Tuesday, November 1, 2016

PINK - இந்திப்பட விமர்சனம்

சட்டங்களும், காவல்துறையும் பணமும் பலமும் உள்ளவரிடம் தஞ்சம் புகும் என்ற வள்ளுவனின் வாக்கை அழகாக எடுத்துகாட்டும் படம்.

அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் அவர்களுக்கு கிள்ளு கீரை என்று அழக்காக காட்டிய படம் இது.

தமிழில் விதி என்று ஒரு படம் பட்டி தொட்டியெல்லாம் பெண்களை பற்றிய கௌரவம் தொகுத்து வழங்கிய படம். அந்த காலத்தில் இந்த படத்தின் வசனம் அனேகமாக எல்லோரும் ஒரு பதிவு வைத்து இருப்பார்கள்.

படம் பதட்டத்தில் துவங்கி அமைதியிலும் நிறைவிலும் நிறைவு பெற்றது அழகு. எங்கே படத்தின் முடிவு அதிகம் பேசப்படவேண்டும் என்று நீதி தலையை தொங்கப்போட்டுக்கொள்ளுமோ என்ற பயம் கடைசி வரையில் இருந்தது.

ஒரு வழக்கு எப்படி நடக்குமோ அப்படி அழக்காக காட்டி இருக்கிறார்கள், வழக்கின் காலம் எவ்வளவு என்று அமிதாப்பின் மனைவி மறைவையும் வில்லனின் வடுக்கள் காயத்தில் இருந்து தழும்பில் முடியும் வரை என்று சின்ன சின்ன நுணுக்கங்களையும் ஆராய்ந்து கையாண்டு இருக்கிறார்கள்.

எந்த ஒரு வழக்கிலும் பிரதிவாதியை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாளாக்கும் போக்கு என்றைக்கு தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியவில்லை. இது அமெரிக்க நீதிமன்றங்களுக்கும் பொருந்தும்.

இடைவேளை வரை படம் பயணிப்பதே தெரியவில்லை. அதற்கு பிறகு படம் முடிவுக்கு வந்து நிற்கும் போது தான் தெரிகின்றது. நல்ல படம். தில்லி மக்களுக்கு இந்த படம் தேவைதான்.

2 comments:

')) said...

Good you had mentioned about Vithi - this movie is a direct copy of Vithi , just here and there small changes. Vithi was far better , Aroor Das dialogues were great.Sujatha's performance was stupendous.

On a different note , these kind of movies , when you see or hear or read, it looks great . In real life , the situations are different. In real life, a girl in her teens, better not to go for a party alone, or sleep over party .After having gone there, if something happens , only in movies you see this kind of lawyer , or police officer or some neighbor, who are kind . Real world is different , I am not saying all are bad, I am saying we have to be careful. And this movie doesn't say this .

')) said...

யதார்த்த வாழ்க்கையில் நடப்பவைகளை கதையாக எழுதினால் கூட சுவையாக இருக்காது. இது உலகில் உள்ள எத்த தேசத்திற்கும் பொருந்தும். கதைகளும் கட்டுரைகளும் இன்னும் பிற எல்லாம் மிகை கொண்டவைகளாக இருப்பின் மட்டுமே இரசிக்க கூடியவைகளாக இருக்கும் கவிதையும் கூட அப்படி தான். அதனால் தான் நீதி நூல்களை மக்கள் தேடிப்படிப்பது இல்லை மாறாக பொய்மையும் புணைவுமாக இருக்கும் திரைப்படங்களுக்கும் கட்டுரைகளுக்கும் அதன் மெல்லிய வடிவமான செய்தி ஊடகங்களுக்கும் இவ்வளவு மதிப்பு. நீங்கள் குறிப்பிட்ட உண்மை வாழ்வும் இதுவே. இரசிப்புக்கு என்று கொடுத்தவைகளை அதோடு நிறுத்துவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.