக்கவிடுவது. ஒவ்வொறுவராக பிடித்து பொன்னும் பெண்ணும் பொருளும் கொடுத்து காட்டிக்கொடுக்க வைப்பதும் என்றும் வரும் காட்சிகளில் அந்த இரத்த களரிகள் கண்முன் தெரியாமல் இல்லை.........................மனதளவில் பெரிய தாக்கத்தையே உண்டு செய்தது........................................
அமெரிக்காவின் நாட்டுப்பற்றும், அது உலகுக்கு சொல்லும் நீதியும் - பாகம் 1
விலைவாசியை அப்படி கட்டுப்படுத்த முடியவில்லை எனில் தனது வாடியகையாளர்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தில். அவர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் பல விலைசலுகைகளை அள்ளி வீசியும் வருகிறது சில நிறுவணங்கள்.
வேலைக்கு செல்லும் மக்களை மனதில் வைத்துக்கொண்டு துவங்கியது தான் அவசர உணவகங்கள். இவர்கள் பெரும்பாலும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை செயல்படுபவர்கள்.
இவர்களில் சப்வேயும்(Subway) குசினோசப்பும்(Quiznos) போட்டியாளர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு விலையையும், வகைகளையும் கூட்டியும் தங்களது சந்தையில் பிரபலம் ஆனார்கள்.
குசினோவில் தான் சாப்பிடுவது தான் தனக்கு கௌரவம் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது பிரபலம் கூடியது என்னவோ உண்மை தான். அதற்காக இந்தியர்களாலே பசியார முடியாத அளவிற்கு சிறிதாக கொடுத்து, தனது போடியாளரான சப்வே கொடுக்கும் விலையைவிட ஒன்றறை மடங்கு விலை அதிகமாக விற்றும் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், இன்றைகோ அந்த இரு நிறுவணமும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது விலைகளை இறக்கி விற்று வருகிறது. இந்த போட்டியில் யார் வெற்றிக்கொள்வாரோ, அவர் தான் அடுத்து வரப்போகும் வசந்த காலத்தில் கோலோச்ச முடியும்.
இந்த போட்டியை இந்த இரண்டு நிறுவணங்களும் ஆளுக்கு ஒரு மாதிரியாக நடத்துகிறது. சப்வே நிறுவணம் தனது இரகங்களில் பெரிய அளவில் உள்ளவைகளை சின்ன அளவிற்கான விலையில் கொடுக்கிறது. அதனால் அந்த கடையில் யாரும் சின்ன அளவில் கேட்பதே இல்லை.
ஆனாலால் குசினோவோ தனது இரகளில் ஒரு புதிய பெயரில் 3 அல்லது 4 வகைகளை அறிமுகம் படுத்தியது. அந்த அறிமுக அறிவிப்பில் முக்கியமான குறிப்பாக வந்தது அந்த புதிய வகைகள் யாவும் பெரிய அளவு அவகைகளைவிட நீளத்தில் பெரியது என்றது தான்.
நீளத்தில் பெரியது என்று தான் சொன்னேனெ தவிற அகலத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்லும் அந்த கடைகளில், அந்த உணவு வகைகளில் வழக்கமாக வைக்கும் எல்லா பொருட்களையும் வைப்பதும் இல்லை. ஆக மொத்தத்தில் குசினோ ஏமாற்றும் நோக்கத்தோடு தான் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளது போலும்.
இதில் வேடிக்கை என்ன என்றால், இந்த கடைகளை பெரிய நகரங்களில் நடத்தும் மக்கள் அனேகம் பேர் இந்தியர்களும் மற்றும் மற்ற வெளி நாட்டு மக்கள் என்றது குறிப்பிடதக்கது.
இந்த விலையிலே இந்த இரு நிறுவணங்களும் அந்த உணவு வகைகளை கொடுக்க முடியும் அதுவும் தொடர்ந்து 6 மாத காலமாக என்றால், இவ்வளவு நாள் அடித்தது எல்லாம் கொள்ளையா. இதிலே இந்த மெக்குடொனால்சு போன்ற பர்கர் விற்கும் நிறுவணங்கள் இரண்டு ஆண்டுக்கு முன் தனது பர்கரின் அளவை குறைத்து விற்க தொடங்கியது. இன்னமும் விலையும் குறைக்கவில்லை, அளவும் சரி செய்யவும் இல்லை......................
இவர்களை நம்பித்தான் அனேகமான அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள், காலையிலோ அல்லது இரவிலோ ஒரு வேளையாவது இந்த மாதிரியான கடைகளில் அமெரிக்கர்கள் சாப்பிடுவது வழக்கம். இந்த விலையேற்றத்திற்கு பிறகும் அமெரிக்கர்கள் எந்த ஒரு எதிர்ப்போ தெரிவிக்காமலும் இருப்பது மட்டும் இல்லை, அவர்களுக்கு ஆதரவாக இன்னமும் அவைகளை வாங்கி ஊக்கப்படுத்துவது என்ன செயல் என்று தான் புரியவில்லை.........................
Wednesday, November 25, 2009
கீதை - 4
எப்போது தூங்கினான் என்று தெரியாது ஆனால் எழுந்துகொள்ள நேரம் வந்தது அறிவித்துக்கொண்டு இருந்தது அவனது நேரங்காட்டிகள். அவசர அவசரமாக எழுந்து பார்த்தவன், அமைதிபடுத்திவிட்டு மீண்டு ஆழ்ந்தான் உறகத்தில்.
காலையில் எழுந்து தூங்கினால் அப்படி ஒரு தூக்கம் வரும், அந்த தூக்கத்தில் நேரத்தை தவறவிடும் அளவிற்கு ஆழ்ந்த உறக்கம். ஆனால் அன்றைகு என்னவோ அப்படி ஒரு தூக்கம் மறுபடியும் வரவில்லை. என்னவோ தவறவிடுவதாக ஆழ்மனது சொல்ல. என்னவாக இருக்கும் என்று நோட்டம் விட்டபடி விட்டத்தை பார்த்தவாறு படுத்து இருந்தான்.
பிறகு என்னவோ சிந்தையாக அலைபேசியை எடுத்தவன், வீட்டு நினைவுவர. அவசர அவசரமாக அழைப்பைவ்டுத்தான்.
மறுமுனையில் பேசிய அம்மா, என்னப்பா தூங்கினியா. காலையில ஏதாவது சாப்பிடப்பா, வெறும் வயிரா இருக்காத நல்லது இல்லை என்ற முன்னுரைகளுடன் தொடங்கினார்கள். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மா சொன்ன விபரங்கள் அவனுக்கு மனதில் பயத்தையும் ஒரு பெரிய சிந்தனையையும் கொடுத்து இருக்க வேண்டும்.
பிறகு கேட்ட எல்லா கேள்விகளுக்கும், ஒற்றை வார்த்தைகளில் பதில்கள். அதுவும் அழுத்தி கேட்டால் மட்டும் தன் பதிலாக வரவே, அம்மா சரி பிறகு பேசுப்பா என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். இந்த காலை அவனுக்கு பெரிய காலையாக அமைந்தது. இங்க உள்ளவைகளை பார்ப்பதா அல்லது அம்மா சொன்னவைகளை பார்ப்பதா ஒன்றும் தெரியவில்லை. அளவிற்கு அதிகமாக நேரம் ஆனதில் வேறு பதட்டம்.
காலை பரபரப்பில் இன்னமும் அதிகம் தொற்றிக்கொள்ள, ஒரு வெறுமை முகத்துடன் கிளம்பினான். வழியில் பார்க்கும் அனைவரும் என்ன என்ன என்று கேட்கும் அளவிற்கு அவனது முகம் அவனது பதட்டத்தை தெளிவாக காட்டியது.
கடைசியாக குழு ஆலோசனை கூட்டதிற்கு வந்தவன் அங்கேயும் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதிலுரைக்க. குழுதலையோ என்னப்பா என்ன ஆனது என்றும் கேட்டார். ஒன்றும் இல்லை மற்றும் ஒரு புன்முறுவல் அவ்வளவுதான் அவனது பதிலுரை.........
தொடரும்.....
Saturday, November 21, 2009
இளையராசாவும், பூவே பூச்சூடவாவும், How to name itம்
இந்த படத்தில் கேட்க்கும் போது அந்த தொகுப்பில் கேட்க்கும் அளவிற்கு மனதை பிழியும் அளவிற்கு இல்லை என்றாலும். காட்சியின் வீரியத்தை சொல்ல தவறவில்லை. How to name it இல் வரும் 3 பாடல்கள் இந்த படத்தில் வருகிறது.
இது அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கலாம், ஆனால் எனக்கு புதிது. பகிர்ந்துகொள்ளலாம் என்று எழுதுகிறேன்.
Sunday, November 15, 2009
மத்திய இல்லினாய் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா 2009
விழாவை துவங்கி வைத்து துவக்க உரையாற்றிய தலைவர் திரு கல்யாண சுப்பு அவர்கள், விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று 2009 ஆம் ஆண்டிற்கான செயல்வடிவங்களின் முடிவுகளை தொகுத்து வழங்கினார்.
ஆசை(ASHA) இயக்கதினுடன் இணைந்து அவர்களது முயற்சிகளுக்கு ஒருங்கிணைப்புகளை வழங்கியதும். சேம்பைன் நகரத்தில் புதிதாக அமைந்து வரும் கோவில் வளாகத்தின் மரம் நடு வேலைகளை தமிழச்சங்கம் பொறுபேற்றுக்கொண்டு நடத்திகொடுத்தவைகள். மற்றும் தமிழச்சங்கத்தின் 2009ஆம் செயலாண்டுக்கான நிகழ்ச்சிகளின் நிறைவுகளையும் தெரிவித்து விழாவை தொடங்கிவைத்தார்கள்.
கலை நிகழ்ச்சிகளின் துவக்கமாக இல்லினாய் பல்கலைகழத்து மாணவி செல்வி சுபாலட்சுமி 2 பரதம் வழங்கினார்கள். பாடலில் வரும் வார்த்தைகளை அவர் பரதத்திலும் முக அசைவுகளிலும் வழங்கியது அருமை.
செல்வி சுருத்தி வழங்கிய நாட்டிய ஓரங்க நாடகம், கண்ணனின் குறும்புகளை அருமையாக படம்பிடித்து காட்டினார். அந்த கதையில் வரும் 3 நபர்களின் செயல்களையும் தனி ஒரு ஆளாக பரத கலையின் நுணுக்கங்களுடன் அருமையாக வழங்கினார். 12 நிமிடங்கள் நடந்த இந்த நாடகம் அரங்கின் அனைவரது மனதையும் கவர்ந்தது.
இவர்களை தொடர்ந்து, பல்கலை மாணவர்கள் மெல்லிசை விருந்தினை வழங்கினார்கள். 3 பாடல்களை பின்னனி இசைக்கு பாடலாக (Karoke) பாடினார்கள்.
இதை தொடர்ந்து மத்திய உணவு பரிமாறபட்டது. சங்கத்தின் பெண்கள் அணியினரின் சீரிய முயற்சியினால் அருமையானதொரு வீட்டு தயாரிப்புகளாக, உணவு வகைகள் அமைந்து இருந்தது. கூட்டத்திற்கு வந்து இருந்த அனைவரும் உணவு தயாரிப்பையும் உபசரிப்பையும் மனதார புகழ்ந்து சென்றார்கள். உணவு வேலைகளை செவ்வனே நடத்திகொடுத்த பெண்கள் அணியினருக்கு பாராட்டுகள்.
இந்த பெண்கள் அணியினரது முயற்சியில் ஆசை இயக்கத்தினர்களுடன் இணைந்து 2009ஆம் ஆண்டுக்கான நிதியாண்டின் பொருள் சேகரிப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்டோபர் மாத சாம்பார் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக பல்வேறு வேலைகளுக்கு நடுவில் நடத்திகொடுத்தார்கள்.
இந்த சிறப்பு ஒத்துழைப்புக்கு ஆசை இயக்கம் தீபாவளி கொண்டாத்தில் நன்றியினையும் பாராட்டுகளையும் தமிழ்ச்சங்கத்தின் மேடையில் தெரிவித்துக்கொண்டது. ஆசை இயக்க நிறுவாகிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை தமிழ் சங்கத்திற்கு கொடுத்தமைக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டோம். வாழுகின்ற சமூதாயத்தின் முன்னேற்ற பணிகளுக்கான பொருள் சேகரிப்பில் பங்கு கொண்டது அனைவருக்கும் பெருமையாக இருந்தது.
இதை தொடர்ந்து செல்வி நவீணா மற்றும் சிரேயா வழங்கிய கலப்பிசை நடனம். 5 பாடல்களின் தொகுப்பில் இந்த நடனம் அமைந்து இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் தகுந்தாற் போல், இசையின் வலைவு நெளிவுகளுக்கு தகுந்தாரற் போல் அழகாக நடனமாடினார்கள்.
இதை தொடர்ந்து செல்வி பிரித்தி மற்றும் பிரித்திகா வழங்கிய தமிழ் பாட்டிற்கு நடிப்பு மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது. பாட்டில் வரும் செல்ல விலங்குகளின் செயல்களையும், பாட்டின் சொற்களையும் அழகான உச்சரிப்பு பிரித்திக்கு, மிகவும் அழகான நடிப்பு பிரித்திகாவிற்கு.
தொடர்ட்ந்து செல்வன் பிரித்திவி வழங்கிய மெல்லிசை. வந்தே மாதரம் பாடலை கருவி இசையாக அழகாக வாசித்து காட்டினான்.
இதை தொடர்ந்து செல்வி ஆராதணா வழங்கிய வயலினிசை, 2 ஆங்கில பாடல்களை மேற்கத்திய இசையில் வாசித்துக்காட்டினார்.
தொடர்ந்து செல்வன் கவி வழங்கிய புல்லாங்குழல் இசை. இதுவும் மேற்கத்திய இசையில் அமைந்த பாடல் தான். பாடலுக்கு முன்னர் கவி வழங்கிய தமிழ் முன்னுரை அவரது இசைக்கு மெருகேற்றியது. இளைய தலைமுறைக்கு தமிழ் கற்பிப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது.
கவியை தொடர்ந்து செல்வன் சூர்யா, 2 பாடல்களை கருவி இசையாக வாசித்து காட்டினான். இவைகள் இரண்டும் மேற்கத்திய இலக்கண இசை வடிவங்களாகும். பியானோவில் வாசிப்பவர்களுக்கு ஒரு வசதி உண்டு, தனது பாட்டுக்கு வேண்டிய தாளத்தை தன்னாலே வாசித்துக்கொள்ள முடியும். அந்த முறையில் தாளத்தோடு 2 பாடல்களையும் அருமையாக வாசித்து அசத்தினான் செல்வன் சூரியா.
சூர்யாவை தொடர்ந்து சுருத்தி, மற்றும் ஒரு பியானோயிசை, ஆனால் இந்த பாடல் கர்னாடக இரகத்தில் வாசித்து காட்டினார். கருவி இசையிடன் மெட்டை கூடவே பாடியும் காட்டியது அருமை.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விழாவில் செம்பைன் தமிழ் பள்ளியின் சார்பாக, தமிழில் மேடையில் குழந்தைகளை பேச வைப்பது வழக்கம். இந்த முறையும் தலைப்பை தானாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டு பேசும் படி மாணவர்கள் பணிப்பக்கட்டார்கள். இதோ அந்த மாணவர்கள் பேசும் காட்சிகள்.
செல்வன் சிபி தனது இந்திய பயணத்தை பற்றி விவரிக்கும் போது.
செல்வன் கிருடிணா தனது ஐரோப்பிய பயணத்தை விவரிக்கும் போது.
குமாரி சிவானி தனது பாட்டி தங்களோடு வந்து தங்கி இருந்ததையும், அவர் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் நாடு திரும்புகிறார் என்றும் உருக்கமாக உரை வழங்கியபோது.
செல்வி நித்திலா பருவகாலங்கள் என்ற தலையில் அமெரிக்காவின் பருவ காலங்களையும் இந்தியாவின் பருவ காலங்களையும் விளக்கி உரையாற்றும் போது.
பாலாசி மற்றும் தருமராசு வழங்கிய பல்சுவை நிகழ்ச்சி. நகைசுவையாக அமைந்த நிகழ்ச்சி இது. செம்பைன் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான நிகழ்வுகளையும், அவ்ர்களே இந்தியா சென்ற பொழுது நடந்த செயல்களையும் நகைசுவையோடு விளக்கி பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.
செம்பைன் தமிழ் பள்ளி மாணவர்களுக்கா நடத்திய காணொளி வினாடி வினா. காட்சிகளை காட்டி அதில் இருக்கும் இந்திய பிரபலங்களை அடையாளம் கானும் படி நடத்திய நிகழ்ச்சி. இதில் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகையில் பெற்றோர்களுக்கு நல்ல விளையாட்டாகவும் அமைந்தது. குறிப்பாக இரவீந்திரனாத் தாகூரின் சிறியவதது படத்தை காட்டி இவர் யார் என்று கேட்டதற்கு பொதுவாக அனைவருமே ஏசு என்றும் விவேகாணந்தர், அரவிந்தர் என்றும் சொன்னார்களே தவிர அவர்களுக்கு தாகூரை குறித்த எண்ணம் கூட வரவில்லை. அருமையாக இருந்த நிகழ்ச்சி இது.
சமார் அமைபின் சார்பில் சங்க உருப்பினர்கள் இரவிசந்திரன் மற்றும் மருத்துவர் சரவணன் இருவரும் நடத்திய எலும்பு மஞ்சை தான பதிவு நிகழ்ச்சி. இந்த அமைப்பு தென்னாசியாவின் மக்கள் அனைவரது மஞ்சை மாதிரிகளையும் சேகரித்து புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு வருகிறது. தென்னாசியர்களுக்கு தேவை என்று வந்தால், எந்தெந்த மக்களின் மஞ்சைகள் கேட்போருக்கு பொருந்தும் என்ற முன்கூடிய தகவல்கள் கிடைக்க செய்கிறார்கள். இந்த பதிவு நிகழ்வை, தமிழ்ச்சங்க விழா முடிந்து மாலை நடந்த ஆசை இயக்க நிகழ்விலும் நடத்தினார்கள்.
பனிமலருக்காக செம்பைன் தமிழ்ச் சங்கம்.