Saturday, June 14, 2008

வியாபாரம் ஒரு முறைபடுத்தபட்ட கொள்ளையோ (கொள்ளையர்களே வெளியேறு இயக்கம் தேவையோ)



இன்றைக்கு அலைபேசியில் இருந்து அன்றாட உணவு வரை அடக்கமுடியாத விலையில் வந்து நிற்கிறது. ஒருகாலத்தில் 2 இலட்சங்கள் இருந்தால் இடம் வாங்கி அழகாக ஒரு வீட்டையே கட்டிவிடலாம் என்று இருந்த நிலை போக, இப்போது இலட்சங்கள் கூட அன்றாடங் காட்சிகளாக மாற்றம் பெறுவதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.


முன்பெல்லாம் என்றைக்கு நடுத்தர வர்கத்தினருக்கு சம்பள உயர்வு வருகின்றதோ அனையில்ருந்து அரிசி பருப்பு என்ன எல்லா வகைகளும் விலையில் பறக்க துவங்கிவிடும். மறுபடியும் அவனது வாழ்வில் சேமிப்புக்கு மிஞ்சுவது அதே சொற்பமான பொருளே.


விளைபொருளை விளைவிக்கும் விவசாயிக்கு கிடைப்பதும் அதே பழைய கொழுமுதல் விலையே தவிர இந்த விலையேற்றத்தால் பலனடைவது விளைவிப்பவனு கிடையாது. அதை வாங்கி உண்பவனும் கிடையாது. மாறாக, கையில் கொஞ்சம் நிலுவை தொகையாக பொருளை கொண்டுள்ளவர்கள் அடி மாட்டு விலைக்கு பொருள்களை விவசாயிகளிடம் வாங்கி. சந்தையில் அதிக தேவை வரும் வரையில் பதுக்கி வைத்துவிட்டு. பிறகு 100க்கு வாங்கிய பொருளை 400க்கோ 800க்கோ சந்தையின் நிலைக்கு தகுந்தார்போல் விற்றான்.


நடுத்தர வர்க்கம் இதையும் வாங்க முடியாமல் விழி பிதுங்க நிலையை சமாளிக்க என்ன செய்வது என்று எல்லா வகையான மாற்று திட்டங்களையும் சிந்தித்து அலைவான். கடைசியில் புலம்பிக்கொண்டே அந்த பொருளை கொள்ளைவிலைக்கு சந்தையில் வாங்குவான். இது அரசாங்கம் அங்கிகரிக்கும் நல்ல சந்தையின் கதி இது. இதிலே கள்ள சந்தையின் கதி என்னவாக இருக்கும் பாருங்கள்.


முன்பு பல பதிவுகளில் சொன்னது போல் ஏழைக்கோ இது எட்டாக கனி, அதனால் அவனுக்கு இது பற்றி கவலை இல்லை. அதே போல் பொருள் படைத்தவருக்கோ இது ஒரு செலவும் அல்ல. ஆனால் இதற்கு இடைபட்டோரது நிலைதான் கொடுமையிலும் கொடுமை


மாதம் முழுக்க கடின உழைப்பில் இவன் கொண்ட பொருளை சந்தையின் நிலையை காட்டி அந்த பொருள் படைத்த வியாபாரி பிடுங்கிக்கொண்டு செல்வான். இதிலே இந்த தண்டல் தொகையை ஊரெங்கும் ஒரே நிலையில் வைக்க இவர்களுக்கு சங்கம் வேறு.


உண்மையில் இந்த வியாபாரிகளின் இந்த கொள்ளையின் முதலீடு என்ன. மக்களின் அறியாமையா என்றால் இல்லை, பிறகு சோம்பேரித்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.


இன்றைக்கும் கிராமபுரங்களில் வார சந்தை மாத சந்தை என்று இருக்கத்தான் செய்கிறது. அங்கே விலைக்கு விற்கும் கறிகாய்களின் விலைமட்டும் எப்படி குறைவாக இருக்கிறது. இந்த கொள்ளையர்களின் பங்கு அங்கே இல்லை என்றது வெளிபடை, இருந்தாலும் உள்ளே பொதிந்து இருக்கும் உண்மை விளைவித்தவனும், வாங்குபவனும் நேரடி வணிகம் புரிகிறார்கள் அங்கே.


விளைவித்தவன் சொவது தான் விலை, வாங்குபவன் வாங்குவது தான் விலை என்று இருக்கும். மாலையில் பொழுது போக விலைகள் படிந்துகொண்டே வரும் பொருள்களின் தரமும் குறைந்த வண்ணமாக இருக்கும். அன்றைக்கு சந்தையின் முடிவில் விவசாயின் கையிலே பொருள், வாடிக்கையாளரின் பையிலே விளைந்த பொருள் என்று இருக்கும்.


ஆனால் சிறு நகரம் முதல் பட்டணம் வரை இப்படி தேடிச்சென்று பொருளை வாங்க நமக்கு பொருமையும் இல்லை நேரமும் இல்லை. ஒரு அரை நாள் செலவழித்தால் வருடத்திற்கு தரமான நெல்லை வாங்கலாம் என்றால், யார் பிறகு அரைப்பது, இட்லி அரிசிக்கு யார் வேகவைப்பது என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதை எல்லாவற்றையும் விட, தொலைபேசியில் கூப்பிட்டு இவ்வளவு அரிசியும் பருப்பும் கொண்டு வந்து கொடு என்றால். வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விலையையும் வாங்கி செல்வான் அதை விடுத்து நெல்லாம், அரைப்பாம் என்று சொல்வார்கள்.


இப்படி மிச்சம் பிடிக்கும் நேரங்களில் நாம் அப்படி என்ன தான் செய்கின்றோம். படம் பார்ப்பது, நண்பர்களோடு கொட்டம் அடிப்பது. இல்லை என்றால் தெரு முனையில் கடையில் நண்பர்களுடன் வம்பு பேசி அலைவது என்று தான் இருக்கிறோமே தவிர, ஒன்றும் விஞ்ஞான வேலைகளில் ஈடு படுவது எல்லாம் இல்லை.


இப்படி விளை பொருள்களில் தொடங்கிய விலை பெருக்கம் இன்று வீட்டு மனைகளை கோடியில் கொண்டுவந்து நிற்கிறது.


அந்த கொள்ளையர்களை விட, அவர்களை இப்படி கொள்ளையடிக்க விட்டு வைத்திருக்கும் நாம் தான் மிக பெரிய குற்றவாளிகள்.

0 comments: