Wednesday, July 29, 2009

சிங்கு ஈசு கிங்கு(Singh is King) ஆங்கில படம் Analysis this இன் இந்தியாக்கம் தானா??




இந்த இந்தி படத்தை முதலில் பார்க்கும் போது என்னவோ ஒரு அப்பாவியின் கதையை தான் இவ்வளவு தைரியமாக எடுத்து இருக்கிறார்களோ என்று இருந்தது. கதைக்கு எள்ளவும் சம்பந்தமே இல்லாத எகிப்துக்கு சென்று ஆடல் பாடலுன் தலைவியை தலைவன் சந்தித்தலில் துவங்கி கொள்ளையர்களை வேலைகாரர்களாக காட்டும் வரை கதை என்னவோ wedding Singer படத்தில் ஆடம் சாண்டுலர் காண்பித்த அப்பாவி தணம் தான் தெரிந்தது.

சரி அது தான் கதை என்று சிங்கு அந்த பணக்கார மாப்பிள்ளையிடம் மிரட்டும் உருட்டும் காட்சிக்கள் வரும் என்று பார்த்து இருக்கும் வேளையில். Analysis This படத்தில் அந்த மனநல மருத்துவர் உதிர்கும் தத்துவங்கள் மெல்ல தலைதூக்க துவங்கியதில் விளங்கியது இந்த படம் எங்கே இருந்து உருவாக்கப்பட்டது என்று.

ஆங்கில படத்தில் அந்த மருத்துவரின் திருமண பரிசாக வழங்கும் வீட்டளவைவிட பெரிதான நீரூற்றை போல் இதிலே அந்த மலர் விற்கும் பெண்மணிக்கு அந்த கொள்ளை கும்பலை ஏவல் வேலைகளை பார்க்க வைத்திருக்கிறார்கள் இந்தியில்.

ஆங்கிலத்தில் காட்டப்படுவதை போலே கொள்ளை கூட்ட தலைவனை சிங்கு குண்டடி படும் போது காக்கிறார். என்ன ஆங்கிலத்தில் மருத்துவருக்கு குண்டடி படும். ஆனால் அதை இந்திய நடைமுறையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கொள்ளை கூட்ட தலைவனுக்கு குண்டடியை கொடுத்து அவனை இரு கோமாளி அளவிற்கு நகைப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் இந்தியில்.

மேலோட்டமாக பார்க்கும் போது மட்டும் அல்ல ஆராய்ந்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திரைகதையை இந்திய மயமாக்கி தான் இருந்தார்கள். என்ன கதையின் தலைவன் கிராமத்தான் என்றதோடு நிறுத்தி இருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் அவனையே ஆங்கிலத்தில் அந்த மருத்துவர் பேசும் அத்தணை தத்துவங்களையும் அதை போலவே பேச வைதிருப்பதில் குட்டு வெளிப்பட்டு விட்டது.

ஆங்கில படத்தில் அந்த கொள்ளை கூட்ட தலைவன் மன நலம் பாதிக்கப்பட்டு செயலாற்ற முடியாமல் இருக்கும் நிலையில். உடன் இருக்கும் அந்த மருத்துவர் எல்ல நிலையில் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வசனங்களாகவே பேசி நிலைமையை சமாளிப்பதாக காட்டி வயிற்று வலி வரும் அளவிற்கு சிரிக்க வைத்த ஒன்று இரண்டு காட்சிகளையே இந்தியில் பாதி படத்திற்கு மேல் இழுத்து இருப்பது அறுவகையாகத்தான் இருக்கிறது.

ஆங்கில படத்தில் கொள்ளை கூட்ட தலைவனுக்கு தண்ணியடித்தவுடன் அழுகை வந்துவிடும். அப்படி அழும் போதெல்லாம் அந்த ஆருதல் சொல்ல மருத்துவர் வேண்டும் என்று ஏடா கூடமாக வரும் காட்சிகளை இந்தியில் தனியே ஒரு ஆளை போட்டு புலம்பவிட்டுள்ளார்கள் இந்தி மக்கள்.

இன்னமும் அதிகமாக வாசனையாக இருக்கட்டும் என்று கத்தரீனா கைப்பை கைப்பாவையாக ஆக்கி அழகாக நடனாமாட மட்டும் விட்டுள்ளது வருத்தமே. மொத்த படத்திலும் ஒரு, ஒரு பக்க வசனம் கூட இல்லை அவருக்கு பாவம்.

1 comments:

')) said...

//மொத்த படத்திலும் ஒரு, ஒரு பக்க வசனம் கூட இல்லை அவருக்கு பாவம்.//

அதான் கைஃப் போட்டோ மாத்திரம் பதிவுல ஏத்தியிருக்கீங்களா பனிமலர் :)