காசுமீரம் விடுதலை இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை அப்போது. தாங்கள் எப்போதும் தனி நாடாகத்தான் இருப்போம் என்று சொல்லிக்கொண்டு தனியாகவே இருந்த நாடு தான் காசுமீரம்.
பிறகு இந்தியாவை எப்படி எல்லாம் பழிவாங்கலாம் என்று சமயம் பார்த்துக்கொண்டு இருந்த பாக்கிட்த்தானத்திற்கு அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. அது ஐந்து நதிகளின் தலையான காசுமீரத்தை கையகப்படுத்தி விட்டால், அவர்களது பஞ்சாப்பகுதிகளில் விளைச்சளை தீவிரப்படுத்துவதோடு இந்தியாவிற்கு தீராத ஒரு தலைவலியை அவர்களது தலை பகுதியில் இருந்து கொடுக்கலாம் என்ற குறுக்கு புத்தியும் ஒன்று சேர. காசுமீரத்தில் மெல்ல தனது கைவேலைகளை காட்டதொடங்கியது.
மெல்ல துவங்கிய அந்த கைவேலைகள் பிறகு கைக்குள் அடங்காமல் காசுமீரத்து மன்னர் இந்தியாவின் தலைமை அமைச்சரை உதவிக்கு அழைக்கிறார். அய்யயோ அடிக்குறாங்கோ கொல்லுராங்கோ காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ என்று கதறி அழுத்து உதவியை கேட்க்கிறார். எப்படி ஈழத்து உறவிகள் எப்படி தங்களை வந்து காக்குமாறு உதவிக்கரம் கேட்டார்களோ அப்படி கேட்டார் அந்த காசுமீரத்து மன்னர்.
அருகில் இருக்கும் ஒரு குட்டி நாடு என்றாலும் தனக்கு என்று ஒரு அரசை கொண்ட நாடு, அதாவது இறையாண்மை கொண்ட நாடு(இறையாண்மை என்றால் ஆட்சி என்று பொருள், இதை ஆட்சி என்றே எழுதலாம் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.). அந்த நாட்டில் நடக்கும் ஒரு உள் நாட்டு குழப்பம் கடைசியில் நாடு பிடிக்கும் செயலில் வந்து நிற்கிறது. அதாவது வன்னியை சிங்களம் இராணுவ முற்றுகை கொண்டுள்ளதை போல்.
ஆபத்து என்று வந்த அந்த காசுமீரத்து மக்களையோ அல்லது அந்த மன்னரையோ நேரு விட்டுக்கொடுப்பதாக இல்லை. அதுவும் நமது எதிரி நாடாக்கு விட்டுக்கொடுத்து தங்களது எல்லையை குறைத்துகொள்ள தயாராக இல்லதவர் காசுமீரத்தை காக்கும் விதமாக இந்திய இராணுவத்தை அந்த நாட்டுக்குள் அனுப்பினார். சிங்கள இராணுவத்தை விரட்டி வன்னியையும் அதன் மக்களையும் பாதுக்காக்கப் பட்டிருக்கவேண்டியது போல் அவர் காசுமீரத்து மக்களை காக்கும் விதமாக இந்தியாவிம் இராணுவ மற்றும் விமான படையையை கொண்டு அவர்களை காத்து, காசுமீரத்தை மீட்டு இந்தியாவோடு இணைத்துக்கொண்டார்.
மற்றும் ஒருமுறை இந்திரகாந்தி தலைமை அமைச்சராக இருந்த பொழுது வங்காளதில் எழுந்த உள் நாட்டு குழப்பத்தால் அந்த நாட்டின் அகதிகள் பெருமளவினான் தொகையில் வந்து தங்கியுள்ள அந்த நிலையில். உலகெங்கும் சுற்றுப்பயணம் கொண்ட அவர், மீண்டும் ஒரு முறை அருகில் உள்ள நமது எதிரி நாட்டின் எல்லைக்குள் சென்று அவர்களது நாட்டின் ஒரு பகுதிகளாக இருந்த வங்காளத்தை மீட்டது.
வங்காளத்தில் அப்போது கிட்டத்தட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் படுகொலைகள் செய்யப்பட்டும் இருந்தார்கள். அதாவது ஈழத்து உறவிகளை சிங்களம் நடுத்துவதை போல. இந்த ஒரு காரணத்தை மட்டுமே உலகுக்கு சொல்லி இந்திரா இந்திய இராணுவத்தையும் விமான படையையும் அந்த நாட்டின் இறையாண்மைக்கு (ஆட்சிக்கு) எதிராக செயல்பட வைத்து வங்காளத்தை தனி நாடாக பிரித்து சுதந்திர நாடாக ஆக்கியது.
மீண்டும் ஒரு முறை சிங்களத்தில் அமெரிக்க கடற்படை தளமமைக்க முற்படும் போது. இந்திரா அவர்கள் மீண்டும் ஒரு முறை அண்டை நாடான இலங்கையிடம், அந்த மாதிரியான வேலைகள் எல்லாம் நடந்தால் பிறகு வேறு ஒரு இந்தியாவை நீங்கள் காண நேரிடும் என்று எச்சரித்தார். அப்போதைக்கு அந்த பிரச்சனை அப்போது அமுங்கிப்போனது.
அப்போது சிங்களத்தின் வன்முறையும் ஒரு அளவுக்குள் நின்றது. ஆனால் இன்றோ ஒரு வரமுறையோ இல்லாமல் தரிகெட்டு ஓடுகிறது. ஓனாய்களை நாட்டுக்குள் விட்டால் என்னவெல்லாம் செய்யுமோ அவைகள் அனைத்தையும் செய்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது இந்த சிங்களம்.
இந்த யுகத்தின் நகைச்சுவை என்றால் இரண்டு மட்டுமே என்றைக்கும் வரலாற்றில் நிற்கும் அது "என்னை நல்லவன்ன்னு சொல்லிட்டாங்க". அடுத்து கடந்த சுதந்திர தின விழாவில் இராசபட்டே கூறிய " நாட்டைவிட்டு சென்ற எல்லா தமிழர்களும் திரும்பி வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து வாழுவோம்" என்று சொன்னது.
இதை எல்லாவற்றையும் மிஞ்சும் விதமான ஒரு நகைசுவையை சொன்னாரே பிரணாப் பாருங்கள் "இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் நமது முடிவுகளை திணிக்க முடியாது என்று".
எப்படி இருந்த கட்சி இன்றைக்கு இப்படி ஆயிடுச்சி பார்த்தீர்களா.
இதிலே இந்தியாவை வல்லரசாக ஆக்கப்போவதாக சபதம் வேறு. அண்டை நாட்டாறின் கவலைகளில் தனக்கும் பங்கு உண்டு என்று சொன்ன நிலை போய். இன்றைக்கு எனக்கு எதுக்குடா வம்பு என்று நிற்கும் நிலைக்கு காரணம் என்ன. இரசீவை போல், இந்திராவை போல், நேருவை போல் ஒரு நல்ல தலைமை இல்லாமை என்று தெளிவாகக் தெரிகின்றது.
வேலூரில் தாயும் மகளுமாம சிறையில் நளினியை சந்தித்ததை தியாக உள்ளங்களாக ஊடகத்துறைகளும் பதிவர்களும் பதிவு செய்தார்கள். ஆனால் அந்த சந்திப்பில், யாரது ஆணையின் பெயரில் இது எல்லாம் நடந்தது என்று கண்டறிந்து சரியானதொரு தாக்குதல்களை தொடுக்கத்தான் என்று எங்களுக்கு அன்றைக்கு தெரியாமல் போனதே.
இல்லை என்றால் எல்லோரும் கவனமாய் இருந்து இருப்போமே, இவ்வளவு பெரிய இழப்புகளை எல்லாம் சந்திருக்க மாட்டோமே. வெள்ளை உள்ளமாக கண்ட உங்களின் மனதில் இவ்வளவு கறுப்பு எண்ணங்களும் திட்டங்களும் இருக்கும் என்று எங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லையே. தமிழர்களின் பலவீனமே இது தான் போலும்...........................
