Tuesday, November 17, 2015

தீவிரவாதம் தீர்க முடியாத ஒன்றா - ஏன் உலக நாடுகள் மௌனிக்கின்றது

முதலில் பிரான்சில் நடந்த தாக்குதலில் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலை பதிவு செய்வோம்.

உலகில் இப்படி அதிக அளவுக்கு சேதம் விளைவிக்கும் தாக்குதலில் இறங்கும் தீவிரவாத இயக்கங்கள் என்ன வானில் இருந்த ஆயுதங்களை பெறுகிறார்கள். இல்லை எல்லா நாட்டிலும் காய்கறிகள் கிடைப்பது போல் கிலோ இவ்வளவு என்று விக்கிறார்கள் போல் ஒரு தோற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்துவது தான் சோகம்.

இந்த அனைத்து தாக்குதலிலும் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் கூட அந்த ஆயுதங்கள் எப்படி இவர்களுக்கு கிடைக்கின்றது என்று கண்டு அந்த வழிகளை வேர் அறுப்பதை விடுத்து விட்டு. சகிப்புத்தண்மை அது இது என்று புலம்புவதும், இயக்கங்களின் முகாம்களின் மோது குண்டு வீசுவது என்று சாதாரண பொதுமக்களை போல் நடந்து கொள்கின்றது.

யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள், யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று கண்டு அறிந்து தாக்கி இருந்தால் இன்றைக்கு தீவிரவாதம் இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து இருக்காது.

இவைகளை செய்யவில்லை என்றாலும் செய்ய வேண்டும் என்ற அறைகூவலாவது விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா முதல் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தின் வேரை அறுக்காமல் சும்ம இலையையும் கிளையையும் கிள்ளிவிட்டு சாதித்து விட்டதாக கூவுகின்றது.

இந்த அறிவுகெட்ட செயலை இன்னமும் எத்தனை காலத்திற்கு உலக நாடுகள் மேற்கொள்ள போகின்றது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவைகளையும் யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து அவர்களது ஆயுதங்களையும் பிடிக்கட்டும் முடக்கட்டும், பிறகு பாருங்கள் இந்த தீவிரவாதிகள் பழையபடி தெருவில் கலவரம் செய்வதோடு நிறுத்திகொள்வார்கள்.

செய்வார்களா சித்திப்பார்களா பார்க்கலாம்......

1 comments:

')) said...

நல்ல சிந்தனை. இது போலவே, சில மதவாதிகளும், சிந்தனாவதிகளும் இவர்களை தூண்டி விட்டு, அவர்கள் மட்டும் பாதுகாப்பாக உள்ளார்கள். இது நிறைய நாடுகளில் நடக்கின்றது. அடிப்பவனும், அடிபடுவனுமே பாதிக்கப்படுபவர்கள்.