படம் மொத்தமும் ஒரே ஒரு வரி கதை, அதுவும் கதைகளில் வரும் திருப்பங்கள் என்று எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே.
படத்தின் மொத்த கதையும் இது தான், தற்செயலாக ஒரு குழந்தை கடத்தலை தடுக்கிறாள் ஒரு பெண். அந்த கடத்தல் கும்பலால் பழிவாங்கப்படுகிறார்கள்.
இப்படி ஒரு படத்தை எடுக்கவேண்டும் என்று முடிவுகட்டிய பிறகு கதை தான் இல்லை, அடுத்தது மற்ற பக்கங்களிலாவது கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் ஓரளிற்கு நிறையாக இருப்பது படபிடிப்பும், பட கோர்வையும் மட்டுமே. அதுவும் படபிடிப்பு முகத்தை வெகு அருகில் காட்டும் போது, கருவிக்கும் பொருளுக்கும் குறைந்தது இந்த அளவு இடைவெளியாது இருக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை கூட உதாசினப்படுத்தி எடுத்து இருப்பதை பார்க்க முடிகின்றது.
உதாரணமாக பாலாவை வெகு அருகில் காட்டும் காட்சிகளில் அவரி முகத்தை விட மூக்கு பெரிதாக தெரிவதும். பட கருவியின் வண்ண சமன் சரி செய்யாமல் எடுத்த காட்சிகளில் நாயகியின் பூச்சுகளை வெள்ளை அடித்ததை போலவும், உதட்டு சாயங்கள் அப்படியே அப்பட்டமாக தெரிவதும் நன்றாக தெரிகின்றது. அனேகமாக மிகையொளி விளக்கே இல்லாமல் இருக்கும் வெளிச்சத்தை கொண்டே படமாக்கி இருக்கிறார்கள் போலும்.
மொத்தமே 6 பாத்திரங்கள் மட்டுமே என்று முடிவான பிறகு ஓரளவிற்காவது இயல்பாக நடிக்க சொல்லிக்கொடுத்து எடுத்து இருக்கலாம். ஆனால் நாயகி முகம் எல்லாம் கிழிந்து கிடக்கும் காட்சியிலும் கூட கண்கள் பனிக்காமல் செயற்கையாக வசனம் பேசுவது போன்ற பல செயற்கை தனம் நிறைய வருகின்றது.
இந்த படத்தை இறுதிவரையில் இருந்து பார்ப்பது கடினமே அந்த அளவிற்கு திரைகதையில் ஓட்டைகள். அது மட்டும் இல்லாது மருத்துவராக வரும் பாலா நெச்சொலியை கேட்ட பின்பும் அந்த கருவியை காதுகளைவிட்டு கழட்டாமலேயே வசனம் பேசுவது எல்லாம் மிகை அதிகம்.
படத்தின் ஒரே ஆருதலான செய்தி படத்தில் தம்பதியர்களது வாழ்க்கையை அமெரிக்க சூழலில் காட்டும் விதமாக அமைத்த காட்சிகளில் மிகை படுத்தாமல் மிகவும் இயல்பாக இருந்த ஒன்றே ஆருதல்.
இந்த நட்டி குமார் ஞான இராசசேகரின் மகன் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மோக முள் எடுத்த அவர் எங்கே இந்த படம் எங்கே மலைப்பாக இருக்கிறது.
அப்பா பெயரை காப்பாறுங்கள் நட்டி குமார்......
Wednesday, September 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment