Tuesday, March 8, 2011

தமிழகம் என்ன தனி நாடா, அல்லது இந்தியாவின் ஒரு மாநிலம் தானா......

எந்த மாநிலத்திற்கும் இல்லாத ஒரு தனி மரியாதை தமிழகத்திற்கு.

இந்தியாவில் வெளிவரும் தமிழக ஊடகங்கள் தவிர மற்ற அனைத்து ஊடகங்களுக்கு தமிழக பெயர்களை உச்சரிக்க நாக்கு தடுமாறும் அது எப்படி சீன அதிபரின் பெயரை கூட அவ்வளவு இலகுவாக சொல்லும் அந்த நாக்களுக்கு தமிழகத்து பெயர்களை சொல்வதில் அப்படி ஒரு பொருப்பின்மை. உதாரணமாக தமில் மனிலா காங்கிரசு என்று அன்றைகு மூச்சுக்கு 300 தடவை சொன்னவர்கள் இல்லையா அவர்கள்.

உபியில் 5 நாடாளுமன்ற உருப்பினர்கள் கொண்ட கட்சி எல்லாம் அமைச்சுபதவி, ஆனால் 30 உருப்பினர்கள் இருந்தால் கூட வெளியில் இருந்து ஆதரவு கொடு என்ற ஆனை தமிழகத்திற்கு.

மும்பையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியாவின் 9/11 இது என்று மூச்சுக்கு 300 தடவை அலரியது அனைத்து ஊடகங்களும். எல்லா மத கோயில்களிலும் பூசை எல்லாம் செய்து செய்தியாக்கினார்கள் அவர்கள் எல்லாம் பிழைக்க வேண்டும் என்று.

ஆகா என்ன மனித தன்மை என்று தமிழகத்து ஊடகங்கள் கூட பெருமை பேசின. ஆனால் கிட்டதட்ட 1 1/2 இலட்சம் மக்கள் கொல்லப்படும் போது இதே ஊடகங்கள் இந்தியாவிம் நடந்த கிரிகெட்டு போட்டியினை காட்டியதும். அப்படி ஒரு நிகழ்வே நிகழவில்லை என்றது போல் கானாமல் இருந்தது தான் என்ன நீதி என்று புரியவில்லை.

ஏன் இலங்கையில் மடிந்த அந்த மக்கள் எல்லாம் மக்கள் இல்லை, அவர்களது உயிர்கள் எல்லாம் உயிர்கள் இல்லை. அவர்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா........

இங்கு இருந்து வடக்கு பயணம் சென்றால், ஆங்கிலத்தில் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. முதலில் வரும் பதில் ஆங்கிலம் தெரியாது. இரண்டாவதாக இந்தி தெரியாதா என்ற கேள்வி. அதுவே அவர்கள் தமிழகம் வந்தால் அவர்களுக்கு பெயர் பலகையில் இருந்து பதில் சொல்வது வரை இந்தியில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் சொல்வார்கள் தமிழகம் சென்றால் நம்மால் வண்டி பார்த்து கூட போகமுடியாது என்று.

வண்டியின் தடம் எண் முதல் தேசம் முழுவதும் ஒளிபரப்பாகும் கிரிகெட்டு விளையாட்டு போட்டிகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்கும் ஏன் அந்த கிரிகெட்டு ஓட்டங்களையும் அது போல எண்களில் காட்ட வேண்டியது தானே அதைவிடுத்து தமிழர்களுக்கும் புரியும் படி எதற்கு காட்டவேண்டும்............

வடக்கத்திய நிறுவனங்களின் தமிழக கிளைகளிலும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் வேலைக்கு மட்டும் தமிழகத்து மக்கள் ஆனால் மேளாலர் மற்றும் மற்ற பதவிகளுக்கு எல்லாம் வடக்கத்தியர்கள். ஏன் அந்த வேலை எல்லாம் இந்த மக்கள் செய்யமாட்டார்களா. அல்லது அதிகாரம் எல்லாம் இவர்கள் செய்யக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையா......

இவைகள் எல்லாம் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்,தேச பிதா காந்தியின் கொலைக்கு அந்த கட்சி 6 ஆண்டுகள் நாட்டை ஆளலாம், அன்னை இந்திராவின் கொலையை செய்தவர்களும் கூட நாட்டை ஆளலாம் ஆனால்........................அந்த ஒரு தனிமனிதனின் மேல் தமிழக காங்கிரசுகாரர்களுக்கு இவர்கள் இருவரையும் மிஞ்சின பாசம் ஏனோ தெரியவில்லை.

இந்த இலட்சணத்தில் காங்கிரசும் மற்ற வெளி மாநில கட்சிகள் எல்லாம் வரும் தேர்தலில் தனித்து நின்று தமிழகத்தை முன்னேற துடிக்கப்போகிறது. வாக்காள பெருமக்களே அந்த இந்தி கட்சிகளுக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து அவர்களை தமிழகத்திலே உட்கார்ந்துக்கொண்டு நம்மை எல்லாம் தமிழகத்தில் இருந்து விரட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

1 comments:

')) said...

நல்லா சொன்னிங்க. தேர்தல் வாக்கு தான் முடிவு செய்யும். இந்தி கட்சி தோற்குமா? திராவிடனின் உதவியுடன் சில இடங்களை பிடிக்குமா?