கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையாக பதிவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைதுறையினர் என்று கிட்டதட்ட அனைத்து தரப்பும் இந்த வேலையில் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.
சில கட்சிகள் தீவிரமாக ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சிகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கா விட்டாலும் ஒரு கருத்தையாவது சொல்லிக்கொண்டு வந்துள்ளது.
இப்படி ஆதரவு தெரிவிப்பதைவிட இலங்கை தமிழர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வேலைகளில் மா நில இதழ்கள் முதல் நாடளவு இதழ்களும் கூட கட்டுரைகளையும், வாசகர்களது கருத்தாக வெளியிட்டும் வந்துள்ளது.
பதிவர்களை கேட்கவே வேண்டாம், யார் முதலில் என்று துவங்கி இன்று வரை இரு சாராரும் போட்டி போட்டுக்கொண்டு எழுதிவருகிறார்கள்.
நாட்டு நடப்புகளில் கருத்து சொல்வது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. நீ ஏன் கருத்தே சொல்லவில்லை என்று கேட்டால் அது நாகரீகமாக இருக்காது.
ஆனால் பாருங்கள் இந்த பாசாக இது வரையில் இந்த பிரச்சணையில் வாய்திரக்கவே இல்லை. முதன் முதலாக ஐயா இல கணேசன் சொன்ன ஒரே கருத்து 4 வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு தற்பொழுது கருணாநிதி நாடகம் ஆடுகிறார் என்று சொல்லி இருக்கிறார்.
இதை தவிர அந்த செய்தியில் வேறு எதுவுமே சொல்லப்படவில்லை. அவர் சொன்ன கருத்து சரியா இல்லையா என்று பிறகு பார்ப்போம். ஆனால் ஒரு கருத்துக்கூட சொல்லவில்லை என்றால் அந்த கட்சிக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று தான் கேட்கத்தோன்றுகிறது.
கொல்கத்தாவில் துப்பாக்கி சூடு நடந்து ஒரு 10 நபர் இறந்தார்கள். உடனே பாசாகவின் மாநில உருப்பினர் அம்மா ஒருவர் தனியார் தொலைகாட்சியில் திருமதி பிருந்தா கரத்துடன் விவாததிற்கு வந்தார். விவாதம் முழுதும் பிருந்தா அவர்களை பேசவே விடாமல் கத்து கத்து என்று கத்தினார்.
மொத்த விவாதம் ஒரு மணிக்கும் மேல் நீடித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் திருமதி பிருந்தா கரத்து குறிப்பிட்டார் குசராத்தில் 3000 கொலைகளை நிகழ்த்திவிட்டு இங்கே 10 மக்கள் துப்பாக்கி சூடி இறந்ததற்கு இப்படி ஓங்கி ஓங்கி பேசுகிறீர்களே அந்த 3000யை பற்றி ஏன் எதுவுமே கருத்து சொல்ல மறுகிறீர்கள் என்று பலமுறை கேட்டார்.
அதற்கு அந்த பாசாக பெண்மணி கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்ப கொல்கத்தா கொல்கத்தா என்று மட்டுமே புலம்பியதை மக்கள் மறந்து இருக்க வாய்ப்பில்லை.
இதை இங்கே குறிப்பிடுவதின் நோக்கம், இந்த கட்சியினர் கொல்கத்தாவிலும், குசராத்திலும், அசாமிலும் வாழும் மக்களுக்கு எப்படி செவ்வனே ஆதரவு கொடுக்கிறார்கள் என்று காட்டத்தான்.
கர்னாடகத்தில் பாசாகவின் ஆட்சி அமைந்தவுடன் அவர்கள் தெரிவித்த முதல் கருத்து தமிழகத்துக்கு இனி எந்த ஆற்றிலும் நீர் போகாது என்றது தான். அந்த கருத்தை எதிர்தோ, அல்லது, எங்களது மாநிலமான தமிழகத்து நீர் உரிமையை கட்சியின் பெயரால் எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது என்றாவது சொன்னார்களா பெயருகாவது என்றாலும் இல்லை.
இப்படி தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றது போல் நடந்துகொள்ளும் இந்த கட்சி தமிழகத்தில் இருக்கத்தான் வேண்டுமா. அவர்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்காவது புரிகின்றதா.........
கடைசியாக இல கணேசன் அவர்களுக்கு, அது சரி 4 ஆண்டு காலமாக கருணாநிதி சும்மா இருந்துவிட்டு கபட நாடகம் ஆடுகிறார். பாக்கிட்த்தானின் எல்லையில் ஒன்றறை இலட்சம் துருப்புகளை கொண்டு போய் நிறுத்திவைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் கணேசன். அப்போது அவர்களது இராணுவம் உள்ளே வந்ததா அல்லது நாம் தான் குறைந்தது பாக்கிட்த்தான் ஆக்கிரமிப்பு காசுமீரிலாவது சென்று அவர்களை விரட்டினோமா. அங்கே அத்தணை காலம் துருப்பை நிறுத்த எத்தணை செலவானது என்று சொன்னால் அனைவரும் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். இந்த நாடகம் என்ன வகை திரு இல கணேசன் சொல்வீர்களா......
இல்லை நீங்கள் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தும் போது இலங்கையில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடியது..................
Thursday, October 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
என்னது தமிழகத்தில் பாசாக இருக்கா ?
அது எப்போ ?
:)
இல கணேசன் அப்படி தான் சொல்கிறார், மற்றும் அவரது வகையராக்கள் எல்லாம் அப்படி தான் சொல்கிறார்கள் கோவி........
பதிவு எழுதி இன்னமும் கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை அதற்குள் இல கணேசன் இலங்கை பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளார். அதுவும் எப்படி பாசாக வை பதவியில் வையுங்கள் 6 மாதத்திற்குள் தீர்த்து வைகிறோம் என்று. எப்படி போன 6 வருங்களில் நீங்கள் ஆட்சியில் இருந்த போது தீர்த்தது போலவா இல கணேசன். முதலில் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று முதலில் சொல்லுங்கள் பிறகு ஆட்சியில் அமர்த்தலாமா என்று நாங்கள் பரிசீலிக்கின்றோம். உத்திரபிரதேச மன்னனது ஆட்சியை தமிழகத்தில் மலர என்று மட்டும் சொல்லி விடாதீர்கள், பிரிவிணைவாத பிரிவில் உள்ளே தள்ள சொல்லி தைரிய லெட்சுமி ஓய்வெடுக்கும் போராட்டம் செய்வார் கவனம்........
Post a Comment