Sunday, November 4, 2007

என்ன ஆனது தினமலர் பத்திரிக்கைக்கு

பாக்கித்ட்தானில் அவசர நிலை அறிவிக்க பட்டுள்ளதை அறிவிக்கும் பொருட்டு தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அவரசர நிலை அறிவிக்க வேண்டிய காரணம் என்னவாக இருக்கும் என்ற ஊகத்தை இப்படி எழுதியுள்ளது

"தனக்கு எதிரான தீர்ப்பு வரலாம் என்ற தகவல் அதிபர் முஷாரப்புக்கு கிடைத்தது. ஏனெனில் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை. இந்தப் பின்னணியில் பாகிஸ்தானில் அவசர நிலை ப்ரகடனப்படுத்துவதற்கான சூழ் நிலை நேற்று மாலை முதலே காணப்பட்டது."

நல்ல மொழிவளமும் எழுத்து நடையும் பத்திரிக்கைகளை படித்து பெற்றுக்கொண்டேன் என்று பலரது நேர்காணலில் கேட்டு இருக்கின்றேன். அதிக மக்களால் படிக்கப்படும் நாள்ழிதழ் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள். குறிப்பாக ஏன்னெனில் தலைமை நீதிபதி இப்கார் சவுத்திரியும் மற்ற நீதிபதிகளும் இராணுவ ஆதிக்கத்தில் பாக்கிட்த்தான் வந்து குடியரசின் குரல்வளையை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை என்று எழுதி இருக்கிறது. இதற்கு முந்திய பத்தியில்

"அதிரடியாக சுப்ரீம் கோர்ட் வளாகத்தைஸ் சுற்றி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட நீதிபதிகள் வெளியேற்றப்பட்டனர்"

என்று எழுதிவிட்டு, பின்னால்

"இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை."

என்று எழுதினால் என்ன பொருளில் அது விளங்கும், என்ன ஒரு மொழிவளம் பாருங்கள். இராணுவம் நீதிபதிகளை பாக்கிட்த்தானை விட்டு வெளியேற்றியதாக பொருள் கொள்ளவும், பிறகு இராணுவ ஆத்திக்கத்தில் நீதிபதிகள் திரும்பி வந்து குடியாட்சியின் குரலை நெரிக்கப்போவதை முசாரப் விரும்பாமல் அவசர நிலை அறிவித்தார் என்று பொருள்கொள்ளும் அளவிற்கு குழப்பமாக செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
எவ்வளவும் முக்கியமான ஒரு செய்தியை எவ்வளவு அலட்சியமாக கையாண்டு இருக்கிறது பாருங்கள். இத்தனை பரபரப்பான செய்தியை கூட தணிக்கை செய்யாமல் அதன் தணிக்கை குழு நாளைக்கு எந்த கோவிலின் சாமி படத்தை முதல் பக்கத்திலே வெளியிடலாம் என்று தேடி அலைகிறது போலும். கவனிக்குமா இனிமேலாவது, கவனிக்க வேண்டும்.

0 comments: