Monday, November 26, 2012

நான் செய்வது சரி தானா

இவ்வளவு காலம் எதற்காக காத்து கிடந்தேன், கடைசியில் இப்படி ஆகிவிட்டதே. இப்படி தான் நடக்கும் என்று முன்னமே எல்லோரும் சொன்னார்களே. ஏன் எனக்கு அப்போது எல்லாம் தெரியவில்லை.

இப்போது இப்படி ஒரு நிலைவந்ததும் எது தவறு எது சரி என்று கூட சிந்திக்க முடியாமல் திணறும் நாள் வரும் என்று எண்ணியும் பார்த்தது இல்லை தான். இருப்பினும் இந்த புள்ளி வரை என்னை அழகாக நகர்த்திக்கொண்டு வந்த அனைவரும் இப்போது கைவிட்டு விட்டு, உன் விருப்பம், நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ நடத்திக்கொள் என்று ஒதுங்குவது ஏன்............

இப்படி செய் இது தான் சரி என்று சொன்னால் என்ன குறைந்துவிடப்போகிறது. இப்படி இவர்கள் செய்வது தான், செய்வதா வேண்டாமா என்ற குழப்பம் என்னை செயலற்று தள்ளுவதை இவர்களால் ஏன் புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது. அல்லது தவிக்கட்டும் என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களா. என்ன மனிதர்களப்பா இவர்கள்.......

இப்போது இவ்வளவு யோசிக்கும் இவர்கள் துவக்கத்தில் மட்டும் அத்தனை தீவிரம் காட்டுவான் ஏன். இவர்களது தீவிரத்தை பார்த்து நாம்தான் ஏதோ மென்மையாக நடந்துகொள்கிறோம் என்ற குற்ற உணர்ச்சிகள் வரும் அளவிற்கு நடந்துக்கொண்டு விட்டு இப்போது ஒதுங்குவது ஏன்.

இல்லை சும்மா இருந்த என்னை உசுப்பேத்திவிட்டு அதிலே குளிர் காய்த்துவிட்டு இப்போது சிரிக்க முயலுகிறார்களோ, என்ன தான் நடக்கிறது. யோசித்து யோசித்து மண்டையே குழம்பிவிடும் போல் இருக்கிறதே எப்படி இதற்கு ஒரு தீர்வு காண்பது............

ஒரு வேளை இவைகளை எல்லாம் செய்யட்டுமா என்று என்னுடைய திட்டத்தை இவர்களுக்கு முன்னமே அறிவித்தது தான் தவறாகிபோனதோ. படிப்படியாக சொல்லி இருந்தால் ஒத்துழைத்து இருப்பார்களோ......

நேசிப்பு இந்த வார்த்தைக்கு பொருளே இல்லாமல் அல்லவா இத்தனை ஆண்டுகள் கழிந்தது, அந்த நிலைக்கு பதில் செல்ல வைப்பது தான் எண்ணமாக இருந்தது துவக்கத்தில். பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் இந்த போக்கை மாற்றி பழிவாங்கும் நிலைக்கு வந்தாலும் எனது செய்கையில் இருக்கும் நீதி இவர்களுக்கு தெரியாமலா போனது.

பதில் சொல்ல வைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப்போகிறது. பதில் சொல் என்று தெரிந்தவர்கள் முன்னால் தலைகுனிய வைப்பதற்கும் என்ன பெரியவித்தியாசம் வந்துவிட போகிறது. முன்னே செய்வது மனதளவில் சாகடிக்கும் பின்னே செய்வது உடலளவில் சாகடிக்கும். மனதளவில் சாகட்டிக்கலாம் பாவம் இல்லை உடலளவில் சாகடித்தால் மட்டும் பாவம் என்று இவர்கள் சொல்வதில் என்ன பொருள் இருக்கமுடியும். இரண்டும் ஒன்று தான் எந்த வித்தியாசமும் கிடையாது என்று ஏன் இவர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது.

சண்டைக்கு நிற்கும் போது இந்த மாதிரியான நிலைகள் வரும் என்று எனக்கு தான் தெரியவில்லை, உதவுங்கள் என்ன செய்யலாம் ஆலோசனை சொல்லுங்கள் என்று இவர்களிடம் கேட்டு கேட்டு தானே செய்தேன். அப்போது எல்லாம் நான் பேசும் பேச்சுக்களும் செய்கைகளுக்கு தவறு சொல்லாதவர்கள் இப்போது மட்டும் தவறு சொல்வது ஏன்.

அப்போதே தடுத்து இருந்தால் இந்த நிலைக்கு வந்தே இருக்காதே, எல்லாம் சரியாகிபோகும் என்று இவர்கள் சொன்ன பேச்சை நம்பித்தானே இந்த காரியங்களில் இறங்கினேன். நிலைமை நேருக்கு மாறாக ஆனபின்பு ஆளை கழட்டிவிட்டது நகர்ந்துகொண்டால் எப்படி. இனி நானே தனியாக போராட வேண்டியது தானா. இதைவிட இன்னமும் மேசமான நிலைகள் வந்தால் எப்படி தாங்குவேன்.

யாருக்கு வேண்டும் உங்கள் ஆறுதல், ஆறுதல் தேடியா நான் உங்களிடம் ஓடி வந்தது. தீர்வுக்கு அல்லவா தேடி வந்தேன்.

எனது நேசிப்பு உண்மையானால் நான் பழிவாங்க கூடாது என்று நினைக்கும் நீங்கள், எனக்கு நேசிப்பே கிடைக்கவில்லையே என்று விளக்கும் போது மாய்ந்து மாய்த்து ஆறுதல் சொன்ன நீங்கள் எனது பக்க தவறுகளை ஏன் எடுத்துரைக்கவில்லை. பிடிவாதம் பிடிக்கவும் முரண்டு பிடிக்கவும் அட்டகாசம் செய்யவும் சொல்லிக்கொடுத்தது ஏன்.

எல்லாமே என்னுடை விருப்பம் தான் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு. இப்போது இப்படி செய்வது தவறு அப்படி செய்த்தது தவறு என்று இடித்து கூறுவது ஏனோ...... ஏன் இவைகள் அன்றைக்கு தெரிவியவில்லையோ........

எனக்கு தான் கோபம் கண்ணை மறைத்தது உங்களுக்கு எது மறைத்தது. சின்ன கீறலாக இருந்ததை இன்றைக்கு திருப்பவோ திருத்தி அமைக்க வாய்ப்பே இல்லா நிலைமைக்கு எடுத்து செல்ல தைரியம் சொல்லி வழி ஏற்படுத்தி கொடுத்தவர்களான நீங்களே இன்றைக்கு என்னை குற்றம் சொன்னால் எப்படி.

இப்படி மொத்தமாக எல்லாம் போகும் என்று எடுத்து சொல்லி இருந்தால் இவைகளை வேறு விதமாக நடத்தி இருக்கலாமே. இப்படி முகம் காட்டமுடியாத அளவிற்கு சென்று இருக்க மாட்டேனே........

எனது கோபத்தை இத்தனை வருடங்கள் வீட்டுக்குள் காட்டியது போதாது என்று நான் சொன்ன போது, அந்த பழி வாங்கலே போதும் என்று சொல்லி இருக்கலாமே. அதை விடுத்து இப்படி எல்லாம் நான் செய்ய போகிறேன் என்று சொன்ன போது எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு. இப்போது என்னை மட்டும் குற்றவாளியாக ஆக்கிவிட்டு நீங்கள் எல்லோரும் வெளியில் நின்றால் என்ன பொருள்........


0 comments: