Sunday, December 29, 2024

கிளாடியேட்டர் - 2 ‍- திரைவிமர்சனம் அல்ல‌

 கிளாடியேட்டர் 2 படம் வந்து அமைதியாக ஓடிக்கொண்டு இருந்தது. என்ன முதல் பாகம் கொண்டு வந்த பரபரப்பு இந்த பாகத்துக்கு ஏன் இல்லை என்று புரியாததால் தாமதமாக தான் பார்த்தேன்.

ஆச்சர்யம் என்ன என்றால், இது இரண்டாம் பாகம் என்ற உணர்வே வராத அளவிற்கு அப்படி ஒரு திரைக்கதையும் கதையமைப்பும்.

ஆனால் கதையில் முதல் பாகம் வந்த இத்தனை ஆண்டு காலம் கழித்து நடக்கும் கதை தான் என்று உறுதி செய்கின்றது.......கதையின் லுசில்லா தவிர மற்ற வேறு ஒருவரையும் பழைய பாகத்தில் இருந்து காட்டவில்லை...

முதல் பாகத்தில் இருந்த பிரம்மாண்டம் இதிலும் இருந்தாலும் கதையில் அந்த கவனம் இல்லை என்று தான் சொல்லனும்.

சரி சொல்ல வந்தவைகளை சொல்வோம்.....பொதுவாக முற்பாகமோ அடுத்த பாகமோ எடுத்தால் வந்த பாகத்திற்கும் உள்ள தொடர்பு ஏன் கடந்த பாகத்தில் அப்படி நடந்தது என்று கவனமாக சொல்வார்கள் இல்லை அப்படி நடந்தால் இப்போது இப்படி நடக்குது என்று கதை சொல்வார்கள். இந்த படமும் இந்த வகையில் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

புதிய கதையை எழுதியாச்சு அதை திரைக்கு திரைக்கதையாக மாற்றும் போது இந்த இந்த காட்சிகள் எல்லாம் இப்படி இப்படி எல்லாம் எடுக்கனும், இந்த கதை நகர்வுகள் எல்லாம் இந்த இந்த இடத்தில் நடப்பதாக சொல்லனும் என்று ஒரு மாபெரும் மெனக்கெடல்கள் கொண்டவை.....உதாரணமாக மௌன ராகத்தில் ஐ லவ் யூன்னு சொல்ல கன்னிமெரா நூலகத்தில் வைத்து சொல்லனும் அப்படி சொல்லும் போது நீ மைக் போட்டு ஊரே கேட்பது போல் சொல்லேன்னு சொல்ல அடுத்த நொடி அண்ணா பல்கலை வளாகத்தில் நாயகி ஓடி வர என்று எல்லாம் எடுத்து காட்டுயவது. ஆனால் கதையில் அவன் ஐ லவ் யூன்னு சொல்கிறன் அவள் ஏன் ஊருக்கே கேட்கிறா மாதிரி சொல்லேன்னு சொல்லிவிட்டு மறுத்தாள்ன்னு முடிச்சிடுவாங்க......

இப்படி ஏராளமா நேரம் செலவிட்டு எழுதிய புதிய கதையை திரைக்கதையாய் மாற்றுவதை விட்டுவிட்டு பழைய திரைக்கதையை எடுத்துக்கொண்டு என்ன வித்தியாசம் என்று மட்டும் பொருத்தி காட்டி இருக்கிறார்கள்.

இது விரைவில் தமிழ் படங்களில் வரும் அதுவும் தளபதி 2 அல்லது உயிரே 2 என்று வரும். என்ன ஸ்ரீவித்யா இல்லாத நிலையில் தளபதி 2 எடுப்பது கடினம் ஆக உயிரே 2 படம் வர வாய்ப்பு இருக்கிறது.

மாதவன் தான் நாயகன் மணிப்பூரில் நடக்கும் குழப்பங்களை பேட்டி எடுக்க அங்கே செல்கிறான் என்று துவங்கி கடைசியில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கு ஆகஸ்ட் மாத அணிவகுப்பில் படம் முடிவது போல் முடிப்பார்கள் அதே கதையில்.....

நாசருக்கு பதில் இராஜீவ் மேனன் நடிக்கலாம், மனீஷாவுக்கு பதில் மீனாட்சி சேஷாத்திரி நடிக்கலாம்..மாதவனுக்கு சுகாஷினி சித்தியாக வருவார்......

தூர்தர்ஷனுக்கு பதில் ஒரு பிபிஸி செய்திக்காக செல்வதாக சொல்லலாம்.....

மணிப்பூரில் நடந்த கொடூரத்தில் மீனாட்சியை சீரழித்ததால் பழிவாங்க இப்படி எல்லாம் செய்கிறாள் என்றும். அவளுக்கு ஏற்கனவே காதலன் இருந்தான் ஆனால் இந்த கொடூரத்தில் இவளை இப்படியே விட்டு விட்டு ஓடியதால் அவளுக்கு நெருக்கமாக ஆண்கள் வந்தால் அவளுக்குள் இருந்த அந்த கோர நிகழ்வின் பாதிப்பால் இவளாலும் முகம் கந்திரகோலமாக மாறும் ஒரு பாதிப்பாகவும் சொல்வார்கள்......

அனேகமாக மணிபூர் விஷியத்தில் நடந்த நிகழ்வுகளை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு அழகா எடுப்பாங்க.....

விரைவில் எதிர்ப்பார்ப்போம்.....

0 comments: