இந்த செய்திக்கு விளக்கம் தேவை இல்லை தான், இருந்தாலும். இந்த செய்திக்கு கலைஞரின் படத்தை பாருங்கள். அகமகிழ்ந்தும் ஆணவமாக இந்த நிகழ்வுக்காக விட்டால் வெடி வெடித்து கொண்டாடினார் என்றும் கூட எழுதுவார்கள் போலும்.
ஒரு பக்கம் கலைஞர் தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்துகொள்கிறார், அவர்களுக்கு துணை போகிறார் என்றும் எப்பொழுதும் எழுதி தீர்க்கும் இதழ் தான் இந்த தினமலர். அவர்களது இதழில் இவரை பற்றி ஒரு நல்ல செய்தியா என்று பார்த்தால், படத்தை பார்த்ததுமே அந்த செய்தியின் நோக்கம் தெரிந்துவிட்டது. உள்ளே உள்ள செய்தியை படித்து பாருங்கள் இன்னமும் கேவலமாக இருக்கிறது.
காசு இல்லா ஏழைகள் என்றால் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் போலும். ஏழைகள் அழிந்தால் அவர்களுக்கு குரல் கொடுப்பது கூட குற்றமாக சொல்லும் இவர்களும், பணக்கார கூட்டமும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஊதும் ஊதலை பாருங்கள். அங்கே இறந்தவர்கள் தாம் மனிதர்களாம், இந்தி மொழி பேசும் மக்கள் பாதிப்பு அடைந்தால் தான் பாதிப்பாம். தமிழ் பேசும் மக்களின் பாதிப்பு பற்றி பேசினால் திராவிடம் பேசிய தலைவரை வைத்தே இல்லை எல்லாம் அறிக்கையும் சட்டமும் கொண்டுவர வைத்து நமக்கு எல்லாம் பூச்சி காட்டுவார்கள் போலும்.
ஏழைகள் என்றால் ஏன் இந்த காழ்ப்பு இவர்களுக்கு, உங்களில் யாருக்காவது தெரியுமா. தெரிந்தால் சொல்லுங்கள்.
1 comments:
வணிகத் தந்திரமாக கலைஞருக்கு ஜால்ரா!
அதேசமயம் பி ஜே பி யை எதிர்த்தோ, கலைஞர் போன்ற தமிழர்களை ஆதரித்தோ எழுதப்படுகிற வாசகர்கடிதங்களை ஃபில்ட்டர் செய்துவிடுகிறார்கள். ஆனால் அபத்தமாக, இந்துமத ஜால்ரா ஒலித்தாலும் அந்த வாசகர்கடிதங்களை கண்மூடி வெளியிடுகிறார்கள்.
Post a Comment