Thursday, October 1, 2015

குற்றம் கடிதல் - ஆசுகர் விருது பெறுமா........

படத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் விரவி கிடக்கிறது.

எந்த ஒரு படமும் ஒரு மைய கருத்தை வலியுறுத்தி எழுதி எடுக்கபடும். ஆனால் இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உறுதியாக சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

அது மட்டும் இல்லாது காட்சிபடுத்தலில் அதிகமாக காட்சிபிழைகள் உள்ளது, உதாரணமாக. மயங்கிய சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து செய்திகள் தீயாக பரவி உடன் படிக்கும் மாணவியை பேட்டி எடுக்கும் காட்சிகள் கதைபடி இரவு 10:00க்கு மேல் நடப்பது போல் காட்டி இருப்பார்கள். அந்த நேரத்தில் மாலையில் மலர்ந்தும் மலராமலும் இருக்கும் முல்லை பூவை சிறுமி தலையில் அணிந்துக்கொண்டு பேட்டி கொடுப்பது போல் காட்சி அமைப்பு, இது கட்டாயம் தனிக்கை குழுவிற்கு பட்டர்த்தவமாக தெரியும், படகுழுவுக்கு கண்ணில் படாமல் போனது ஏமாற்றமே....

கதையில் வரும் பாத்திரங்களும் முன்னுக்கு பின் முரணாகவே நடந்துகொள்கிறார்கள் தலைமை ஆசிரியரை தவிர. உதாரணமாக பாலியலை மாணவரிடம் பேசுவதில் என்ன தவறு என்று சொல்லும் ஆசிரியைக்கு சக ஆசிரியை தன்னை போலவே தான் கண்டிப்பு காட்டி இருப்பார்கள் என்று பேசுவதை விடுத்து எதிராக பேசுவதும் நடந்துகொள்வதும் இயல்பாக இல்லை.

ஆசிரியை என்ன மதம் என்று காட்டியும், கலப்புமணம் புரிந்தவர் என்று வலிய காட்டினார்கள் ஏன் என்று தெரியவே இல்லை.

இடையே காவலர்களையும் காட்டினார்கள், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று உறுதிபட தெரிவிப்பதைவிட குண்டான மகனையும் கொழுப்பு உணவையும் உட்கொள்பவராகவும் காட்டி இருக்கிறார்கள் ஏன் என்று படக்குழுவினர் தான் சொல்லவேண்டும்.

பொதுவுடமைவாதிகள் என்றால் கையை நீட்டுபவர்கள் என்று துவக்க காட்சியில் இருந்து காட்டுவது ஏனோ தெரியவில்லை ஒருவேளை அமெரிக்காவிற்கு பிடிக்கட்டும் என்றா என்று தெரியவில்லை. ஒரு இயக்கவாதியாக இருப்பவர்கள் எந்த ஒரு சூழலிலும் கண்ணியமாக நடந்துகொள்பவர்கள் படத்தில் காட்டிய தலைமை ஆசிரியர் குடும்பம் போல், அதை விடுத்து  அடாவடியாக காட்டி இருப்பது எதிர்மறை பாத்திர படைப்பு, சொல்லமுடியாது இந்த ஒரு காரணத்திற்காக ஆசுகரில் தேர்ந்து எடுத்தாலும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

கைக்குட்டையில் இரத்ததுடன் கண்டேன் என்று சொல்லும் சிறுமியின் காட்சிகள் யாரையோ சமாதனப்படுத்த வலிய திணித்தது போல் இருக்கிறது.

அந்த ஏழை அம்மாவையும் சிறுவனையும் இன்னமும் அதிக கோணங்களில் மனதில் பதியும் படி முகம் தெரியும் படி காட்சிபடுத்தி இருக்கலாம் என்னவோ வேண்டாம் என்று நிழல் மனிதர்களாகவே கடைசிவரை காட்டியது ஏமாற்றமாகவே இருக்கிறது.

காதல் திருமணம் என்றால் வேலைபார்க்கும் பள்ளியில் சொல்லிக்காமல் சென்று தான் செய்துகொள்ள வேண்டுமா என்ன, விடுப்பு எல்லாம் கொடுக்கமாட்டார்களா என்ன 3 நாள் ஆளைகானும் என்று காட்டுவது ஏனோ இயக்குனருக்கே வெளிச்சம்.

சங்கடங்கள் அதிகம் ஆகும் கட்டத்தில் நெற்றியில் இருக்கும் திலகத்தை அழிப்பதாக காட்டியதின் அடையாளம் கிருத்துவர்கள் கலப்புமணம் செய்துக்கொண்டால் இப்படி தான் துன்பம் அனுபவிப்பார்கள் என்று மத போதகர்கள் சொல்வது போல் காட்சிபடுத்தியதை கண்டிக்க வேண்டும்.

கடைசியாக தாய் நாவலை எதுக்கு காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை, அதற்கு பதிலாக புத்துயிர்ப்பு காட்டி இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.

இந்த படத்தைவிட காக்கா முட்டை தெளிவாகவும் நல்ல ஓட்டத்துடனும் இருந்தது...........

0 comments: