Tuesday, February 26, 2019

அப்போ Surgical strikeக்கும் பொய்யா

மோடியின் ஆட்சியில் அதிகம் போசப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று, அன்றைய துல்லிய தாக்குதலில் தீவிரவாத முகாம்களை எல்லாம் தவிடு பொடியாக்கி இந்தியாவையும் உலகையும் காத்தார் வீரர் மோடி என்றும். மோடி ஆட்சிக்கும் வரும் முன் காங்கிரசு தொடை நடுங்கியாக இருந்தாகவும், மோடி வம்பு செய்யும் அண்டை நாடுகளை கால் பந்து உதைப்பது போல் உதைத்து விளையாடுவார் என்றும். அதை தொடர்ந்து தொடர் நடவடியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள் நாட்டு தீவிரவாதம் அடியோடு உலகத்தை விட்டே விரட்டியாச்சு என்றும் பரப்பினார்கள் சங்கிகள்.

அன்றைக்கு அழித்த அதே முகாம்களை இன்றைக்கு மறுபடியும்  இந்திய இராணுவம் தாக்குதாம். இல்லாத முகாமை எப்படி 1000கிலோ குண்டுகளா போட்டு தாக்க முடியும், அதுவும் பாக்கிட்தான எல்லைக்குள் புகுந்து தாக்குதாம். இதிலே தாக்குதல் படங்கள் எல்லாம் வெளியிடுராங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்.

இந்திய எல்லைக்குள் தான் காசுமீரம் உள்ளது என்றது இந்தியாவின் வாதம், இல்லை எங்கள் கட்டுப்பாடில் உள்ளது என்றது பாக்கிட்தானத்தின் வாதம், இந்த இரு நாடுகளின் போர் நடவடிக்கையில் தற்காலியமாக வரையபட்ட கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு நாட்டு இராணுவமும் பின்வாங்காமல் 50 ஆண்டுகளாக இருக்கிறது. அங்கே என்ன என்ன எல்லாம் இருக்கிறது அதே அளவில் இங்கே நமது பக்கத்திலும் அதே அளவில் நிப்பாட்டி வைப்பது தான் இராணுவத்தின் வழக்கமும். இது உலக்கில் உள்ள அனைத்து படைக்களின் வழக்கம்.

அந்த கட்டுப்பாட்டு கோட்டில் இரண்டு படைகளுக்கும் நடுவில் ஒரு 50 அடி அளவில் யாருக்கும் சொந்தம் இல்லாத நோமேன் நிலம் என்று சொல்லப்படும் அந்த இடத்தில் தனது விருப்பம் போல் எவ்வளவு வெடிகளை வேண்டும் என்றாலும் அவர்களும் சரி நாமும் சரி வெடிக்கலாம், அது போர் நடவடிக்கையோ அல்லது எல்லை தாண்டுதலோ இல்லை. தன்னால் முடிந்தால் அந்த நோமேன் நிலத்தையும் தாண்டி குண்டுகளை எரிவது வழக்கம்.

அப்படி எரியப்படும் குண்டுகளுக்கு அவர்கள் தரப்பில் அதே வீரியத்தில் பதிலடியும் வந்துக்கொண்டு தான் இருக்கும். இன்று நடக்கும் நடவடிக்கைகள் நமது நாட்டு வான் எல்லையில் இருந்து அவர்களது கட்டுப்பாட்டு கோட்டில் எவ்வளவு தூரம் வான் தாக்குதல் நடத்த முடியுமோ அவ்வளவு தூரம் தாக்கி வம்பு இழுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களும் அதே போல் தாக்குவார்கள் அதை சங்கி அரசாங்கமோ அல்லது இப்போது போர் தாக்குதல் என்று அலரவிடும் ஊடகமோ நமக்கு சொல்லாமல் அமுக்கி விடும்.

கார்கில் போர் இப்படி தான் நடந்தது, பாக் எல்லையில் இருந்து இராணுவ உடையில் இல்லாமல் பொதுமக்கள் உடையில் இராணுவம் தான் பொதுமக்கள் என்றும் மற்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்லிக்கொண்டு இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல்களை தொடுத்தது. நமது எல்லைக்குள் இருந்த அவர்களை இந்திய விமானப்படை வந்து குண்டு வீசும் வரை அவர்கள் மிகவும் தீவிரமாக முன்னேறிக்கொண்டு தான் இருந்தார்கள். கடைசியில் அணுகுண்டை வீச பாக் முற்படும் போது அமெரிக்கா கூப்பிட்டு போர் நடவடிக்கைகளை நிறுத்தியது. இல்லை என்றால் அது முழு வீச்சு போராக வெடித்து இருக்கும்.

அந்த கார்கில் போர்லில் பாக் நடத்திய தாக்குதல் கூட இப்போது இந்தியா நடத்தவில்லை. இருந்தாலும் மோடி காலிலே கால் பந்தை உதைத்து தள்ளுவதை போல் பாக்கை உதைத்து தள்ளுவதாக தவறான செய்தியை பரப்புகிறது மோடி அரசு.......

எப்பவும் பொய் எதிலும் பொய் என்றதுக்கு பெயர் போன மோடி அரசு இந்த துல்லிய தாக்குதலும் வெறும் கட்டுக்கதை என்று அதுவே இந்த இராணுவ நடவடிக்கை மூலம் வாக்குமூலம் கொடுத்துள்ளது.........

0 comments: