முதல் காட்சி மெக்சிகோவில் ஒரு புதைபொருள் ஆய்வாளர்கள் நடத்தும் ஆய்வில் ஒரு கையடக்க கத்தி கிடைக்கிறது. அந்த கத்தி தீய சக்திகளின் மொத்த உருவம், அந்த கத்தியை கொண்டு சாத்தான் உலகை அதன் கைகுள் கொண்டு வரும் என்று கதையின் பின்னொலியுல் சொல்கிறார்கள்.
அடுத்ததாக பேயை ஓட்டும் காட்சியை காட்டுகிறார்கள். ஒரு ஏழை பெண் ஒருத்திக்குள் தங்கி அவளை ஆட்டுவிக்கும் ஆவியை கதையின் நாயகன் ஒரு கண்ணடியில் பிடித்து அதை அப்படியே 3வது மாடியில் இருந்து விட்டெறிவான். கண்ணாடி உடைவதில் அந்த ஆவியும் அழியும்.
அதற்குள் அந்த கத்தியை கொண்டு வந்தவன் இலாசு ஏஞ்சலசின் நகருக்கே வந்து சேர்வான். அங்கே வந்ததும் அந்த கத்தி தனது ஆட்சியை நிலைகொள்ளும் விதமாக முதலில் ஒரு பலி கொடுக்க எண்ணம் கொள்ளும். அப்படி கொடுக்கும் பலி கடவுளை அவமதிப்புள்ளாக்கும் பலியாக இருக்க எண்ணி ஒரு கிருத்துவ தேவாலயகன்னியை தற்கொலை செய்துகொள்ள செய்யும் அந்த சாத்தான்.
பிறகு இறந்த அந்த கன்னிகையின் இரட்டை சகோதரியின் மற்ற ஒருவரான மத்திய புலனாய்வாளர்(FBI agent), இவளது தற்கொலை மரணம் குறித்து நம்ப மறுத்து துப்பு துலக்கும் வேலையில், அந்த பேயோட்டுபவனின் அறிமுகம் கிடைகிறது.
நாயகிக்கோ ஆவி, பேய், சொர்கம், நரகம் இவைகளில் எல்லம் நம்பிக்கையே இல்லாமல் இருக்கையில். அந்த பேயோட்டுபவன் நரகத்தின் அறிமுகத்தை அவளுக்கு காட்ட, அவளும் தன்னை விட்டு பிரிந்த இரட்டையரின் மரணத்திற்கு பிந்திய நிகழ்வுகள் என்ன என்று அறிய அவனின் உதவியை நாடுகிறாள். அவனும் அவள் சொர்கம் சென்றாளா இல்லை நரகத்திற்கு சென்றாளா என்று நரக வாசல் வரை சென்று பார்த்துவந்து அவள் நரகத்திற்கு தான் செல்கிறாள் என்று ஆதாரத்துடன் சொல்ல.
அதே நேரத்தில் நாயகியையும் அள்ளிக்கொண்டு செல்கிறது சாத்தான், நாயகியை காப்பாற்ற எண்ணும் நாயகனை இறை தேவதையே சாத்தானிடம் காட்டிக்கொடுப்பதும். சாத்தானின் அந்த கத்தியை வைத்து நாயகயின் உடலில் குடியேறி உருவம் பெற்ற அந்த சாத்தானை உலகில் வெளி கொண்டு வரும் அந்த தருணத்தை தடுக்க நினைக்கும் நாயகனை நரகத்திற்கு அனுப்ப நினைத்து அவனை கொல்ல. அவனது ஆத்துமாவை கொண்டு செல்ல எமனே வருகிறார்.
அதே வேளையில் இந்த பேயோட்டியின் நல்ல வேலைக்கு பலனாக என்ன வேண்டும் என்ற வரதிற்கு நரகத்தை நோக்கி செல்லும் அந்த இரட்டையரின் சகோதரி சொர்கம் செல்லவேண்டும், அதற்கு பதில் என்னை நரகத்திற்கு எடுத்து செல்லவும் என்று கோரிக்கை வைக்க சரி என்று வழங்க கதை திரும்ப, நாயகி நாயகன் உலகம் என்று கதையின் அத்தனையும் காப்பாற்றபடுகிறது படத்தின் முடிவில்.
இந்த கதையை அப்படியே ஒரு இந்திய திரைபட சாடியில் போட்டு குலுக்கி எடுங்கள், அந்த இந்திய வாசனைகளுடன், இந்திய சுவையுடன் அப்படியே அருந்ததீ வரும்.
ஆங்கிலத்தில் இரட்டையர் சகோதரிகள், இரேச்சல் தான் படத்தின் நாயகி, மயக்கி மயக்கி பேசும் அவரது அழகு.
அருந்ததீயில் இருவர்கள் ஒருவர் முன் பிறவி, பின்னொருவர் மற்றும் ஒரு பிறவி. இரேச்சலின் கண்களை போன்றே இவரின் அனேககாட்சிகளில் கண்களை கொண்டு காட்சிகளை அமைத்து இருக்கிறார் கோடி.
அங்கே நாயகனின் அறிமுகத்தில் ஒரு ஏழை பெண்ணின் பேயோட்டம் , இங்கேயும் ஒரு ஏழையின் பேயோட்டம்.
இரட்டையரில் ஒருவர் தன்னை தானே மாய்த்துகொள்வார் ஆங்கிலத்தில், இங்கே சாத்தானை அழிக்க தன்னையே பலிகொடுக்கிறார் நாயகி.
ஆங்கிலத்தில் நரகத்தை காட்டுகிறார்கள், இங்கே பாழடைந்த கந்தர்வ கோட்டையை அதற்கு பதில் காட்டுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சாத்தானை அழிக்கும் செயலில் நாயகனின் பங்கு தான் பெரும் பங்கு, தவிர அந்த கத்தியை கொண்டு தான் சாத்தான் தனது பிறப்பை நிகழ்த்த நினைகிறது.
இங்கே அதே பேயோட்டும் நாயகன் தான் கடைசியில் கத்தியை கொண்டு வந்து கதையை முடிக்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது, அருந்ததீயின் நாயகியின் தேர்வும் காட்சிகளும் அருமை அழகாக அசத்தி இருக்கிறார் கோடி.
என்ன, பொதுவாக பெண்களை அவ்வளவு எளிதில் வெற்றிகொள்ள முடியாது என்றாலும், அவளது பலவீனங்களை கொண்டு அவளை மிரட்டி மிரட்டியே காரியங்களை சாத்தித்துகொள்ளும் இயல்பை பேய்கள் முதல் கைகொள்ளுவதாக காட்டுவது தான் சகிக்கவில்லை.
உயிருடன் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களால் எல்லாம் அந்த ஆவியின் அட்டகாசங்களை அடக்கமுடியவில்லை. வெறும் உயிர் மட்டுமாக இருக்கும் அந்த தீயவன் மட்டும் எல்லாம் வல்லவனாக, வண்டியை தூக்கி எறிவதில் இருந்து எல்லாம் வல்லவனாக காட்டுவது அறிவுக்கு புறம்பானவையாக உங்களே தெரியவில்லையா கோடி
படத்தின் பின்னனியில் பெரும்பாலும் அந்த தீயனின் பெருமூச்சு தான் பின்னனி. வேறு எதுவும் அவர்களுக்கு தோன்றாமல் போனது ஏமாற்றமே.
அம்மன் என்ற அருமையான படத்தினை கொடுத்த தெலுங்கு உலகம் இப்படி ஒரு அட்டை பிரதி படம் கொடுத்து இருப்பது பெருத்த ஏமாற்றமே. மேலே சொன்ன ஆங்கில படம் கான்சடைன் படம். ஆங்கிலத்தில் படம் பார்த்தவர்கள் எனது விமர்சனத்தை விமர்சிக்கவும்.
Tuesday, March 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நான் Constantine பார்த்தேன்.....ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது தான் சில வித்தியாசம் இருப்பது தெரிகிறது......
என்னை பொறுத்தவரை அந்த படத்திற்கு அருந்ததி எவ்வளவோ பரவாயில்லை
வாங்க கமல், ஒற்றுமை என்று சொல்ல வந்தீர்கள் என்று நினைகிறேன். ஆங்கிலத்தில் காட்சியாக்கம் அருமை. அருந்ததீயில் அந்த நாயகியை தவிர கதையமைப்பு கூட முழுமையாக இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதுவும் அதே பழைய கையாளுமை, தாயத்திலும், அல்லது காப்பிலும் தான் அத்தனை சக்தியும் கொண்டுள்ளதாக இன்னமும் காட்டுவது மிகவும் கொடுமையாக இருக்கிறது. அதுவும் கொடுமை படுத்தும் அந்த தீயவனின் முன் முன்னவளும் பின்னவளும் நடனம், இன்ன பிற என்று அவளை விளம்பரமாக்கியது வக்கிரம். அந்த நாயகியை முழுமையாக இயக்குனர் பயன்ப்டுத்தியுள்ளார்........
Post a Comment