Thursday, February 19, 2009

இந்தியாவிற்கு விடுதலை வாங்கிக்கொடுத்த கட்சியின் பரிதாப நிலையை பாருங்கள்

காசுமீரம் விடுதலை இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை அப்போது. தாங்கள் எப்போதும் தனி நாடாகத்தான் இருப்போம் என்று சொல்லிக்கொண்டு தனியாகவே இருந்த நாடு தான் காசுமீரம்.

பிறகு இந்தியாவை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்று சமயம் பார்த்துக்கொண்டு இருந்த பாக்கிட்த்தானத்திற்கு அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. அது ஐந்து நதிகளின் தலையான காசுமீரத்தை கையகப்படுத்தி விட்டால், அவர்களது பஞ்சாப்பகுதிகளில் விளைச்சளை தீவிரப்படுத்துவதோடு இந்தியாவிற்கு தீராத ஒரு தலைவலியை அவர்களது தலை பகுதியில் இருந்து கொடுக்கலாம் என்ற குறுக்கு புத்தியும் ஒன்று சேர. காசுமீரத்தில் மெல்ல தனது கைவேலைகளை காட்டதொடங்கியது.

மெல்ல துவங்கிய அந்த கைவேலைகள் பிறகு கைக்குள் அடங்காமல் காசுமீரத்து மன்னர் இந்தியாவின் தலைமை அமைச்சரை உதவிக்கு அழைக்கிறார். அய்யயோ அடிக்குறாங்கோ கொல்லுராங்கோ காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ என்று கதறி அழுத்து உதவியை கேட்க்கிறார். எப்படி ஈழத்து உறவிகள் எப்படி தங்களை வந்து காக்குமாறு உதவிக்கரம் கேட்டார்களோ அப்படி கேட்டார் அந்த காசுமீரத்து மன்னர்.

அருகில் இருக்கும் ஒரு குட்டி நாடு என்றாலும் தனக்கு என்று ஒரு அரசை கொண்ட நாடு, அதாவது இறையாண்மை கொண்ட நாடு(இறையாண்மை என்றால் ஆட்சி என்று பொருள், இதை ஆட்சி என்றே எழுதலாம் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.). அந்த நாட்டில் நடக்கும் ஒரு உள் நாட்டு குழப்பம் கடைசியில் நாடு பிடிக்கும் செயலில் வந்து நிற்கிறது. அதாவது வன்னியை சிங்களம் இராணுவ முற்றுகை கொண்டுள்ளதை போல்.

ஆபத்து என்று வந்த அந்த காசுமீரத்து மக்களையோ அல்லது அந்த மன்னரையோ நேரு விட்டுக்கொடுப்பதாக இல்லை. அதுவும் நமது எதிரி நாடாக்கு விட்டுக்கொடுத்து தங்களது எல்லையை குறைத்துகொள்ள தயாராக இல்லதவர் காசுமீரத்தை காக்கும் விதமாக இந்திய இராணுவத்தை அந்த நாட்டுக்குள் அனுப்பினார். சிங்கள இராணுவத்தை விரட்டி வன்னியையும் அதன் மக்களையும் பாதுக்காக்கப் பட்டிருக்கவேண்டியது போல் அவர் காசுமீரத்து மக்களை காக்கும் விதமாக இந்தியாவிம் இராணுவ மற்றும் விமான படையையை கொண்டு அவர்களை காத்து, காசுமீரத்தை மீட்டு இந்தியாவோடு இணைத்துக்கொண்டார்.

மற்றும் ஒருமுறை இந்திரகாந்தி தலைமை அமைச்சராக இருந்த பொழுது வங்காளதில் எழுந்த உள் நாட்டு குழப்பத்தால் அந்த நாட்டின் அகதிகள் பெருமளவினான் தொகையில் வந்து தங்கியுள்ள அந்த நிலையில். உலகெங்கும் சுற்றுப்பயணம் கொண்ட அவர், மீண்டும் ஒரு முறை அருகில் உள்ள நமது எதிரி நாட்டின் எல்லைக்குள் சென்று அவர்களது நாட்டின் ஒரு பகுதிகளாக இருந்த வங்காளத்தை மீட்டது.

வங்காளத்தில் அப்போது கிட்டத்தட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் படுகொலைகள் செய்யப்பட்டும் இருந்தார்கள். அதாவது ஈழத்து உறவிகளை சிங்களம் நடுத்துவதை போல. இந்த ஒரு காரணத்தை மட்டுமே உலகுக்கு சொல்லி இந்திரா இந்திய இராணுவத்தையும் விமான படையையும் அந்த நாட்டின் இறையாண்மைக்கு (ஆட்சிக்கு) எதிராக செயல்பட வைத்து வங்காளத்தை தனி நாடாக பிரித்து சுதந்திர நாடாக ஆக்கியது.

மீண்டும் ஒரு முறை சிங்களத்தில் அமெரிக்க கடற்படை தளமமைக்க முற்படும் போது. இந்திரா அவர்கள் மீண்டும் ஒரு முறை அண்டை நாடான இலங்கையிடம், அந்த மாதிரியான வேலைகள் எல்லாம் நடந்தால் பிறகு வேறு ஒரு இந்தியாவை நீங்கள் காண நேரிடும் என்று எச்சரித்தார். அப்போதைக்கு அந்த பிரச்சனை அப்போது அமுங்கிப்போனது.

அப்போது சிங்களத்தின் வன்முறையும் ஒரு அளவுக்குள் நின்றது. ஆனால் இன்றோ ஒரு வரமுறையோ இல்லாமல் தரிகெட்டு ஓடுகிறது. ஓனாய்களை நாட்டுக்குள் விட்டால் என்னவெல்லாம் செய்யுமோ அவைகள் அனைத்தையும் செய்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது இந்த சிங்களம்.

இந்த யுகத்தின் நகைச்சுவை என்றால் இரண்டு மட்டுமே என்றைக்கும் வரலாற்றில் நிற்கும் அது "என்னை நல்லவன்ன்னு சொல்லிட்டாங்க". அடுத்து கடந்த சுதந்திர தின விழாவில் இராசபட்டே கூறிய " நாட்டைவிட்டு சென்ற எல்லா தமிழர்களும் திரும்பி வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து வாழுவோம்" என்று சொன்னது.

இதை எல்லாவற்றையும் மிஞ்சும் விதமான ஒரு நகைசுவையை சொன்னாரே பிரணாப் பாருங்கள் "இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் நமது முடிவுகளை திணிக்க முடியாது என்று".

எப்படி இருந்த கட்சி இன்றைக்கு இப்படி ஆயிடுச்சி பார்த்தீர்களா.

இதிலே இந்தியாவை வல்லரசாக ஆக்கப்போவதாக சபதம் வேறு. அண்டை நாட்டாறின் கவலைகளில் தனக்கும் பங்கு உண்டு என்று சொன்ன நிலை போய். இன்றைக்கு எனக்கு எதுக்குடா வம்பு என்று நிற்கும் நிலைக்கு காரணம் என்ன. இரசீவை போல், இந்திராவை போல், நேருவை போல் ஒரு நல்ல தலைமை இல்லாமை என்று தெளிவாகக் தெரிகின்றது.

வேலூரில் தாயும் மகளுமாம சிறையில் நளினியை சந்தித்ததை தியாக உள்ளங்களாக ஊடகத்துறைகளும் பதிவர்களும் பதிவு செய்தார்கள். ஆனால் அந்த சந்திப்பில், யாரது ஆணையின் பெயரில் இது எல்லாம் நடந்தது என்று கண்டறிந்து சரியானதொரு தாக்குதல்களை தொடுக்கத்தான் என்று எங்களுக்கு அன்றைக்கு தெரியாமல் போனதே.

இல்லை என்றால் எல்லோரும் கவனமாய் இருந்து இருப்போமே, இவ்வளவு பெரிய இழப்புகளை எல்லாம் சந்திருக்க மாட்டோமே. வெள்ளை உள்ளமாக கண்ட உங்களின் மனதில் இவ்வளவு கறுப்பு எண்ணங்களும் திட்டங்களும் இருக்கும் என்று எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லையே. தமிழர்களின் பலவீனமே இது தான் போலும்...........................

3 comments:

')) said...

மீ த பர்ஸ்ட்

நக்கலுக்கு குறைவில்லை போங்க...
அரும.. அரும...

')) said...

வாங்க இரங்கன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்