"பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை
ஊக்குவிக்கும் விதமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ரூ.340 கோடி
அளவிலான தினசரி, வாராந்திர ரொக்கப் பரிசை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி
அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.
இது கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் முதல் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும்."
இது யார் அப்பன் வீட்டு பணம் மைய நிதி ஆணையம் எடுத்து உங்கள் ஏழைகளுக்கு இறைக்க.
பணமில்லா வர்த்தகம் புரிவோரும் அதில் வாங்குபவர்களும் என்ன கையில் இருக்கும் கடைசி பணத்தாள் வரை வங்கியில் போட்டுவிட்டு எப்போது எடுக்கலாம் என்று வீட்டும் வங்கிக்கும் அலையும் குடியானவனுக்கா கிடைக்க போகுது.
ஞாயமா இப்படி பணத்தை கட்டாயப்படுத்தி பிடுங்கி வைத்த இத்தணை நாளுக்கும் அவர்களுக்கு வட்டி கொடுப்பதை விட்டுவிட்டு சொகுசாக வாழும் மக்களுக்கும் அவர்களுக்காக குளுகுளு அறையமைத்து வியாபாரம் செய்பவனுக்குமா இந்த 340 கோடி.
என்ன ஒரு திமிர் நடவடிக்கை அதுவும் உங்கள் பணத்தை பிடுங்கி அதிலே உங்களுக்கே என்ன அழகாக மோடி வித்தை காட்டுகிறார்.
மைய நிதி ஆணையம் இந்த பணம் எந்த நிதியில் இருந்து பெறப்பட்டது என்றும் எந்த எந்த பொது மக்களுக்கு போய் சேர்ந்தது என்றும் கணக்கு காட்ட கடமைபட்டவர்கள்.
இப்போ தெரியுதா கருப்பு பணம் எவ்வளவு பெரிய ஊழல் என்று. ப சிதம்பரம் சும்மா பேசினால் பத்தாது, இதை நீதிமன்றம் வரை கொண்டு போய் இந்த கள்ள ஆட்ட மோடியை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இது போல் பாசகவின் சதுரங்க ஆட்டம் ஓயப்போவது இல்லை.
ஒரு வேளை S.V சேகர் நாட்டுக்காக அவர் பணத்தை கொடுத்து இருப்பாரோ.........
4 comments:
நியாமான கேள்விதான்!
கேள்வி எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் பதில்மட்டும் வராது . நாட்டு மக்கள் (ஏழைகள் ) நாசமாக போவது மட்டும் உறுதி .
M.செய்யது
Dubai
இது வரையில் நடந்த துக்ளக் நடவடிகைகளில் இந்த அறிவிப்பு உச்சம், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மோடியின் ஏழைகள் மட்டும் தான் வாழ்வார்கள் போல இருக்கிறது. போகிற போக்கில் இணையமும் நவீன அலைபேசியும் இல்லை என்றால் நாட்டு துரோகி என்று சொல்லி சிறையில் அடைத்தாலும் அடைப்பானுக போல இருக்கு. அப்படி அம்பானியும் அதானியும் நினைத்தார்கள் என்றால் இணையத்தையும் அலைபேசியையும் காசில்லா சேவையாக எல்லா மக்களுக்கும் கொடுக்க வேண்டியது தானே.
முதல்ல இந்த உள்ளூர் பேருந்துகளில் பணமில்லா வர்த்தகம் செய்ய சொல்லுங்கள் சாமானியனின் பிரச்சனைகளில் பாதி தீர்ந்துவிடும். மேலும் அவர்கள் வாங்கும் காய்கறி பால் தினசரி வார இதழ் இன்ன பிற அன்றாட தேவைகளை பணமில்லா வர்த்தகமாக கொடுக்க சொல்லுங்கள் அவனே இது நல்லா இருக்கே என்று வருவான்.
மாதம் தோறும் அரசு தனக்கு கொடுக்கப்படும் உதவி தொகையை வாங்க பாரத ஸேட்டு வங்கிக்கு வரும் ஊர்காரர்களை என்ன ஏசு ஏசுகிறார்கள் வங்கி ஊழியர்கள் என்று அங்கே போனவர்களுக்கு தான் தெரியும்.
இத்தணைக்கும் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தை அந்த இயந்திரத்தில் பொருத்தினால் எவ்வளவு பணம் வந்து இருக்கிறது என்று அச்சடித்து சொல்லும். அந்த வேலையை கூட செய்ய பயந்துக்கொண்டு ஏச்சும் பேச்சும் வாங்கும் மக்களிடம் கடனட்டையை கொடுத்துவிட்டு இருக்கிற பணத்தை எல்லாம் அந்த ஏமாற்றுகாரர்கள் பிடிங்கி கொண்டு அம்போ என போகட்டும் என்று பார்க்கிறார் போல இருக்கு.
அதிகம் வேண்டாம் மோடி தான் நடத்திக்கொண்டு இருந்த டீக்கடையில் இன்றைக்கு கடனட்டைக்கு தான் டீ கொடுக்கிறார்களா என்றாவது சொல்லட்டுமே, சொல்வாரா
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment