சபர்மதி இரயிலில் உயிருடன் மக்கள் எரிக்கப்பட்ட செய்திவருகிறது அதும் இறந்தவர்கள் அனைவரும் புனித பயணம் முடித்து வீடு திரும்பும் வழியில் இப்படி நிகழ்ந்தது என்று. முதலில் வருத்தம் வந்தாலும் இந்த ஈன தணதிற்காக வெறுப்பும் கோபமும் வருவது இயற்கையே. அதும் தனது மக்கள் இப்படி கொல்லப்பட்டதை எந்த ஒரு முதல்வராலும் தாங்க முடியாத ஒரு துயரே. ஆற்றாமை தோன்றும் போதெல்லாம் கோபமாக கொப்பளிப்பதும் இயற்கையே.
ஒரு முதல்வருக்கு இப்படி ஒரு சேதி காலம் தாழ்த்தி தான் அதுவும் சம்பவத்திற்கு பிறகு தான் தெரியும் என்று சொன்னால் நம்புவதற்கு இல்லை. நாட்டிலே என்ன நடக்கிறது, இவைகளின் விளைவால் என்வெல்லாம் பிறகு நடக்கும், யார் யார் எல்லாம் இதிலே ஈடு படுகிறார்கள். பணமும் ஆள் பலமும் எங்கு இருந்து வருகிறது. இன்னமும் எத்தனை சம்பவங்கள் இது போல நடக்கும் என்று முங்கூட்டியே அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கவும் தான் எத்தணை நிறுவனங்கள் கண் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறது. இதனையும் இருந்து மோடி எனக்கு செய்தியே இல்லை என்று சொன்னால் நம்பும்படியா இல்லவே இல்லை.
மோடியையும் தாண்டி ஒரு கலவரம் வெடிக்கிறது மாநிலம் முழுவதும். 3 நாட்கள் இடைவிடாது யாரை எல்லாம் கணக்கு தீர்கவேண்டும் என்று சமயம் எதிர்பார்த்து கொண்டு இருந்தவர்களை போல் ஒரு அழிப்பு நடவடிக்கை மாநிலம் தழுவிய அளவில் நடக்கிறது. ஒரு முதல்வரால் 3 நாட்க்களுக்கு மாநிலத்தில் உள்ள காவல் துறையின் துணை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுவாக அரசு கையாளும் அத்தனை முறையையும் பின் பற்றி நிலைமையை கையாள நினைகிறார் ஆனால் 3 நாள் வரையிலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை. ஊடகங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இப்படி தான் செய்தியை சொன்னார் மோடி. அவர் என்ன என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அவைகளுக்கு சான்றுகளையும் அள்ளிக்கொண்டு போய் காண்பித்து வெறும் கண்டனத்தோடு திரும்பினார் மோடி.
இப்போது தெகல்கா வெளியிட்டிருக்கும் செய்திகளை பார்க்கும் போது மோடியது மோசடி அப்படியே அம்பபலமாகிறது அங்க அங்கமாக. இதில் கொடுமை என்னவென்றால் இரயிலை கொளுத்தியவர்கள் இரகசியமாகவும் அவசர அவசரமாகவும் சாட்சிகள் களையப்பட்டு விடுதலையானது தான். இந்த செய்தியை இப்போதைக்கு விட்டுவைப்போம்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக மோடி செய்திருக்க வேண்டியவைகள்
1) தீவிரவாத நடவடிக்கைகளை கண்கானித்திருக்க வேண்டும் (தகவல்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது)
2) சம்பவம் நடந்ததும் கலவரம் வெடிக்கும் என்று சிறுவனுக்கு கூட தெரியும், அதை எதிர்பார்த்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு நடத்தி இருக்க வேண்டும்.
3) சம்பவத்திற்கு காரணமானவர்களையும் அவர்களது மூளையாக செயல் பட்டவர்களை அடையாளம் கண்டு நாட்டின் முன்னேயும், சட்டத்தின் முன்னேயும் நிறுத்தி இருக்க வேண்டும்.
4) கோபம் கொண்ட மக்களை தனது நடவடிக்கைகளாலும், சொல்லாமும் ஆற்ற முற்பட்டிருக்க வேண்டும்.
5) மூளை சலைவையில் ஈடு பட்டிருக்கும் கூட்டத்தையும் அதற்கு பொருளுதவி செய்பவர்களையும் களைந்திருக்க வேண்டும் சட்டரீதியாக
6) இந்தியார்கள் அனைவரும் சமம், ஒரு சிலரால் நடத்தப்படும் வன்முறைக்கு அவர்களது மதம் சார்ந்ததாக சாயம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி பட்டியலிட்டுகொண்டே போகலாம். இதில் எதையுமே மோடி செய்யவில்லை, மாறாக என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தையும் செய்ததாக தெகல்காவின் செய்திகள் தெரிவிகிறது.
ஒரு வேளை மோடி மேலே சொன்னது போல் நடந்து காட்டி இருந்தால் நாம் எல்லாம் அவரை பாராட்டி இருப்போம் தானே...........
இவரைத்தான் மிகவும் திறமை வாய்ந்த முதல்வர் என்றும் பின் நாளில் பிரதமர் ஆகும் தகுதி பெற்றவர் என்றும் சிலர் சோ இராமசாமியை போல் சொல்கிறார்கள். எடுத்தற்கொல்லாம் சிறுபிள்ளையாக உணர்ச்சி வசப்படும் மோடியை வேண்டுமானால் அமெரிக்க அதிபராக போய் பணியாற்ற சொல்லலாம், இந்தியாவுக்கு இந்த புத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை, இப்படி ஒரு முன்னேறமும் இந்தியாவுக்கு அவசியம் இல்லை.
Sunday, November 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment