Wednesday, July 20, 2016

காங்கிரசும் பாசகவும் இல்லாத இந்தியாவே வைக்கோவின் அடுத்த திட்டம்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, காங்கிரசும், பாசகவும் இல்லாத அரசு தான் இந்தியாவை ஆளவேண்டும் என்று மக்கள் நல கூட்டணியை இந்திய அளவிற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் வைக்கோ இருக்கிறார்.

பாகசவும் சரி காங்கிரசும் சரி இது வரையில் இந்தியாவிற்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்றும். இந்தியாவிற்காக இந்த இரு கட்சிகளும் ஒரு கீரையை கூட கிள்ளி போட்டது இல்லை என்ற வியூகத்தில் இவர்களது தேர்தல் பிரச்சாரங்கள் அமையும் என்றும் தெரிகின்றது.

இந்த இரு அரசுகளும் மாறி மாறி இலங்கையுடன் இணைந்துக்கொண்டு தமிழர்களும், பாகிட்தாணுடன் சேர்ந்துக்கொண்டு வட மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்றும், சீனாவோடு இணைந்துக்கொண்டு காசுமீரம் மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்றும் மக்களிடம் எடுத்து சொல்லவும் திட்டம் இருப்பதாக தெரிகின்றது.

வேண்டும் என்றால் விசயகாந்தை பிரதம வேட்பாளராக அறிவிக்கவும் தயாராக இருப்பதாகவும், வேறு யாரும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும் என்றும் இரகசிய அறிவிப்பும் வெளியாகி இருப்பதாக தகவல்.

தேசிய அளவில் மநகூயில் பொதுவுடமை கட்சியினர்கள் இருப்பது மக்கள் அறிந்ததே, அதனுடன் வலு பெற்ற கட்சிகளை இப்போது இருந்தே ஒருங்கிணைத்தால் வெற்றி நிச்சயம் என்றது அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவனால் கூட எளிதாக கணிக்க கூடியதே என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாடளுமன்ற தேர்தல் முடிந்ததும் என்னுடைய திட்டமும் இராசதந்திரங்களையும் மக்களும் பாசக மற்றும் காங்கிரசு புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் எதிர்காலமே, விடிவெள்ளியே என்று நாடே உங்களை கொண்டாட போகிறது, வாழ்த்துகள் வைகோ.

0 comments: