Friday, May 20, 2016

அடடா என்ன ஒரு தேர்தல் முடிவு

ஆறேழு மாதமாய் என்ன  என்ன பேசினார்கள் மாற்றம் சொல்லும் தலைவர்கள்.

குறிப்பாக வன்னியர்மணி செஞ்ச அலப்பரை தாங்கலப்பா.

இதுல நான் நாயகன் அவரு வில்லன் இவரு வில்லி என்ற வசனம் வேற.....

திராவிட கட்சிகளை அழியுங்கள் என்று மேடை நாகரீகம் கொஞ்சம் இல்லாமல் சீமான் பேசிய பேச்சுக்கள் செவி கொடுக்கமுடியலப்பா.

இது எல்லாவற்றிக்கு மேலாக ஐயா இராமதாசு வாக்காளர்களை அவமான படுத்தும் விதாமாக திராவிட கட்சிக்கள் காசுகளை வீசினாரகள், அப்படி வீசி வாக்குகளை வாங்கினார்கள் என்று ஒற்று மொத்த வாக்காளர்களையும் நாய் என்று அல்லவா விளிக்கிறார். என்ன 760 கோடி விளம்பரம் வீனாய் போச்சே என்ற வெறுப்பு வேற என்ன......

அப்துல் கலாம் பூமியில வந்து படிக்க பள்ளி இல்ல சுகாதாரம் இல்லை மக்கள் வாழவே தகுதி இல்லாத பூமி இந்த தமிழகம் என்று சொமாலியா பிரதமர் மோடி வந்து விளித்தது என்ன.......

பஞ்சபாண்டவர், கர்ணன் குந்தி துஞ்சாதன் என்று என்ன வசனம், கூடிவே குல தொழிலை பாரு என்ற எகதாளம் வேறு.........

இவர்கள் பேசின பேச்சுக்கு என்ன மதிப்பு என்று மக்கள் இப்போது பதில் சொல்லி இருக்கிறார்கள். இது தமிழர்கள் மட்டும் இல்லை மலையாளிகளும் தான்.

இது தெற்கு வடக்கு அல்ல கேரட்டை ஆட்டிக்கொண்டே கழுதையை பாரம் இழுக்க வைப்பது போல் ஒரு கேரட்டை காட்டி கடைசியில் அந்த கேரட்டையும் தங்கள் வாயிலே போட்டுக்கொள்ளலாம் என்ற குள்ள நரி தந்திரம் எங்களுக்கு தெரியும் புரியும் என்று காட்டியுள்ளார்கள்.

மாற்று சக்தி என்று தங்களை தாங்களே நினைத்துக்கொண்டவர்களை எங்கள் மீது ஏறி சவாரி செய்துவிட்டு இப்போது இப்படியா பேசுகிறீர்கள் என்று அழகாக பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது இரண்டு திராவிட கட்சிகளும்.

தேர்தல் பிரச்சாரங்களை சரியாக கவனித்தவர்களுக்கு தெரியும் அத்தனை மாற்று கட்சிகளும் காங்கிரசையும் திராவிட கட்சிகளை மட்டுமே விமர்சித்தார்களே அன்றி தவரியும் பாசகவை விமர்சிக்கவே இல்லை ஏன் என்று கவனித்தீர்கள் என்றால் நாளை மந்திரி பதவி கேட்போம் என்ற நப்பாசை.

பானை செய்யும் முன்னரே யாரோ ஒருவன் என்ன விலைக்கு விற்பது என்றும் அதனால் வரும் இலாபத்தில் என்ன என்ன செய்யலாம் என்றும் கணக்கு போட்டதாக ஒரு கதை சொல்வார்கள் அது மாதிரி முடிந்தது இந்த மாற்று கட்சியினரது செயல்.

இதில் ஒரு சோகம் என்னவென்றால் எந்த அரசு வந்தாலும் எளிய மனிதர்களின் தேவைகளை அழகாகவும் ஆழமாகவும் சபையில் எடுத்துசொல்லியும் போராடும் பொதுவுடமை தோழர்களும் பலியாக்கப்பாடார்களே என்றது தான்.

இனி 5 ஆண்டுகளுக்கு என்ன என்ன நகைசுவைகள் எல்லாம் அரங்கேறுகிறது என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

வடிவேல் இல்லாத குறையை இந்த மாற்று கட்சி நிறைவு செய்து இருக்கிறது.

அதிமுக பெரும்பான்மை பெற்று உள்ளதால் சொத்துகுவிப்பு வழக்கு இனி வேறு திசையில் பயணிக்க வாய்பு இருக்கிறது. பன்னீர் அனேகமாக எல்லா கோவில்களுக்கும் ஒரு சுற்று போய் வந்துவிடுவார் பாருங்கள்.

இந்த மாற்று கட்சிகளிலே அதிகமாக அடி வாங்கியர் சீமான் தான் வெறும் 621 வாக்குகள் மட்டும் பெற்று இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் தங்களது சாதி சொந்த ஓட்டுகளையாவது பெற்றார்கள் இவர் தான் பாவும் அடியோ அடி என்று வாங்கி இருக்கிறார்.......


6 comments:

Sudhagar said...

Please don't show disrespect to people(Any party) lost in elections.They are also needed in democracy and what Mr.Ramadoss said is also right, but the way he said that is not correct.

You can always criticize meaningfully.

Anonymous said...

seeman got 12400

Anonymous said...

கம்யூனிஸ்ட் எவ்வளவோ எளிய மக்களுக்காக சிறப்பான கொள்கைகள் கொண்டிருந்தாலும் , தா.பாண்டியன் போன்றோர், அதிமுக எவ்வளவோ அராஜக ஆட்சி நடத்தி தமிழகத்தை எல்லா விதத்திலும் கடைசி மாநிலமாக ஆக்கியும் , புகழ் பாடி நின்றது அருவெருப்பானது. இன்னுமும் பாருங்கள் ஜெ மட்டும் கண் அசைக்கட்டும், உடனே போய் காலில் விழுவார்கள். எப்படி பட்ட அடிப்படை மக்களுக்கான தத்துவங்கள் இவர்கள் போன்றவர்கள் அழிக்க படுகிறது.
இதனாலே மக்கள் திசை திருப்ப பட்டு அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில். ஜெவால் இவர்கள் மிதிக்கப்படும் நாட்கள் அதிகமில்லை.

')) said...

சுதா இராமதாசு சொன்னவிதம் மிகவும் தவறு, மேலும் அவர்களும் அவரது மகன் வன்னியர்மணி பேசிய செயல்பட்ட விதமும் மிகுந்த வெருப்பை விதைதது. அவர் மட்டும் அல்ல மற்ற கட்சியினரை மாற்று கட்சியாகத்தான் எப்பொழுதும் பார்ப்பது உண்டு. ஆனால் இவர்கள் மாற்றுக்கட்சியினர் இல்லை மாறாக ஏமாற்று கட்சியினர் என்று அவர்களே கொடுத்தவிளக்கம் அவர்களுக்கே புரியாமல் போனது வேதனை.

')) said...

இந்த தேர்தலில் அதிமுகவையோ திமுகவையோ ஒருவரும் விமர்சிக்கவில்லை. நான் சொல்வது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மீள்படிப்பு படித்து பாருங்கள். எல்லோரும் சொன்னது திராவிட கட்சிகளை அழிக்கவேண்டும் என்றதும் அதற்கு காரணம் ஆணவம் ஊழல் சிறை சென்றவர் குடும்ப அரசியல் என்று சொன்னார்களே அன்றி அதிமுகவையோ திமுகவையோ அவர்கள் விமர்சிக்கவே இல்லை. கெடுவான் கேடு நினைப்பான் கதையாக திரும்பும் என்று ஒருவரும் நினைத்து இருக்க மாட்டார்கள். இவர்கள் எல்லாம் வெளியில் பேசாத ஒரு செய்தி இருக்கிறது, அனேகமாக தோல்வியின் விரக்தியில் அவைகளையும் பேசி தொலைக்காமல் இருக்கனும். பார்ப்போம், அப்படி இல்லையேல் இன்னமும் அதிகமாக சந்திப்பார்கள்

')) said...

621 பத்திரிக்கையில் வந்த செய்தி தான், தொடுப்பு இருந்தால் சீமான் கடலூரில் பெற்ற வாக்குகளை வெளியிடவும்