Wednesday, April 5, 2017

இந்தி திணிப்பும் சமசுகிரதம் திணிபும் பாசக கொடுத்து இருக்கும் அருமையான காணொலியும்

செய்தி வெளியான உடனேயே இப்படி ஒரு விவாதத்தை தயாரித்து கொடுத்த கலைஞர் தொகாவுக்கு நன்றி சொல்லனும்.

பாசகவை கேட்ட எந்த ஒரு கேள்வியையும் மறுக்கவே இல்லை. இந்தி திணிப்பு நடக்கிறதா? இல்லை என்று சொல்ல மாட்டோம்.

சமசுகிரித திணிப்பு நடத்த போகிறீர்களா, இல்லை என்று சொல்ல மாட்டோம்.

சமசுகிரிதம் போதிக்கும் கலாச்சாரம் யாருடைய கலாச்சாரம், இந்தியாவின் கலாச்சாரம் இல்லை என்றதை பலமுறை தரவுகளுடன் நிரூபித்தாகிவிட்டது. நாங்க இல்லைன்னு சொல்லவே இல்லையே, சமசுகிரிதம் உலக மக்களின் கலாச்சாரம். உலகில் உள்ள அத்தனை இன மத கலவை அதை தான் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்றோம்.

தமிழர்களுக்கு என்று இருக்கின்ற கலாச்சாரம் போதுமே புதிதாக என்ன கற்றுக்கொடுக்க சமசுகிரிதம் வருகின்றது. பதிலே இல்லை

உலகத்தை இணைத்தது சமசுகிரிதம் என்று சொல்கிறீர்களே என்ன எப்படி என்று சொல்லமுடியுமா.? மீண்டும் மௌனம்.

சமசுகிரிதம் யாருக்கான மொழி, யார் பயன்படுத்துகிறார்கள். கோவில்களில் பூசைகள் செய்யவும், வேத பாடசாலைகளில் வேதங்களை கற்றுக்கொடுக்கவும்  மட்டுமே பயன்படுகின்றது.

இந்த 2 காரியங்களுக்கு மட்டும் பயன்பட 8 சமசுகிரித பல்கலைகழங்களா, மீண்டும் மௌனம்.

இந்த பல்கலையில் பயின்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள், மீண்டும் மௌனம்.

ஐனா மன்றதில் இந்தியில் பேசுவதற்கான செலவு 290 கோடியை இந்தியாவே ஏற்பதாக சொல்லி இருக்கிறது வெளியுறவு துறை அமைச்சகம். எதுக்காக இந்தியில் பேசனும், 8வது அட்டவனையில் உள்ளபடி 22 மொழியையும் விட்டு விட்டு வெறும் இந்திக்கு மட்டும் ஏன் இந்த தகுதி. மீண்டும் மௌனம்.

3ம் மொழி கொள்கைன்னு சொல்கிறீர்கள், இந்தி, ஆங்கிலம், சமசுகிரிதம் என்று கொண்டு வரவேண்டும் என்று சுற்றரிக்கை விட்டுள்ளார்களே, இந்தி திணிப்பையே வேண்டாம் என்று சொன்னோம், இப்போ அதோடு சேர்த்து சமசுகிரித திணிப்பை எதிர்க்கமாட்டோம்னு நினைகிறீர்களா. அம்பேத்காரே சமசுகிரிதம் தான் வரனும்னு சொன்னார்.

இப்படி ஆத்து ஆத்துன்னு ஆத்தினார்கள் பாசகவினர்கள் இந்த காணொலியில்.

எந்த ஒரு கேள்விக்கும் மறைமுகமாகவோ நேரடியாகவோ பதிலே சொல்லவே இல்லை பாசக. எல்லா கேள்விகளுக்கும் வழக்கம் போல, காங்கிரசு கொண்டு வந்தத நாங்க முன்னெடுது மேம்படுத்தி செல்கிறோம்ன்னு சொல்கிறார்கள்.

மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று சொல்வதெல்லாம் பாசகவை பொருத்த அளவில், சமூக சமன்பாடுகளை களைந்து மீண்டும் அந்த பாகுபாடுகளை ஆழமாக ஆக்கி ஒருவனை ஒருவன் மிதித்து நசுக்கி இன்பம் காணும் ஒரு மனநோய் நிலைஅவர்களுக்கு. அந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு அரசியல் களம் அமைத்துக்கொடுத்துவிட்டீர்களே மக்களே.......

0 comments: