நீண்ட நாட்களாகவே நடந்துவரும் சர்ச்சை இது. அடிப்படையில் ஒரு பெயர் இராமன், இந்த ஒரு பெயரை வைத்துக்கொண்டு ஒரு கட்சி நாட்டின் ஆட்சியையே பிடித்தது என்றால் பாருங்கள். அந்த கதையில் வரும் இந்த பாத்திரத்தை மையப்படுத்தி இன்னமு எத்தனை மூட பழக்கங்கள் நாட்டில்.
இந்த குழப்பத்தின் உச்சம், உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் செய்தி. பலமுறை தகவல் அனுப்பியும் பதில் சொல்லாமைக்கு கைது நடவடிக்கை எடுப்போம் என்று.
இந்த குழப்பத்தின் உச்சம், உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் செய்தி. பலமுறை தகவல் அனுப்பியும் பதில் சொல்லாமைக்கு கைது நடவடிக்கை எடுப்போம் என்று.
வடக்கில் தூங்கி கொண்டு இருந்த அரசியல் தலைவர்கள் எல்லம் இப்பொழுது இராசுவரத்தையே தங்களது தொழில் முறை தலை நகரமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மாதம் 2 முறையேனும் யாரேனும் ஒருவர் வருவது. அறிக்கை விடுவதும் அந்த அறிக்கையின் அப்பத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அந்த பித்தத்தின் உலரல்களாக இன்றைக்கு மத அரசியல்கள் நடந்தேறி கொண்டு இருக்கிறது.
இராமன் பிறந்த இடம் என்று அந்த இடத்திற்கு பூட்டு போட்டு தசாப்தங்கள் தாண்டிய நிலையில், இப்போது இராமன் பாலம் என்று சொல்லி ஒரு பெரிய பூட்டோடு அந்த அரசியல் வாதிகள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதிலே இதை தேசிய சின்னமாக அறிவிக்ககோரும் நடவடிக்கையிலும் இந்த அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்துக்கு சொல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கோருகிறது. அதற்கு ஆளும் மத்திய அரசோ ஒரு குழுவை அமைத்து விசாரிக்க சொல்கிறது.
இதில் இன்னம் ஒரு வேடிக்கை என்ன என்றால், தமிழ் புத்தாண்டை பொங்கலுக்கு மாற்றிய போது எழுந்த வழக்கில் ஒருவர் வாதிடுகிறார், தீபாவளியை மாற்றிக்கொண்டாட சொல்லுமா அரசு என்று. பாவம் அவருக்கு தெரியாது போலும். வடக்கிலும் தெற்கிலும் தீபாவளி கொண்டாடும் நாள் வேண்டும் என்றால் ஒன்றாக இருக்கலாம் ஆனால் காரணங்கள் ஒன்று அல்ல என்று அவருக்கு தெரியாது போலும்.
தமிழகத்தில் சின்ன பிள்ளைகளை கேட்டால் கூட சொல்லும், உலகை பாயாக சுருட்டிய நரகாசூரன், உலகை கடலுக்கு அடியில் கொண்டு மறைத்துவைத்துக்கொண்டான். அதை கடவுள் சென்று அவனை அழித்து உலகை மீட்டுக்கொடுத்தது என்று சொல்வார்கள். அப்படி இறக்கும் நிலையில் அந்த நரகாசூரன் கடவுளிடம் சொன்னானம் இப்படி தான் இறந்ததை விழாவாக கொண்டாடி மக்கள் மகிழட்டும் என்று.
எங்கே இதே கேள்வியை வடக்கே சென்று கேட்டு பாருங்கள் அவர்கள் ஏன் தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்று. அவர்களுக்கு தீபாவளி என்றால் இராமன் காட்டில் இருந்து நாடு திரும்பிய போது மக்கள் அவர்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி இருளை நீக்கி, இருள் நீங்கிய நாளாக கொண்டாடுவார்கள்.
இத்தணை தலைமுறைகள் கடந்தும் தமிழகத்தில் இந்த தீபாவளி இப்படியே கொண்டாடும் காரணம் என்ன. என்ன தான் தெரிந்து இருந்தாலும் மதத்தலைவர்களும் சரி மற்றவர்களும் சரி, இது வரையில் தமிழகத்து தீபாவளிவை அப்படியே விட்டு வைத்திருப்பதின் காரணம் என்ன. உச்ச நீதிமன்றம் ஆதாரத்துடன் எந்த கதை உண்மை என்று ஆராய்ந்து சொல்லட்டும் பிறகு எந்த நாள் தமிழ் புத்தாணடை கொண்டாலாம் என்று ஆராய்வோம்.
சரி சரி, இதில் இராமாயணம் இந்தியாவின் கதையா என்ற கேள்வி எங்கே வந்து என்று நீங்கள் கேட்க்கும் கேள்வி காதில் விழாமல் இல்லை. அந்த செய்திக்கு வருவோம்.
கொஞ்ச நாளைக்கு முன் 10,000 கிமு என்று ஒரு ஆங்கிலப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த படம், 10,000 கிமுக்கு முன் நடந்த ஒரு கதையை அந்த கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் ஒரு முயற்சியாக படமாக்கி இருந்தார்கள்.
கதை நடக்கும் களமாக அவர்கள் காட்டும் இடங்கள் இரு பனிமலையில் துவங்கும் படம் ஒரு பாலைவனத்தில் ஒரு பிரமீடு கட்டும் இடத்தில் சென்று முடிகின்றது. இடையில் ஒரு சமவெளிகளையும் காட்டுகிறார்கள்.
இதற்கு இராமாயணத்திற்கும் என்ன சம்பந்தம், படத்தின் கதையை சொன்னால் அது விளங்கும்.
இதற்கு இராமாயணத்திற்கும் என்ன சம்பந்தம், படத்தின் கதையை சொன்னால் அது விளங்கும்.
படத்தின் துவக்காட்சியில் ஒரு பனிமலையில் ஒரு சிறு குழு ஒன்று மேமோத் வேட்டையாட போகிறது. அப்போது அந்த குழுவின் தலைவன், (இளைஞாகத்தான் இருக்கிறார்) சொல்கிறார் யார் மேமோத்தை அதன் இதயத்தை குத்தி வீழ்த்துகிறார்களோ அவர்கள் இந்த வெள்ளை ஈட்டியை உரிமை கோரலாம். அதே சமயம் அந்த குழுவில் இருக்கும் அழகு யுவதியையும் அடையலாம் என்று தெரிவிக்கிறார்.
இந்த மேமோத்தை தான் இராமாயணத்தில் யாராலும் அசைக்ககூட முடியாத வில் என்று சொன்னார்கள் போலும்.
மெமோத்துகளை கொன்று உண்டு வாழ்க்கை நடத்தும் அந்த குழுவில் வெற்றிகரமாக வேட்டையாட தெரிபவனை தலைவனாக தேர்ந்தெடுப்பது இயற்கையே. அதே போல் வில்லெடுத்து வேட்டையாடும் கூட்டதில் வில்வீரனை தேர்ந்தெடுப்பதும் இயற்கையே, ஆனால் யாராலும் அசைக்கக்கூடாத வில் என்று சொல்ல தேவை என்ன வந்தது இந்த மெமோத்தோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும்.
ஒரு வழியாக அந்த கூட்டு வேட்டையில் கதையின் நாயகன் மெமோத்தை கொன்று வெள்ளை ஈட்டியையும் அந்த பெண்ணையும் அடைகிறான். அன்று இரவு வெளியில் சென்று இருக்கும் வேளையில் அங்கே வந்த ஒரு கொள்ளையர் கூட்டம் அந்த பெண்ணையும் இன்னமும் சிலரையும் பிடித்து சென்று விடுகிறது. சீதையை இராவணன் கவர்ந்து சென்றது போல.
பிறகு இதை அறிந்த நாயகனும் அந்த குழுவின் தலைவனும் அந்த மக்களை மீட்கும் வண்ணமாக பயனம் புறப்படுகிறார்கள். இராமனும் இலக்குவனும் போல.
அந்த பெண் தான் போகும் பாதை தன்னை தேடி வருபவர்களுக்கு தெரிய வேண்டும் என்று தனது ஆபரணங்களை அங்கங்கே விட்டு செல்வாள் இராமயணத்தில் விட்டு செல்வதை போல.
இப்படி செல்லும் இந்த இருவரும் ஒரு இடத்தில் நாயகியை பார்த்து காப்பாற்ற நினைக்க அந்த சமவெளியில் அவர்கள் இருவரையும் கொல்ல முனைகிறது அந்த கூட்டம். அங்கே இருக்கும் இராட்ச்சச நெருப்புக்கோழிகள் அவர்களை வேட்டையாட முனைகிறது. இராமாயணத்தில் பெரிய கழுகுகளுடன் இராவணன் போராடி சடாயு பரவையை வெட்டியது போல. சண்டையிடும் பாத்திரம் தான் வேறு ஆனால் சம்பவம் ஒன்று தான்.
பிறகு இருவரும் ஒரு கிராமத்தில் நுழைகிறார்கள். அங்கே வரும் அந்த இராட்ச்சச புலியை அங்கிறுந்து நாயகன் விரட்ட. அந்த கிராமவாசிகளும் அந்த கொள்ளை கூட்டத்தில் கொண்டு சென்ற தனது பிள்ளைகளை காப்பாற்ற செல்கிறார்கள், இராமாயணத்தில் குகன் மற்றும் மற்றவர்கள் நால்வரோடு ஐவரானோம் அறுவரானோம் என்று சொல்வதை போல.
இப்படி படிப்படியாக ஒரு பெரிய படை தயாராகி அவர்கள் சென்று அந்த கொள்ளை கூட்டத்தை பிடிப்பதற்குள் அவகள் ஒரு படகை பிடித்து மறைந்து விடுகிறார்கள். பிறகு அந்த படகு சென்றபாதை தெரியாமல் பல நாட்கள் அந்த பாலைவனத்தில் திக்கு தெரியாமல் அலைகிறார்கள். பிறகு திரும்பிபோகவும் கூட வழி இலையே என்று நினைக்கும் போது வானத்து வின் மீன்களின் துணை கொண்டு சரியாக எதிரிகளின் இருப்பிடம் கண்டு பிடுத்து சென்று தொலைவிலே இருக்கிறார்கள்.
பிறகு தாக்குதலுக்கு திட்டமிடும் வண்ணமாக அடிமைகளை வத்திருக்கும் இடத்திற்கு அந்த தலைவனும் நாயகனும் செல்கிறார்கள். அங்கே அவர்களது சொந்தங்களை கண்டு பேசுகிறார்கள். பிறகு ஆயுதங்களை எங்கே புதைத்து வைப்பது பிறகு எப்படி எடுப்பது என்று திட்டம்மிடுகையில் அங்கே எதிராளியின் முக்கிய பணியாள் ஒருவன் குருடன் அங்கே இருக்கிறார்.
அந்த குருடர், அந்த எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்றும். மற்றும் வானவியலின் நட்சத்திர தோற்றம் இப்படி வரும் போது அவர்களுக்கு அழிவு வரும் என்று அவர்களுக்கு தெரியும் என்றும் சொல்கிறான், இராமாயணத்தில் வீடனன் சொல்வதை போல.
அடுத்த நாள் பகலில், அடிமைகளோடு அடிமைகளாக இவர்களும் கலக்கிறார்கள். அப்படி கலந்த நாயகனும், மெமோத்தின் அடிப்படி குணமும், அதை மிரளவைக்கும் உத்தியும் தெரிந்தவன். அப்படி அருகாமையில் இருக்கும் மெமோத்தை பத்தி விடுகிறார். ஒன்று ஓட ஆரம்பித்ததும் அனைத்தும் பின் தொடர்ந்து செல்கிறது. இந்த கலவரத்தில் 30க்கு இருவர் மூவர் என்று இருக்கும் கண்கானிப்பாளர்களை வென்று தமது மக்களை மீட்கிறார்கள் நாயகன்.
அப்படி வெல்லும் சமயத்தில் அந்த பெண்ணை இரு கைகளையும் இரண்டு குதிரைகளில் கட்டி வைத்து இதற்கு மேல் வந்தால் அவளை கொன்றுவிடுவோம் என்று மிரட்ட அடிபணிகிறார் நாயகன். எதிரியின் அத்தணை ஆணைக்கும் நாயகிக்காக விட்டுக்கொடுக்கிறார். படி படியாக அந்த பேச்சு எதுவுமே இல்லை என்ற நிலையில் வந்து நிற்கும் இடத்தில் எவரும் யோசிக்கா வண்ணம் அந்த வெள்ளை ஈட்டியை ஏவுகிறார் நாயகன் அந்த எதிரியின் தலைவனை நோக்கி. அந்த மாபெரும் உருவம் சாய்கிறது.
அந்த நேரத்தில் இந்த பெண்ணின் மேல் நோட்டம் கொண்ட எதிரி படையின் தலைவன் ஒருவன் அவளை கவர்ந்து செல்ல முற்பட, அந்த பெண் அவனை ஒரு அம்பால் குத்திவிட்டு தப்பிக்கிறாள். அப்படி அவள் வந்து நாயகனை அடையும் போது அவளது உயிரை குடிக்கிறான் அந்த படையாள்.
அந்த நாயகனின் பெரிய அன்னை தனது உயிரை தந்து இந்த யுவதியை மீட்டு தந்ததும், அவர்களை அழைத்துக்கொண்டு இவர்கள் வீடு திரும்புகிறார்கள். வழியில் ஒவ்வொருவரையும் விட்டு முறைபடி விடை பெறுகிரார்கள், இராமாயணத்தில் நடப்பதை போல.
இந்த கதைக்கும் இராமாயணத்திற்கும் ஒருக்கும் ஒரே வித்தியாசம், இந்த கதையில் எல்லாமே இயல்பாக இருப்பதும், இராமாயணத்தில் எதையுமே நம்பும் படியாக இல்லாமம் பெரும் புணைக்கதையாக இருப்பதும் தான். ஆகவே இராமாயணம் அவர்களது கதையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அது கருப்பாக வந்தி எடுத்தான் என்று சொன்ன சொல்லை கடைசியாக சொல்பவர் காக்கா காக்காவாக வாந்தி எடுத்தான் என்று திரிந்து வருவதை போல் இப்படி ஏகப்பட்ட எட்டு கட்டுகள் புகட்டி இங்கே சொல்லு இப்போது இராமன் பாலத்தை காக்க வந்துவிட்டார்கள் போலும்.
படத்தில் வரும் நாயகனை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு வித மஞ்சள் நிறத்தில் தோன்றும் படியாகவும், மற்றவர்கள் அனைவரும் ஆப்ரிக்க இனத்தவர்களையும் காட்டுகிறார்கள். இதைத்தான் இராமாயணத்தில் இராமனை தேவர்களாகவும், மற்றவர்கள் அனைவரையும் குரங்குகளாகவும் காட்டுகிறார்கள். அந்த எதிரியின் பெரிய உருவத்தை தான் இங்கே அரக்கர்கள் என்றும் அசுரர்கள் என்றும் சொல்கிறார்கள் போலும்.
கடத்தி சென்ற பெண்ணை ஒவ்வொருவனும் அணுபவிக்க நினைக்கும் போது அது எதனாலோ ஒரு காரணத்தால் தடை பட்டுகொண்டே போகிறது என்று அவர்களது கதையிலும் காட்ட தவறவில்லை.
மேலும் அந்த பெண்ணில் துவங்கும் படம் அவளை வீட்டிற்கு அழைத்து வந்ததில் முடிகின்றது.
படம் முழுக்க அந்த இருவரும் தோன்றும் அத்தனை காட்சிகளிலும் தங்களது ஈட்டியுடனே தான் வருவார்கள், இவர்கள் வில்லுடனே வருவதைப்போல். மேலும் கங்கை கரை இமாயலத்தில் இருந்து வரும் ஒரு குளிர்ந்த பிரதேசம், இந்த கதையில் காட்டும் இடத்தை போல.
இப்படி இராமாயணத்து அத்தனை கதையம்சங்களையும் இந்த 10,000 கிமு வில் கானலாம். படத்தை பாருங்கள் பிறகு எனது விமர்சனம் சரியா என்ன்று சொல்லுங்கள்.
இப்படி இராமாயணத்து அத்தனை கதையம்சங்களையும் இந்த 10,000 கிமு வில் கானலாம். படத்தை பாருங்கள் பிறகு எனது விமர்சனம் சரியா என்ன்று சொல்லுங்கள்.
9 comments:
நல்ல ஒப்பீடு. இன்றும் கூட உலக பழங்குடியினர் (காட்டில் வாழ்பவர்களிடம்) ஒரே மாதிரியான ஆயுதங்களே இருக்கின்றன. அதுபோல் தான் கதைகள் எல்லாம் ஒன்றுதான் வட்டாரத்துக்கு ஏற்றவாறு பரிணாமம் ஆடைந்திருக்கிறது. இராமயணம் என்ற பெயரிலேயெ 10 வெவ்வேறு இராமயணக் கதைகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.
மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள் பனிமலர்.
நன்றி கோவி.கண்ணன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முதலில் இதை உச்ச நீதிமன்றத்தில் தீர்மானிக்க சொல்லவேண்டும் பிறகு இதன் தொடர்பால் வரும் அத்துனை வழக்குகளும் அடிப்பட்டு போகும்.
மாறுபட்ட சிந்தனை.
ஆனா ஹாலிவுட்காரங்க ராமாயணத்த உல்டா செஞ்சும் எடுத்திருக்கலாமே?
சில் பேக்டர் தசாவதாரம் ஆனதுபோல்!
நல்ல பதிவு !!!
ஐயா - இப்பத்தான் தசாவதாரம் குறித்த பதிவுக்கு பின்னூட்டம் எழுதீட்டுப்பார்த்தால் 10000 BC இராமாயணம்ன்னு இந்தப்பதிவு! உங்களுக்கு கற்பனா சக்தி அதிகம் என்பதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்?
:)
வாங்க அனானி,
10,000 கிமு இராமாயணத்தை பார்த்து எடுத்து இருந்தால், லார்டு ஆப் தி ரிங்கு படத்தை போல் ஒரே மாயாசாலமா இருந்து இருக்கும் அல்லவா. அப்படி எல்லாம் இல்லாம மிகவும் இயற்கையாகவே எடுத்து இருப்பதால், இராமாயணம் தான் 10,000 கிமுவை பார்த்து அடிச்சதை போல தெரியுது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இராமாயணம் தான் 10,000 கிமுவை பார்த்து அடிச்சதை போல தெரியுது. //
:)))
ஆமா ஓசெ, கம்பர் எல்லாம் 10000 ப்.சிய காப்பி அடிச்சு தான் எழுதி வெச்ருக்கார். என்ன அனியாயம், இத ஒரு கல்வெட்டா எழுதி பக்கத்துல உக்காந்துக்குங்க. :))
நல்ல யோசனையா இருக்குதே அனானி,
ஒரு வேளை சங்கதத்துல எழுதி வச்சா இன்னமும் சிறப்பா கூட இருக்கும் இல்ல.....
FYI, Deepavali is not celebrated on the same day in both north and south India.
You have made a good comparison. Even in Thailand and Cambodia we have a different version of Ramayanam.
When the movie was released, I have read a same kind of discussion in some English blog/discussion forum (I dont remember the forum/blog name). But it was on a different angle. It was about how the writer adopted ramayanam for his script.
Post a Comment