Wednesday, July 29, 2009

சிங்கு ஈசு கிங்கு(Singh is King) ஆங்கில படம் Analysis this இன் இந்தியாக்கம் தானா??




இந்த இந்தி படத்தை முதலில் பார்க்கும் போது என்னவோ ஒரு அப்பாவியின் கதையை தான் இவ்வளவு தைரியமாக எடுத்து இருக்கிறார்களோ என்று இருந்தது. கதைக்கு எள்ளவும் சம்பந்தமே இல்லாத எகிப்துக்கு சென்று ஆடல் பாடலுன் தலைவியை தலைவன் சந்தித்தலில் துவங்கி கொள்ளையர்களை வேலைகாரர்களாக காட்டும் வரை கதை என்னவோ wedding Singer படத்தில் ஆடம் சாண்டுலர் காண்பித்த அப்பாவி தணம் தான் தெரிந்தது.

சரி அது தான் கதை என்று சிங்கு அந்த பணக்கார மாப்பிள்ளையிடம் மிரட்டும் உருட்டும் காட்சிக்கள் வரும் என்று பார்த்து இருக்கும் வேளையில். Analysis This படத்தில் அந்த மனநல மருத்துவர் உதிர்கும் தத்துவங்கள் மெல்ல தலைதூக்க துவங்கியதில் விளங்கியது இந்த படம் எங்கே இருந்து உருவாக்கப்பட்டது என்று.

ஆங்கில படத்தில் அந்த மருத்துவரின் திருமண பரிசாக வழங்கும் வீட்டளவைவிட பெரிதான நீரூற்றை போல் இதிலே அந்த மலர் விற்கும் பெண்மணிக்கு அந்த கொள்ளை கும்பலை ஏவல் வேலைகளை பார்க்க வைத்திருக்கிறார்கள் இந்தியில்.

ஆங்கிலத்தில் காட்டப்படுவதை போலே கொள்ளை கூட்ட தலைவனை சிங்கு குண்டடி படும் போது காக்கிறார். என்ன ஆங்கிலத்தில் மருத்துவருக்கு குண்டடி படும். ஆனால் அதை இந்திய நடைமுறையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கொள்ளை கூட்ட தலைவனுக்கு குண்டடியை கொடுத்து அவனை இரு கோமாளி அளவிற்கு நகைப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் இந்தியில்.

மேலோட்டமாக பார்க்கும் போது மட்டும் அல்ல ஆராய்ந்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திரைகதையை இந்திய மயமாக்கி தான் இருந்தார்கள். என்ன கதையின் தலைவன் கிராமத்தான் என்றதோடு நிறுத்தி இருந்தால் தெரிந்திருக்காது. ஆனால் அவனையே ஆங்கிலத்தில் அந்த மருத்துவர் பேசும் அத்தணை தத்துவங்களையும் அதை போலவே பேச வைதிருப்பதில் குட்டு வெளிப்பட்டு விட்டது.

ஆங்கில படத்தில் அந்த கொள்ளை கூட்ட தலைவன் மன நலம் பாதிக்கப்பட்டு செயலாற்ற முடியாமல் இருக்கும் நிலையில். உடன் இருக்கும் அந்த மருத்துவர் எல்ல நிலையில் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வசனங்களாகவே பேசி நிலைமையை சமாளிப்பதாக காட்டி வயிற்று வலி வரும் அளவிற்கு சிரிக்க வைத்த ஒன்று இரண்டு காட்சிகளையே இந்தியில் பாதி படத்திற்கு மேல் இழுத்து இருப்பது அறுவகையாகத்தான் இருக்கிறது.

ஆங்கில படத்தில் கொள்ளை கூட்ட தலைவனுக்கு தண்ணியடித்தவுடன் அழுகை வந்துவிடும். அப்படி அழும் போதெல்லாம் அந்த ஆருதல் சொல்ல மருத்துவர் வேண்டும் என்று ஏடா கூடமாக வரும் காட்சிகளை இந்தியில் தனியே ஒரு ஆளை போட்டு புலம்பவிட்டுள்ளார்கள் இந்தி மக்கள்.

இன்னமும் அதிகமாக வாசனையாக இருக்கட்டும் என்று கத்தரீனா கைப்பை கைப்பாவையாக ஆக்கி அழகாக நடனாமாட மட்டும் விட்டுள்ளது வருத்தமே. மொத்த படத்திலும் ஒரு, ஒரு பக்க வசனம் கூட இல்லை அவருக்கு பாவம்.

Monday, July 27, 2009

பெண் கதை பாத்திரங்களும் பாக்கியராசும்-பாலசந்தரும்( சின்ன வீடும் புன்னகை மன்னனும்)

சின்ன வீடு, இந்த படத்தை அனேகமா நிறைய மக்கள் பார்த்து இருக்ககூடும். அதிகமா தொலைக்காட்சிகளில் வெளிவராத படங்களில் இதுவும் ஒன்று. ஆக இந்த தலைமுறை மக்கள் பார்த்து இருப்பது அரிதே.

படத்தின் தலைபே கதை என்ன என்று அருமையாக விளக்கும் இந்த படத்திற்கு.

இது தான் கதைன்னு தெரிந்த பிறகு படத்தில் என்ன என்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று தனியாக ஒன்றும் பட்டியல் இட வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறேன்.

பொதுவாகவே பாக்கியராசின் படங்களிலே காணப்படும் தனிவகையான நகைப்புக்கு இந்த படம் ஒன்றும் விலக்கல்ல. அதுவும் இந்த கதையமைபில் தனியாக கேட்க வேண்டுமா என்ன.

முதல் திருமண காட்சியில் துவங்கும் படம் கடைசியில் 3 குழந்தைகளை காட்டுவதில் வந்து நிற்கும் வரை அப்படி ஒரு ஓட்டம் படத்தில். இது பாக்கியராசுக்கே உள்ள தனி திறமை. அப்படி ஒரு திரைகதை இந்த படத்திற்கு எழுதி இருக்கிறார் இந்த திரைகதை மன்னன்.

எல்லா காட்சியிலும் அவரது முத்திரை இல்லாமல் இல்லை. ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சின்ன வீட்டோடு முதலில் சேரும் காட்சிகளை படமாக்கிய விதத்தை சொல்லலாம்.

பொதுவாக ஒரு வியாபார படமாக எடுக்க வேண்டும் என்று இருந்தால். இந்த மாதிரியான காட்சிகளில் அதிகம் இல்லை என்றாலும் புன்னகை மன்னன் படத்தில் வரும் முதல் பாடலான என்ன சத்தம் இந்த நேரம் பாட்டை உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் இந்த காட்சியின் கோர்வைகளை அந்த கதையின் தலைவனுக்கு அது தான் முதல் அனுபவம் என்று சொல்லும் விதமாகவும். அனைத்து நிகழ்வுகளும் இயற்கையாகவும் இயல்பாகவும் நடப்பதாக படமாக்கி இருப்பார் பாக்கியராசு.

என்ன தான் தலைவனும் தலைவியும் வாழமுடியவில்லை, வாழ்வை சேர்ந்து முடித்து கொள்வதாக இருந்தாலும் 100 நிமிடத்தில் வாழ்க்கையின் அனைத்தையும் பார்த்துவிடும் விதமாக படத்தில் காண்பிப்பதாக சொல்லிக்கொண்டு. திருமணம், உடலுறவு, உணவு, உள்ளாசம் என்றும் இடையிடையே பெண் வீட்டார் அந்த பெண்ணையும் கமலையும் தேடி புறப்படும் காட்சிகளையும் காட்டி இருப்பார் பாலசந்தர்.

இப்படி எல்லாம் பாலசந்தர் காட்டும் விரச காட்சிகளில் காட்டுவது கதையின் தலைவியை அதுவும் தலைவன் அவளின் காதலில் மயங்கி அவள் இல்லா உலகம் எனக்கு தேவை இல்லை என்று முடிவு எடுக்கும் நிலையில் உள்ள தலைவியை அவ்வளவு விரசமாக காட்டி இருப்பார் பாலசந்தர்.

என்ன அந்த நிகழ்வுகள் வயது வந்தவர்களுக்கு அவர் காட்டும் காட்சிகளி திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று அப்பட்டமாக தெரியும் அளவிற்கு மட்டுமே நிறுத்தி இருப்பார். இத்தணைக்கும் இந்த படத்தில் இந்த காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் அப்படி எதுவும் இல்லாமல் இருக்கும்.

கதைக்கு தகுந்தாற் போல் காட்சிகள் என்று எத்தணை சப்பை கட்டுகள் கட்டினாலும். ஒரு விலைமாது அவள் தலைவனை மயக்கும் விரசமான காட்சிகளை, தலைவனும் பரத்தையும் என்ன செய்கிறார்கள் என்று ஒன்று ஒன்றாக விவரிக்காமல் அருகில் இருக்கும் பொம்மைகளையும் மற்றவைகளையும் மட்டுமே காட்சி காட்சியாக்கி இருப்பார் பாக்கியராசு.

பாக்கியராசு தனக்கு நன்றாக திரைகதை அமைக்கத்தெரியும் என்று காட்டுவதற்காக அப்படி எழுதி இயக்கினாரா அல்லது. பெண் கதா பாத்திரங்களை அப்படி ஒன்றும் திரையில் காட்ட கூடாது என்ற கோட்பாடா அது அவருக்கே வெளிச்சம்.

இது தவிர சின்ன வீடு படத்தில் வரும் வசனங்களுக்கு இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் அதுவல்ல எனது நோக்கம்.

பெண் கதை பாத்திரங்களை படைப்பதில் இந்த இருவருக்கும் எப்போதும் போட்டி இருக்கும். இருவரும் காட்டும் பெண்கள் இரண்டு விதமாக இருப்பார்கள்.

பாலசந்தரின் பெண்கள் ஒரு கோபம் அல்லது கிட்டதட்ட வெறி பிடித்ததை போல் காட்சிகளில் நடந்து கொள்வாள்.

பாக்கியராசின் பெண்களோ இயல்பாக நடந்துகொள்ளும் பெண்களாக இருப்பார்கள்.

அனேகமாக பாலசந்தரின் அனைத்து பெண்களும் அவ்வளவு வசனங்களையும் பேசி அலைந்து திரிந்து கடைசியில் வாழா வெட்டிகளாக இருக்க போவதாகத்தான் முடிப்பார். மனதில் உறுதி வேண்டும், புது புது அர்த்தங்கள் போன்ற, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் இப்படி எல்லா பெண் பாத்திரங்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் பாக்கியராசின் பெண்களோ வரும் தொல்லைகளுக்கு ஆணின் மனம் நோகமாமலும் அதே நேரத்தில் அவளது பாத்திரத்திற்கு இழிவு ஏற்படாமல் வாழ்க்கையை வெற்றி கொள்வதாக காட்டி முடிப்பார்.

எனக்கு என்னவோ பாக்கியராசின் அனுகுமுறை தான் பிடித்து இருக்கிறது. ஏன் என்றால் கெட்டவைகளை காட்டி இப்படி கெட்டு போகாதே என்று சொல்வதை காட்டிலும். நல்லவைகளை மட்டுமே காட்டி இப்படி நல்லபடியா இரு என்று சொல்வது எளிதும் அரோக்கியமும் கூட.

Sunday, July 26, 2009

தமிழர்களின் மானம் காத்த மலையாளிகள்.

மேசர் இரவி மற்றும் செல்வமணியின் தயாரிப்பான இரண்டு படங்கள். ஒன்று தமிழ் படைப்பான குற்றபத்ரிக்கை மற்றும் மலையாள படைப்பான மேசர் இரவி இயக்கிய மிசன் 90 நாட்கள் படமும்.

இரண்டு படங்களின் நோக்கமும் ஒன்றே தான் இருப்பினும், கதையும் அதன் பின்னனியும் ஆராயும் படமாக இரண்டும் அமைவதே இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை.

தமிழில் வந்த குற்றபதிரிக்கை படமானது தமிழர்களின் நோக்கத்திற்கு கலங்கம் கற்பிக்கும் விதமாக படமாக்க பட்டிரிப்பது உண்மை. இதன் அடுத்த வடிவம் குப்பி என்னறு சொன்னால் அது மிகையாகாது.

இரண்டு படங்களின் நோக்கமும் இந்திய மண்ணில் நடந்த படுகொலைக்கு காரணம் தேட முற்படுவதே என்று அமைந்தாலும். ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் அனுகும் முறையை விட மிகவும் மரியாதையாக மலைடயாள படம் அமைந்து இருப்பது என்னவோ உண்மை.

இதற்கு முன்னால் மலையாள படமான மிசன் 60 நாட்கள் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தான். அதனால் குற்றபத்திரிக்கை படத்தில் சொன்னவைகள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டதாக நிகைக்க வேண்டாம்.

கதையை எழுதும் ஆசிரியருக்கு தெரியும் கதையை எப்படி நகற்ற வேண்டு என்று. அதுவும் கதையை பற்றி மற்ற யாவருக்கும் ஏதும் தெரியவில்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் பார்ப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுவது ஒன்றும் பெரிதான காரியம் இல்லை.

இருப்பினும் சமுதாய நலன் கருதி எடுக்கும் படங்களிலும் சரி, கதை மற்றும் கற்பனைகளிலும் சரி. நீதி கடைபிடித்து சொல்ல பட்டால் அதில் சிக்கல்கள் ஏதுமே இல்லை தான்.

இந்த கடைமையில் இருந்து தவறுவர்களை தண்டிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சாதாரண குடிமகனில் இருந்து நீதிபதிகள் வரையிலும் உண்டு என்றால் அது மிகையாகாது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். இரண்டு படங்களிலும், கதையின் காரணத்தை சொல்ல முற்பட்டாலும் கதையின் காரணத்தை முழுமையாக தமிழிலோ அல்லது மலையாளத்திலோ சொல்ல விடாமல் தடுத்த பெருமை இந்திய திரைப்பட தன்னிகை குழுவை முற்றிலும் சாரும் என்றால் அது மிகையாகாது.

இதில் எங்கே மலையாள படம் தமிழ் படத்தை விஞ்சியது என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்காமல் இல்லை.

செல்வமணியை பொருத்த வரை வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்தவரும் அவரது மனைவியும் குற்றவாளிககாக ஆக்கபடுகின்றனர், அல்லது கருத்தாக்கம் செய்யப்படுகின்றனர்.

ஆனால் மலையாள படத்தில் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை இந்திய பாதுகாப்பு படையினரது தலைமை அதிகாரி தைரியம் மிக்க இளைஞர்கள் மற்றும் புத்திசாலிகளும் கூட என்று வசனத்தில் சொல்லும் காட்சிகளில் நன்றி மிக்கவர்கள் என்று சொன்ன நீங்கள் வாழ்க.

ஏதோ ஒரு தனி மனித வாழ்கயின் சுங்களுக்ம் துக்கங்க்களும் தான் ஈழத்தமிழர்களது வாழ்க்கை என்று உலகம் சொல்லிக்கொண்டு திரியும் தருவாயில். உண்மை அப்படி இல்லை என்று பொது மக்களுக்கு முதல் மற்ற அனைத்து மக்களுக்கும் விளக்கும் விதமாக நடந்து கொண்ட மலையாள நண்பர்களுக்கு நன்றி.

Saturday, July 25, 2009

அதிசய மனிதர் தமிழ் அருவி மணியன்-FeTNA 2009

பெட்னா 2009ல் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களில் அதிகம் மக்களின் கவனத்தை கவர்ந்தவர் தமிழ் அருவி மணியன் ஐயா அவர்கள்.

விழா மேடையில் 4 அமர்வுகளில் பல தரபட்ட தலைப்புகளில் எழிர்சி மிக்க உரை நிகழ்த்தினார். என்ன பொருளை எடுத்துக்கொண்டாரோ அந்த பொருளை விளக்கியும் அந்த பொருளை சார்ந்த செய்திகளையும் மிகவும் அழகாக மக்களுக்கு கொடுத்தார்.

நிறைவ பொருளில் நிறை நிகழ்வுகளை அவர் தந்திருந்தாலும் அவரது உணர்வு கொள்வோம் என்ற பொருளில் அவர் கொடுத்த உரை சபையில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிகளின் முதல் நாள் மதியத்தில் இந்த உரையை ஐயா நிகழ்த்தினார்கள்.

பேச்சுகளில் அவர் முதலில் குறிப்பிட்ட செய்தியில் கதி கலங்கினோம். பின்னர் அதன் பொருட்டு அவர் கொடுத்த காட்டுக்களையும் நிகழ்வுகளையும் பார்க்கும் போது, அவர் உரைப்பது சரியே என்று விளங்கியது.

ஈழத்து நிலைமைகளை வெகு தொலைவில் இருந்து நோக்கி நமக்கு அதை தொடர்ந்து தமிழகத்தில் வந்த அரசியல் அனுகு முறை மாற்றங்களை பார்க்கும் போது. தமிழகத்து மக்கள் ஒரு மாற்றத்திற்கு தங்களை ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் அத்தணை ஊடககங்களும் செய்தியாக்கி கொண்டு இருந்தது.

ஐயா பேசும் போது முதலில் சொன்னார், அப்படி எந்த ஒரு உணர்வும் அங்கே இருக்கும் தமிழக மக்களிடம் இல்லை என்றார். மனது பதைக்க துவங்கியது. என்ன இப்படி சொல்கிறார்கள் என்று பார்த்தால், உண்மை நிலை அப்படி தான் இருக்கிறது என்றும். எந்த கட்சி என்ன என்ன தில்லு முல்லு வேலைகளை எல்லாம் நடத்த முடியுமோ அதை எல்லாம் முயன்று தான் வெற்றிகளை கொண்டது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வுகளுக்கு காட்டாக அவர் காட்டியது சிவகங்கை தொகுதியின் முடிவுகளில் வந்த குழப்பத்தையும். அதை எப்படி காங்கிரசு கட்சி தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

நல்ல தமிழில் அழகாக பேசினார் ஐயா. அதே சமயத்தில் கலைத்துறைக்கு கொடுக்கும் முக்கத்துவம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கோ அல்லது மற்ற நிகழ்சிகளுக்கோ கொடுப்பதில்லை என்றும் வருத்தோடு குறிப்பிட்டார்.

மேடையில் பேசும் போதும் சரி அவரிடம் பேசுகையிலும் சரி நல்ல தமிழிலேயே ஐயா அழகாக பேசினார்கள் என்றது குறிப்பிட தக்கது.

உணவு இடைவேளையின் போது வெளியே மரத்தடி நிழலில் நின்று கொண்டு இருந்தவரடிம் கேட்டோம் தமிழகத்து இந்த நிலையில் எப்போது தான் மாற்றம் வரும் என்று. அதற்கு ஐயா, இதற்கு என்று ஒரு இயக்கம் தொடங்க்கப்பட வேண்டும். ஊருக்கு 2 பேராவது காசு பணம் எல்லாம் ஒன்றும் முக்கியம் இல்லை, கட்சி ஒரு முதலீடும் இல்லை. கொள்கையே வாழ்க்கை என்று இருக்கும் மக்களை கண்டுபிடித்து அவர்களை கொண்டு ஒரு இயக்கம் நடத்தினால் மட்டும் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

எவ்வளவு பெரிய அரசியல் தலைவர் அவர், தமிழ் அருவி என்ற பட்டம் பெற்ற இலக்கியர் அவர். என்ன ஒரு எளிமையாக மக்களை சந்தித்தார். அந்த வெயிலிலும் படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேட்டவர்களுக்கும் சரி. செவ்வி வேண்டும் என்று விகடன் செய்தியாளன் அந்த வெயிலிலேயே நிற்கவைத்து கேள்வி கேட்ட போதும் சரி. ஐயா சிரித்த முகத்துடன் எதிர்கொண்ட விதத்தை பார்க்க வியப்பாக இருந்தது.

3 நாள் நிகழ்வுகளையும் அங்கேயே இருந்து இரசித்தார்கள். 3ஆம் நாள் இலக்கிய நிகழ்சிகளுக்கு பிறகு விடைபெரும் போது சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாங்கள் என்று தொடர்பு எண்களை வழங்கிய அவர் எந்த செய்தியானாலும் நேரில் பேசிக்கொள்வோம் தொலைபேசியில் வேண்டாம் என்று எச்சரித்தது மனதுக்கு வேதணையை தந்தது.

ஈழ நிகழ்வுகளுக்கு தமிழகத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கு விடையளித்த அவர். பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ தமிழக தலைவர்களை கொண்டு தான் தில்லியில் காய் நகர்த்த வேண்டும். அப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்திய அரசியல் வாதிகள் ஒருவரும் அசைந்து கொடுக்க போவது இல்லை. என்றாலும் உங்களது முயற்சிகளை நீங்கள் அங்கே இருந்த்து தான் தொடங்க வேண்டும் என்று மிகவும் பொருப்பாக விடையளித்தார்கள்.

ஒரே மனிதனுக்குள் இருக்கும் சமுதாய, இன, தமிழ் உணர்வுகளை ஒருங்கே அங்கே இவர் மூலம் பார்க்க முடிந்தது. உணர்வு கொள்வோம் என்று முழங்க இவரை விட்டால் வேறு தகுதியான மனிதர் தமிழகத்தில் இருந்து கிடைத்து இருக்க மாட்டார்கள் தான். ஐயா உங்களது சமுதாய பணிக்கும், தமிழ் பணிக்கும் எங்களது வணக்கங்கள், வாழ்க உங்களது தொண்டு.

Friday, July 24, 2009

அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்வி கண்டுவருவது ஏன்?

எப்போது எல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதிமுகவின் முகாமில் இருந்து வரும் அறிக்கைகள் இதுவே.

பண நாயகம் மக்களாட்சியை குழி தோண்டி புதைத்துவிட்டது. (நாங்கள் வென்றால் தான் அது சரியான முறையில் பெற்ற வெற்றி).

சென்னை இசுடாலின் சென்னை நகர தந்தை தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டி இரும் போதும் சரி, இராதா இரவி சைதாப்பேட்டையில் போட்டி இட்டபோதும் சரி. அதிமுக காந்திய வழியிலும், அரக்கபோக்கு எதுவுமே இல்லாமல் அமைதியான முறையில் தான் தேர்தலை எதிர் கொண்டது போலும்.

இன்றைக்கு மக்களாட்சியை பற்றி பக்கம் பக்கமாக அறிக்கைவிடும் செயலலிதாவும் சரி அவருக்கு சப்பை கட்டு கட்டும் கூட்டமும் சரி. அன்றைக்கு அந்த தேர்தல் வன்முறைகளை மறைமுகமாக கூட கண்டிக்காமல் விட்டது ஏன் என்று விளக்கமுடியுமா.

தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன என்ன செய்வீர்கள் என்று அதிமுகவை கேட்டால், கலைஞர் அழியவேண்டும் அதை தான் தமிழர்கள் தீபாவளி என்று கொண்டாட வேண்டும் என்று சொல்வார்கள். அதும் எப்படி கரப்பான் பூச்சியை தரையிலே போட்டு காலால் மிதித்து தைரையோடு தரையாக தேய்த்து உரு தெரியாமல் அழித்துவிடவேண்டும் என்று அறிக்கை விட்ட செயல் வீரர் ஆயிற்றே இந்த செயலலிதா.

அதையும் விட கேவலம் இந்த அம்மையார் பண நாயகத்தை பற்றி உரைப்பது. பணம் என்றாலும் சரி ஊழல் என்றாலும் சரி அதன் மொத்த முகவர் அதிமுக என்று இன்றைகு அல்ல செயலலிதா முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் சொல்லி மக்களாட்ச்சி என்றால் என்ன என்று நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம் நாம். என்ன கொடுமை சரவணா இது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தை வெற்றியாளராக அறிவிக்க கண்ணப்பன் எப்படி எல்லாம் கவனிக்கப்பட்டார். எவ்வளவு பணம் எல்லாம் கைமாறியது என்ற வேலை எல்லாம் என்ன என்று கேட்க்கவாது இவருக்கு துணிவு உண்டா இவருக்கு.

கேளுங்கள் இந்த அதிமுக கழக கண்மணிகளை, தங்க தாரகை, மேரியம்மாவின் மறுபிறபு, தமிழகத்தை காக்க வந்த தைரிய லெட்சுமி என்றெல்லாம் கதைப்பார்கள் இவர்கள்.

என்ன தெருவில் பிச்சை கேட்க்கும் பிச்சைக்காரர்களுக்கும் இவர்களுக்கு ஒரே வித்தியாசம். பிச்சை கேட்ப்பவர்களும் இவர்களை போல் அம்மா, தாயே, மகாலெட்சுமி என்று எடுத்து அவனது வயிற்று மட்டும் வளர்ப்பான். இவர்கள் இப்படி எல்லாம் கெஞ்சி கூத்தாடி கிடைக்கும் சொற்ப பணத்திற்கு கொஞ்ச்ச நஞ்சம் இருக்கும் மானத்தைவும் விற்று கட்சி நடத்துவார்கள் இந்த வியாபார அடிமை திமுக கட்சியினர்கள்.

செயலலிதாவுக்கும் இப்படி பேசுவதில் வெட்கம் இல்லை, அவரது வியாபார கட்சியினருக்கும் வெட்கமும் இல்லை. இதை எல்லாம் கேட்க்கும் நமக்கு தான் குமட்டிக்கொண்டு வருகிறது, இந்த தைரிய லெட்சுமியின் நகைப்புரைகளை கண்டு........

இப்படியே எல்லா தேர்தலிலும் வரிசையாக தோற்று போன செயலலிதாவை, தோற்றலலிதா என்று சொல்லுவார்கள் என்ற பயத்தில் இந்த அம்மையார் எல்லா அலங்க்கார வார்த்தைகளை கொண்டு குடையமைத்து கொள்கிறார்கள் போலும். பாவம் செயலலிதாவும் இன்னமும் அவரை நம்பி சுவரொட்டிகளை தயாரித்து ஒட்டும் அதிமுக முகாம் வாசிகளும். பேசாமல் வேறு வேலை இருந்தால் பார்க்கவும்..................

Friday, July 17, 2009

ஆனந்த விகடனும் குப்பி திரைப்படமும் FeTNA 2009ம்

விகடனின் செய்தியாளர் பிரகாசு சாமி அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை 2009௦௦ நிகழ்ச்சிகளை தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளார் விகடனில்.

அந்த செய்தியின் தலைப்பு "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!" . தலைப்பிலேயே எவ்வளவு குழப்பம் பார்த்தீர்களா. தலைப்பை அவர் எப்படி வைத்திருக்க வேண்டும் "அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த ஈழ தமிழ் குரல்!" என்றல்லவா வைத்திருக்க வேண்டும்.

சரி போகட்டும் விட்டுவிடுவோம் என்று பார்த்தால் உள்ளே எழுதி இருக்கும் செய்திகளோ இன்னமும் குழப்பம்.

“இந்தப் பேரவையின் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் புலி அனுதாபிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனாலேயே அமெரிக்கா, கனடா,இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையினரின் கண்காணிப்புக்குள் இடம்பிடித்துவிடும். இந்த முறையும் அப்படித் தான்!"

அங்கே விழா நடந்த 3 நாடக்களும் எந்த மேடையிலும் எந்த அரங்கிலும் புலிகளை பற்றியோ அல்லது புலித்தலைவரை பற்றியோ எந்த வித அலசலும் இல்லை பேச்சும் இல்லை. இது தான் உண்மை.

இந்த பிரகாசு சாமி விகடனில் பணம் வாங்கிக்கொண்டு வேறு எங்கேயோ சென்று பொழுதை கழித்துவிட்டு ஊர் திரும்பும் பொது அவரது கற்பனைகளுக்கு எட்டியவைகளை நடந்ததாக கற்பனையாக செய்தியாக்கி வெளியிட்டு இருக்கிறார் இந்த செய்தி வியாபாரி.

இப்போது விளங்குகிறது ... …. …. கூட்டத்திற்கு என் அவ்வளவு கெடுபிடிகள் இருந்தன என்று.

அனேகமாக அந்த அமர்வில் கைதட்டி ஆராவாரம் செய்தற்கு கண்டிக்கப்பட்ட ஒரே நபர் இந்த மனிதனாகத்தான் இருக்கும் போலும்.

இந்த கூட்டத்தை பற்றிய இன்னமும் ஒரு இமாலய பொய் "பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது."

இந்த பொய்யை எழுதியதிற்காக இந்த செய்தியாளரை கொண்டு சென்று சிங்களத்தின் வதை முகாமில் சாகும் வரை இருந்து செய்திகளை சேகரிக்க செய்ய வேண்டும்.

அறிவு கேட்ட செய்தியாளா இத்தணை படங்களை வெளியிட்டுள்ளாயே அப்படி காண்பித்த படங்களையும் வெளியிட வேண்டியது தானே எங்கே அந்த படங்கள் தயவு செய்து வெளியிடவும்.

என்னக்கு தெரிந்த வரையில் கொஞ்சம் அதிகமாக இருந்த படம் என்றால் அது நாசி படையில் கொண்ட தடுப்பு முகாமையும் சிங்கள படையின் தடுப்பு முகாம்களையும் ஒருங்கே காட்டிய படம் ஒன்று தான். அந்த படத்திலும் இவர் சொல்வது போல் பிணக்குவியலும் இல்லை அகோர காட்சிகளும் இல்லை.

"தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை" இது பிரகாசு சாமியின் வரிகள் அதை விகடன் அப்படியே வெளியிட்டு இருக்கிறது. அமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் அது என்ன "தமிழ் விஞ்ஞானி". ஒன்று விஞ்ஞானி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை என்று குறிப்பிட்டு இருக்கவேண்டும். இரண்டும் அல்லாது அது என்ன "தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை". எழுதியவனுக்கு தான் அறிவு இல்லை இதழின் ஆசிரியருக்கும்மா அறிவு இல்லாமல் போனது. என்னே கொடுமையடா இது. இந்த இலட்சணத்தில் இந்த இதழ்தான் தமிழர்களின் மனசாட்சி என்ற தம்பட்டம் வேறு.

அந்த விழாவின் நாயகனாக சொன்னால் அது கட்டாயம் 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை தான். இந்திய தேசத்தின் செயல் விச்சுகளை உலகுக்கு அறிவித்தவர் அவர். அத்தணை பெரியவர் அவர், அந்த மனிதரோ சக மனிதர்களை சந்திப்பதிலோ அல்லது பேசுவதற்கோ எந்தவித தயக்கமும் பந்தாவும் காட்டாத அந்த மனிதனை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை முதல் செய்தியாக வைரமுத்துவின் பேச்சும் அனுராதா அவர்களது இசை நிகழ்சிகள் மட்டும் தான் செய்திகள் என்று எழுதி இருக்கும் உன்னை கட்டாயம் சிங்கள தடுப்பு முகாமுக்கு தான் அனுப்பவேண்டும்.

இதிலே நடராசர் இப்படி பேசினார் அப்படி பேசினார் என்று எல்லாம் எழுதியுள்ளிர்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா. அவர் பேசியது இவ்வளவு தான் "தமிழஅருவி மணியன் ஐயா சொன்னதை அப்படியே மறுபடியும் சொன்னார்" அவ்வளவு தான் இடையிடையே இதை முதல்வர் செய்யவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று குறைந்தது ஒரு 20 முறையாவது சொன்னார் என் அதை பற்றி உங்களது செய்திகள் இல்லை.

மொத்தத்தில் நடராசர் பேச்சு கவிஞர் செய பாசுக்கரன் அவர்கள் சொன்ன புதுக்கவிதை போலத்தான் இருந்தது. அந்த கவிதையின் பிரதி இல்லை அரசூரான் தொகுத்து கொடுத்த அந்த கவிதை இதோ

இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.


பலமுறை"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

கலைஞர் வாழ்த்து செய்திகள் இல்லை என்ற கவலை வேறு பாவம் உங்களுக்கு. எங்களை பொறுத்தவரை காணாமல் போனது அவரது வாழ்த்துகள் மட்டும் இல்லை அவரும் தான். ஆபத்தில் தான் தெரியும் உனது உண்மையான நண்பன் யார் என்று ஒரு வழக்கு உண்டு, இப்போது தெரிகிறது எங்களுக்கு அவர் யார் என்று. காலத்திற்கு தான் நாங்கள் எல்லாம் நன்றி சொல்லவேண்டும்.

உண்மையில் விழாவில் உணவு இடைவேளைக்கு கூட நேரம் இல்லாமல் 3 நாட்களும் மிகவும் கடுமைய தொரு நிகழ்ச்சி நிரலில் சென்றது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தொழில் முறை கலைஞர்களை கொண்டு நடத்தியது போல் தமிழ்ச்சங்கங்கள் கூட்டமைப்பு நடத்திக்காட்டியது. அந்த நிகழ்சிகள் எல்லாம் உங்களின் நினைவுக்கு வரவே இல்லை போலும். இல்லை இங்கேயும் சிங்கள துதரகம் தனது கைவரிசைகளை காட்டியது போலும்........................


குப்பி படம் அனேகமாக அனைவரும் பார்த்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன். அந்த படத்தின் நோக்கமே புலிகளை கொடூரமாகவும் அதே சமயம் கோழையாகவும் காட்டவும் முயற்சி செய்யப்பட்ட படம். அதை போல அங்கே தமிழ் பேசும் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் புலி என்று சிறுத்தை என்றும் உலகுக்கே ஆபத்து என்று அமேரிக்காவில் வந்து சொன்னயே செய்தியாளா எலன் அம்மையாரின் பேச்சை கேட்டவது உனக்கு அறிவு வந்திருக்க வேண்டாம். அந்த அம்மையார் 6 மாத காலம் அவர்களோடு தங்கி மருத்துவம் புரிந்தவர்கள் சொன்னார்கள் அவர்களின் செயல்களை பற்றி, உங்களை போல் இல்லாததையும் பொல்லாததையும் ஒன்றும் சொல்லவில்லையே. அந்த அம்மையாரை விமர்சனம் செய்யும் தகுதி எல்லாம் உங்களுக்கும் இல்லை உங்கள் ஆனந்த விகடனுக்கும் இல்லை.


பேசாமல் போய் நடிக நடிகைகளை பற்றி கிசு கிசு எழுதும் உங்களுக்கு அது தான் சரியான வேலை..................வந்துடாரு விமர்சனம் எழுத..........................

Thursday, July 16, 2009

வயித்துவலியும் வாந்தி பேதியும் உங்களுக்கு வந்த பணம் எல்லாம் எங்களுக்கு


வயித்துவலியும் வாந்தி பேதியும் உங்களுக்கு
வந்த பணம் எல்லாம் எங்களுக்கு
உயிர் போகுது என்றாலும் எங்களுக்கு
தொழில் போகுது என்னாளும்
காசே தான் கடவுளடா அது
வேதம் சொன்ன மொழிகளடா
எனக்கு மட்டும் தான் எல்லாவாம்
மற்ற அனைவருக்கும் சும்மாவாம்
போராடுவோம் போராடுவோம் அடுத்தவர்
வசதி அழியும் வரை போராடுவோம்

நான் மட்டும் வாழவேண்டும் மற்றவர்
அனைவரும் சாக வேண்டும்
அப்படி இல்லை என்றால் போராட்டம்
உலகம் எங்கள் கலைகூடம்
ஏழ்மையை எள்ளி நகையாட உங்களுக்கு வெட்க்கமாகவே இல்லையா நண்பர்களே. அடுத்தவரது ஏழ்மை உங்களுக்கு அவ்வளவு களிப்பா.........வெட்க்கம்.................

