Thursday, September 10, 2009

முதுகெலும்பு இல்லாத சீனாவும் தன்மானம் இல்லாத பசகவும்(BJP)

அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று இருந்ததை போல இலங்கையில் பாக்கிட்த்தானம் தனது இராணுவ தளவாடங்களை இறக்கியதோடு மட்டும் அல்லாது இந்தியாவை குறிவைத்து தனது இராணுவ நகர்வுகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இந்த நிகழ்வுகள் நிகழ்ந்து சில தினங்களுக்குள்ளாகவே சீனா தனது விமான படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு இந்தியாவின் பதில் நடவடிக்கை என்ன என்று பார்த்து நின்றது. ஒன்றும் செய்யாமல் மட்டும் இல்லை, என்ன செய்வது என்று குழம்பி போய் நிற்கும் சமயத்தை பயன்படுத்திக்கொண்டு தனது இராணுவத்தையும் ஊடுருவ செய்து உலகுக்கே அறிவிக்கும் முகமாக சிவப்பு வண்ணமும் சீனா என்றும் எழுதி காட்டியது.

அதாவது அவர்களது இராணுவம் இந்திய எல்லையில் இத்தணை மயில் கணக்கில் உள்ளே நுழைந்து திரும்பியது என்று உலகுக்கு சொன்ன பிறகாவது இந்தியா ஏதாவது ஒரு எதிர் நடவடிக்கையை எடுக்கிறது என்று பார்த்து ஏமாந்து நிற்கிறது பாவம்.

உலக வல்லரசுகளில் ஒன்றாக தன்னை கூறிக்கொள்ளும் நாடு இந்த சீனா. பெரிய நாடு, உலகில் அதிக மக்களை கொண்ட நாடு. இத்தணை ஆண்டு காலமாக பொதுவுடமை கொள்கைகளை கொண்டு வளர்ந்த நாடு என்று எத்தணையோ அவர்கள் சொல்லிக்கொண்டாலும். அவர்களது மொழியில் இந்தியா ஒரு சுண்டக்காய் நாடு. அந்த நாட்டோடு நேருக்கு நேர் மோத துணிவு இல்லாமல். பாக்கிட்த்தானத்தை பணம் கொடுத்து தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதும்.

ஆள் இல்லாத எல்லையில் மூக்கை நுழைத்து பார்ப்பது திருடர்களது வேலை. பெரிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் கீழ்தரமான திருடர்களை போல் நடந்துகொள்வது ஏன். உண்மையில் இவர்கள் சொல்லிக்கொள்வது போல் வலிமை இல்லாத நாடாகத்தான் சீனா இது வரையில் இருந்து வருகிறது போலும். உடலில் இருந்து துறுத்திக்கொண்டு தெரியும் எலும்புகளை மறைப்பதர்காகத்தான் அந்த சிவப்பு வண்ண பட்டாடையை அணிந்து இருக்கிறதா என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஒரு சுண்டக்காய் நாடு என்று உங்களால் வருணிக்கப்பட்ட நாட்டை சென்று சண்டைக்கு இழுக்க நெஞ்சில் துணிவு இல்லை பிறகு என்ன வல்லரசு நீங்கள். இதற்கு சிங்கள நாடு போல் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.

முதலில் இந்தியாவின் தயாரிப்பு என்று போலி மருந்துகளை ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று பார்த்தார்கள், கண்டு பிடிக்கப்பட்டு மூக்கறு பட்டு நின்றார்கள்.

பிறகு இந்தியாவின் விண்வெளி திட்டத்தை விட எங்களது நுட்பம் மேலானது என்று காட்டும் வகையில் விண்வெளியில் தனது வீரனை அனுப்பி படம் காண்பித்தார்கள். அவர்கள் காண்பித்த இந்த படத்திற்கு பதிலாக இந்திய 13 கோள்களை ஒரு கணையில் பொருத்தி விண்ணுக்கு ஏவி சீனாவிற்கு வண்ணத்தில் படம் காட்டியது. அந்த 13 கோள்களில் சந்திராயணம் கோள் செலவும் கணையின் செலவும் மற்ற 12 கோள்களை அனுப்ப கொடுத்த பணம் ஈடு கட்டியது. ஆக செலவே இல்லாமல் நாம் விண் திட்டத்தில் மற்றும் ஒரு சாதணையை படைத்து காட்டினோம்.

அதோடு மட்டும் நில்லாது 2012ல் கணைகளின் வகையில் அதி நவீன நுட்பமாக கருதும் நுட்பத்தில் 2012ல் நிலவுக்கு சந்தியாணம் - 2 செல்லும் என்றும் அறிவித்தது இந்தியா. 70 ஆயிரம் படங்களை எடுத்து நிலவில் பனிபடிவம் உள்ளது என்று சொன்னாலும் சொன்னார்கள், இந்த மானம் கெட்ட சீனத்திற்கு பொத்துக்கொண்டு வந்திருக்கும் என்று நினைக்கின்றேன் உடனே இந்த எல்லை மீரல் பிரச்சணையை துவக்கி தனக்கு விளம்பரம் தேடுகிறது.

சென்ற மாதம் இந்தியாவின் தயாரிப்பான இலகு இரக தாக்குதல் விமானங்கள் மிக்கு 21க்கு பதில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும், 2012ல் அதி மிகையொலி அதி தாக்குதல் விமானம் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு படையில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும் சினாவின் வயிற்றில் எரிச்சலை உண்டு செய்திருக்கும் என்று நினைக்கின்றேன் அது தான் இந்த போக்கிரிதனத்தை செய்துவிட்டு கைலியை மடித்து கட்டி வாயில் புகையுடன் இன்னா என்று நிற்கிறது போலும்.

இந்த நிலையில், நாட்டின் முன்னேற்றம் மட்டுமே முக்கியம், மற்றவை எல்லாம் பிறகு தான் என்ற நோக்கில் தலைமை அமைச்சர் செயல்பட்டுக்கொண்டு இருப்பதை நன்றாக தெரிந்தும். அவருக்கும் நாட்டின் ஒருமைபாட்டிற்கும் துணையாக இருக்க வேண்டிய எதிர்கட்சியான பசக கொஞ்சம் கூட நாகூசாமல், ஒரு தேசிய கட்சி என்ற பொறுப்பு கூட இல்லாமல் இப்படி தலைமை அமைச்சரையும் அவரது அமைச்சரவையும் கேலி செய்யும் விதமாக பேசி இருப்பது அவர்களது ஈன புத்தியை காட்டுகிறது.

கார்கிலில் ஒரு அவசர நிலை தோன்றியது எல்லா கட்சிகளும் எப்படி கட்டுக்கோப்பாக ஒற்றுமையை கடைபிடித்து காட்டிய நிலை இல்லை என்றாலும் சீனாவை வன்மையாக கண்டிப்பதோடு, இது போல் செயல்களுக்கு இந்திய அரசு எடுக்கப்போகும் எதிர்வினைக்கு துணையாக நிற்போம் என்று கூறாமல், நாங்களாக இருந்து இருந்தால் இப்படி அப்படி என்று செய்தி இதழ்களால் பேசுவது என்ன அரசியல் அறிவோ தெரியவில்லை.

இனியாவது பொறுப்பாக நடப்பார்களா இந்த மானமில்லா பசக கட்சியினர்கள்.

0 comments: