முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா அவர்களுக்கும் அவரது கட்சிக்கும் நமது பாராட்டுகளை தெரிவித்து கொள்வோம்.
பொதுவாக ஒரு புதிய கட்சி ஆட்சியேரும் போது இன்ன இன்ன நடக்கும் என்று அந்த கட்சியின் சார்பிலும், இன்ன இன்ன நடக்கும் என்று மற்றவர்களும் அவர்களை பற்றி செல்வது வழமை. அப்படி இன்ன இன்ன நடக்கும் என்று எடியூரப்பாவின் கட்சியும் மற்ற கட்சிகளும் இன்னமும் கருத்துகள் சொல்லாமல் இருப்பது ஒரு மர்மகவே இருக்கும் சூழலில். தமிழக பதிவர்கள் சிலர் இனிமேல் தமிழகத்திலே பாலாரும் தேனாரும் ஓடும் என்றும். தென்னகத்துகே இனிமேல் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமை பாட்டையும் கற்பிக்கும் விதமாக அவர்களது ஆட்சி அமையும் என்றும் கூட அவர்கள் சொல்ல தவறவில்லை.
இவர்களது நம்பிக்கை சரிதானதா, இல்லை இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்று தான் அவர்கள ஆசை படுகிறார்களா என்றாலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும். காரணம் இந்த கட்சி எப்போதும் எங்கும் தேர்தலில் குதிக்கும் முன்பும் சரி, தனது இடத்தை தக்கவைத்து கொள்ளவும் தனது பக்கம் இருக்கும் ஆதரவு எண்ணம் விலகி போகாமல் இருக்கவேண்டி இவர்கள் நிகழ்தும் செயல்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் தெரியும்.
பாசகா துவங்கிய நாள் தொட்டு அவர்களது நடவடிக்கை இப்படி தான் இருக்கிறது. முதலில் ஒரு தீயை கொளுத்துவது பிறகு அந்த வெப்பத்தில் ஆதரவு திரட்டுவது அவர்களது வழமை. முதலில் கட்சி துவங்கிய நாட்களில், நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் எண்ணத்தில் தேரோட்டம் ஒன்றை இந்தியா முழுவது நடத்தினார்கள். அந்த தேரோட்டத்தில் முழங்கிய முழக்கங்களை கவனிக்க வேண்டும். இந்தியாவில் மறுபடியும் இராம ஆட்சியை குடிகொள்ள செய்வோம் என்று துவங்கிய பயணம் பின்னர் பாபரின் மசூதியை தூசியாக்கியதில் சென்று முடிந்தது.
அப்படி இடிக்கப்பட்ட செயலுக்கு இது வரையில் ஒரு நீதியைதான் கற்பித்தார்களே தவிர அது தவறு என்று இதுவரையில் ஒருவரும் அந்த கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களது அபிமானிகளோ சொன்னதாக தெரியவில்லை. மாறாக, நந்தி கிராமம் கலவரத்தில் பாதிக்கபட்டமக்களுக்காக கண்ணீர் விட்டு அழும் அந்த தமிழக பெண்மணியை குமுதம் இணைய தளத்தில் பார்க்க நேர்ந்தது. பிருந்தா கரத்து அவர்களின் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில அளிக்க இல்லை, மாறாக அவரிடம் வாதாடி கண்ணீர் விட்டார். அப்போது கடைசி விவாதமாக கேட்டார் ஆயிரகணக்கில் மக்களை கொன்று குவித்துவிட்டு இப்படி 20 பேருக்காக இப்படி ஒரு நீலி கண்ணீர் வடிக்கலாமா என்ற கேள்விக்கு, இந்த 20 பேரை மட்டும் பேசுங்கள் என்று பேசிச்சென்றார் அந்த பாசகா கட்சி நிர்வாகி பெண்.
இப்படி அவர்களின் பாசிச கொள்கைகளையும் கொலைகளையும், தந்திர , பிரித்தாளும் உத்திகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எண்ணிலா உதாரணங்களும் சம்பவங்களும் தான் மிஞ்சுமே தவிர அவர்களை பற்றி ஒரு நல்ல செய்தியும் கிடைக்கப்போவதில்லை.
இப்படி எல்லாம் அவர்கள் நடந்துகொள்ள காரணம் என்ன, அவர்களது நோக்கம் தான் என்ன. அவர்களது அபிமானிகள் எழுதுவது போல் அவர்கள் நாட்டுப்பற்றும் நாட்டின் முன்னேற்றதிலும் அக்கறை கொண்டவர்களா என்றால் இல்லவே இல்லை. இதை 100% நிரூபிக்கமுடியும். இதற்காக கடவுளையோ அல்லது அடுத்த உலக மனிதனையோ நாடவேண்டியதில்லை. அவர்களது சித்தாந்தகளை பார்த்தாலே தெளிவாக தெரியும்.
ஒரு நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அப்படி பார்க்கையில் குடும்ப்பத்தில் வளர்ந்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை விட வயதில் குறைந்தவருக்கும். இன்னமும் கவனிப்பு தேவை படும் என்று இருப்பருக்கும் முன்னுரிமை அளித்து பெற்றோர் கவனிப்பதையும். பெற்றோர் அளவுக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளும் அவர்களுக்கு நிகராக் இவர்களை கவனிப்பதையும் எல்லோர் குடும்பத்திலும் பார்க்க முடியும். அனைத்து குடும்பங்களிலும் இப்படி தான் நடக்கின்றது எந்த நாடாக இருந்தாலும் இப்படி தான் குடும்பங்கள் வாழ்கின்றது. இதற்கு மனித குலத்தில் விதி விலக்கு இல்லை, காட்டவும் முடியாது.
குடும்பத்தில் இளையவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையால், வளர்ந்விட்ட பெரியவர்களுக்கு அதுவும் திருமணம் ஆன பெரியவர்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிட போகிறது. இங்கே இளைவர்களுக்கு பாகம் பிரித்து கொடுப்படவில்லை. மாறாக அவர்களுக்கு என்று முன்னுரிமை கொடுத்து அன்றாட வாழ்க்கையில் தேவைபடும் உணவு, உடை, கல்விக்கு தேவைபடுவன என்று அவர்களது தேவைகளை நேரத்திற்கு தகுந்தார் போல் பெற்றோர் கொடுப்பது வழமை. அப்படி ஒரு நெருக்கடி கால கட்டங்கள் வரும் போதெல்லாம் வளர்ந்துவிட்டவர்கள், தனது தேவைகளை தானே முன்வந்து விட்டுக்கொடுப்பதை பெருமையாகவும், அது அவர்களது கடமையாகவும் கருதுவார்கள். எல்லோர் வீட்டிலும் இப்படி தான், அது ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் பொருளாராக இருந்தாலும் சரி.
இப்படி தான் காலம் காலமாக குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை. பிறகு குழந்தை என்று ஆன பிறகு பெற்றோர்களது அனைத்தும் பிள்ளைகளுக்கு என்று விட்டுக்கொடுத்து வாழ்வை எடுத்து சொல்ல தனியாக வார்த்தைகள் தேவை இல்லை.
இப்படி வளர்ந்த பிள்ளை ஒன்று வீட்டின் தேவைகளை பற்றி எல்லாம் எனக்கு கவலைகளும் இல்லை அக்கறையும் இல்லை. எனது சொகுசும் வாழ்க்கையும் தான் முக்கியம். இதனால் பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ பாதிப்புக்குள்ளானாலும் சரி அழிந்தாலும் சரி என்று அக்கிரமம் செய்கின்றான் என்று சொன்னால் அவனை பற்றி பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். ஆகா அவனது தேவையை நிறவேற்றி கொண்டான் என்றா பாராட்டுவோம், இல்லை அட பாவி பெற்றவர்கள் என்று பாராமல் உடன் பிறந்தவர்கள் என்றும் பாராமல் இப்படி கொடூரம் விளைவிக்கிறானே இவனெல்லாம் மனித பிறவிதானா என்றல்லவா சொல்வோம்.
அல்லது இளையவர்களுக்கு கொடுக்கும் இந்த முன்னுரிமைகளில் ஒருவன் பொறாமை குணம் கொண்டு இளையவர்களுக்கு அந்த முன்னுரிமைகளை கிடைக்காமல் செய்ய மறைமுகமாக என்ன என்ன சதி வேலைகளை செய்யமுடியுமோ அத்தனை சதிவேலைகளையும் திரைமறைவில் என்ன செய்யமுடியுமோ அவ்வளவை செய்துமுடித்து. பெற்றோரிடமும் உடன் பிறந்தோரிடமும் ஒன்றும் அறியாதது போல் நாடகமாடுபவனை என்ன என்று சொல்வோம் நயவஞ்சகம் புரிகிறானே என்று தான் சொல்வோமே தவிர அவனை இந்த செயலுக்காக அறிவாளி என்று யாரும் சொல்லப்போவது இல்லை.
இந்த குடும்பத்தை நாடாகவும், இளையவர்கள் ,வறியவர், வசதியற்றோர் மற்றும் சிறுபான்மையினர். வளர்ந்தவர்கள் இவர்களை தவிர மற்றவர்கள். இந்தியாவின் எந்த பகுதி எடுத்தாலும் இந்த சதவிகிதம் ஒரே அமைபில் இருப்பதை காணமுடியும்.
சிறுபான்மையினர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைபினை அமைத்து தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள நினைப்பது சரி. ஏன் என்றால் இங்கு குடும்பம் என்ற நாட்டில் தாயும் தந்தையும் இல்லை, சிறியவர்களின் தேவைகளை பார்த்து எடுத்துகொடுக்க. அதனால் அவர்களுக்கு ஒரு அமைப்பு தேவைபடுகின்றது சரி.
ஆனால் இதே இந்த வளர்த பெரியவர்கள் தங்களுக்கு என்று இருப்பது போக, எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் கொடுத்துகொண்டு இருப்பதை பிடுங்கி எங்களுக்கே கொடுங்கள் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அது நாட்டையும், நாட்டின் ஒருமைபாட்டையும் கட்டிக்காக்க வந்த ஒரு அமைப்பு என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருக்கிறது இந்த பாசகாவின் சித்தாந்தம். இதிலே அந்த மாநிலத்தில் மட்டும் இல்லை அண்டை மாநிலங்களிலும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்.
ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்குள் பிரிவினை விளைவிப்பவன் நல்லவனாக இருக்க முடியாது. அதேபோல் ஒரு நாட்டின் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்குவோன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்கமுடியும். அப்படி உருவாக்கும் கட்சிமட்டும் எப்படி நல்ல கட்சியாக இருக்கமுடியும். இப்படி ஒற்றுமை என்ற வார்த்தைக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத ஒரு கட்சியின் தலைவர்கள் எப்படி நாட்டின் ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும். இதை இவர்கள் தேன் தடவிய வார்த்தைகளில் சென்னாலும் பின்னால் இருக்கும் உண்மைகள் தெரியாமல் இல்லை. இதிலே தேனாறும் பாலாறும் எங்கே வரும். வேண்டுமென்றால் பிரிவினை ஆறு வேண்டுமானால் ஓட வாய்பு இருக்கிறது. சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.
பாசகாவின் தோற்றத்தையும் அதன் இயல்பையையும் பார்த்தோம், இபோது கர்னாடகாவின் வருங்காலத்தை பார்ப்போம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்த மறுப்பது. கன்னடத்தில் இருந்துதான் தமிழ் பிறந்தது என்று கதை திரிப்பது. தமிழகத்தில் மனிதன் குடிக்ககூட தண்ணீர் இல்லை என்று சொன்னால் குடகு மலையில் பல அரிய மிருகங்கள் குடிக்க தண்ணீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் கொடுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்திடமே சொல்வது. என்று கடந்த 15 ஆண்டு காலமாக ஒரு பிரிவினைவாத மா நிலமாக திகழ்ந்து வருவது அனைவரும் அறிவதே.
இப்படி சமீபத்தில் ஒக்கேனக்கல் நீரை குடி நீராக பயன் பெற வேண்டி திட்டங்களை தீட்டி அமல் படுத்தும் வேளையில் இதே எடியூரப்பா தலைமையில் ஒரு பிரிவினை கூட்டம் அரக்த்தணம் புரிந்ததை நாடே அறியும் அதில் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் இன்றைக்கு பெருன்பான்மை பெற்ற கட்சியாக வந்ததினால் இவர் இனி தமிழகத்துக்கு தேனாறும் பாலாறும் ஓடவிடப்போகிறார் என்று பரப்புரை வேறு. பொய் சொன்னால் மக்கள் கேட்ப்பார்கள் என்பதற்காக இப்படியா பொய் சொல்வது. எப்படி ஒரு அரக்க்க கூட்டத்தை கூட்டிவந்து ஒக்கேணக்கலில் புரிந்த காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது தமிழ் படமும், தமிழர்களும் வாழும் இடங்களுக்கு மிரட்டல் விட்ட காளித்தனத்தை இந்தியம் என்று சொல்கிறார்களா, அல்லது காவிரியில் இவ்வளவு தண்ணீர் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் முடியாது, முடிந்ததை பார் என்ற சொன்ன காளித்தனத்தை சொல்வதா.
இனி என்ன மேலும் நடக்கும் அங்கே, எப்போது சமயம் கிடைக்கும் இங்கே இருக்கும் தமிழர்களை அழித்தொழிக்கலாம் என்று இருந்க்கிற கூட்டதிற்கு எடியூரப்பபா ஒரு கூட்டம் கூட்டுவார். பிறகு ஒரு இரயிலையோ அல்லது ஒரு பேருந்தையோ கொளுத்துவார். பிறகு தமிழர்கள் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் கொய்சாலா படையுடன் ஆட்கள் குவிக்கப்படுவர். பின் வயிற்றில் இருக்கும் குழந்தை முதல் வயதான திருப்பி அடிக்க வலுவில்லாத தமிழர்களை கொளுத்திவிட்டு அவர்களது உடமைகளை சூரையாடிவிட்டு. ஆங்காங்கே இருக்கும் ரொட்டி சுடும் காளவாயில் மனிதர்களை சுட்டெடுத்து உச்ச நீதிமன்றம் வரை சென்று காவலர்களை அழைத்து சென்று சாட்சி சொல்ல வைப்பார்.
இந்த சம்பவத்திற்கு விபத்து என்று பெயர் சூட்டுவார், குடியரசு தலைவரும், பிரதமரும் அழைத்தால் அவரது அலைபேசி வேலை செய்யாதிருந்ததாகவும். கலவரத்தில் தொலை பேசியை தமிழர்கள் தாக்கி அழித்துவிட்டதாகவும் காரணம் சொல்வார். அத்துடன் நிற்பாரா, இவர்களின் அடி உதைக்கு பயந்து கோசூர் வரை தப்பியோடியர்வர்களை எல்லையில் தடுத்து நிறுத்தி வண்டியுடன் கொளுத்தி வன்முறை என்று ஒரு மாதகாலம் கலவரம் பாதிக்கும். அந்த ஒரு மாதகாலத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களை எல்லாம் கொளுத்திவிட்டு. இனி எரிக்க யாரும் இல்லை என்று ஆன பிறகு, கலவரம் கட்டுகுள் அடங்க ஒரு மாதகாலம் ஆகிவிட்டது என்று எழுத்துமூலம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியபடுத்துவார்.
வழக்கு நடத்தும் வழக்குரைஞர் 3 நாட்க்கள் ஆனது என்று சொல்லும் போது நம்பிய நீங்க 30 நாள் ஆனது என்று சொன்னாலும் நம்பித்தான் ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களை தேச துரோகி என்று தான் நாங்கள் சொல்ல வேண்டி வரும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு கருத்தாக்கத்தை மா நில தாளிக்கையிலும் இன்னமும் என்ன என்ன பரப்பு சாதனங்கள் இருக்கின்றதோ அத்தனையும் செய்வார். தனது மா நிலத்துக்கு என்று ஒரு தனிகொடி கொண்டுள்ளதை போல் ஒரு தனி இராணுவத்தையும் தோற்றுவிப்பார்
இப்படி நடந்ததை மக்களிடன் சென்று, உங்களின் சொத்துக்களை இத்தனை காலம் சம்பளம் என்ற பெயரில் கொண்டு சென்ற தமிழர்களை தண்டித்தது தவறா?? இத்தனை காலம் உங்கள் திரையருங்குகளில் கன்னட படம் பார்க்க மாட்டோம் என்று அவர்களது படங்களை பார்த்து நமது மொழியை மதிக்காத தமிழர்களை கொளுத்தியது தவறா?? இப்படி மக்களின் முன் இன்னமும் ஒரு 5 ஆண்டு காலம் கழித்து போட்டியிட்டு வெற்றியும் பெறுவார். அப்போது வேறு யாரும் ஒரு முதியவரை பிரதம வேட்பாளராக அறிவித்து கட்சியின் தெற்கு சோதனை மையம் கர்னாடகம் என்றும். சோதனை வித்தகர் எடியூரப்பா என்று துக்களக் தாளிக்கை இன்னமும் வந்து கொண்டிருப்பதை கொண்டாட தமிழகம் அழைக்க பெறுவார். அப்போது அவர் வந்து பேசி செல்ல இந்த அனைத்து இந்தியர்களும் சென்று கேட்டு வந்து பதிவிடுவார்கள்.
பாலாறும் தேனாறும் தான் ஓடும் பாருங்கள், இன்றைக்கு சிறுபான்மையினரை பிடிக்கவில்லை கொளுத்துகிறார்கள். நாளை கொளுத்த ஆள் இல்லை என்றால் பிறகு உங்களையும் கொளுத்துவார்கள் அந்த தீவெட்டி கட்சியினர் பார்த்து கவனமாக இருங்கள் தேனாறும் பாலாறும் நண்பரே.