Thursday, February 19, 2009
Saturday, February 7, 2009
பயங்கரவாதமும் விடுதலை புலிகளும்
விடுதலை புலிகள், இன்றைக்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டு இருக்கும் சொற்கள் என்று சொல்லலாம்.
புலிகளது பெயரை கேட்டாலே உடனே பயங்கரவாதம் என்று எவரும் சொல்லத்தயங்குவது இல்லை தான். அதுவும் பெயருக்கு சொல்வது இல்லை, மாற்றாக சிவப்பு நிறத்தில் இரத்த கறைபடிந்த சோகம் நிறைந்த பல படங்களை காட்டியும். தனது எழுத்துக்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக கதையுடன் கூடிய ஆவணமாக அவர்கள் வெளியிடத்தவறியது இல்லை.
அப்படி சிவப்பு நிறம் கொண்ட படங்களை சந்தோசிவன்(தீவிரவாதி) காட்டிய போதும் சரி, சோசுவா(ஆணிவேர்) காட்டிய போதும் சரி. மக்களின் மனதில் நிலைத்து நிற்பது எல்லாம் அந்த சிவப்பு நிறம் ஒன்று தான்.
ஆனால் காட்டுவது என்னவோ மக்களை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் இவர்கள். முதலாவது காட்டிய இரத்த சிகப்பு என்னவோ தமிழரது என்று இருந்தாலும். விரயமாகவும் தேவையே இல்லாமல் அந்த இரத்தம் சிந்தப்பட்டதாக காட்டினார் சந்தோசுசிவன். தேவையே இல்லாமல் தமிழன் இரத்தம் சிந்துவதாக காட்டுவார் சேசுவா சான் ஆணிவேரில்.
இவர்கள் இயக்குனர்கள் தான் இப்படி என்றால், செய்தித்தாள்கள் அதற்கும் மேல் ஒரு படிமேல் சென்று. நாளாந்தமும் சிவப்பு நிறப்படங்களை வெளியிட தவறுவது இல்லை.
இந்த படங்களையும் இந்த செய்திகளையும் காட்டி காட்டி, மக்களின் மனதில் காய்ப்புகளையே உருவாக்கிவிட்டனர் இந்த இரண்டு துறையினரும். ஒரு முறை ஒரு காய்ப்பு வந்தால் அந்த இடத்தில் இன்னும் இரு முள் ஏறினால் கூட வலிக்காது. அந்த அளவிற்கு காய்ப்புகளை ஏற்படுதினார்கள் என்றால் அது மிகையாகாது.
பொது மக்களின் மனதில் எப்பவும் ஒரு குழப்பம் இருக்கும். அது எந்த இரத்த படங்களுக்கு அதிக அனுதாபம் கொள்வது என்று. அவர்களுக்கு தெரிந்த ஒரே நீதி இரத்தம் சிந்த கூடாது என்றது மட்டும் தான். அதுவும் சரியான கருத்துதான். எதற்காக அந்த மனிதர்கள் இறக்கவேண்டும். அதும் இப்படி ஒரு கோரச்சாவு.
இப்படி எத்தணையோ நிகழ்வுகளை காட்டாக காட்டி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி எழுதும் கால் காலமும் பக்கங்களும் கூட போதாது எழுத.......
பொதுவானதொரு நீதியை சொல்பவர்கள் எல்லாம், அந்த சாவின் கொடூரத்தை தவிர்தால் என்ன?. எந்த ஒரு மனம் உள்ள மனிதானாக இருந்தாலும் சொல்வது இதுவாத்தான் இருக்கும்.
அவர்கள் சொல்வது சரியே என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் நிலைதான் இன்று எங்கும். எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த இனமாக இருந்தாலும் சரி.
என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு அவர்களது உயிரை குடிப்பதற்கு. யார் கொடுத்தார் அந்த அதிகாரத்தை அவர்களுக்கு என்று மனம் கொதிக்காமல் இல்லை தான்.
தனக்கு அந்த சித்தாந்தம் பிடிக்கவில்லை, அதான் அதை சொல்பவனை கொல். தனக்கு அந்த மனிதன் நடத்தையில் நம்பிக்கை இல்லை கொல் அவனை. இப்படி தான் எத்தணை எத்தணை கொலைகள். எண்ணிக்கையில் கொண்டால் நம்மாள் எண்ணி மாளாது என்று தான் சொல்லவேண்டும்.
புலிகளை பொறுத்தவரையில் அரசு செய்வது அரச பயங்கரவாதம்(இதில் கொலை கொள்ளையும் அடக்கம்). அரசை பொறுத்தவரையில் புலிகள் செய்வது பயங்கரவாதம். ஆக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பயங்கரவாதம் புரிவதில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டியுள்ளார்கள் என்று தான் பொருள்படுக்கிறது.
எதிரிக்கு என்று எந்த ஒரு கருணையும் யாரும் கொண்டது இல்லை ஏசுவை உட்பட. இது வராலாறு சொல்லும் உண்மை.
உலகுக்கே ஒழுக்கம் கற்றுக்கொடுத்த ரோமாபுரியாக இருந்தாலும் சரி அல்லது தமிழகம் ஆனாலும் சரி. இன்று வரை மனிதர்கள் கடைபிடித்து வரும் நிலை அது தான்.
ஒவ்வொரு முறையும் இந்த இரத்தம் படிந்த கதையையோ கற்பணைகளையோ கேட்க்கவோ பார்க்கவோ நடந்தால், மனதில் நினைத்துக்கொள்வது எல்லாம். இந்த நிலைக்கு எப்போது தான் தீர்வுகள் வருமோ... என்றைக்கு தான் இவைகள் எல்லாம் முடிவுக்கு வருமோ என்ற எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்பே.
பிரமதேசாவிற்கு பிறகு புலிகளினால் இதுவரையில் யாரும் படுகொலை செய்யப்பட்டதாக அறியப்படவில்லை. அதுவும் பிரமதேசா என்ன என்ன அட்டூளியங்கள் செய்தார் என்று தனியாக ஒரு விளக்கம் ஒன்றும் கொடுக்கவேண்டியது இல்லை. அவரது கோடூரங்களின் முடிவு அவருக்கு பொருந்தும் என்று தான் கொள்ளவேண்டும்.
அவருக்கு பிறகு தனது தரப்பில் எண்ணற்ற சேதங்கள் தோன்றிய பின்பும், இது வரையில் படுகொலைகளை நாடாமல் இருப்பதில் இருந்தே புலிகளின் மேல் மதிப்பு வருவதில் ஆச்சர்யம் இல்லை தான்.
மாற்றாக சிங்களத்தின் இரணுவம், அப்பாவி மக்களை கொன்று குவிப்பதிலேயே முனைப்பாக காட்டி வந்துள்ளார்கள் என்றதிற்கு காட்டுகள் ஏராளம் உண்டு.
மக்களே இங்கே சிந்திக்க வேண்டியது ஒரே ஒரு சின்ன செய்திதான். சிந்தித்து பருங்கள். ஒருவேளை இந்த மகிந்தவோ, அல்லது துரோகி கருணாவோ, அல்லது பிள்ளையானோ அல்லது சரத்தோ அல்லது ....... இப்படி பட்டவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால். முத்துகுமாரையோ அல்லது மற்ற மக்களையோ இது வரையி பலி கொடுத்திருக்க மாட்டோம்.
தன்மோல் படிந்துள்ள பயங்கரவாதி பட்டத்தை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் புலிகள். அரசியல் நெருக்கடி. அதே சமயத்தில் பயந்தாங்கோலிகள் இந்த இராணுவம் என்ற பழி சொல் அவர்களது மேல். அவரவர் தனது பங்கிற்கு தங்களது கொலைகளை நீதி படுத்தினாலும், கொலைகள் கொலைகளே.
புலிகள் யாரை நம்பவைபதற்கு இந்த பாடு படவேண்டும். இதனால் என்ன இலாபம் அவர்களுக்கு என்று பார்ப்பதைவிட. அவர்களுக்கு என்ன நட்டம் என்று பார்த்தால் தன் ஏராளம் என்று தெரியவரும்.
தங்களின் மேல் இப்படி ஒரு நடவடிக்கை தான் மேற்கொள்வார் மகிந்தர் என்று கணித்து செயல்பட்டு இருந்தால் இன்றக்கு மகிந்தர் தமிழில் பேசி இருக்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டு இருக்காது தான்.
கருணாவும், பிள்ளையானும் தன்னோடு எதிரியாக ஆனதனால் அவர்கள் இல்லாது செய்து இருந்தால் இப்போது இந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள் புலிகள்.
புலிகளின் கைகளை கட்டி போட்டது யார், என்ன காரணம் விரைவில் தெரியவரும் என்று நம்புவோகமாக. தனி ஈழம் வெல்லட்டும், தமிழர் தாயகம் மலரட்டும். வாழ்த்துகள்.........

Thursday, February 5, 2009
முத்துகுமாரை கொச்சைபடுத்தி வந்து காணாமல் போன தினமணியின் தலையங்கம்.
பிப்ரவரி 3ஆம் தேதி தினமணி இதழில் "இனியும் தொடரக்கூடாது" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில் முத்துக்குமாரின் மறைவை கொச்சைப்படுத்தும் விதமாக எப்படி மக்கள் போராட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று எழுதி இருந்தார்கள். கட்டுரையாளர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாமல் வெளியிட்டிருந்தார்கள்.
கட்டுரையை முதலில் படிக்கும் போது ஏதோ ஒரு மக்கள் நலவிரும்பியின் நேர்மையான கட்டுரையாக தெரிந்தாலும். கட்டுரையில் அவர் குறிப்பிட்டு இருந்த வாசகங்கள் அவர் யாராக இருக்கும் என்று தெளிவாக விளக்கி இருந்தது.
கட்டுரையாளரின் அறிவுறையின் சாரம் இது தான், தற்கொலை எல்லாம் ஒரு தியாகம் கிடையாது. அப்படி செய்வது திராவிட கட்சிகளின் கண்டுபிடிப்பு என்றும். இந்த செய்கையினால் எந்த பலனும் இல்லை என்றும். அப்படி தற்கொலை செய்துகொண்டது கோழைத்தனம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி பட்ட தற்கொலைகளை தியாகிகள் என்று திராவிட கட்சி கொண்டாடி ஊக்குவித்து வருவதாகவும். மேலும் அப்படி இறக்கும் மனிதர்களுக்கு ஏராளமான பொருளுதவிகளை இந்த திராவிட கட்சிகள் வழங்கிறது என்றும் சாடி இருந்தார்.
அட என்ன ஒரு தெளிவான சிந்தனை என்று நினைக்கும் இடத்தில் இப்படி எழுதுகிறார் கட்டுரையாளர். தற்கொலை செய்த்து கொள்வது எல்லாம் போராட்டம் ஆகாது, மாறாக துப்பாக்கி குண்டுகளுக்கு தன்னை ஆளாக்குவதும், தடியடியில் தன்னை மாய்த்துகொள்வதும் தான் போராட்டமும் தியாகமும் ஆகும் என்று சொன்னார் பார்க்க வேண்டுமே.
என்ன ஒரு நேச சிந்தனை மனிதருக்கு. அந்த கட்டுரைக்கு இட்ட பின்னூட்டத்தில் இப்படி கேட்டு இருந்தேன் "தடியடியிலும், துப்பாக்கி குண்டுக்கும் தன்னை ஆளாக்குவது மட்டும் தற்கொலை ஆகாதா. எனக்கு விளங்கவில்லை விளக்குங்கள்" என்று கேட்டு இருந்தேன்.
இன்றைக்கு அந்த கட்டுரையே தினமணியில் காணவில்லை, நீக்கிவிட்டார்கள். சர்ச்சைக்கு உட்பட்ட கட்டுரை மட்டும் அல்ல, ஒரு அரைகுறை கட்டுரையாகவும் அது இருந்தது. இப்படி பட்ட கட்டுரையை மேலும் விட்டு வைத்து விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டாம் என்று சமூக அக்கரையுடன் நீக்கிய தினமணியை பாராட்டுவோம்.

Subscribe to:
Posts (Atom)