இந்த படம் பசகவின் கொள்கை பரப்பு படம் என்று எண்ணற்ற பதிவர்கள் எழுதியும். பொதுவாக படம் நன்றாக இருக்கிறது என்று தான் பெரும்பாலோர் எழுதினார்கள்.
படத்தில் கமலகாசன் பேசும் வசனங்களுக்கும், இந்த அர்சுனன் சம்பத் எழுதியுள்ள வசனங்களுக்கும் என்ன பெரியவித்தியாசம்.
மேம்போக்காக பார்த்தால் அர்சுனன் சம்பத்து செல்வது எல்லாம் சரி என்றது போல் தோற்றம் கொடுக்கும் விதமாக எழுதியுள்ளார். இதையும் ஒரு பொது மனிதனின் கோபம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான் போலும்.
வார்த்தைக்கு வார்த்தை இசுலாமிய சமுகதினர் மீது மூர்க தனமாக கருத்துக்களை வீசியுள்ளார். தேசிய கொடியில் காவி நிறம் இருக்கலாமா ஆனால் பச்சை நிறம் இருக்ககூட்டாது என்று எழுதுகிறார்.
நாங்கள் எல்லாம் பள்ளிகளில் படிக்கும் போது, இந்தியா எனது தாய் நாடு, இந்தியர் அனைவரும் எனது உடன் பிறந்தோர் என்று தான் உறுதி மொழி எடுத்துக்கொண்டதாக நினைவு. ஆனால் பசக இந்துக்கள் அனைவரும் உடன் பிறந்தோர் மற்றவர் அனைவரும் எதிரிகள் என்று சொல்லவேண்டும் என்றும் கூட வலியுருத்துவார்கள் போலும்.
இலங்கையில் நடக்கும் உரிமை போர் இங்கே இந்தியாவிலும் வரவேண்டும் என்று தான் பசக நினைத்து செயல்படுகிறது போலும்.
உலகம் உருப்பட இசுலாமிய தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று சொல்லும் அதே தருனத்தில், இந்தியா உருப்பட வேண்டும் என்றால் இந்து தீவிரவாதமும் அழிக்கப்பட வேண்டிய ஒன்றே.
இப்படியே இன்னமும் சில ஆண்டுகள் சென்றாலும், வருகின்ற இளைய தலைமுறை இசுலாமிய மக்களை எதிரிகளாகவே நினைத்துக்கொண்டு தான் வளர்வார்கள் போலும்.
ஒன்று பட்ட இந்தியாவை அழிக்கும் சக்தியாக இருப்பதில் இருந்து இந்த பசக எப்போதுதான் தன்னை மாற்றிக்கொள்ளுமோ.........
6 comments:
//இப்படியே இன்னமும் சில ஆண்டுகள் சென்றாலும், வருகின்ற இளைய தலைமுறை இசுலாமிய மக்களை எதிரிகளாகவே நினைத்துக்கொண்டு தான் வளர்வார்கள் போலும்.//
அத்ற்க்கு ஏண் சில ஆண்டுகள் காத்திருகிறீகள். இப்போதே மராட்டிகளும் குஜராத்திகளும் இஸ்லாமியர்களை எதிரிகளாகத்தான் பார்கிறார்கள். தமிழர்களிலும் சிலர் உள்ளனர்.
//ஒன்று பட்ட இந்தியாவை அழிக்கும் சக்தியாக இருப்பதில் இருந்து இந்த பசக எப்போதுதான் தன்னை மாற்றிக்கொள்ளுமோ.//
அவர்களின் திட்டமே அவர்களின் ஆளுகைகு உட்பட்ட நாடு. அதில் இந்து அல்லாதவர்களுக்கு இடம் இல்லை அதை நோக்கிதான் அவர்களின் அஎயல் பாடு இருக்கும். அதை அவர்கள் மாற்ற மாட்டார்கள்.
மக்கள் இவர்களை முற்றாக ஒதுக்கும் வரை.
உருப்படாத கொள்கைகளை கொண்டு அவர்களும் உருப்படாமல் போவதும், அதோடு சேர்த்து அனைவரையும் உருப்படாமல் போக வைப்பதும் தான் அவர்களது நோக்கம். நல்லவேளை கோவை குண்டு வெடிப்புகளுக்கு அப்பால் எதுவும் கோத்ரா போல் தமிழகத்தில் அவர்களால் நடத்த முடியவில்லை. இல்லை என்றால், வடக்கு போல் தெற்கிலும் பசகவின் அட்டூழியங்களை தாங்க முடியாமலாகி இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லவேளை கோவை குண்டு வெடிப்புகளுக்கு அப்பால் எதுவும் கோத்ரா போல் தமிழகத்தில் அவர்களால் நடத்த முடியவில்லை.//
இவை இரண்டும் பசக நடத்தியதா? புதிய செய்தி
இன்றைக்கு பாகிட்தானத்தில் நடந்த குண்டுவெடிப்பு கூட பசக நடத்தினதுதான்.
அங்குள்ள சிறுபாண்மையினரை கொடுமை படுத்துவது பசகதான்.
எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேச்சு ஏனோ.........
பாக்கிட்த்தானத்தில் நடப்பது தன்வினை தன்னை சுடும். கெடுவான் கேடு நினைப்பான் என்ற இரண்டும். தெரியாதது போல் கேட்கிறீர்களே நண்பரே.......
Post a Comment