Friday, July 10, 2009

மெட்ரோப்லக்ஸ் தமிழ்ச் சங்கம் மற்றும் இலங்கை தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கும் “இதயாஞ்சலி”

Anbudan azaipathu: MTS Committee & ITS Committee
Entry is free for MTS Members and Non-Members



மெட்ரோப்லக்ஸ் தமிழ்ச் சங்கம்
மற்றும்
இலங்கை தமிழ்ச் சங்கம்
இணைந்து வழங்கும்
“இதயாஞ்சலி”



சிறப்பு விருந்தினர்
திரு. தமிழருவி மணியன் அவர்கள்
(எழுத்தாளர், பேச்சாளர், தமிழை அருவியாக வழங்குபவர்)
வழங்கும்
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்”




நாள்: 07/11/2009
நேரம்: 10.00 AM – 5.00 PM
இடம்: Quality Inn and Suites - 2nd Floor, 7815 LBJ Freeway @ Coit, Dallas, TX 75251
நிகழ்ச்சி நிரல்

10:00 AM Opening Remarks
10:05 AM Lighting of Kuthuvizhakku
10:10 AM Prayer
10:20 AM Children's Program
11:05 PM Speech by Thiru Thamizharuvi Manian
12:05 AM thru 1:00 Lunch will be available for adults and children
1:00 PM IMHO Update by Dr Nanthakumar
1:15 PM Paul Pandian
1:30 PM Human Rights Advocacy Update
1:45 PM MTS Presentation
2:00 PM "Time to Act" Speech by ITS Member
2:30 PM Q&A Session
2:45 PM to 4:45 PM "Mannil Nalla Vannam Vaazhalam" Literary session with
Thiru Thamizharuvi Manian
4:45 PM Vote of Thanks by Tony Sivasothy


அன்புடன் அழைப்பது – MTS & ITS திட்டக்குழு
Entry is Free for MTS Members & Non-Members
அனைவரும் வருக ! ! ! ஆதரவு தருக ! ! !

Monday, July 6, 2009

(பெட்னா 2009) வட அமெரிக்கா தமிழ்ச்சங்க பேரவை - பாகம் 2

முதல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறுதி நாளான மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இலக்கிய நிகழ்சியக அமைத்து இருந்தார்கள் விழா குழுவினர்கள்.

இலக்கிய நிகழ்ச்சிகளாக திரு.தமிழருவி மணியன், திரு.சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் திரு.செய பாசுகரன் அவர்கள் வழங்கினார்கள்.

இந்த இலக்கிய கூட்டம் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட கூட்டமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. அவரவர் பங்குக்கு மிகவும் ஆழமாகவும் அழகாகவும் உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

சிலம்பொலி ஐயா விளக்கிய சிறப்பு நாடக நிகழ்சியும், தமிழ் இலக்கியங்களில் இருந்து இலக்கிய உதரணங்களை தமிழர்கள் காட்ட தவறுவதையும் மிகவும் வருத்தமாக ஆழ்ந்த கருத்துகளுடனும், தகுந்த உதாரணங்களுடன் விளக்கினார்கள்.

கவிஞர் ஐயா செய பாசுகரன் அவரது பங்காக சொன்ன மையில், கைப்பை, சாமியார் கவிதைகள் மிகவும் அருமை. மகிழ்ந்தோம் சிரித்தோம் ஒவ்வொரு கவிதைக்கும் அவ்வளவு நேரம் சிரித்தோம். உண்மையிலே புதுக்கவிதைகள் அழகுதான், அவர் குறிப்பிட்டது போலே.

நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டதை போல் வைரமுத்து விழா மேடைக்கு ஊரில் இருந்தும் வராமல் போனதை பார்க்கும் போது மிகவும் வருத்தமா இருந்தது.

நிறைவுரையில் அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்கள். முனைவர். இரா திருமுருகன் அவரது ஆராய்ச்சி தொகுப்பான காவடி சிந்துவையும் எங்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். மனதுக்கு நிறைவாகவும், மகிழ்ச்சியகவும் விழா மண்டபத்தை விட்டு சென்றோம். வெளியே வந்தும் விழா ஏற்பாட்டாளர்களையும் முக்கிய விருந்தினர்களையும் தனி பட்ட முறையில் பார்த்து விடைபெற்றுக்கொண்டு வருவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் பிடித்தது.

வாழ்க பெட்னாவின் சேவை வாழ்க அந்த குழுவினர்கள்.

Sunday, July 5, 2009

(பெட்னா) வட அமெரிக்கா தமிழ் பேரவையின் தமிழ் விழா 2009 அது வெற்றிவிழா

சார்சியா மாகானதின் அட்லான்டா பெரு நகரில் நடைபெற்றுவரும் (பெட்னா) வட அமெரிக்க தமிழ் பேரவை நடத்திவரும் தமிழ் விழாவின் முதல் இரண்டு நாட்கள் செவ்வனே நடைபெற்றது.

திட்டமிட்டபடி அழைப்பில் குறிப்பிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் விழாவிற்கு வந்து சிறப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

விழாவின் சிறப்பு என்று சொல்வோமானால் அது நிகழ்ச்சிகளை நிரலில் உள்ளது போல் அதே நேரத்தில் துவங்குவது மட்டும் இல்லாது குறித்த நேரத்திலும் அழகாக முடிக்கவும் செய்தார்கள்.

விழா வெற்றியாக அமையும் என்று விழா துவங்கும் முன்னே அறிவிக்கும் முகமாக அனைத்து இடங்களும் 20 நாட்களுக்கு முன்னதாகவே விற்று தீர்ந்ததுள்ளது.

