Friday, May 23, 2008

தமிழக அரசு சாராயம் விற்பது சரிதானா – (ஞாநி இது நீதியா, திவிளிக்கு திவிளி திவிளிக்கு திவிளி சொல்லாடலே நினைவுக்கு வருகிறது)


இன்றைய தினசரிகளிலும் சரி, வார ஏட்டிலும் சரி இப்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தியாக இருக்கும் பொருள். அரசே சாராயம் விற்கலாமா, அதுவும் மலிவு விலையில் விற்காமல், விலை ஏழைக்கு எட்டாத விலையில் இப்படி விற்கிறார்களே என்று எல்லாம் சொல்லி. பிறகு கள்ள சாராயத்தை அடக்க முடியவில்லை என்றால் என்ன அரசு என்றும். அப்படி கள்ள சாராயம் குடித்து பட்டி பட்டியாக சாவுகள் நிகழும் போதெல்லாம் அய்யோ பாவம் இப்படி ஆகிவிட்டதே கேப்பார் இல்லையா... என்ற புலம்பல்களுடன் அப்படி இறக்கும் நபருக்கு நிவாரண நிதி என்று நூறாயிரம் வரையில் பணம் கொடுக்கவில்லை என்றால், இது எல்லாம் ஒரு அரசா என்று எதிர் அணியினர் திரள்வதும், அதை பார்த்த ஆளும் கட்சியும் தனது பங்குக்கு என்று இறந்த எல்லோருக்கும் என்று பொருள்களை அள்ளி விடுவதை அன்றாடம் கானும் ஒரு நிகழ்வாக அல்லவா இருக்கிறது.

சென்றமுறை செயலலிதா ஆட்சியில் இருக்கும் போது இதே சாராய கடைகளில் ஊற்றிக்கொடுக்க பட்டதாரிகளை அரசு இயந்திரம் கொண்டு அமர்த்தி படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை வழங்கினோம் என்று சொன்னபோது இந்தனை மக்களும் எங்கே மறைந்துக்கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை.

சரி அப்போது தான் இவர்கள் எழுதும்/படிக்கும் பழக்கமும் இல்லாமல் இருந்தார்கள் சரி. தற்பொழுது பரவிவரும் அலுவல் கொண்டாட்ட வழக்கங்களில் ஆணுக்கு நிகர் பெண்களும் குடிக்க பழகியுள்ளதையும். எங்கே குடிக்கின்றோம் பிறகு காலையில் எங்கே எழுகிறோம் என்று கூட தெரியாத நிலைக்கு பெண்களும் தள்ளப்பட்டுள்ள இந்த நிலையில். அரசாங்கம் சாராயம் விற்பது தான் அனைதிற்கும் காரணம் என்று சொல்ல முற்படுகிறார்களே ஏன்.

அரசு சாரயம் மட்டுமா விற்கிறது, கல்வியும் கூட தான் கொடுக்கிறது அதுவும் பணமில்லாமல். எத்தனை மக்கள் பயிலுகிறார்கள். எப்படி தேவையும் விழிப்புணர்வும் உள்ளவர்கள் பயிலுகிறார்களோ அதே போல் தேவையும் பொருளும் உள்ள்வர்கள் குடிக்கிறார்கள். வசதி இல்லாதோர் கள்ள சாராயம் குடித்து அழிகிறார்கள். இதிலே அரசை மட்டுமே குறை கூறுவதில் பொருள் இருப்பதாக தெரியவில்லை.

அப்படி அரசு விற்பதில் குறை உள்ளதாக கருதும் அனைவரும், நிவாரண நிதி தருவதை கண்டித்து இருக்கவேண்டும். கண்டித்தார்களா, குடிப்பது ஒன்றும் போற்றுதலுக்கு உரிய செயல் அல்ல. வள்ளுவர் கூறிய திரு நீக்கப்பட்டார் தொடர்புகளில் ஒன்றான குடியில் இறந்தோருக்கு எதற்கு பொருளுதவி என்று கேட்க்க வேண்டியது தானே. கேட்டார்கள் இன்று இவ்வளவும் பேசுவோர். மாறாக அது என்ன ஆளும் கட்சி ஆட்களுக்கு மட்டும் தானா எதிரணியினருக்கு எல்லம் ஒன்றும் கொடுக்கவில்லையே அவர்களது மனைவி மக்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்றல்லவா சொன்னார்கள் இவர்கள்.

எனக்கு தெரிந்து அரசி தொலைகாட்சியில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஒரு தொடர் வந்தது. எழுத்தாளர் சிவசங்கரியின் கதையை தொடராக கொண்டார்கள். அந்த கதையில் கதையின் தலைவன் பெற்றோர் மேல் உள்ள வெறுப்பினை தன்மீதே காட்டும் விதமாக அளவுக்கு மீறிய குடியாக கொண்டு கடைசியில் குடல் வெந்து அழிவதை மிகவும் உருக்கமாக எழுதியதை அதே அழுத்தத்துடன் அருமையாக படமாக இருந்தார்கள். அதற்கு பிறகு குடிக்கு எதிராக விழிப்புணர்வுகளை பரப்பும் எழுத்துகளும் சரி, பின் எந்த வடிவங்களிலும் வருவது நின்றுவிட்டது ஒரு பெரும் குறையே.

எபோதாவது சிந்துபைரவி போன்று அரிதாக வருவதுடன் சரி கடைசியாக வந்த சத்தம் போடாதே திரைபடத்தையும் சேர்த்து தான். இதன் பொருள் என்ன என்று பார்த்தோம் என்றால் இவர்களது கட்டுரைகளில் காணலாம். அது குடிப்பது எங்களது இயல்பு. நாங்கள் குடிக்காமல் எல்லாம் இருக்க முடியாது. நல்ல சாராயம் கிடைதால் அது குடிப்போம் வழியில்லை என்றால் கள்ள சாராயம் என்ன இன்னமும் எத்தனை பொருள்களில் போதைகள் வருமோ அவைகள் அனைத்தும் தேடி பெறுவோம். இதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை தவறும் இல்லை.

ஆனால் அரசு விற்பது தான் பெரும் குற்றம், அதுவும் திராவிட ஆட்சியர்கள் விற்றால் குற்றம். இவர்கள் அல்லாது வேற்று அணியிரோ அல்லது வேறு எவரும் செய்தால் தவறு இல்லை. பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலக வளாகத்திலேயே மாலையில் கேளிக்கைகளுக்கு ஏற்பாட்டுடன் குடியுடன் நடந்தால் அது நாகரீகமாக தான் கருதபடுமே தவிற குற்றம் ஆகாது.
அன்பழகன் செலவு திட்டதில் மிகைதொகையாக பொருள் உள்ளது என்று சொன்னாலும் சொன்னார், இவர்கள் அனைவரும் அந்த கருத்தை மக்களின் மனதில் பதியும் முன்பே கெட்ட பெயரை உண்டு பன்னும் விதமாக பரப்புரையை துவங்கியுள்ளார்கள் கண்மணிகள்.

இவர்களது நோக்கம் மக்களுக்கு தெளிவாக தெரியவேண்டும். முடிந்தால் எனது கேள்விகளுக் பதில் அளியுங்கள் நண்பர்களே பார்ப்போம்.

ஒரு செயலுக்கு மாற்று தேவைபடும் போது, மற்றங்களுக்கு தேவை அனைத்தும் சொல்லவேண்டும். அதை விடுத்து அவளது மகன் வாரம் ஒரு முறைதான் குளிப்பானாம், எனது மகனோ திவிளிக்கு திவிளி திவிளிக்கு திவிளி குளிப்பான் என்று சொல்வதில் அவள் வெட்க்கம் கொள்ளவேண்டுமே தவிற பெருமைகொள்ள கூடாது பெருமையும் அல்லவே.

0 comments: