இந்த பொங்கலுக்கு வந்த படங்களிலே மிகாவும் மோசமாக தோல்வியை தழுவிய படம் இது. இந்த படத்தின் பிரதிகளை இணையத்தில் வெளியிட்டதினால் தான் இந்த படம் தோல்வியை தழுவியதாகவும். அப்படி கதை மட்டும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் மற்ற படங்களைவிட இந்த படம் அதிக வசூலை குவித்து இருக்கும் என்ற பரப்பு உரை வேறு.
உண்மையில் யார் இந்த சக்குபாய், எப்படி இந்த கதை உருவானது என்று பார்ப்போம்.
தற்பொழுது தமிழ் பட தயாறிப்பில் ஊடுறுவி இருக்கும் இந்த கதை மற்றும் திரைக்கதை திருட்டு இந்த படத்திலும் நடந்து இருப்பது ஒரு சோகமான உண்மை.
இயக்குனர் இரவிக்குமார் அப்படி இப்படி என்று முழு நேர ஆங்கில உறுவல் பட இயக்குனராகவே மாறிவிடார் என்று தான் சொல்ல வேண்டும். இனிமேல் இரவிக்குமார் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அது எந்த படத்தின் தழுவல்/மொழிபெயர்ப்பு என்று தாராளமக எதிர்பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் " Man on Fire" என்று ஒரு படம் வந்தது. அந்த படத்தில் உடென்டல் வாசிங்டன் தான் தலைவன். தனது வாழ்க்கையை தொலைத்தவனாக குடிக்கு அடிமையாகி, பார்த்த வேலையும் இல்லாது, குடும்பமும் இல்லாது தனி மரமாக காலம் தள்ளுபவன் மெக்ச்சிகோ நாட்டிற்கு தனது பழைய நண்பரை பார்க்க வருகிறார்.
அங்கே அந்த காலகட்டத்தில் பணக்கார குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பணக்கார குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.
அந்த காலத்தில் அங்கே வந்த உடென்சல் வாசிங்டனும் ஒரு பணக்கார மகளுக்கு பாதுகாவலனாக பெறுப்பேற்கிறார்.
சரத்து தண்ணி அடிச்சிட்டு அடிவாங்கும் காட்சியாக அமைவது இந்த மது அடிமையாக இரவு முழுதும் குடிப்பதும், நன்றாக குடித்து ஒரு கட்டத்தில் தலையில் சுட்டுக்கொள்ள நினைக்கும் போது தோட்டா வெடிக்காமல் போகும் காட்சிகளை தமிழில் சரத்து குடித்துவிட்டு அடி வாங்கு காட்சியாக நமக்கு.
அழகான அன்பான அமெரிக்க மனைவி, அருமையன குழந்தை என்று இருக்கும் அந்த குடும்பத்தில் புயல் வீச துவங்குகிறது. உடென்சிலை சுட்டுவிட்டு குழந்தையை கடத்துகிறது அந்த கடத்தல் கும்பல்.
வேலைக்கு செர்த்துக்கொள்ளலாமா என கணவன் கேட்க்கும் பொழுது, நீ ஒரு அமெரிக்கர் என்ற ஒரு காரணம் போதும் என்று சொல்கிறாள் அந்த பணக்காரனின் அமெரிக்க மனைவி. அந்த நம்பிக்கையை வீனடிக்க விரும்பாத இவனும் குழந்தையை கடத்திய கும்பலை தேடி செல்கிறார். அவர்களை பிடித்தானா, குழந்தை என்ன ஆனது யார் கடத்தினாகள் என்று பிறகு கதை பயணிக்கும்.
ஆங்கில படத்தில் வரும் வசனங்களும் சரி, அந்த சிறுமியும், உடென்சிலும் காட்டும் பாச காட்சிகளுக்கு இணையாக சக்குபாயில் ஒன்றுமே இல்லை.
ஆங்கில படத்தில் வரும் நீச்சல் காட்சிகளுக்கு இணையாக தமிழில் அழகு போட்டியை வைத்து இருப்பார்கள். நீச்சலில் எப்படி முதலில் வருவது என்று பயிற்சி கொடுக்கும் போது தான் உடென்சிலை அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்து போகும், தமிழில் திடீர் என அழகு போட்டிக்கு தயாராகுவதாக காட்சிகள் வரும் பிறகு ஏனோ போட்டி முடிந்து முதல் பரிசும் வாங்கியாச்சி நண்பர்களுக்கு விருந்து என்று கதை அறுந்து தொங்கும்.
ஆங்கிலத்தில் சிறுமி காட்டும் அனுபவம் வாய்ந்த நடிப்பில் 100 ஒரு பங்கு கூட சிரேயா காட்டாமல் கொஞ்சிக்கொஞ்சி பேசுவது பார்க்கும் போது இரவிக்குமாரின் இயலாமை நன்றாத தெரிகின்றது.
இப்படி யாரோ 2004ல் எழுதி "Man on Fire" கவிதைக்கு சரத்தும் இரவிக்குமாராரும் அப்பாவாக பார்த்து தோற்று போயிருக்கிறார்கள்.
இதிலே இணையத்தில் வெளியிட்ட மக்களை திட்டிய திட்டுகள் இருகிறதே அப்பப்பா என்ன கோபம் வார்த்தைகள்.........இதிலே இரசினியையும் விடமல் கூட்டிக்கொண்டு வந்து இவருக்கு தோதாக பேசவைத்து மனிதன் அப்படியே என்ன அழகாக நீலிக்கண்ணீர் வடித்துவிட்டர்.
யாரோ எழுதிய கதையை என்ன காசு கொடுத்தா வாங்கினீர்கள் சரத்துகுமார், சும்மா அத்துல போற தண்ணியில் ஆளுக்கு ஒரு கை என்று வைத்தீர்கள். அது உங்களுகே விணையாக வந்து முடிந்தது.
இரவிக்குமார் சரத்திற்காக ஆங்கிலத்தில் இருந்து திருடும் இரண்டாவது மோசமான தோல்வி படம் இது. இதற்கு முன் "Bounce" என்ற அருமையான படத்தை பாறை என்ற ஒரு டப்பா படமாக இதே இரவிக்குமார் சரத்துகுமாரை வைத்து எடுத்து உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
3 comments:
பனிமலர்
man on fire தான் ஜாக்குபாய்யா!!!!??
என்ன கொடுமை இது பனிமலர்...நான் கேள்விப்பட்டது இது TAKEN படம் போல இருக்குன்னு (நான் இந்த ஜாக்குபாய் கவியத்தை பார்க்கவில்லை)
Man on fire ஏற்கனவே இந்தியில் அமிசப்பச்சனும் தமிழில் அர்ஜீன்னும் 100க்கு 98 % அப்படியே எடுத்துட்டாங்க. இதுல ரவிக்குமார் திரும்பவா...ய்ப்பா சாமீ முடியல டா
\\100 ஒரு பங்கு கூட சிரேயா காட்டாமல் கொஞ்சிக்கொஞ்சி பேசுவது பார்க்கும் \\
அந்த குழந்தை ஒரு இரவு காட்சியில் டென்சிலுடன் பேசிட்டு அப்படியே கட்டிலில் தாவி குதிச்சி விழுவா பாருங்க...யப்பா இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு..
அந்த smile பத்தி ரெண்டும் பேரும் பேசும் காட்சியும் வசனங்களும் எவ்வளவு அழகாக இருக்கும். அந்த குழந்தையோட நடிப்பை போயி இவுங்கிட்ட....
தல டென்சிலும் அட்டகாசமாக செய்திருப்பார்.
இல்லங்க பனிமலர்... ஜக்குபாய் வாசம்பி என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல். இதப்பாருங்க...
http://www.saravanakumaran.com/2010/01/blog-post_8095.html
சக்குபாய் காவியத்த பார்க்கனும்னுன்னு பாக்கல, ஆனா இவங்க விட்ட கண்ணீர பார்த்து அப்படி என்ன தான் காவியம் எடுத்து இப்படி ஊத்திக்கிச்சுன்னு பார்த்தேன்.
நீங்க சொல்வது உண்மை தான் அந்த சிறுமியி இன்னமும் கண்ணுக்குள்ளே தான் இருக்கா. அவள் பேசும் பேச்சும், வாழ்க்கைய தொலைத்த அவக்கு ஆருதல் கூறும் போது பார்ப்பவருக்கே மனம் உருகத்தான் செய்யும். பாதிக்கப்பட்டவராக இருந்தால் உணர்ச்சி வசப்படுவது இயல்பு.
அப்படி எடுத்த படத்தில், உடென்சில் வார்த்தைகளில் சொல்வதை அப்படியே காட்சியாகவும் , ஆங்கிலத்தில் காட்சிகளில் காட்சியதை வார்த்தைகளிலும் வைத்து ஊத்தி மூட பார்த்து இருக்கிறார்கள்.
என்னை கேட்டால் இப்படி எல்லாம் திருடுவதற்கு பதில், சிக்கலே இல்லாத கதையாக எழுதி கொஞ்சம் கொஞ்சம் திருப்பங்களுடன் எடுத்தாலே படம் மிகவும் அற்புதமாக வரும், வருடம் 16, பூவே போச்சூடவா, கற்பூரமுல்லை போன்ற படங்களை பாசில் இப்படி தான் எடுத்தார். நன்றாக தான் வந்திருந்தது, நன்றாகவும் வசூலையும் பெற்றது. இந்த கேவல பிழைப்புக்கு அந்த மாதிரி கதைகள் எவ்வளவோ மேல்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி.
Post a Comment