Wednesday, March 31, 2010

பென்னாகரம் தேர்தல் முடிவுகள் -- அதிமுக அரசியல் அனாதையாக ஆக்கப்பட்டத்தின் அடையாளமா

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7064

அதிமுக மக்களிடம் இருந்து விலகி மெல்ல மெல்ல செல்லரித்த கட்சிகளின் பட்டியலில் இணைகிறது போலும்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் பேசிய வீர வசனங்கள் எங்கே, இப்போது இப்படி சதி செய்துவிட்டார்கள் என்று புலம்பும் நிலை எங்கே. என்ன ஆனது அதிமுகவிற்கு.

தேர்தல் வந்தால் கையில் கசப்பு மருந்துடன் ஐதிரபாத்திலிருந்தோ, கொடைக்கானலில் இருந்தோ, அல்லது அப்போது எங்கே ஓய்வில் இருக்கிறாரோ அந்த ஊரில் இருந்து வண்டியில் வந்து எங்கேயும் நிற்காமலும் மக்களை சந்திக்காமலும். ஓடும் இரயிலில் இருந்து கை காட்டிக்கொண்டு செல்வது போல் வந்து போவது எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

இரண்டாவது முறை ஆட்சியில் 4 ஆண்டுகள் வண்டி வண்டியாக தமிழக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்ததையும். கசப்பு மருந்து மக்களுக்கு தான் தங்களுக்கோ எப்பவும் விருந்தும் கூத்தும் என்று பகட்டாய் இருட்ந்தவைகள் எல்லாம் மக்களுக்கு பிடிக்கவில்லை தான் போலும்.

இது எல்லாம் போக தினமலரில் சொல்லி இருப்பதை போல் தான் என்ன சொன்னாலும் மக்கள் மதிப்பார்கள் நம்புவார்கள் என்று நம்பி அளவில்லாமல் விட்ட கதைகளில் மக்களே வெறுத்து தான் இந்த படு தோல்வியை கொடுத்துள்ளார்கள் போலும்.

இதிலே இந்த முறை வாக்கு சேகரிப்பில் மோடி வித்தைகாரன் பேசுவது போல் எல்லா இடங்களிலும் ஒரே பேச்சு தான் பேசினாராம். இம்மியளவும் மாற்றம் இல்லாமல் பேசினாராம்.

நல்லவேளையாக இத்தமுறையும் மின்னியல் இந்திரத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி சுமத்தாமல் ஆளும் கட்சியின் மேலும் அதிமுக கட்சியினர் மீதும் பழியை போட்டுள்ளார்.

போகின்ற போக்கை பார்த்தால் அடுத்த பொது தேர்தலில் அதிமுகாவை பாசக கூட கூட்டு சேர்த்துக்க மாட்டாங்க போல் தெரிகின்றது. பொருத்து இருந்து பார்ப்போம் மண்ணார்குடியிலிருந்து என்ன கணைகள் வருகின்றது என்று பார்ப்போம்.

Wednesday, March 24, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - The Girl Next Door தமிழாக்கம்




விதாவ வந்ததில் இருந்து வெளியான விமர்சனங்களில் எல்லாம் படத்தை ஆகா ஓகோ என்று வந்தது படத்தின் மேல் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகமாக்கியது. சரி படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் படம் 2004ல் வெளிவந்த The Girl Next Door இந்த ஆங்கிலப்படம் தான் தமிழில் விதாவயாக கௌதம் எடுத்துள்ளார்.

இதில் கௌதமின் எழுத்தையும், திரைகதையையும், காதலை படமாக்கும் விதத்தையும் மக்கள் ஓகோ என்று விவரித்தி எழுதியிருப்பதை பார்த்தால் நகைப்பாக தான் இருக்கிறது.

விதாவவில் வரும் இளமை குரும்புகளும், காதலும் ஆங்கிலத்தில் மிகவும் அழகாக எடுத்திருப்பார்கள்.

ஆங்கிலத்தில் கதை இது தான், பள்ளிப்படிப்பு முடிக்கும் நிலையில் இருக்கும் இளைஞனின் வீட்டிற்கு பக்கத்துவீட்டிற்கு ஒரு யுவதி வருகிறாள்.

வந்த முதல் நாளே, இரவில் அவளை வீட்டு வாசலில் நாயகன் பார்க்கிறான். பார்த்த முதல் பார்வையிலேயே பார்த்ததும் விடலையின் மனதில் அவளின் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. அவளை அடுத்து எப்போது எப்படி காண்போம் என்று அவனது மனதில் ஒரு பதற்றம் வர, வீட்டின் மாடியில் பார்க்க கூடாத கோலதில் அவளை பார்க்கிறான் அந்த விடலை.

அந்த மோதலுக்கு பிறகு அவளுக்கும் இவனுக்கும் நட்பு பிறக்கிறது, மிக விரைவில் அந்த நட்பு விடலையின் ஆசையை தூண்டி அவனது துடிப்பை இரசிக்கும் விதமாக உருவெடுக்கவும் துவங்க. அந்த பெண் யார் என்ன என்று அவனது நண்பர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.

அவளை பற்றி தெரிந்ததும் அவளை தனியறைக்கு அழைக்க அந்த அழகு பதுமை அந்த விடலையின் அப்பாவி தனத்தை இரசித்ததும், அந்த மாதிரி அவளை யாரும் விரும்ப மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டு இருந்த வேளையில் இவனை கண்டதையும், அந்த நாட்களை வாழ்க்கையில் அவளது பொன்னான நாட்களாக நினைத்ததையும் சொல்லி கோபப்பட, விடலையின் மனதில் காதல் வலுக்கிறது.

அது வரையில் எளிமையாக இருந்த அவள் அவனுக்கு திடீர் என புரியாத புதிராக மாற்றம் கொள்கிறாள். என்ன ஏது என்று தெரிந்து கொள்ளும் வேளையில் அவளது வீட்டில் இருந்து பாபு ஆன்டனியின் உருவத்தில் ஒருவன் அவளது விட்டில் இருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் அதிக நாள் தொடர்பு அப்படி இப்படி என்று காட்சிகள் நகர.

திடீர் என்று ஒரு வாரத்திற்கு அவள் வேகாசுக்கு செல்கிறாள். அவளை பார்க்காமல் இருக்க முடியாமல் தனது நண்பர்களுடன் இரவோடு இரவாக வேகாசு போகிறார்கள். அங்கே எங்கே என்று தெரியாமல் அங்கே இங்கே என்று தேடி ஒரு வழியாக கண்டு பிடிக்கிறார்கள். அங்கே அவளோ அவனை பார்க்காமலும், பேசாமலும் விட்டது மட்டும் இல்லாது. அவளை மறந்து விடும் படியும் அவள் சொல்ல, அந்த உயரமான மனிதன் விடலையை பார்த்து இனிமேல் அவளை பாத்த அப்படி இப்படி என்று மிரட்ட. அங்கு இருந்து கிளம்புகிறான் விடலை.

இனிமேல் விடலையின் ஊருக்கு அவள் வருவது இல்லை என்று இருந்தவள் திடீர் என்று வருகிறாள். வந்தவள் அவனுக்காகவும் அவளின் காதலுக்காவும் தான் வந்தாக சொல்கிறாள்.

அந்த வேளையில் அந்த உயர்ந்த மனிதன் அடைந்த பண இழப்பை விடலை தான் ஈடுகட்ட வேண்டும் என்று மிரட்ட. விடலையும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கிறார்கள். அந்த படம் ஓகோ என்று விற்று பெரும் பொருளை விடலைக்கு பெற்றுக்கொடுக்கிறது.

படத்தின் துவக்கத்தில் விடலை ஆசைபடுவது போல் சியார்சி நகர் பல்கலைகழத்தில் அரசியல் படிக்க தனது சொந்த செலவில் சேர்கிறான். விரையில் அமெரிக்காவின் அதிபராக வருவது தான் அவனது கனவு, அது விரைவில் நடக்கும் என்று முடிக்கும் வேளையில் அவளும் அவனுடன் தான் இருக்கிறார்ள் என்று அழகாக முடித்து இருப்பார்கள் ஆங்கிலத்தில்.

ஆங்கிலப்பத்திற்கும் விதாவவிற்கும் வித்தியாசங்கள் இவ்வளவு தான்

1) ஆங்கிலத்தில் அந்த அழகு பெண் 5 அல்லது 6 வயது பெரியவள். தமிழில் 1 வருடம் பெரியவள்.

2) ஆங்கிலத்தில் அவள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவள், தமிழிலோ MCA வரை படித்து இருக்கிறாள்.

3) ஆங்கிலத்தில் விடலை பள்ளிப்படிப்பை முடிக்கிறான், தமிழில் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடுகிறான்.

4) ஆங்கிலத்தில் அவள் ஒரு வாரத்திற்கு வேகசு செல்கிறாள், தமிழில் கேரளம் செல்கிறாள். கேரளத்தில் அவளது சொந்தக்காரர்களை எல்லாம் பார்க்கிறான் விடலை. ஆங்கிலத்தில் அவளது தொழிலை சேர்ந்தவர்களையும் அவளது தொழிலையும் நேரில் பார்க்கிறான் அந்த விடலை.

5) ஆங்கிலத்திலும் தமிழிலும் இருவரும் படம் எடுகிறார்கள், என்ன ஆங்கிலத்தில் விடலை தயாரிப்பாளன், தமிழில் இயக்குனர்.

6) ஆங்கிலத்திலும் தமிழிலும் அவளுக்குள் இயல்பாக வரும் காதலை சொல்ல தயக்கம் கொள்கிறார்கள், ஆங்கிலத்தில் அவளது தொழில் அப்படி, அதை அவளால் சொல்லவே முடியாது. ஆனால் தமிழில் மதம் என்ற பாகுபாடும் அதை வைத்துக்கொண்டு என்னதான் அவர்கள் சப்பைகட்டு கட்டினாலும் மனிதில் ஒட்டவில்லை.

7) ஆங்கிலத்தில் விடலைக்கு அமெரிக்க அதிபராகுவது கனவு, தமிழில் திரைபட இயக்குனர் ஆவது கனவு. இரண்டிலும் இருவரும் அவரவரது கனவு கைகூடுகிறது. இருவரும் படம் எடுக்கிறார்கள்.

இப்படி ஆங்கில திரைப்படத்தின் திரைக்கதையை எப்படி எல்லாம் தமிழில் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ஆங்கிலத்தில் வரும் காதல் வசனங்களையும் கூடவா அப்படியே அடிப்பது. அதிலும் அரசியலில் வந்தாலும் வரலாம் ஆனால் படம் எடுப்பது எல்லாம் அவ்வளவு எளிதில் முடியாது என்ற வசனம் வேறு.

ஆங்கிலத்தில் வரும் அந்த இயக்குனரின் வேடத்தில் இரவிக்குமார் தமிழில். அவன் சொல்லும் பளீர் வசனங்கள் தமிழில் இல்லை.

ஆங்கிலத்தில் நவனாகரீக ஊடையில் வருகிறாள் அவள், தமிழில் திரிசாவிற்கு புடவை அதுவும் கிருத்துவர்கள் புடவை கட்டிக்கொண்டு அதுவும் இந்த காலத்தில் இப்படி என்று காட்டுவது நல்ல நகைச்சுவை. நல்ல காலத்திலேயே திரிசாவிற்கு புடைவைக்கும் தொடர்பே இருக்காது வித்தியாசம் காட்டியே ஆகவேண்டும் என்று புடவையை கொடுத்துள்ளார்கள் போலும்.

ஆங்கிலத்தில் படம் 1 1/2 மணி நேரம் மட்டும் தான். மிச்சம் இருக்கும் 1 1/2 மணி நேரத்திற்கு பாட்டு சண்டை படபிடிப்பு என்று வந்தாலும் திரைக்கதையில் தோய்வு இருக்கிறது. அது அசல் படத்தின் திரைக்கதை முடிந்து இவரது சொந்த கற்பனைகள் சேர்க்கும் இடத்தில் இது தெரிகிறது.

கிளிக்கு(CLICK) படத்திற்கு(வாரணமாயிரம்) பிறகு இவர் அடித்தி இருக்கும் ஆலிவுட்டு படம் தி கிர்ள்ளு நெக்சுட்டுடோர்(The Girl Next Door) விதாவயாக. எனது கணிப்பு சரியாக இருந்தால் கௌதம் அடுத்து எடுக்கும் படம் Forgetting Sarah Marshall ஆக இருக்கும். அந்த படம் கொஞ்சம் வக்கிரமாக எடுத்து இருந்தாலும் நல்ல கதையம்சம் வாய்ந்தது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்ததிருந்தாலும், ஆலிவுட் பாணில் கமல் போன்று வயதான வரை வைத்து படமாக எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.

Wednesday, March 17, 2010

தினமலரில் இன்றைக்கு வந்திருக்கும் ஆபாசபடம்


தினமலரின் மனித நேயம், நீதி எல்லாம் அடுத்த மத்திற்கும், இனத்திற்கும் மக்களுக்கும் தான் போலும். தான் எது செய்தாலும் சரி போலும். இசுலாமியர்கள் உடலை கீறி காயப்படுத்தி வேண்டுதல்கள் நிறைவேற்றும் போது நக்கலடிக்கும் தினமலர். இந்து சிறார்கள் அதே போல் தங்களது உடலை கத்தியால் காயப்படுத்தி செய்யும் வேண்டுவதை இப்படியா வீரமான காட்சியாக வெளியிடுவது. இது எல்லாம் மாணவர்களையும், வளரும் சிறார்கள் இதை ஒரு சாதணை என்று விபரம் அறியாமல் ஆபத்துகளில் ஈடு படமாட்டார்களா.... ஏன் இந்த பொறுபற்ற செயல். வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று, நிறுத்து இதுபோல் சிறார்களை கெடுக்கும் செயல்களை இனிமேலும் செய்யாதே..........

Friday, March 5, 2010

நித்தியானந்தரும் காஞ்சி சங்கரும் என்ன வித்தியாசம் சொல்வாரா இவர்

சமீபத்தில் இப்படி ஒரு பதிவு, பெரியாரும் நித்தியாவும் என்று, அதற்கு அண்ணாதுறை வேறு துணைக்கு.

என்ன மனிதன் பந்தை தன் பக்கத்திலேயே உருட்டுகிறார் என்று பார்த்தால் தான் தெரிந்தது மனிதன் உருண்டையை உருட்டுகிறார் என்று. சிறுவர்களுக்கு அம்மா உணவு ஊட்டும் போது என்ன ஊட்டுகிறோம் என்று தெரியாமல் இருக்க ஒரு சுவரசியமான கதையை சொல்வார். அப்படி சொல்லும் போது உருட்டும் உருண்டையில் என்ன இருக்கிறது என்ற கவனமே இல்லாது குழந்தைகளை சாப்பிட வைப்பாள். இவரும் இப்படி ஒரு உத்தியை தான் கையாளுகிறார்.

இவர் ஒப்பிடுவதை இப்படி வைத்துக்கொள்ளலாம், சச்சின் 200 ஓட்டங்கள் பெற்றதும், சச்சினையும் உடாசுமார்க்கில் 200 அடித்துவிட்டு மயங்கி கிடக்கும் குடி காரரையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதினால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இவரது ஒப்பீடு.

நித்தியா தனக்கு பிடித்த பெண்ணுடன் காஞ்சி சங்கரன் உல்லாசமாக பல பெண்களுடன் இருந்தத்தை போல் இருந்தார். தன்னிடம் பக்திக்காகவும், வருமையின் வாடலிலும் வந்த வறியவர்களை இன்னமும் தெளிவாக சொன்னால் நாதியற்றவர்களை காஞ்சி சங்கரன் மயக்கியும் பயமுறுத்தியும் தனது ஆசைகளை தீர்த்துக்கொண்டார் என்று ஒப்பிட்டால் கூட பரவாயில்லையே சரியாகத்தான் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் என்று எடுதுக்கொள்ளாம்.

ஆனால் பெரியாரின் திருமணம் செய்துகொள்வதும் காஞ்சி சங்கரன் சாமியார் என்று சொல்லிக்கொண்டு பக்தைகளை மயக்கி பயமுறுத்தி வாழ்கையை சீர் அழித்ததும் ஒன்று என்று சொன்னால் உங்களை என்ன என்று நினைப்பது.

இதிலே ஒரு சாமியார் சொன்னார், நான் சொல்வது உனக்கு பிடித்து இருந்தால் அதை மட்டும் பார் என்னை ஏன் பார்கிறார் என்று கேட்டாராம் அதுவும் சரிதான் என்று இவர் சொல்கிறார்.

அது தான் வருடத்திற்கு 100 படங்கள் வருகிறதே அவர்கள் சொல்லாததையா இந்த சாமியார்கள் எல்லாம் சொல்லிவிடப்போகிறார்கள். பிறகு எதற்கு இவர்கள் எல்லாம் எடைக்கு எடை தங்கம் வெள்ளி என்றும் பெறுகிறார்கள். அந்த நடிகர்களுக்கும் இந்த நடிகர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல வந்தீர்கள் போலும்.

இந்த மாதிரி இடை தரகர்களைவிட அந்த சாமியிடமே கேட்டுவிடலாம் அதுவே சாலச்சிறந்தது என்ற சப்பைகட்டுவேறு. உண்மையிலே அந்த சாமியும் சக்தியும் இருக்கிறது என்றால் சங்கர் இராமன் கொலை கோவிலில் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்னமும் காஞ்சி சங்கரன் நன்றாகத்தானே இருக்கிறார். 61 நாட்கள் சிறையில் இப்போது வெளியில் இருக்கும் பிணைகைதி அவர். இது எல்லாம் நடப்பதால் என்ன அவருக்கு இருக்கும் மதிப்பு மறைந்து விட்டதா என்ன.

சச்சின் அடித்த 200ம் உடாசுமார்க்கில் குடி மகன் அடித்த 200ம் ஒன்று என்று சொல்கிறீர்கள். இந்த வகை ஒப்பீட்டை இதுவரையில் பார்த்தது இல்லை. அனேகமாக ஒருவரும் பார்த்து இருக்க மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன்.

வம்படியாக எழுதினாலும் கூட இப்படி எல்லாம் யாராவது எழுதுவர்களா. அதிலே திராவிட இயக்க தலைவர்களின் இரண்டாவது மனைவி துணைவி பற்றி எல்லாம் புள்ளியில் விபரங்கள் வேறு. கொஞ்சம் விட்டால் இந்திரன் எந்த எந்த முனிவர்கள் வீட்டில் இல்லாத சமயம் சென்று எப்படி எல்லாம் உல்லாசமாகவும் நயவஞ்சகமாகவும் தேவ உலகத்தில் இருந்தான் என்ற கணக்குகள் எல்லாம் கொடுப்பீர்கள் போலும் 200க்கு 200.

இன்னமும் இது போல் ஆனாவுக்கு ஆனா, கானாவுக்க கானா என்று வரிசைபடுத்தி எழுதவும் ஆவலுடன் எதிர்பார்கிறோம், உங்களின் 200க்கு 200 அறிவு எப்படி எல்லாம் நீளுகிறது என்று பார்ப்போம்.

சக்குபாய் - சரத்துகுமார் இது எல்லாம் சரியா, இதுல உபதேசம் வேற

இந்த பொங்கலுக்கு வந்த படங்களிலே மிகாவும் மோசமாக தோல்வியை தழுவிய படம் இது. இந்த படத்தின் பிரதிகளை இணையத்தில் வெளியிட்டதினால் தான் இந்த படம் தோல்வியை தழுவியதாகவும். அப்படி கதை மட்டும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் மற்ற படங்களைவிட இந்த படம் அதிக வசூலை குவித்து இருக்கும் என்ற பரப்பு உரை வேறு.




உண்மையில் யார் இந்த சக்குபாய், எப்படி இந்த கதை உருவானது என்று பார்ப்போம்.

தற்பொழுது தமிழ் பட தயாறிப்பில் ஊடுறுவி இருக்கும் இந்த கதை மற்றும் திரைக்கதை திருட்டு இந்த படத்திலும் நடந்து இருப்பது ஒரு சோகமான உண்மை.




இயக்குனர் இரவிக்குமார் அப்படி இப்படி என்று முழு நேர ஆங்கில உறுவல் பட இயக்குனராகவே மாறிவிடார் என்று தான் சொல்ல வேண்டும். இனிமேல் இரவிக்குமார் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அது எந்த படத்தின் தழுவல்/மொழிபெயர்ப்பு என்று தாராளமக எதிர்பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் " Man on Fire" என்று ஒரு படம் வந்தது. அந்த படத்தில் உடென்டல் வாசிங்டன் தான் தலைவன். தனது வாழ்க்கையை தொலைத்தவனாக குடிக்கு அடிமையாகி, பார்த்த வேலையும் இல்லாது, குடும்பமும் இல்லாது தனி மரமாக காலம் தள்ளுபவன் மெக்ச்சிகோ நாட்டிற்கு தனது பழைய நண்பரை பார்க்க வருகிறார்.
அங்கே அந்த காலகட்டத்தில் பணக்கார குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கூட்டத்தின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பணக்கார குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாமல் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்.
அந்த காலத்தில் அங்கே வந்த உடென்சல் வாசிங்டனும் ஒரு பணக்கார மகளுக்கு பாதுகாவலனாக பெறுப்பேற்கிறார்.
சரத்து தண்ணி அடிச்சிட்டு அடிவாங்கும் காட்சியாக அமைவது இந்த மது அடிமையாக இரவு முழுதும் குடிப்பதும், நன்றாக குடித்து ஒரு கட்டத்தில் தலையில் சுட்டுக்கொள்ள நினைக்கும் போது தோட்டா வெடிக்காமல் போகும் காட்சிகளை தமிழில் சரத்து குடித்துவிட்டு அடி வாங்கு காட்சியாக நமக்கு.
அழகான அன்பான அமெரிக்க மனைவி, அருமையன குழந்தை என்று இருக்கும் அந்த குடும்பத்தில் புயல் வீச துவங்குகிறது. உடென்சிலை சுட்டுவிட்டு குழந்தையை கடத்துகிறது அந்த கடத்தல் கும்பல்.
வேலைக்கு செர்த்துக்கொள்ளலாமா என கணவன் கேட்க்கும் பொழுது, நீ ஒரு அமெரிக்கர் என்ற ஒரு காரணம் போதும் என்று சொல்கிறாள் அந்த பணக்காரனின் அமெரிக்க மனைவி. அந்த நம்பிக்கையை வீனடிக்க விரும்பாத இவனும் குழந்தையை கடத்திய கும்பலை தேடி செல்கிறார். அவர்களை பிடித்தானா, குழந்தை என்ன ஆனது யார் கடத்தினாகள் என்று பிறகு கதை பயணிக்கும்.
ஆங்கில படத்தில் வரும் வசனங்களும் சரி, அந்த சிறுமியும், உடென்சிலும் காட்டும் பாச காட்சிகளுக்கு இணையாக சக்குபாயில் ஒன்றுமே இல்லை.
ஆங்கில படத்தில் வரும் நீச்சல் காட்சிகளுக்கு இணையாக தமிழில் அழகு போட்டியை வைத்து இருப்பார்கள். நீச்சலில் எப்படி முதலில் வருவது என்று பயிற்சி கொடுக்கும் போது தான் உடென்சிலை அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்து போகும், தமிழில் திடீர் என அழகு போட்டிக்கு தயாராகுவதாக காட்சிகள் வரும் பிறகு ஏனோ போட்டி முடிந்து முதல் பரிசும் வாங்கியாச்சி நண்பர்களுக்கு விருந்து என்று கதை அறுந்து தொங்கும்.
ஆங்கிலத்தில் சிறுமி காட்டும் அனுபவம் வாய்ந்த நடிப்பில் 100 ஒரு பங்கு கூட சிரேயா காட்டாமல் கொஞ்சிக்கொஞ்சி பேசுவது பார்க்கும் போது இரவிக்குமாரின் இயலாமை நன்றாத தெரிகின்றது.
இப்படி யாரோ 2004ல் எழுதி "Man on Fire" கவிதைக்கு சரத்தும் இரவிக்குமாராரும் அப்பாவாக பார்த்து தோற்று போயிருக்கிறார்கள்.
இதிலே இணையத்தில் வெளியிட்ட மக்களை திட்டிய திட்டுகள் இருகிறதே அப்பப்பா என்ன கோபம் வார்த்தைகள்.........இதிலே இரசினியையும் விடமல் கூட்டிக்கொண்டு வந்து இவருக்கு தோதாக பேசவைத்து மனிதன் அப்படியே என்ன அழகாக நீலிக்கண்ணீர் வடித்துவிட்டர்.
யாரோ எழுதிய கதையை என்ன காசு கொடுத்தா வாங்கினீர்கள் சரத்துகுமார், சும்மா அத்துல போற தண்ணியில் ஆளுக்கு ஒரு கை என்று வைத்தீர்கள். அது உங்களுகே விணையாக வந்து முடிந்தது.
இரவிக்குமார் சரத்திற்காக ஆங்கிலத்தில் இருந்து திருடும் இரண்டாவது மோசமான தோல்வி படம் இது. இதற்கு முன் "Bounce" என்ற அருமையான படத்தை பாறை என்ற ஒரு டப்பா படமாக இதே இரவிக்குமார் சரத்துகுமாரை வைத்து எடுத்து உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.