விழாவிற்கு வருவோரை எல்லாம் புன்னகையுடன் வரவேற்க திருவள்ளுவர் வாசலில் இருந்து ஓலை சுவடிகளை கொடுத்து துவங்கியது புதுமை, அழகு.

மதியம், இரவுக்கு என்று அருமையானதொரு உணவை வழங்கி மகிழ்ந்தார்கள் விழா குழுவினர். நீண்ட வரிசையில் நின்று பசியாறினாலும், சுவையான உணவகவும், கட்டுக்கோப்பான பரிமாறலும் அருமையாக இருந்தது.

விழாவின் சிறப்பு விருந்தினராக வந்து இருந்த நிலா மனிதன் திரு அண்ணாதுறை மயில்சாமி அவர்களை மக்கள் சாப்பிடக்கூட விடாமல் பேட்டி எடுப்பதும், படங்கள் எடுப்பதும் பார்க்கும் போது மனதில் ஒரு புறம் கவலைகள் வந்தாலும். எவ்வளவு முக்கியமான மனிதரை விழாவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று பெருமையாக இருந்தது. அவர் சொன்ன அந்த சின்ன சின்ன சம்பவம் அருமையோ அருமை.

தமிழருவி மணியன் ஐயா அவர்களின் உணர்ச்சி பொங்கும் பேச்சை 3 முறை வழங்கினார்கள். மேடையில் பேசியது போக வழியில் நின்றுகொண்டு இருக்கும் இடத்திலும் இந்த நேர்முகளாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் வேளையிலும் அலுக்காமலும் பொருமையாகவும் பெருமையாகவும் உண்மைகளை எடுத்துகூறிய அழகை பார்க்க கொடுத்துவைத்து தான் இருக்கவேண்டும். ஐயா உங்களின் இந்த தன் நலம் இல்லா சேவைகளுக்கு தலை வணங்குகிறோம்.

சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டில் அவரது நல்ல பல பண்புகளையும் அந்த மாமனிதனின் தனி பண்புகளையும் அழகாக விளக்கி மகிழ்வித்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலே ஈழத்தில் நடைபெற்று வரும் கொடுமைகளை விளக்கும் விதமாக நடைபெற்ற நாடகம் அனைவரது நெஞ்சையும் வருத்ததிலும் அவமானத்திலும் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது.

பிரதிமை என்று ஒரு நாடகம், அந்த நாடகத்தில் இராசேந்திர சோழனும் குந்தவையும் பேசும் படியாக வரும் வசனத்தி எழுதிய கைகளுக்கு தங்கத்தில் காப்புதான் அணிவிக்கவேண்டும். அவ்வளவு தீர்கம் அவரது எழுத்தில், அந்த கால நிகழ்வுக்கு நம்மை எல்லாம் அழைத்து செல்ல அவர் கொண்ட காயகல்ப நிகழ்வுகள் இரு வித்தியாசமான சிந்தனை.

உலக தமிழ அமைப்பு நடத்திய கூட்டமும், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமும் கூடி வந்திருந்த மக்களுக்கு வேண்டிய சிந்தைகளை வழங்கிய வண்ணம் இருந்தது.

நீயா நானா கோபி நாத் நடத்திய விவாதமேடை நகைச்சுவையாகவும் அதே சமயத்தில் அமெரிக்க வாழ் மக்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பையும் அழகாக அவருக்கே உள்ள முறையில் தொகுத்தும் விளக்கியும் வழங்கினார்கள்.

கவியரங்கம் நடத்திய கவிஞர் செயபாசுகரின் வார்த்தைகளில் தெரித்த தமிழர்களின் தமிழ் சார்ந்த கோபங்களை மிகவும் நகைப்பாக எடுத்துரைத்தார். குறிப்பாக தமிழகத்து ஊர்களின் பொருளில்லா பெயர் திரிவுகளை விளக்கியது இதுவே மேடைக்கு புதிது மற்றும் முதல் நிகழ்வு என்று நிகைக்கின்றேன்.

வைரமுத்து அவர்கள் வழங்கிய உரையு அதில் அவர் சொன்ன வார்த்தைகளும் வாதங்களும் அருமையோ அருமை. எல்லோரும் சொல்ல மறந்த அந்த பெயரை பிரபாகரன் என்று எழுர்ச்சிமிக்க கூறுகையில் அரங்கம் அதிர்ந்தது.

விழா அரங்கிலே பழமைபேசி, மயிலாடுதுறை சிவா போன்ற பதிவர்களையும் பார்க்க முடிந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு பட்ட நிகழ்சிகளில் பங்கு கொண்டதையும் பார்த்தோம், இரசித்தோம்.

இரண்டாம் நாள் இரவில் இன்னிசையாக மெல்லிசையை வழங்கிய அனுராத குழுவினர்களை புகழ்ந்து கொண்டே போகலாம். முதலில் இங்கே உள்ள இளைஞர்களை பாட சொல்லி ஊக்குவித்தமைக்கு பாராட்டுவோம். பிறகு மேடை கச்சேரியில் அவர் செலுத்திய ஆளுமைக்கு, அவர் மேடை ஏறியதும் அங்கே இங்கே என்று வந்த எரிச்சலூட்டும் விமர்சங்களையும் அனாயசமாக கையண்டது அவர் சுசீலா, சானகி, மற்றும் மற்ற பாடகிகளின் பாடல்களை கையாண்டதை விட மிகவும் அழகாக இருந்தது.

இவ்வளவு திறமைகளா உங்களிடம் என்று வியந்து தான் போனோம் நாங்கள்.

விழாவின் ஒருங்கினைப்பாளர்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே மேடையில் ஏற்றினார்கள் விழா குழுவினர்கள். அந்த கண் கொள்ளா காட்சியை விரைவில் வெளியிடுகிறேன்.

நாளை நடக்க இருக்கும் இலக்கிய கூட்டத்தையும் பார்த்துவிட்டு, நிறைய படங்களை வெளியுடுகிறேன்.