Monday, May 30, 2016

வன்னியர்மணி என்ற அன்புமணியின் குழந்தை தனமான பேட்டி

தேர்தலுக்கு பின் ஊடகங்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் வன்னியர்மணி தன்னை திருத்திக்கொண்டு பேட்டியை ஆரம்பித்ததை பார்க்கும் போது அடடா என்று தான் இருந்தது. அது வெறும் கண்துடைப்பு என்று நேரம் போக போக அழகாக தெரிந்தது.

நீங்கள் ஏன் வெற்றி பெறவில்லை, அதிமுகாவும் திமுகாவும் தான் காரணம் என்று சொல்கிறார்.

தலைமை பற்றி விளக்கி சொல்லும் அத்தனை நூல்களிலும் சொல்லும் முதல் தகுதி தோல்விக்கு பொருப்பேற்றுக்கொள்வது தலைமை என்றது தான் முதல் தகுதி.

ஆனால் வன்னியர்மணி தோல்விக்கு தாங்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்றது மட்டும் இல்லை இவ்வளவு நடந்ததுக்கும் பிறகு நாங்கள் வெற்றி பெற்று தான் இருக்கிறோம் என்று சொல்வது மிகை  நம்பிக்கை என்றது இல்லை குழந்தை தனமானது என்றது கூட தெரியாத  ஒரு தலைவர்.

இவர் தமிழகத்தை இல்லை இந்தியாவை வழி நடத்தக்கூடியவர் என்று அவர்களது சாதி இயக்கம் முழங்கிக்கொண்டு இருப்பதும் குழந்தை தனமே.

இந்த பேட்டியை பார்க்கும் அதே வேளையில் திருமாவளவனின் பேட்டியையும் பார்க்க நேர்ந்தது.

தோல்விக்கு பிறகு ஒரு தலைவன் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசினார் முடிவு வரை.

மக்களை எங்களது சிந்தாந்தத்துக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் மேலும் மாற்று அரசியலை உள்ளூர்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை எப்படி மற்றவர்களின் மீது தங்களது கருத்துகளை திணித்தார்கள் என்று அழகாக சொன்னர் திருமா.

26 ஆண்டுகால அரசியல் அனுபவம் என்று பீற்றிக்கொள்ளும் வன்னியர்மணிக்கு இருப்பது சாதி வெறி தவிர வேறு ஒன்றும் இல்லை.

கேட்டால் மீண்டும் பழையவைகளுக்குள் செல்ல விரும்பவில்லை என்று சுருக்கமாக நழுவுகிறார்.

வன்னியர் இயக்கத்தின் சாதி வெறிக்கு காடுவெட்டி குருவின் பேச்சை கேளுங்கள் விளக்குவார். ஈழத்தில் என்ன இன சுத்திகரிப்பு நடந்ததோ அதே சுத்திகரிப்பை வன்னியர் இயக்கம் சத்தம் இல்லாமல் செய்துக்கொண்டு இருக்கிறது.

வன்னியர்மணி மேடையில் இன்றைக்கு காட்டும் அடக்கத்தை தேர்தல் நேரங்களில் காட்டாமல் போனது ஏன் வன்னியர் கட்சிதான் ஆட்சிக்கு வரபோகிறது பிறகு எப்படி பேசினால் என்ன என்று நினைத்தார் போலும்.

முன்னால் முதல்வர், இன்னால் முதல்வர், முன்னால் துணை முதல்வர் என்ன நாடகம் வன்னியர்மணி.......

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உலகத்தில் வன்னியர்கள் மட்டும் இல்லை மற்றவர்களும் சேர்ந்தது தான் உலகம். நாகரீகம் அடைந்த உலகில்  இருக்கும் வித்தியாசத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் உலகம்.

வன்முறைகளை கைவிட்டு மக்களாட்சி முறைக்கு திரும்புங்கள். மாநில கட்சிகள் உங்களை கூட்டணியில் சேர்க்காமல் அனாதையாக விட்டால் என்ன, கணக்குகளை எப்படியாவது துவங்க வேண்டும் என்று தவிக்கும் தேசிய கட்சிகள் கட்டாயம் கூட்டணிக்கு அழைக்கும்.

வாய் எல்லாம் பல் தெரிய ஒரு மாலையை அவர்களுக்கு செலுத்திவிட்டு மாற்றம் முன்னேற்றம் என்று அவர்களோடு சேர்ந்து முழக்கம் இடுங்கள்.

வன்னியர் இயக்கம் மறுபடியும் முகாம் முகாமாக வந்து கூட்டத்தை கூட்டி மக்கள் தொலைக்காட்சியில் காட்டி பெருமை பேசிக்கொள்ளலாம்...........

குழந்தை பருவத்தில் இருந்து கொஞ்மாவது வளருங்கள் வன்னியர்மணி, இன்னமும் கையில் உள்ள மிட்டாயை பிடுங்கப்பட்ட குழந்தையாகவே அழுதால் எப்படி. போட்டுக்கொள்ளும் வேடத்திற்கு தகுந்தார் போலாவது நடிக்கவாது கற்றுங்கொள்ளுங்கள் வன்னியர்மணி.

Sunday, May 22, 2016

மாற்று அணியினர் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளபட காரணம் என்ன

ஆட்சியில் உள்ள குறைபாடுகளையும் இனி மீட்டு எடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் தலைவர்களையும் கட்சியையும் பேசியது முதல் காரணம்.

இரண்டாவதாக இவர்களை நம்பித்தான் திராவிட கட்சிகள் இது வரை ஆட்சியை பிடித்தது என்று நம்பியதோடு மட்டும் நில்லாது அதை மேடைதோரும் வன்மையான மொழிகளில் விளித்ததும் ஆகும்.

மாற்றம் முன்னேற்றம் என்று மூச்சுக்கு முன்னூரு தடவை சொன்னாலும் சாதி அரசியலையே முன்னெடுத்து சென்றதும் தான் இந்த படு தோல்விக்கான காரணங்கள்.

பாசக மறுபடியும் மத அரசியலை செய்ய நினைத்தது ஆனால் பாவம் இப்படி ஒன்று இரண்டு என்று இருந்த இடத்தையும் இழக்கும் என்று எதிர் பார்த்து இருக்காது.

தமிழில் இல்லாத நீதி நூல்களா இல்லை தமிழில் சொல்லாத நல்வாழ்வு கருத்துக்களா இந்து மதத்தில் சொல்லி இருக்கிறார்கள். நிலைமை அப்படி இருக்க என்னவோ தமிழகத்து மக்களுக்கு வாழவே தெரியாமல் வாழ்வது போலவும், இவர்கள் வந்து தான் வாழவே கற்றுக்கொடுக்க போவதும் போல மாயையை காட்டியது மக்களின் மனதில் எரிச்சலை தூண்டி இருக்க வேண்டும்.

சல்லிகட்டில் தொடங்கி எழுவர் விடுதலை வரை எல்லா காரியங்களிலும் பாசக கள்ள ஆட்டம் ஆடியதை நன்றாக மக்கள் புரிந்துக்கொண்டுவிட்டார்கள் போலும்.

தந்தி, புதிய தலைமுறை, இன்னும் இருக்கும் அத்தனை விவாத மேடைகளிலும் பாசகவும் சரி மாற்று அணியினரும் சரி பேசிய பேச்சுக்களை ஒருவரும் இரசிக்கவில்லை என்று தெளிவாக தெரிகின்றது.

இதே  மேடைகளில் நாஞ்சில் சம்பத் அதிமுகவின் மானத்தை வாங்கினார் இருந்தாலும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும் என்றும் காட்டுகிறது.

பகுடி செய்யும் இணைய புலிகள் அடங்க இன்னமும் வெகுகாலம் பிடிக்கும் நல்ல தீனி போட்டுள்ளார்கள் இந்த மாற்று அணியினர்.

திராவிட கட்சிகள் இனியாவது இந்த மாதிரியான உதிரி கட்சிகளை சோறூட்டி பாராட்டி வளர்க்காமல் இருக்கிறதா என்று பார்ப்போம்.

மறுபடியும் விவாத மேடைக்கு அழைத்து தோல்விக்கு உண்டான காரணிகளை அலசுவார்கள் அப்போதாவது அவையடக்கதுடன் பேசுகிறார்களா என்று பார்ப்போம்.

வைகோவை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. அவர் செய்த வேலைக்கு அவருக்கு கூலி கிடைத்து இருக்கும் ஆனால் அவரை நம்பிய இவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம். 

Friday, May 20, 2016

அடடா என்ன ஒரு தேர்தல் முடிவு

ஆறேழு மாதமாய் என்ன  என்ன பேசினார்கள் மாற்றம் சொல்லும் தலைவர்கள்.

குறிப்பாக வன்னியர்மணி செஞ்ச அலப்பரை தாங்கலப்பா.

இதுல நான் நாயகன் அவரு வில்லன் இவரு வில்லி என்ற வசனம் வேற.....

திராவிட கட்சிகளை அழியுங்கள் என்று மேடை நாகரீகம் கொஞ்சம் இல்லாமல் சீமான் பேசிய பேச்சுக்கள் செவி கொடுக்கமுடியலப்பா.

இது எல்லாவற்றிக்கு மேலாக ஐயா இராமதாசு வாக்காளர்களை அவமான படுத்தும் விதாமாக திராவிட கட்சிக்கள் காசுகளை வீசினாரகள், அப்படி வீசி வாக்குகளை வாங்கினார்கள் என்று ஒற்று மொத்த வாக்காளர்களையும் நாய் என்று அல்லவா விளிக்கிறார். என்ன 760 கோடி விளம்பரம் வீனாய் போச்சே என்ற வெறுப்பு வேற என்ன......

அப்துல் கலாம் பூமியில வந்து படிக்க பள்ளி இல்ல சுகாதாரம் இல்லை மக்கள் வாழவே தகுதி இல்லாத பூமி இந்த தமிழகம் என்று சொமாலியா பிரதமர் மோடி வந்து விளித்தது என்ன.......

பஞ்சபாண்டவர், கர்ணன் குந்தி துஞ்சாதன் என்று என்ன வசனம், கூடிவே குல தொழிலை பாரு என்ற எகதாளம் வேறு.........

இவர்கள் பேசின பேச்சுக்கு என்ன மதிப்பு என்று மக்கள் இப்போது பதில் சொல்லி இருக்கிறார்கள். இது தமிழர்கள் மட்டும் இல்லை மலையாளிகளும் தான்.

இது தெற்கு வடக்கு அல்ல கேரட்டை ஆட்டிக்கொண்டே கழுதையை பாரம் இழுக்க வைப்பது போல் ஒரு கேரட்டை காட்டி கடைசியில் அந்த கேரட்டையும் தங்கள் வாயிலே போட்டுக்கொள்ளலாம் என்ற குள்ள நரி தந்திரம் எங்களுக்கு தெரியும் புரியும் என்று காட்டியுள்ளார்கள்.

மாற்று சக்தி என்று தங்களை தாங்களே நினைத்துக்கொண்டவர்களை எங்கள் மீது ஏறி சவாரி செய்துவிட்டு இப்போது இப்படியா பேசுகிறீர்கள் என்று அழகாக பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது இரண்டு திராவிட கட்சிகளும்.

தேர்தல் பிரச்சாரங்களை சரியாக கவனித்தவர்களுக்கு தெரியும் அத்தனை மாற்று கட்சிகளும் காங்கிரசையும் திராவிட கட்சிகளை மட்டுமே விமர்சித்தார்களே அன்றி தவரியும் பாசகவை விமர்சிக்கவே இல்லை ஏன் என்று கவனித்தீர்கள் என்றால் நாளை மந்திரி பதவி கேட்போம் என்ற நப்பாசை.

பானை செய்யும் முன்னரே யாரோ ஒருவன் என்ன விலைக்கு விற்பது என்றும் அதனால் வரும் இலாபத்தில் என்ன என்ன செய்யலாம் என்றும் கணக்கு போட்டதாக ஒரு கதை சொல்வார்கள் அது மாதிரி முடிந்தது இந்த மாற்று கட்சியினரது செயல்.

இதில் ஒரு சோகம் என்னவென்றால் எந்த அரசு வந்தாலும் எளிய மனிதர்களின் தேவைகளை அழகாகவும் ஆழமாகவும் சபையில் எடுத்துசொல்லியும் போராடும் பொதுவுடமை தோழர்களும் பலியாக்கப்பாடார்களே என்றது தான்.

இனி 5 ஆண்டுகளுக்கு என்ன என்ன நகைசுவைகள் எல்லாம் அரங்கேறுகிறது என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

வடிவேல் இல்லாத குறையை இந்த மாற்று கட்சி நிறைவு செய்து இருக்கிறது.

அதிமுக பெரும்பான்மை பெற்று உள்ளதால் சொத்துகுவிப்பு வழக்கு இனி வேறு திசையில் பயணிக்க வாய்பு இருக்கிறது. பன்னீர் அனேகமாக எல்லா கோவில்களுக்கும் ஒரு சுற்று போய் வந்துவிடுவார் பாருங்கள்.

இந்த மாற்று கட்சிகளிலே அதிகமாக அடி வாங்கியர் சீமான் தான் வெறும் 621 வாக்குகள் மட்டும் பெற்று இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் தங்களது சாதி சொந்த ஓட்டுகளையாவது பெற்றார்கள் இவர் தான் பாவும் அடியோ அடி என்று வாங்கி இருக்கிறார்.......


Friday, May 13, 2016

தரம் தாழ்ந்த அரசியலாம் சொல்வது பாசக நம்புங்கோ மக்களே நம்புங்கோ

பிரதமர் வேட்பாளாரக அறிவித்தது முதல் இன்றைக்கு வரை செல்லும் இடம் எல்லாம் சின்னஞ் சிறு குழந்தையை போல் அது என்னுது இது என்னுது எனக்கு தான் எனக்கு மட்டும் தான் என்று அமெரிக்கா ஆப்ரிக்கா முதல் நேபாளம் வரை தற்புகழ்ச்சியாக பேசும் இந்த மனிதர் தலைமை தாங்கும் பாசக அமைச்சர்கள் சொல்கிறார்கள் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது.

அது மட்டும் இல்லை உலக தலைவர்கள் என்று வேண்டாம் சின்னஞ் சிறிய தலைவர்களில் கூட காட்டுங்கள் பார்ப்போம் ஒரு ஐ போர்னை வாங்கிட்டோம் என்று எல்லோருக்கும் அறிவிக்கும் விதமாக போகிற வருகின்ற இடம் எல்லாம் சொல்பி எடுத்து திரியும் தலைவரை பார்த்து இருக்கிறீர்களா.......

என்னமோ இவர் பிரதமராக வில்லை என்றால் இந்தியா இல்லை உலகமே படுத்து உரங்கிக்கொண்டே இருக்கும் என்றது போல் குழந்தை தனமான பேச்சு எங்கே போனாலும்.

கேரளா சோமாலையாவாம் தமிழகம் காட்டுமிராண்டி நாடாம் அப்போ குசராத்து என்ன அண்டார்டிகாவா

இந்த செய்தியை சொல்லும் போது இந்த மக்களின் உடல் மொழியை கவனியுங்கள் சொல்வது எல்லாம் பொய் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். 3 விதமான கோணங்களிலும்



இவர்கள் வெளியிட்ட உடனே மற்ற கேள்விகளை அடுக்கடுக்கா வெளியிட்டாங்க இனிமேல் அந்த அசல் நரேந்திரனை கண்டு பிடித்து இது என்னுடைய பெயர் என்று சொல்லாம இருக்க இன்னேரம் ஆட்டோ போய் இருக்கும். பாவம் உயிருக்கு பயந்து அந்த மக்கள் எங்கே ஓடி ஒளிந்தார்களோ....

அப்துல் கலாம் மாநிலத்திற்கு வந்துவிட்டு ஒரு சம்பிரதாயத்திற்கு கூட அவர் நினைவிடத்திற்கோ இல்லை அவரை பற்றியோ ஒரு வார்த்தை கூட இது வரையில் பேசவில்லை. கலாம் இவர் சொல்கின்ற அதே காட்டுமிராண்டி மாநிலத்தில் படித்து பட்டம் பெற்று இந்தியாவை பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய வைத்தவர். இந்த மாநிலத்தில் படிக்க அடிப்படை வசதி கூட இல்லை என்று சொல்வது என்ன தரமான அரசியல்....

கலாமுக்கு பிறகு மையிசாமி பிறகு ஒரு கேரளர் என்று தென்னகத்து மக்கள் தலைமையேற்று நடத்தும் அறிவியல் முன்னேற்றங்களை என்னமோ இவர் கனவில் உதித்து அதை இவரே செஞ்சது போல் செல்பி விடுகிறார் பாருங்க என்ன தரமான அரசியல்......

பாசக பேசாம அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடலாம் ஆனாலும் அங்கே போனாலும் அமெரிக்காவை பார்த்து சோமாலியா போல் இருக்கிறது என்று சொன்னால் பேச்சால் நிறவெறி பேசுகிறார் என்று கம்பி எண்ண அனுப்புவார்களே பரவாயில்லையா..... அங்க எல்லாம் செல்பி எடுத்து செய்தி தாள்களில் வெளியிட சொல்லுங்கள்.........

அமெரிக்கவுல ஒபாமா கூப்டாங்க சைனாவுல சாக்கி சான் கூப்பிடாங்கன்னு இன்னமும் எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம்.....

Thursday, May 12, 2016

மோடி மற்றும் பாசக பார்வையில் தமிழகம் முழுதும் பிச்சை எடுத்து திரியும் காட்டுமிராண்டி மாநிலம் போலும்

இன்றைக்கு வேதாரண்ய கூட்டதில் பேசிய மோடி இந்த வரிகளை உதிர்த்துள்ளார்

"தமிழக மக்களுக்குத் தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வீடு, மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை."

தமிழக பாசக நிர்வாகிகள் ஏதோ ஒரு பராரி காட்டை கொண்டு மோடிக்கு காட்டி இது தான் தமிழ் நாடு என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

இந்த வாசகங்களை பார்க்கும் போது கண் தெரியாத குருடர்கள் யானையை தடவி பார்த்து முரம், தூண், தொம்பை, கயிறு என்று சொன்னதாக சொல்லும் கதை தான் கவனதிற்கு வருகிறது.

தமிழகம் காமராசர் காலம் தொட்டு கல்வி சேவைகளையும் சாலை வசதிகளையும் அபரிவிதமாக கொண்ட மாநிலம்.

அது மட்டும் இல்லை சமுதாய முன்னேற்றத்தில் முன்னோடியாக உள்ள மாநிலம் வேறு.

என்ன காங்கிரசு ஆட்சி காலத்தில் இந்தி எதிர்ப்பை காரணம் காட்டியும் புதிய தொழில்களை கொடுக்காமல் ஏமாற்றியதால் வந்த பொருளாதார மந்தம் கூட போன பாசக ஆட்சியின் போதும் அதற்கு அடுத்த கால கட்டங்களில் வட மாநிலங்களில் உள்ளது போல் தொழில் வளங்கள் பெருகியதை மோடிக்கு ஒருவரும் சொல்லவில்லை போலும்.

ஒரு வேளை மத கலவரமும் இன தாக்குதல்களும் இல்லாததால் அப்படி நினைகிறார் போலும் மோடி.

கல்வி, தொழில், உணவு உற்பத்தி என்று தன்னிரையு அடைந்த மாநிலத்தை இதைவிட ஒருவரும் கேவலப்படுத்த முடியாது.

என்ன தான் பாசக கட்சி ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்தில் இல்லை என்றாலும் அவர்களும் தமிழர்களே என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள். தனது மாநிலத்தை காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்று அடுத்த மாநிலத்தவர் வந்து சொல்வதை பார்த்து மகிழும் இந்த ஈன பிறவிகளை பாருங்கள்........


கேரளத்தில் இப்படி ஒரு செய்தியை பேசியதற்கு மோடியை போடு போடு என்று போட்டு தாக்குகிறார்கள், ஆனால் தமிழர்களோ சொல்லுங்க இன்னமும் சொல்லுங்கோ என்று இருக்கிறார்கள்.

ஐயோ பாவம் தமிழர்களுக்கு என்ன ஆனது அடுத்தவன் நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதை எப்படி இன்னமும் பொருத்துக்கொண்டு இருக்கிறார்களோ.............

 நம்மை எல்லாம் காட்டுமிராண்டி என்று சொல்லும் இந்த மேதாவிகளை தேர்ந்து எடுங்கள் மக்களே. இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொண்டு ஏறுதழுவலுக்கு அலையவிடுவதை போல் அலையவிடுவார்கள் இந்த கட்சியினர்கள்...........

மானம் கெட்ட தமிழக பாசகவினர்கள்........... இது எல்லாம் ஒரு பிழைப்பா இதற்கு வைகோ சொன்ன அந்த வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது.......... போங்கடா போய் வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள்.......

இதுல பட்டம் படிச்சவங்க நாகரீகம் தெரிந்தவர்கள் என்ற பீத்தல் வேற............அட கொடுமையே........

அப்படியே நமது பெற்றோர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லை, குளிக்க தெரியவில்லை, பல் துலக்க தெரியவில்லை என்று மோடியை விட்டு சொல்ல சொல்லுங்கட மனங்கெட்ட பாசக நிர்வாகிகளே............ அவரரும் அரிதாதம் பூசி கைய கால ஆட்டி கதளி ஆடுவார் அரங்குகளில்.........

Wednesday, May 11, 2016

பாமகவும் அன்புமணியும் - சொல்வார்களா செய்வார்களா - அன்புமணியின் முதல் கையெழுத்து இதுக்கு தான்

மூச்சுக்கு மூச்சு மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று பேசும் பாமகவும் அதன் அடுத்த வாரிசு அன்புமணியும் என்ன மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சியை பற்றி அறிவித்தால் ஆட்சியை பிடிக்கமுடியும் என்று தெரியாமல் தவிக்கிறார்களா இல்லை நடிக்கிறார்களா....

உதாரணத்திற்காக  சொல்வோமானால் ஒவ்வொரு நாடும் ஒரு கப்பல் போன்றது அதில் பயணிக்கும் மக்கள் எல்லோடும் நாட்டில் வாழும் மக்கள் என்று வைத்துக்கொள்வோம்.

கப்பல் ஒரு புயல் நோக்கி சென்றுக்கொண்டு இருப்பது அறிந்து கப்பல் தலைவர் பயணிகள் தங்களையும் கப்பலையும் காத்துக்கொள்ள என்ன என்ன செய்யவேண்டும் என்று வரிசையாக அறிவித்து ஒரு ஒத்திகையும் நடத்துகிறார்.

அந்த ஒத்திக்கையில் ஆங்காங்கே தலைவனின் கட்டளைகளை உள்வாங்க முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு புரியும் வண்ணம் செய்துக்காட்டியும் வழி நடத்தியவர்களை அந்த கப்பல் தலைவன் அவர்களை அந்த புயலின் போது மக்களை இப்படியே வழி நடத்தும் படி பணிகிறார்.

நேரம் செல்ல செல்ல புயலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கப்பலை ஆட்டம் காண வைக்கிறது.

அந்த குட்டி குட்டி தலைகள் அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து மக்களை பாதுகாப்பாக செயல்படவும் பாதுகாப்பதுமாக சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் பாமக கட்சியினர் போல் சிந்தாந்தம் கொண்ட சில குட்டி தலைகள், அந்த கப்பலில் தன்னை சார்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி முதலில் செய்வது என தங்களுக்குள் பேசிக்கொண்டு தீவிரமாக செயல்பட துவங்கினார்கள்.

புயலின் கடுமை அதிகமாக அதிகமாக கப்பல் தலைமை எல்லோருக்கும் மிதவை உடைகளை கொடுத்து போட்டுக்கொள்ள செய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். உடனே இந்த குட்டி தலைகள் தங்களது மக்கள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு தான் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று இரகசியமாக பேசிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கப்பலை முழுமையாக இருள் சூழ்கின்றது. இனியும் கப்பல் நகர்ந்தால் திசைமாறி போகும் என்று நடுக்கடலில் நங்கூராம் இட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றது.

இப்படி நங்கூரமிட்டு நிற்கும் போதெல்லாம் எத்தனை நாள் ஆகும் என்று தெளிவாக அறிவிக்கவோ அறியவோ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதால் கப்பல் பயணிகளுக்கு கொடுக்கும் உணவை அளந்து அளந்து தான் செலவிடும் என்ற விதி. அனைவரும் நிலைமையை சீர்த்தூக்கி ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று தான்.

தனது பிள்ளைக்கு கிடைக்கவில்லை என்றால் தனது உணவை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தண்ணி குடித்துவிட்டு இருப்போர் பெற்றோர்கள். என்ன 2 , 3 நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று இருப்பார்கள்.

இந்த நிலையில் உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை என்று சில குட்டி தலைகள் தலைமையிடம் உண்மை நிலையை தெரிவித்து அதிகமாக பெற்று செல்வதை இந்த சுயனல குட்டி தலைகள் பார்க்கிறார்கள். அதையே சொல்லி இவர்கள் பங்கிற்கும் அதிகமாக பெற்று அபரிவிதமாக கொண்டு வந்து கொட்டுகிறார்கள். உண்டது போக மிகை அதிகமாக மீதம் இருக்கிறது. அந்த உணவையும் தண்ணீரையும் பதுக்குகிறார்கள்.

அப்போது இதை கவனித்த பக்கதில் இருக்கும் குழு உங்களிடம் அதிகமாக இருக்கும் உணவை எங்களுக்கு கொடுங்கள் எங்களில் பாதி பேர்க்கு கூட கிடைக்கவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது ஒன்றும் சொல்லாமல் கொடுக்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை உணவு வழங்கல்  வரும் போது இந்த செய்கை தலைமையிடம் தெரிவிக்கப்படுகின்றது. அந்த கப்பல் தலைவன் இந்த சுயனல தலைகளுக்கு கணக்கு பார்த்து கொடுக்கவும் என்று உத்தரவு பிறக்கிறது. அதுவும் இவர்களது பதுக்கலை அம்பலபடுத்தியரிடமே அந்த பொறுப்பு கொடுக்கப்படுகின்றது.

மறுபடியும் இந்த சுயனல குட்டி தலைகள் தங்களுக்குள் திட்டம் தீட்டுகிறார்கள், மற்றவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு எப்போதும் எந்த குறையும் வந்துவிடக்கூடாது. ஆகவே கொடுக்கிறார்களா என்று பார்ப்போம் அப்படி இல்லை என்றால் அடித்து பிடுங்குவோம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

பிறகு துவக்கதில் அடுத்தவர் அறியாத விதமாக தாக்குதல் நடத்தி பிடிங்கி உண்கிறார்கள். ஒரு நேரத்தில் அடுத்தவர் பார்க்கும் படியாகவே அடித்து பிடுங்கி உண்ண துவங்குகிறார்கள்.

இந்த செய்கையை பார்க்கும் மற்ற மக்கள் அனைவரும் கப்பலில் இப்படி ஒரு அவசர நிலை இந்த நிலையில் பகுத்து உண்டு அனைவரையும் காத்து கப்பல் நாடு போய் போகவேண்டும் என்று எல்லோரும் இருக்கையில் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று முகம் சுளிக்கிறார்கள்.

இந்த நிலையில் தாங்கள் மட்டும் இப்படி அடித்து பிடித்து உண்பதால் தானே தங்களை தவறாக பேசுகிறார்கள் என்று சபலபட்ட மற்ற குட்டி குட்டி தலைகளை கூட்டி வந்து இந்த திட்டத்தை சொல்லி இவர் இவர்களை எல்லாம் அடித்தால் யாரும் கேட்க்க கூட மாட்டார்கள் ஆகையால் நமக்கு கிடைக்க வேண்டியவைகள் எல்லாம் இவர்களுக்கு கொடுப்பதை அடித்து பிடுங்கினால் போதும் என்று சதி ஓதுகிறார்கள்.

நாள் கணக்கில் நடுக்கடலில் தவிக்கும் அந்த குட்டி குட்டி தலைவர்களுக்கு தங்களை சேர்ந்தவர்களை காக்க இந்த தியாகத்தை/துரோகத்தை செய்தால் என்ன என்று இதே செய்கையில் இறங்குகிறார்கள்.

அதுவரையில் அமைதியாக இருந்த கப்பல் போர்களமாகவும் போர்கலமாகவும் மாறுகிறது.

பின்னாளில் கப்பல் மீண்டும் பயணிக்க துவங்கும் போது புதிதாக கொண்டு வரப்பட்ட உணவு தண்ணீரை மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

கப்பல் பயணிக்க துவங்கி உடன் கப்பல் தலைமைக்கு வேறு ஒரு ஆள் தேவை படுகின்றது, இப்படி நடுக்கடலில் இருந்த நாட்களில் அடுத்தவர்களுக்கு கிடைக்கவேண்டிய வைகளை  அஞியாயமாக பிடுங்கி தின்றுவிட்டது மட்டும் இல்லாமல் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் தவிக்கவும் சாகவும் செய்த இவர்களுக்கு அந்த தலைமையை அடைந்தால் நமக்கு என்ன எல்லாம் வேண்டுமோ அவைகளை தங்கு தடையின்றி எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தலைமை மேல் ஆசை பிறக்கின்றது.

எப்படி யாரை தேர்ந்து எடுப்பது என்று விவாதம் வருகின்றது, அப்போது இந்த சுயனல தலைகள் இப்படி பேசுகிறார்கள். இது வரையில் இந்த மாதிரியான தலைகள் வந்ததில் என்ன கண்டீர்கள். மாறி மாறி கப்பலில் இருக்கும் உணவுகளை காலி செய்தது தான் இவர்கள் செய்தது இவைகளுக்கு எல்லாம் ஒரு மாற்றமும் அதன் மூலம் முன்னேற்றமும் பின் வளர்ச்சியும் வரவேண்டும்.

இவைகள் எல்லாம் எங்களால் தான் கொண்டு வரமுடியும் என்றும் எப்படி என்று கேட்டதற்கு அவசர காலத்தில் உங்களில் நிறைய பேருக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காமல் தவித்தீர்கள் தானே, இந்த மாதிரி தலைவர்கள் தலைமையை தொடரும் வரையில் இந்த நிலைமை தான் இருக்கும். எங்களை கொண்டு வாருங்கள் மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி வரும் என்று சொன்னார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் அந்த உணவு பற்றாகுறை உங்களால் தான் வந்தது என்று சொல்ல மக்கள் அறியாத வண்ணம் அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை தாக்கினார்கள் இந்த சுயனல தலைகள். அங்கேயும் இங்கேயும் என்று நடந்தது பிறகு அனைவருக்கும் தெரியும் விதமாகவே நடக்க துவங்கியது.

பிற்காலத்தில் மக்கள் முன் நல்லவனாக பேசுவதும் நடிப்பதும் என்றும், திரைக்கு மறைவில் எதிர்க்க சத்தி இல்லாத மக்களை எல்லாம் அழித்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை எல்லாம் நாம் எடுத்து கொள்லலாம் என்று செயல்படுகிறார்கள்.

கப்பல் கறை சேருமா மக்கள் தப்புவார்களா என்று கவலையுடன் பயணம் தொடருகிறது.

ஆக நாட்டின் அடிப்படை தேவை சமூக முன்னேற்றம், மற்ற எல்லா முன்னேற்றத்திற்கும் அடிப்படை இது தான்.

சமூக ஏற்ற தாழ்வுகளை சமன் படுத்தும் வரை இந்திய அமெரிக்காவோ அல்லது வல்லரசோ இல்லை நல்ல நாடாகக்கூட ஆக முடியாது.

இன்றைக்கு சொல்லட்டும் பாமக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிகளை ஒழிப்போம் என்று இந்த தேர்தலில் பாமக தான் ஆட்சிக்கு வரும். சொல்வார்களா செய்வார்களா...... பார்ப்போம்.

Monday, May 9, 2016

தமிழக தேர்தல் களம் இந்தியாவிற்கும் உலகுக்கும் சொல்வது என்ன

சட்டமன்றம், பாராளுமன்றம் என்று எந்த வகை தேர்தல்கள் வந்தாலும் அடுத்தது இந்த கட்சியோ இயக்கமோ தான் வரும் என்று முன் கூட்டியே தீர்மானிக்க கூடிய தேர்தல்களை தான் உலகம் கண்டுள்ளது.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலை பொருத்த வரை இது தான் நிலைமை என்று ஊடகங்கள் ஊதாத சங்கு இல்லை. இருப்பினும் உண்மை நிலை தான் என்ன....... அலசுவோம்

அதிமுக, திமுக, பாமக, பாசக, மநகூ என்று 5 முனை போட்டியாக இந்த முறை.

இதில் யார் யாருக்கு என்ன வாய்ப்பு என்று தனது கருத்துகளை அந்த அந்த கட்சி சார்ந்த ஊடகங்கள் கடைவிரித்து விற்றுக்கொண்டு இருக்கிறது.

இவைகளில் தனிப்பட்ட நபராக வலையேற்றினால் பதிவுக்கு ரூ300 என்று சொல்லி திமுக மேல் சேற்றை வாரி இறைத்தார்கள் ஒரு சாரார்.

தனக்கு பிடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த கட்சியையும்/இயக்கத்தையும் கொஞ்சம் கூட ஞாய தர்மம் இலாமல் வானலாகி புகழ்வதும்/வறுத்து எடுப்பதும் என்று சளைக்காமல் செய்து வருகின்றது ஊடகங்கள். வலைஞர்களையும் சேர்த்து தான்.

2016 சட்டமன்ற தேர்தலில் விவாதிக்கப்படும் மிகவும் முக்கியமான செய்திகள் என்ன என்று பார்ப்போம்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது..... ஏன் என்று கேட்டால், அம்மையார் மிகவும் அகங்காரம் பிடித்தவர், சாலைகளில் இறங்கி கூட ஓட்டு கேட்க்கமாட்டார், எல்லா ஆண்களையும் பொது மக்கள் பார்வையில் தனது காலில் விழ வைத்து இரசிக்கும் ஒரு கொடூர இரசிகை,  என்று அரசியல் அல்லாத பண்புகளை சொல்லி விவாதிப்பார்கள்.

சரி அந்த அம்மாவின் தனிப்பட்ட குணாதிசியங்களை பற்றி நமக்கு என்ன, திட்டங்களை தீட்டுவதும் அவைகளை செயல்படுத்துவதும் தான் அவருடைய மிதிப்பீடு இருக்க வேண்டுமே தவிர மற்றவைகளை பற்றி நமக்கு என்ன என்று கேட்டால், வரிசையாக அவர் மீது சுமத்த பட்டு இருக்கும் ஊழல் வழக்குகளை சொல்லி இப்படி தமிழ் நாட்டை கொள்ளையடிதவர்களை இனியும் பதவில் வைத்து இருக்க கூடாது என்று விவாதிப்பார்கள்.

அப்போ அதிமுகவை பொருத்த அளவில் மக்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது இந்த இரண்டு வகை குற்றங்களும் இல்லை என்றால் திமுகவுக்கு கூட அதிமுக ஆட்சி செய்வதில் ஆட்சோபம் இருக்காது போலும்.

திமுக தப்பி தவறிக்கூட ஆட்சிக்கு வந்துவிட கூடாது ஏன் என்று விவாதிப்போர் சொல்லும் காரணங்கள். குடும்ப அரசியல், ஊழல், தமிழின துரோகம்.

அப்போ திமுக தலைமை குடும்பத்தில் இருந்து அடுத்த முதல்வர் மட்டும் இல்லை திமுகவிற்கு தலைவராக கூட வரக்கூடாது  என்பார்கள் பொதுவாக அனைத்து மக்களும்.

ஊழல், எதற்கு எடுத்தாலும் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் மிகவும் முக்கியமாக 1,75000 கோடி ஊழல். இதற்கு முன்பு சர்காரியா கமிசன் ஊழல் என்று ஊதுவார்கள் இப்போது 2சி ஊழல் என்று ஊதுகிறார்கள்.

ஈழத்து இறுதி போரின் போது மௌனம் காத்து துரோகம் இழைத்துவிட்டார் என்று சொல்வார்கள்.

அது என்ன அதிமுக என்றால் தனிபட்ட குணங்களை மட்டும் விவாதிப்பது மற்றவைகளை அப்படியே தவிர்கிறீர்களே என்றால், விபரம் அறிந்தவர்கள் விலகிவிடுவார்கள். ஏன் என்றால் அது வரை கௌரவமாக் சென்ற விவாதம் அதிமுகவின் செயல்பாடுகளை பற்றி பேசப்போனால் தங்களது மானம் போய்விடும் என்று ஓடிவிடுவார்கள்.

சரி திமுக அடிவாங்கும் ஊழல், துரோகம், குடும்பம் தவிர திமுகாவின் செயல்பாடுகளை ஏன் விமர்சிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால், திமுக தலைமைக்கு மனைவி மற்றும் துணைவி என்று கேலி பேசி சிரிப்பார்கள். அதோடு மட்டும் இல்லை திமுகவின் அமைச்சர்களும் அப்படி தான் என்று பட்டியல் போடுவார்கள்.

சரி திமுகவை இப்படி சொல்கிறீர்கள் அதிமுக என்றால் மூச்சு பேச்சு இருக்காது. அப்படியே பேசினால் முன்னால் தலைவர் இரமச்சந்திரனை(MGR) சொல்லி அந்த இராமனை போல என்று சொல்லி சிலாய்ப்பார்கள். முன்னால் முதல்வர் இராமச்சந்திரன் தனது வீட்டிலே இரண்டு மனைவிகளுடன் தான் வாழ்ந்தார் என்றது உங்களுக்கு தெரியுமா என்றால் பொய்சொல்லாதே என்பார்கள்.

அந்த இரண்டு பெண்களையும் தொடைக்கு ஒன்று என்று உட்கார்த்தி எடுத்த படத்தை காண்பித்தால் இது எல்லாம் சித்துவேலை என்று சினுங்குவார்கள்.

சரி முன்னால் தலைமை தான் அப்படி இனாள் தலைமை எப்படி என்றால் அவர் சொல்வி என்று சொல்லும் போதே உங்களுக்கு அவரை பற்றி தெரியாதா. அவருக்கு என்று யாரும் இல்லை குறை சொல்லனும்னு சொல்லாதே என்று சொல்வார்கள். சோபன் பாபு மற்றும் இலண்டனில் இருப்பதாக சொல்லும் மகள் என்றால் அதோடு ஓடி போனவர்கள் எந்த நாளும் நம்மை சந்திப்பதை விரும்பமாட்டார்கள்.

அப்போ திமுகவின் மேல் வைக்கும் குடும்பம், ஊழல் இவைகள் இரண்டும் அதிகமாக அதிமுகவிடம் தான் இருக்கிறது என்று மக்கள் அனைவரும் ஒத்துகொண்ட ஒன்று.

ஈழ துரோகம் செய்துவிட்டார் திமுக அதனால் பதவியில் வந்து அமரக்கூடாது. சரி அப்படி விவாதிக்கும் மக்கள் சொல்வது சரியே. கொல்லப்பட்டது சிங்கள மக்களாகவே கூட இருந்தாலும் அவைகளை ஆதரிப்பதும் மௌனம் காப்பதும் மனித செயலாகவே சொல்ல முடியாது விலங்கு செயல்தான் மாற்று கருத்தே இல்லை.

சரி அன்றைக்கு திமுக செய்யவில்லை, இன்றைக்கு இதை விவாதிக்கும் மக்களிடம் கேட்ப்போம் அப்போ யார் யார் எல்லாம் துரோகம் செய்யாமல் காப்பாற்ற முயற்சித்தது. அதிமுக இறுதி போர்வரையில் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்றும். அரசியல் பாதையில்லாமல் ஆயுத பாதையில் சென்ற கொடூரகாரர்கள் என்றும் அல்லவா பேசி வந்தது.

அப்போ அதிமுக ஈழ துரோகம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கையாக கொண்டு இருந்ததே என்றால் மலுங்க மலுங்க பார்ப்பார்கள் அந்த விவாதகாரர்கள். இதில் தமிழறுவி மணியனும் அடக்கம்.

ஈழப்போரை வென்று எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசு அதனால் அவர்களை இந்த விவாத்தில் கொண்டு வருவது தவறு. சரி விட்டு விடுவோம் ஆனால் பாசக என்ன செய்துக்கொண்டு இருந்தது. காங்கிரசு இப்படி எல்லாம் செய்கிறது, தடுத்து நிறுத்துங்கள் என்றா சொன்னது. மாறாக தனக்கும் வேறு ஏதோ வேலை இருக்கிறது என்றும் போர் முடியும் வரை தங்களை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் அறிவிக்காத குறையாக அல்லவா நடந்து கொண்டது.

ஆக தேசிய அளவில் இருக்கும் எந்த ஒரு கட்சியும் ஈழ மக்களை காப்பாற்ற ஒரு துரும்ப்பை கூட கிள்ளி போடவில்லை. மாறாக நடக்கட்டும் என்று மௌனம் காத்து வழிவிட்டு காத்து நின்றது.

சரி திமுகவும் அதிமுகவும் ஈழ துரோகம் செய்தார்கள், தேசியகட்சிகளும் துரோகம் செய்தது என்று விளக்கிவிட்டோம். இவைகள் எல்லாவற்றையும் தொகுத்து பேசும் நாம் தமிழர் இயக்கமும், பாமகவும், மநகூவும் என்ன என்ன செய்தார்கள் என்று பட்டியல் இட்டு பார்ப்போம்.

மநகூ அப்போதைய திமுக அரசின் அங்கமாக இருந்தால், அவர்களால் தனியாக எதையும் செய்யவோ பேசவோ எழுதவோ இயலவில்லை. மாறாக கண்டனங்களை மட்டும் பதிவு செய்தார்கள்.

மிஞ்சு இருப்பது பாமகவும் நாம் தமிழர் இயக்கமும். பாமகவின் ஈழ பற்று பற்றி புதிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லை. என்றைக்கு ஈழத்தில் வன்னியர்கள் அதிகம் இல்லை என்று தெரிந்ததோ அன்றையிலிருந்து ஈழம் தங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல என்று இருந்துவிட்டார்கள். ஆகவே பாமகவும் மற்ற கட்சிகளுடன் இந்த ஈழ பிரச்சனையில் கடலில் கரைந்த பெருங்காயமாகிறது.

மிச்சம் இருப்பது நாம் தமிழர் இயக்கம் மட்டும் தான், அவர்கள் என்ன என்ன செய்தார்கள் செய்யாமல் போனார்கள் என்று பார்ப்போம்.

ஈழப்போர் அமைதிவழியில் நடந்துகொண்டு இருந்த வரையில் வெளியில் தெரியாமல் இருந்தது உண்மை. அப்படி போராட்டமாக வெடித்த உடனேயே தடுத்து நிறுத்தி இருந்தால் இப்படி ஒரு நிலைமை அந்த மக்களுக்கு வந்து இருக்காது. மாறாக எரிகின்ற தீயில் எல்லோரும் எண்ணையை ஊற்றினார்களே அன்றி அணைக்க ஒருவருக்கும் தயாராக இல்லை. நாம் தமிழ் இயக்கம் உட்பட.

திமுக அரசு என்ன என்ன எல்லாம் செய்து இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கம் சொல்கின்றனவோ அவைகளில் ஏதாவது ஒன்றாவது நாம் தமிழர் இயக்கம் செய்துள்ளதா. உதாரணமாக ஒன்றை சொல்வோம், சீமான் ஒரு திரைகலைஞர். வருடம் ஒரு படம் ஈழத்தில் என்ன நடந்தது எப்படி நடத்தப்பட்டது ஏன் நடத்தப்பட்டது என்று இது வரையில் ஒரே ஒரு படமாவது எடுத்து இருப்பாரா.

யூதர்களை எப்படி எல்லாம் துன்புறுத்தி கொன்றார்கள்,சித்திரவதை செய்தார்கள் என்று இன்றைக்கும் ஆண்டுக்கு 2 படமாவது ஆசுகர்க்கு வருவது உண்டு. ஓகோ என்று ஓடவில்லை என்றாலும் நட்டம் இல்லாமல் படமும் விருதும் வரும்.

ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஆணிவேர் தவிர இதுவரையில் என்ன நடந்தது, நடக்கிறது, எதற்காக என்று ஏதாவது சீமானோ அல்லது அவரது கட்சியில் இருப்பவர்களோ ஒரு படம், நாடகம், கதை, சிறு கதை என்று எதையாவது செய்ததுண்டா......இல்லை இல்லவே இல்லை.

கேட்டால் நாங்களா அதிகாரத்தில் இருந்தோம் என்று ஒற்றை சொல்லில் வாயை அடைப்பார் சீமான் மற்றும் அவரது கட்சியினர்கள்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்துக்கொண்டா ஏறுதழுவுதலுக்கு தடைவாங்கினார்கள் விலங்கு காவலர்கள். இன்றைக்கு மாநில ஆட்சி இல்லை மைய ஆட்சியாலே ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு அடுத்த ஒரு நாட்டில் தங்களால் தடைகளை பெறமுடியும் என்று நிறுபித்து இருக்கிறது அரசு சாரா அமைப்பினர்களின் இயக்கங்கள்.

ஏன் அந்த மாதிரி ஒரு அரசு சாரா இயக்கங்களை ஒருங்கினைத்து போராட்டங்களை நடத்தி சிங்கள அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் ஐ நா மன்றத்தில் அனுமதி பெற்று போராடி இருக்கலாம் செய்தார்களா நாம் தமிழர் இயக்கம்.

இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே, இது போல் இன்னமும் ஆயிரம் வழிகள் உண்டு உதவ வேண்டும் என்று நினைத்து இருந்தால் எத்தனையோ வழிகளில் உதவி இருக்கலாம். அப்போது எல்லாம் வெறும் பதிவர்கள் கொடுக்கும் ஆதரவை போல் சின்ன சின்ன பொது கூட்டங்களில் முழங்குவது மட்டுமோடு நிறுத்திக்கொண்டு விட்டு இப்போது என்னமோ இவர்கள் எல்லாம் போர்களம் சென்று துப்பாக்கி பிடித்து, தான் தான் தமிழர்களை காப்பாற்றியவர்கள் போல அல்லவா பாவணை செய்கிறார்கள். ஆக நாம் தமிழர் இயக்கம் உட்பட எவருமே ஈழத்துமக்களுக்கு ஆதரவு தர முன்வரவில்லை என்றது தான் உண்மை.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆயுத போராட்டம். அதை அறிந்த புலிகள் தங்களது போராட்ட வடிவை மக்களாட்சி முறைக்கும் திருப்பும் முயற்சியில் தான் அழிக்கப்பட்டார்கள். ஒருவேளை அந்த முயற்சிகள் வெற்றிபெற்று இருந்தால் இரண்டு நாடாக ஈழமும் சிங்களமும் வாந்துக்கொண்டு இருக்கவேண்டுமே என்று அவசர அவசரமாக முடித்தார்கள் அரசியல் சதிகார்கர்கள் என்றது தான் உண்மை.

இந்த திரைமறைவு காரியங்களில் என்றைக்குமே பகிரங்கமாக அறிவிக்க முடியாத காரியங்களை இந்தியா முதல் அமெரிக்க அரசு வரை செய்தது. எப்போது கேட்டாலும் நாங்களா அப்படியா என்று தான் கேட்பார்களே அன்றி உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆக மாற்றம் முன்னேற்றம், வளர்ச்சி என்று மைய அரசை பிடித்த அதே வழியில் தமிழகத்து அரசியலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க ஊடகங்கள் மூலமாகவும், சின்ன கட்சிகளின் மூலமாகவும் தமிழக விரோத சக்திகள் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது.

யார் யார் எல்லாம் அந்த சக்திகள், சோ ராமசாமி, இவர் உலகுகே மோடிதான் பிரதமராக வரவேண்டும் என்று சொல்வார். என்ன காரணம் என்றால் நிர்வாக திறன் தான் காரணம் என்று சொல்வார். அப்போ முதல்வராக இருந்த சமயத்தில் 5 நாட்கள் மாநிலம் முழுதும் தீவிட்டு எரிந்த கலவரத்தை அடக்கமுடியவில்லையே என்று கேட்டால் நீ எல்லாம் திவிரவாதிக்கு ஆதரவு கொடுக்கும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போலும் என்றும் நம் மடியிலே கையை வைப்பார்.

இந்து ராம், இவருக்கு தமிழர்கள் என்றாலும் ஆகாது தமிழகம் என்றாலும் ஆகாது ஏன் தமிழ் என்றாலே அகாது. காரணம் அவர் தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர். ஆனால் அவர்களது தாய் மொழி சங்கதம்(சமசுகிரிதம்). ஆனால் அவரால் அவரது வீட்டில் கூட இம்மொழியில் பேச முடியாத நிலை.

வேற்று மொழியில் தான் பேசுவது என்று ஆகிவிட்டது பிறகு ஏன் தமிழில் பேசுவானேன் ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டம் தான் இந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று கூவுகிறது.

சுப்பிரமணி சாமி அடுத்த ஆள், இவரும் முன்னே சொன்ன எல்லாம் செய்வார், இவர்கள் எல்லாம் பேசாமல் எங்கே ஆதரிக்கிறார்களோ அங்கேயே போய் பிழைக்கலாம். ஆனால் என்ன செய்வார்கள் நம்மிடையே தங்கி நம்மையே சுரண்டி, நம்மையே கேலி பேசி வாழ்வார்கள்.

திராவிட இயக்கங்களை இவர்கள் ஏன் இப்படி மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் கடவுளை காரணமாக காட்டி தலைமுறை தலைமுறையாக சமூகத்தை பிரித்து பகத்துவீட்டுகாரனை நமக்கு பகைமையாக்கி, பக்கத்து தெருகாரனை பகையாக்கி, பக்கத்து ஊர்காரனை பகையாக்கி பக்கத்து மாநிலக்காரனை பகையாக்கி, பக்கத்து நாட்டுகாரனை பகையாக்கி அதிலே குளிர் காய்வது இவர்களது வளர்ச்சியும் முன்னேற்றமும்.

இந்த சூச்சிக்களுக்கு எல்லாம் இரையாகாமல் தமிழகம் தனித்து நிற்பதற்கு காரணம் திகவும் அதன் அரசியல் வடிவங்களாகிய திமுகவும் அதிமுகவும் தான்.

எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக முயன்று அதிமுகவை கரையான் அரிப்பது போல் அரித்து திக கொள்கைகளில் இருந்து உளுத்து போக வைத்துவிட்டார்கள். இப்போது அதே சதிவேலையில் திமுகவையும் உளுத்துபோக வைக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறது அந்த காவிக்கூட்டம்.

வடக்கில் மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை தென்னகத்தில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தீர்க்கமாக சமூக வலைதளம் முதல் ஊடகம் வரை அந்த சதியாளர்களின் கைகள் நீண்டு உள்ளது.

இவர்களது பேச்சை கேட்டால் பின் நாளில் என்ன நடக்கும் தெரியுமா, வடக்கில் பாண்டேக்கள் சாத்திரிகளுடன் பேச மாட்டார்கள், சர்மாக்கள் திக்சித்துகளுடன் நல்ல இருக்கிறியா என்று கூட கேட்க்கமாட்டார்கள். இது 1 வகுப்பு முதல் இறக்கும் காலம் வரை தொடரும் பழக்கம்.

பிறகு எங்கே நாம் அப்துல் கலாமுடன் பேசுவது அல்லது பீட்டருடன் பேசுவது. இப்படி எல்லோரும் இன் நாட்டு மக்கள் என்று வாழும் தென்னகத்தை சாதி தீ ஊற்றி எரியவிட்டு குளிர் காய நினைக்கும் கூட்டம் தான் இந்த மாற்றம் முன்னேற்றம், போதும் திராவிட கட்சிகள் என்பவர்கள்.

தமிழகத்தை ஆள அமித்து சாவும் மோடியும் எதற்கு, அவர்கள் அவர்களது ஊர்களை ஆளட்டும். தமிழகத்தில் இது வரை வாழ்ந்து வந்த நாமே ஆட்சிக்கு வருவோம். அது யாராக இருந்தாலும் சரி.

மாற்றம் முன்னேற்றம் வளர்ச்சி என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது முதல் பிஏ எம் ஏ பட்டம் வரை மோடியின் வரலாறு கிழிந்து தொங்குகின்றது. காவிக்கூட்டத்தின் சதியில் மாட்டி அழிந்துவிட்டாதீர்கள் மக்களே சொல்லி புட்டோம் பிறகு கையை பிசைந்து பலன் இல்லை சிந்திக்கவும் பிறகு வாக்களிக்கவும்.

Tuesday, May 3, 2016

இந்த வெறிபிடிச்ச இளையராசா இரசிகரை என்ன செய்வது


என்ன ஒரு நக்கல், இவர்கள் படத்துக்கு இராசாவோட இசை வேண்டுமா, என்னமா இப்படி பண்னுறீங்களேமா........