Monday, May 29, 2017

செல்லூர் ராசுவை மிஞ்சிய விஞ்னானி தமிழிசை - பெண்களை இதைவிட இழிவு படுத்தமுடியுமா

கருத்தம்மா படத்தில் ஏன்யா பெண் சிசுவை கொலை செய்கிறீர்கள் என்று கேட்டால், சமூக சூழல் பொருளாதார பிரச்சனை என்று எல்லாம் சொல்வார்கள். இதிலே பெண்களை படிக்க வேற வைக்கனுமா என்ற கேள்விகளை எல்லாம் அடுக்குவார்கள்.

இப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களின் மூலமே பதில் சொல்லுவது போல் அமைத்து எடுத்த படம் கருத்தம்மா, அதனால் தான் அந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் என்று விருது கொடுத்தார்கள்.

பெரியார் பூமியில், 21ஆம் நூற்றாண்டில் பெண்களால் சுற்று சூழலுக்கு பாதிப்பு என்று சொல்ல தமிழிசை சௌந்தர்ராசனுக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்.

ஆண்களால் விளையாத தீமை பெண்களால் மட்டும் எப்படி விளையுமோ தமிழசை தான் சொல்லனும். அதும் தன்னை மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் உண்மையில் பள்ளிப்படிப்பாது படித்தாரா என்று தெரியவில்லை.

செல்லூரின் தயவில் இந்தியாவின் மானம் கப்பல் ஏறியது, இப்போ தமிழிசையின் இந்த பெண்கள் பற்றிய கருத்தால் தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று பெயரை வாங்கி கொடுத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார் போலும்.

பெண்களால் மட்டும் எப்படி சுற்று சூழல் கெட்டுவிடும் தமிழிசை விளக்குவீர்களா...........போதையில் பேசியதாக சொல்லி தப்பித்துகொள்ள நினைக்க வேண்டாம்.......

2 comments:

')) said...

தமிழிசையும் ஒரு பெண். அவங்களும் சீர்கேட்டுக்கு ஒரு காரணம்தானே?! அதனாலதான் சாரியா சொல்லி இருக்காங்க. பெண்களால்தான் உலகம் சீர்கெடுதுன்னு.

')) said...

அந்த அம்மா திருப்பி இன்னும் ஒரு தடவை கேட்டா நான் சொல்லவே இல்லை இதழ்கள் அவைகளை தவறாக எழுதிவிட்டார்கள் என்றும் என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுக்கும் பாசகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள் பொருத்து இருந்து பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி