Saturday, May 31, 2008

வன்முறை ஒரு தொழிலாகுமா - 9



குறுக்கு வழியில் பதவிக்கும் வரும் நபர்களை பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம். ஒரு குடும்பத்தில் தலைமகன் அனைத்திலும் முதன்மைபடுத்த படுவது அவனது தியாகங்களுக்கு வீட்டார் கொடுக்கும் அங்கிகாரம். முன்னே சொன்னது போல் மூத்தவரால் தலை எடுக்காத சமயங்களில் இளையவர்கள் தலை தூக்கும்போது அனைவரும் அவருக்கு அதே மதிப்பினை வழங்கும் போது அதை யாரும் எதிர்ப்பது இல்லை.
ஆனால் ஒரு சில குடும்பங்களில் அதிகம் கானும் காட்சி இது. அண்ணன் இருப்பான் நன்றாக பொரூளீட்டுவார். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பார்த்து கவனித்து கொள்வார். தனக்கு என்று வந்தால் கூட குடும்பத்தின் நலன் கருதி தேவைகளை விட்டும் கொடுப்பார். இப்படி இவர் வளர்த்து எடுக்கும் தம்பிகளில் ஒரு சிலர், இவரது கவனிப்பிலும் பொருளிலும் வளர்ந்து தனக்கு என்ற ஒரு பெயரை பெற்ற பின் அவருக்கு கிடைக்கும் அதே நன்மதிப்பும் மரியாதையும் தனக்கும் வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
இதன் தொடக்கமாக அண்ணம் பொருள் கொடுக்கும் இடங்களில் யாரையும் கேட்க்காமல் தானே முன் வந்து முந்திக்கொண்டு பொருளை வழங்க துவங்குவார். இதை பின் நாளில் குடும்பத்தில் பெருமையாக குறிப்பிடுவார். அண்ணனோ ஏன்டா செலவு உனக்கு பொருளை சேர்த்து வைத்துகொள் என்று அறிவுருத்துவார்.
புகழும் மரியாதையையும் எதிர்பார்க்காத தம்பிகளோ, பொருளை அண்ணனிடம் கொடுத்து. தேவைபடும் போது வாங்கி கொள்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் புகழையும் அதன் பொருட்டு கிடைக்கும் மரியாதையும் மட்டுமே எதிர்பார்த்து பொருளை செலவிடுபவன் கொடுத்த பொருள்க்கான பலனை உடனே வேண்டும் என்று எதிர்பார்ப்பான். அதை எதிர்பார்த்து ஒவ்வொரு நிமிடமும் காத்திருப்பான்.
அண்ணன் ஆண்டாண்டு காலமாக தன்னலமில்லா தனது தியகங்களால் பெற்ற மரியாதையை ஒரே ஒரு முறை ஒரே ஒரு சந்தர்பத்தில் கொடுத்த பொருளுக்கு கிடைக்கவேண்டும் என்று அவன் நினைப்பதில் எந்த விதமான நீதியும் இருக்க முடியாது. அது அவனுக்கும் தெரியும். இருப்பினும் அவனது அறிவையும் மீறி அவனுக்கு அந்த புகழ் மயக்கம் போதையாக மாற்றம் பெற துவங்கி இருக்கும்.
பின்னாட்களில் விரைவாக புகழ்ளீட்டும் விதமாக பொருளை இன்னமும் தாரளமாக அள்ளி வீசுவான். அதே வேளையில் அவனது புகழ்ளீட்டும் போதையின் அளவோ வகை தொகை இல்லாமல் வானலாவி வளர்ந்து கொண்டே வரும். மிகக்குறுகிய காலத்திலே அவனது பொறுமை அற்று போகும். பிறகு அவன் பொருளை கொட்டி நிரப்பி வந்த இடங்களில் எல்லாம் அறிவிப்பே இல்லாமல் வெற்றிடங்கள் தோன்றி பெருத்த அவமானங்களை குடும்பத்துகே தேடி கொடுக்க துவங்கும்.
இந்த வெற்றிட நிகழ்வுவரை அந்த தரம் கெட்ட தம்பியின் குணம் அனைவருக்கும் தெரியாததால், அண்ணனின் பொருளை வேறு தேவைகளுக்கு என்று மாற்றி ஒரு பெரிய திட்டத்தில் முனையம்மாக கொடுக்கப்பட்டோ அல்லது இன்னமும் ஏதோ ஒரு அத்தியாவசிய தேவைக்கு என்று செலவிடப்பட்டு இருக்கும். இவனை தவிர அனைவருக்கும் குறுக்கு புத்தியின் தாக்கம் இல்லாததால் இவன் இப்படி எல்லாம் பிறழ்வான் என்றறியாத அவர்கள், இந்த பொருள் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணரும் போது. இவன் அவர்களை பார்த்து ஒரு வெற்றி வெறிப்புன்னகை விட்டு மறைவான். அது தான் அவன் இவர்களது வலிகளையும் சேர்த்து உணரும் கடைசி தருணம்.
அன்றைய தொட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவன் அவர்களை சங்கடங்களுக்குள் உள்ளாக்குவது இவனது வாடிக்கையாக வந்து நிற்கும். பல மக்கள் இதை தனது மதிப்பையும் மாறாமல் வெளிப்படையாகவே செய்வார்கள். இவர்களை குடும்பங்கள் தூர நிறுத்தி உறவை முறித்து கொள்வார்கள். அனேகமாக முதல் சண்டைக்கு பிறகு இவர்கள் அடுத்த சண்டையை கொள்ளவில்லை என்றாலும். அந்த குடும்பங்கள் சந்திக்கும் இக்கட்டான நிகழ்வுகளில் கூட தன்னிடம் எவ்வளவு தான் பொருள் இருந்தாலும் கொடுத்துதவ மறுப்பர்கள். குடும்பத்தாரின் உயிர்களே பிரிந்தாலும் எதுவும் நடககாதது போல் இருப்பது மட்டும் அல்லாது, யாரேனும் இது பற்றி அவனிடம் கேட்டால், என்னிடம் யாரும் கேட்கவில்லை அதனால் தான் கொடுக்கவில்லை என்று கடமையே கிஞ்சித்தும் இல்லாதது போல் பேசும் கொடுமைகள் என்று தொடரும்.
இவர்களை கூட ஒரு அளவிற்கு பெற்றோர்கள் போல் உடன் பிறந்தோர்களும் மன்னித்து விடுவார்கள். ஆனால் இவனை போல் இல்லாமல் கூடவே இருந்து குழி பறிக்கும் ஒரு இரகத்தினர் இருக்கிறார்கள். இவர்கள் முன்னே சொன்னவர்களை விட மிகவும் மோசமானவர்கள்.
இவர்களது உத்திகளை கவனித்தால், இவ்வளவு கேவலமாக எல்லாம் மனிதனால் நடந்துகொள்ள முடியுமா என்ற கேள்விதான் மிஞ்சுமே தவிர இவர்கள் செயலுக்கு இவர்கள் கற்பிக்கும் எந்த ஒரு நீதியையும் மனம் ஏற்றுகொள்ளவே முடியாது.
உதாரணத்திற்கு தொழில் முனைவோரின் குடும்பங்களில் தொழில் இரகசியம் அவர்களது வெற்றிக்கும், அவர்களை அந்த இடத்திலே தக்கவைத்து கொள்ளும் ஒரு பிடிப்பு. இந்த மனிதர்கள் அந்த இரகசியங்களை தான் தான் என்று காட்டிக்கொள்ளாமலேயே எதிரிக்கு காட்டிக்கொடுப்பதும். அல்லது எதிரிக்கு மட்டுமே தெரியும் விதமாக காட்டிக்கொடுப்பதும் என்று துவங்கி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த அசிங்கங்களுக்குல் நேரத்தை செலவழிப்பதை விட அவர்களது செயலின் பொருள் என்ன என்பதில் செலவிடுவோம்...........


தொடரும்............

Friday, May 23, 2008

தமிழக அரசு சாராயம் விற்பது சரிதானா – (ஞாநி இது நீதியா, திவிளிக்கு திவிளி திவிளிக்கு திவிளி சொல்லாடலே நினைவுக்கு வருகிறது)


இன்றைய தினசரிகளிலும் சரி, வார ஏட்டிலும் சரி இப்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தியாக இருக்கும் பொருள். அரசே சாராயம் விற்கலாமா, அதுவும் மலிவு விலையில் விற்காமல், விலை ஏழைக்கு எட்டாத விலையில் இப்படி விற்கிறார்களே என்று எல்லாம் சொல்லி. பிறகு கள்ள சாராயத்தை அடக்க முடியவில்லை என்றால் என்ன அரசு என்றும். அப்படி கள்ள சாராயம் குடித்து பட்டி பட்டியாக சாவுகள் நிகழும் போதெல்லாம் அய்யோ பாவம் இப்படி ஆகிவிட்டதே கேப்பார் இல்லையா... என்ற புலம்பல்களுடன் அப்படி இறக்கும் நபருக்கு நிவாரண நிதி என்று நூறாயிரம் வரையில் பணம் கொடுக்கவில்லை என்றால், இது எல்லாம் ஒரு அரசா என்று எதிர் அணியினர் திரள்வதும், அதை பார்த்த ஆளும் கட்சியும் தனது பங்குக்கு என்று இறந்த எல்லோருக்கும் என்று பொருள்களை அள்ளி விடுவதை அன்றாடம் கானும் ஒரு நிகழ்வாக அல்லவா இருக்கிறது.

சென்றமுறை செயலலிதா ஆட்சியில் இருக்கும் போது இதே சாராய கடைகளில் ஊற்றிக்கொடுக்க பட்டதாரிகளை அரசு இயந்திரம் கொண்டு அமர்த்தி படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை வழங்கினோம் என்று சொன்னபோது இந்தனை மக்களும் எங்கே மறைந்துக்கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை.

சரி அப்போது தான் இவர்கள் எழுதும்/படிக்கும் பழக்கமும் இல்லாமல் இருந்தார்கள் சரி. தற்பொழுது பரவிவரும் அலுவல் கொண்டாட்ட வழக்கங்களில் ஆணுக்கு நிகர் பெண்களும் குடிக்க பழகியுள்ளதையும். எங்கே குடிக்கின்றோம் பிறகு காலையில் எங்கே எழுகிறோம் என்று கூட தெரியாத நிலைக்கு பெண்களும் தள்ளப்பட்டுள்ள இந்த நிலையில். அரசாங்கம் சாராயம் விற்பது தான் அனைதிற்கும் காரணம் என்று சொல்ல முற்படுகிறார்களே ஏன்.

அரசு சாரயம் மட்டுமா விற்கிறது, கல்வியும் கூட தான் கொடுக்கிறது அதுவும் பணமில்லாமல். எத்தனை மக்கள் பயிலுகிறார்கள். எப்படி தேவையும் விழிப்புணர்வும் உள்ளவர்கள் பயிலுகிறார்களோ அதே போல் தேவையும் பொருளும் உள்ள்வர்கள் குடிக்கிறார்கள். வசதி இல்லாதோர் கள்ள சாராயம் குடித்து அழிகிறார்கள். இதிலே அரசை மட்டுமே குறை கூறுவதில் பொருள் இருப்பதாக தெரியவில்லை.

அப்படி அரசு விற்பதில் குறை உள்ளதாக கருதும் அனைவரும், நிவாரண நிதி தருவதை கண்டித்து இருக்கவேண்டும். கண்டித்தார்களா, குடிப்பது ஒன்றும் போற்றுதலுக்கு உரிய செயல் அல்ல. வள்ளுவர் கூறிய திரு நீக்கப்பட்டார் தொடர்புகளில் ஒன்றான குடியில் இறந்தோருக்கு எதற்கு பொருளுதவி என்று கேட்க்க வேண்டியது தானே. கேட்டார்கள் இன்று இவ்வளவும் பேசுவோர். மாறாக அது என்ன ஆளும் கட்சி ஆட்களுக்கு மட்டும் தானா எதிரணியினருக்கு எல்லம் ஒன்றும் கொடுக்கவில்லையே அவர்களது மனைவி மக்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்றல்லவா சொன்னார்கள் இவர்கள்.

எனக்கு தெரிந்து அரசி தொலைகாட்சியில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஒரு தொடர் வந்தது. எழுத்தாளர் சிவசங்கரியின் கதையை தொடராக கொண்டார்கள். அந்த கதையில் கதையின் தலைவன் பெற்றோர் மேல் உள்ள வெறுப்பினை தன்மீதே காட்டும் விதமாக அளவுக்கு மீறிய குடியாக கொண்டு கடைசியில் குடல் வெந்து அழிவதை மிகவும் உருக்கமாக எழுதியதை அதே அழுத்தத்துடன் அருமையாக படமாக இருந்தார்கள். அதற்கு பிறகு குடிக்கு எதிராக விழிப்புணர்வுகளை பரப்பும் எழுத்துகளும் சரி, பின் எந்த வடிவங்களிலும் வருவது நின்றுவிட்டது ஒரு பெரும் குறையே.

எபோதாவது சிந்துபைரவி போன்று அரிதாக வருவதுடன் சரி கடைசியாக வந்த சத்தம் போடாதே திரைபடத்தையும் சேர்த்து தான். இதன் பொருள் என்ன என்று பார்த்தோம் என்றால் இவர்களது கட்டுரைகளில் காணலாம். அது குடிப்பது எங்களது இயல்பு. நாங்கள் குடிக்காமல் எல்லாம் இருக்க முடியாது. நல்ல சாராயம் கிடைதால் அது குடிப்போம் வழியில்லை என்றால் கள்ள சாராயம் என்ன இன்னமும் எத்தனை பொருள்களில் போதைகள் வருமோ அவைகள் அனைத்தும் தேடி பெறுவோம். இதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை தவறும் இல்லை.

ஆனால் அரசு விற்பது தான் பெரும் குற்றம், அதுவும் திராவிட ஆட்சியர்கள் விற்றால் குற்றம். இவர்கள் அல்லாது வேற்று அணியிரோ அல்லது வேறு எவரும் செய்தால் தவறு இல்லை. பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலக வளாகத்திலேயே மாலையில் கேளிக்கைகளுக்கு ஏற்பாட்டுடன் குடியுடன் நடந்தால் அது நாகரீகமாக தான் கருதபடுமே தவிற குற்றம் ஆகாது.
அன்பழகன் செலவு திட்டதில் மிகைதொகையாக பொருள் உள்ளது என்று சொன்னாலும் சொன்னார், இவர்கள் அனைவரும் அந்த கருத்தை மக்களின் மனதில் பதியும் முன்பே கெட்ட பெயரை உண்டு பன்னும் விதமாக பரப்புரையை துவங்கியுள்ளார்கள் கண்மணிகள்.

இவர்களது நோக்கம் மக்களுக்கு தெளிவாக தெரியவேண்டும். முடிந்தால் எனது கேள்விகளுக் பதில் அளியுங்கள் நண்பர்களே பார்ப்போம்.

ஒரு செயலுக்கு மாற்று தேவைபடும் போது, மற்றங்களுக்கு தேவை அனைத்தும் சொல்லவேண்டும். அதை விடுத்து அவளது மகன் வாரம் ஒரு முறைதான் குளிப்பானாம், எனது மகனோ திவிளிக்கு திவிளி திவிளிக்கு திவிளி குளிப்பான் என்று சொல்வதில் அவள் வெட்க்கம் கொள்ளவேண்டுமே தவிற பெருமைகொள்ள கூடாது பெருமையும் அல்லவே.

Monday, May 19, 2008

ஷாம்பைன் தமிழ் பள்ளி ஆண்டு விழா - 2008


பனிமலருக்கா ஷாம்பைன் தமிழ் பள்ளி.

2008 ஆம் ஆண்டுக்கான ஷாம்பைன் தமிழ் பள்ளியின் ஆண்டு விழா மே மாதம் 18 ஆம் நாள் தமிழ் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.



விழாவை துவக்கி வைத்து பேசிய ஆசிரியர் திரு.கல்யாணசுப்பு அவர்கள், தமிழ் பிள்ளைகளின் தமிழ் படிக்க்க காட்டும் ஆர்வத்தை, பெற்றோர்களது ஊக்குவிப்பையும் பாராட்டி பேசினார்.


அடுத்ததாக பேசிய ஆசிரியர் திரு.மயிலரசு அவர்கள், இந்த ஆண்டு விடாமல் பள்ளிக்கு வந்து பயின்ற மாணவர்களின் ஆர்வத்தையும், அவர்களது தமிழ் தேர்ச்சியும் குறித்து பெருமையாக குறிப்பிட்டார்.


பிறகு இலகு வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையும், அதை தொடர்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து இளைய வகுப்பின் மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிக்கையும், அதை தொடர்ந்து நினைவு பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பிறகு, தொடர் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையும், பரிசும், சான்றிதழ்களையும் வழங்கி மாணவர்களை பள்ளி சிறப்பித்தது.


இதை தொடர்ந்து பெற்றோர்களின் சார்பில் பள்ளியின் ஆசிரியர்கள் திரு.கல்யாணசுப்பு சுந்திரவேல் அவர்களுக்கும், திரு.மயிலரசு சிவஞானம் அவர்களுக்கும், திருமதி.ரம்யா வெங்கட் அவர்களுக்கும் நினைவு பரிசும் பாராட்டு இதழ்களும் வழங்கப்பட்டது.



நிறைவுரை ஆற்றிய திரு.இரவி அவர்கள், பள்ளி ஆசியர்களின் அர்பணிப்புகளுக்கு புகழாரமும், பெற்றோர்களது விடா முயற்சியையும் பாராட்டி பேசினார். இந்தியாவை விட்டு இவ்வளது தொலைவு வந்து விட்டோமே, பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்க நினைத்தாலும், வாய்ப்பு வசதிகள் இல்லையே என்று இருந்த ஷாம்பைன் வாழ் தமிழ் மக்களின் கனவுகளை ஷாம்பைன் தமிழ் சங்கமும், தமிழ் பள்ளியும் நிறைவேற்றுகிறது என்று நன்றியோடு குறிப்பிட்டார்.









Wednesday, May 14, 2008

தமிழருவிமணியனும் புலிகளும்

குமுதம் இனையதள இதழுக்கு அளித்துள்ள காணொலியில் இப்படி குறிப்பிடுகிறார் இவர். இராணுவம் செல்லும் இடங்க்களில் பாலியல் பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு அன்றாட நிகழ்வு என்றும். அதை ஒன்றும் யாரும் பெரிது படுத்த தேவை இல்லை என்றும் கூறுகிறார்.

மேலும் இராசீவ் காந்தியின் மரணம் தரும் வேதணையும் அதை குறித்து புலி தலைவர் குறிபிட்டதையும், சொன்ன விதத்தையும் இவரை மிகவும் துன்பத்துகுள்ளாகியது மட்டும் அல்லாது, அனேக தமிழருக்கும் இப்படி ஒரு உணர்வுகளை தந்து இருக்கிறது என்று அடித்து கூறுகிறார். மேலும் இப்படி ஒரு நிகழ்வை நடத்தியதும், இராசீவ் காந்தி மறைவும் ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும் அவர் கூறுகிறார்.

இங்கே ஒரு கொலைக்கு மற்ற ஒன்று ஈடு என்று நாம் சொல்ல வரவில்லை. அடுத்தவரின் உயிர் என்றால் 100 திலீபன் இறக்க வேண்டியது தானே, அப்போது இந்த உலகம் இவர்கள் பக்கம் வந்து நிற்காதா என்று சொல்கிறார், இராணுவம் என்றால் பாலியல் பலாத்தகாரம் ஒரு அன்றாட நிகழ்வு என்று சொல்கிறார். ஆயுதம் தூக்கும் வரையில், அறப்போர் என்று கிளம்பியவர்கள் பாதிபேருக்கு மேல் வீடு திரும்பியதில்லை. அப்படியே தெரிம்பினாலும் அவர்களை வரவேற்க, அவர்களின் வரவை கொண்டாட அவர்களது குடும்பங்கள் இல்லை. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றா சிங்களம் இருக்கிறது. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே முடிவு மரணம் என்றும் அதும் மரணத்திற்கு முன்னால் அந்த மனிதன் என்ன என்ன வேதணைகளை அனுபவிக்க முடியுமோ அத்தணை வேதணைகளையும் அனுபவித்த பின்பும், சாவுக்காக ஏங்கவிட்டு, ஒரு வேளை தானாக போனாவது நிம்மதியாக போகும். இல்லையேல் அணு அணுவாக வதைத்து கொல்லும் சிங்களத்திடம் தினமும் ஒரு திலீபனை அனுப்ப சொல்லி சிபாரிசு செய்கிறான் இவர். ஆண் என்றால் தான் இவ்வளவும், அதுவே பெண் என்று இருந்துவிட்டால். அவள் பெண்ணாக பிறந்தற்காக சாவின் விளிம்புவரை வருந்தகூடிய ஒரு சாவை அல்லவா கொடுத்துக்கொண்டு இருக்கிறது சிங்களம். இந்த மனிதர்களிடம் தினமும் ஒரு திலீபனை அனுப்பினால் என்ன என்று கேட்கிறார் மனிதர்.

இந்த மனிதர்களின் உயிரும், வலியும், வேதணையும் இராசீவ் காந்தியின் உயிருக்கும், வலிக்கும், வேதணைக்கும் எந்த அளவில் குறைந்தது என்று நீங்கள் எங்களுக்கு விளக்க கடமைபட்டுள்ளீர்கள். இங்கே சொல்வது அவரை புலிகள் கொன்றார்கள் என்றோ அல்லது அப்படி எவரோ ஒருவர் கொன்றது சரி என்றும் நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் படும் வேதணை எங்களின் வேதணையிலும் எந்த விதத்தில் அதிகம். எங்களது உயிர் அப்படி என்ன மலிவாக போனது.

காந்தி தேசத்தில், மதத்தின் பெயராலும், இன்னமும் எத்தணையோ காரணங்களுக்காக வருடா வருடம் அப்பவி மக்கள் கொன்று குவிக்கப்படுகிறது, உதாரணத்திற்கு குசராத்தையும் மேற்கு வங்கத்தையும் எடுத்துக்கொள்ளலாம். அங்கே எல்லாம் யாரும் ஆயுதம் தூக்க வில்லைதான். ஏன் அறவழி போராட்டம் கூட நடந்த்த அந்த கூட்டத்திற்கு நாதி இல்லை. அதற்காக அவர்களின் மேல் நடக்கும் வன்முறைகள் என்ன முடிந்தா போய் இருக்கிறது. இன்றைக்கும் எந்த ஒரு போராட்டம் என்றாலும் எதிர்க்க துணிவில்லாத, அடித்து போட்டால் ஏன் என்று கேட்டக நாதி இல்லா அந்த அனாதை சமூகத்தில் அன்றாடம் சாவி நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது அதே காந்தி பிறந்த தேசத்தில். காந்தி மன்னிலே அவரது செயல்முறை தோற்று போய் நிற்கும் இந்த காலத்தில் 100 திலீப்பனை பலிகொடுக்க சொல்லும் உங்களின் சித்தாந்தத்தை என்ன வென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஐயோ அடிக்கிறானே காப்பாத்துங்கள் என்று சொன்னால், முடிந்தால் காப்பாற்றலாம். அதைவிடுத்து தஞ்சம் புகுந்தவனை நாவில் தேன்தடவி இனிக்க பேசி, கழுத்திலே ஈர துணியை போடுபவனுக்கு தமிழிலே ஒரு சொல் உண்டு அதை நாம் சொல்ல விரும்பவில்லை.............வெட்க்கம்.

Tuesday, May 13, 2008

கல்லூரி - திரைவிமர்சனம் ( ஆங்கிலபடத்தின் தமிழாக்கமா )

திரைபடங்கள் என்றால் உல்லாச வாழ்க்கையும், பணக்காரர்களிம் பொழுதுகளும் வாழ்க்கை முறையும் தான் காட்டும் வகை என்று இருந்த காலகட்டதில். ஏழ்மை என்று ஒன்று இருக்கிறது, அவர்களது வாழ்க்கையும் வாழ்க்கைதான். அவர்களின் வாழ்க்கை வசதி படத்தவர்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்டிவரும் இயக்குனர்கள் வரிசையில் பாலாசிசக்திவேல் இணைந்துள்ளார் வாழ்த்துக்கள்.


படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஏழ்மையை காட்சிகளில் தவழவிட்டு அவைகளின் நடுவே கதையை அருமையாக நகர்த்தியுள்ளார். அறிமுகத்தில் வரும் வில்லுப்பாட்டு இந்த கிராமிய படைப்புக்கு இன்னமும் மெருகு கூட்டுகிறது.


கதை என்ன என்று அனைவருமே ஆரம்பத்திலேயே கனித்துவிடும்படி வைத்துவிட்டு, அவர்களது கனிப்பு சரியா என்று கடைசிவரை காத்திருக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.


உன் பார்வையில் ஓராயிம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே பாடலை அருமையாக பயன் படுத்தியுள்ளார். 20 வருடங்களுக்கு பிறகும் அந்த பாடல் அதே இனிமையோடு திரையில் இசைக்கும் போது இளையராசாவின் படைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை. பாடல் வரும் அந்த 2 இடங்களும் மனதை வருடும் விதமாக அமைந்திிருந்தது. அதிலும் இரண்டாவது முறை வரும் இடத்தில் அந்த பாடல் கதையின் தலைவனை முதலில் நெளியவைத்தும் பிறகு ஓட ஓட விரட்டும் வரை சுவையாக படமாக்கியுள்ளார் இயக்குனர்.


ஆண்டாண்டு காலங்கள் கடந்தாலும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றதை வருத்தத்தோடு தெரிவித்தாலும், என்றைகாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இருப்பது இந்திய மக்களாட்சியில் இன்னமும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது.


சோகமான முடிவாக இருந்தாலும், அந்த காட்சிக்கு முந்தையக காட்சிவரையில் ஒரு எதிர்பார்ப்போடும் நல்ல முடிவை நோக்கி கதை பயணிப்பதாக கொண்டு சென்றது இயக்குனரின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி. கதையின் நாயகி அருமையான தேர்வு, நடிக்க வரவில்லை என்றாலும் சூழ் நிிலைகளுக்கு தகுந்தார் போல் ஒரு சோகமும் தவிப்பும் கூடிய முகம், தவிற கல்லூரி படிக்கும் வயதில் இருப்பதால் அருமையாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இவரை இனிமே வாய்ப்பு தரும் அனேக இயக்குனர்கள் அனேகமாக இதே போல் ஒரு தவிப்பும் பதட்டமு கூடிய ஒரு வெகுளிப்பெண் பாத்திரத்தையே கொடுக்கு நமக்கு வெறுப்பு வருவரை விடமாட்டார்கள்.


இது வரையில் கல்லூரியின் கதையை பற்றி மட்டுமே பார்த்தோம். ஆனால் மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ என்னக்கு இப்படி தோன்றியது படத்தை பார்த்து முடித்ததும். எனது கனிப்பில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.


ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் டைடானிக்கு என்று ஒரு படம் வந்ததும் அந்த படத்தின் கதையையும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாலே நடக்கவிருக்கும் ஒரு பெரிய விபத்தினை விளக்கும் படமாக அந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு முன்னே ஒரு காதல் கதையை களமாக கொண்டு கதை உருவாக்கப் பட்டிருந்தது. அந்த பொருந்தாத காதலை நிறைவேற்றும் முகமாக நாயகனும் நாயகியும் படும் பாட்டை பகட்டும் பணமும் கேலி செய்வதாக கதையை அமைத்து அந்த காதல் வெல்லப்போகும் கணத்தில் கப்பல் விபத்துள்ளாகி மூழ்கியதாகவும். அந்த சோக நிகழ்வை அந்த கதையின் நாயகி தனது தள்ளாத வயதில் நினைவு கூர்வதையும் இயக்குனர் அழகாக கதையமைத்து கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்போது கல்லூரியின் கதைக்கு வருவோம். அங்கே முதல் காட்சியில் மூழ்கிய கப்பலை தேடும் காட்சியை காட்டுவார்கள், இங்கே இவர்கள் அந்த இடத்தை தூய்மை செய்யும் காட்சி. அங்கே கதா நாயகன் கப்பல் புறப்படும் போது ஓடோடி வந்து ஏறுவான். இங்கே நாயகன் ஓடும் வண்டியில் ஓடோடி வந்து தொற்றிக்கொள்வான். அங்கே ஆரம்ப காட்சியில் அனைவரும் மகிழ்ந்து இருக்கும் சிரித்துகொண்டிருக்கும் வேளையில் நாயகி மட்டும் மனதுக்குள் அழுது கடைசியில் தற்கொலைக்கு துணிவாள். இங்கே கல்லூரியின் அறிமுக வகுப்பில் அனைவரும் அகமகிழ்ந்து இருக்கும் வேளையிலே நாயகி எதையோ நினைத்து அழுத வண்ணமாகவே இருப்பாள்.
அங்கே ஏழையின் உலகை கண்ட நாயகி நாயகனின் உருவம் மற்றும் ஏழைகளுக்கே இருக்கும் பரிவையும் கண்டு அகமழிந்து அவனுடம் காதல் கொள்வாள். இங்கே இவளும் முதலில் ஏழைகளை பார்க்க பிடிக்காமல் இருந்தாலும் பிறகு அவர்களது பரிவில் மகிழ்ந்து டெல்லி சென்று படிக்கும் வாய்ப்பையும் கைவிடுவாள். அங்கே மாப்பிளை இவர்களது காதலை விரட்டி அடிக்க முயல்வான். இங்கே நட்பு என்ற வட்டமும் சூழ் நிலையும் இவர்களை விரட்டும். அங்கே கேட் வின்சுலேட்டை சுற்றியே கதை பின்ன பட்டிருக்கும், இங்கே நாயகியை சுற்றியே கதையும் பின்னி வரும்.
இப்படி ஒவ்வோரு காட்சிக்கும் ஒற்றுமையை விளக்கிகொண்டே போகலாம். ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், அங்க்கேயும் ஒரு பெரிய விபத்தை படமாக்கினார்கள். கடைசி 30 நிமிட காட்சிக்காக ஒரு அருமையான காதலை கதையாக கொண்டார்கள். இங்கேயும் அதே கடைசி 20 நிமிட காட்சிக்காக ஒரு கதை தேவைபட்டது. ஏன் வீன் சிறமம் என்று அதே கதையை அப்படியே தமிழில் ஆக்கிவிட்டார்கள் போலும். என்ன அங்கே விபத்தை வினாடிக்கு வினாடி எல்லா செய்திகளையும் விட்டுவிடாமல் அருமையாக சொல்ல முடிந்தது விபத்து உட்பட. ஆனால் இங்கே படுத்து உறங்கியதோ ஒரே பெண், பிறகு எப்படி மூவர் கைகோர்த்த வண்ணம் இரந்தார்கள் என்று படத்தில் விளக்கம் இல்லை. அவ்வளவும் விளக்கமாக எடுக்கப்பட்ட காட்சியாக இருந்து இருக்கும். அந்த காட்சிகளின் கோரமும், அதன் பால் ஏற்பட போகும் குழப்பங்களையும் மனதில் கொண்டு தனிக்கை குழு வெட்டி இருக்கும். இவ்வளவு பணம் கொடுத்ததே அதிகம் இனிமேல் எல்லாம் பணம் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லி இருப்பார் போலும். வந்த வரையிலும் போது என்று விட்டு வைத்து விட்டார் போலும் இயக்குனர்.
நல்ல முயற்சி, இனிமேல் யாரும் டைடானிக்கு படம் தமிழில் வரவே இல்லை என்று புலம்பமுடியாது சென்சு அண்டு சென்சபலிட்டி போல.

சேது கால்வாய் திட்டம் வழக்கில் தடாலடி தீர்ப்பு. அனைத்து மக்களும் மகிழும் வண்ணமாக தீர்ப்பு வந்ததால் தமிழக அரசு மகிழ்ச்சி.

அறிவித்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அதற்கு காரணம், குறுக்கே இருப்பது இராமருக்காக குரங்களும், அணில்களும் சேர்ந்து கட்டிய பாலம். அது பூசைக்கு உரிய இடம் என்றும் மக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை நொடிக்கு 100 தடவையாவது சென்று வணங்கிவரும் புண்ணிய இடம் என்றும் வழக்கை தொடுத்து. விசாரணையில் எப்படி எங்கு சென்று வழிபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த பாலம் இருக்கு இடம் தேடி படகிலே செல்வதாகவும். அப்படி அங்கே எங்கே இடம் என்று தெரிவதற்கு ஒரு அடையாள கல்லை வைத்துவிட்டு வந்ததாகவும். மறுபடியும் அங்கே செல்லும் போது சரியாக அந்த அடையாள கல்லை பார்த்து அங்கே சென்று வழிபடுவதாகம் நீதி மன்றத்தில் சுசா தெரிவித்தார்.

அப்படி அந்த அடையாள கல் நீரிலேயே மூழ்காமல் இருக்கிறதா என்று நீதியரசர்கள் கேட்ட கேள்விக்கு, குரங்குகளும் அணிலும் பாலம் அமைத்த போது பாலமே அடிவாரம் ஏதும் இல்லாமல் மிதந்து கொண்டு இருந்த இடம் அது. அப்படி பாலமே மிதந்தது என்று சொன்ன போது யாரும் எந்த கேள்வியும் கேட்க்கவில்லை, ஆனால் இன்றைக்கு நான் வைத்த அடையாள கல் மூழ்காதா என்று எப்படி கேட்க்கலாம் என்று கேட்டு நீதியரசர்களை திகைக்க வைத்துள்ளார் சுசா.

நீங்கள் ஒருவர் மட்டும் சென்று வழிபடுவதால் எல்லாம் அது புணிததளம் என்றோ, வழி பாட்டுக்குறிய இடம் என்றோ அறிவிக்கமுடியாது என்று நீதியரசர் சொல்ல முட்ப்பட, உடனே சுசா எழுந்து தினமும் கோடான கோடி மக்கள் அன்றாடம் அங்கே செல்வதாகவும். அதிலே பல மக்கள் நீரில் உள் நீஸ்சலில் உள்ளே சென்று அந்த பாலத்திற்கு பாலும் தேனும் சந்தனமும் ஊற்றி வந்து கொண்டு இருப்பதாலும் தான் செயற்கைகோள் படங்களில் அந்த பாலம் முழுவதும் அழகாக தெரிவதாக நாசா ஆராய்ச்சி நிறுவனமே ஒரு 10000 சான்றிதழ்கள் வழங்க்கியுள்ளதாகவும். மேலும் அந்த பாலம் இருப்பதால் தான் மீனவர்கள் யாவரும் வலையை தோலிலேயே தூக்கிகொண்டு சென்று முதலில் மீன் பிடித்தார்கள் என்றும். பிறகு அப்படி பிடித்த மீனை அவ்வளவு தூரம் தூக்கி வருவது கடினமாக இருப்பதால், தற்பொழுது எல்லாம் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லாம் தூண்டிலோடு தான் செல்கிறார்கள். அதனால் இந்திய பொருளாதாரமும், மீனவ மக்களும் மேலும் மேலும் செழிப்பு பொங்கி வழிந்து ஆறாக ஓடுவதாவும் தெரிவித்தார். ஆகையால் இனிமேல் நான் ஒருவன் மட்டும் என்று சொல்லாதீர்கள் என்று நீதியரசரின் தலையில் ஒரு போடு போட்டு சொன்னார்.

இந்த வழக்கோடு வழக்காக சுற்றுப்புற சூழழ் ஆர்வலர்கள் பலர் கூடி, நாட்டில் எல்லா இடங்களிலும் எங்குமே சுற்றுப்புற சூழழ் பாதிப்பே இல்லை என்றும். அப்படி தோன்ற வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் திட்டங்களை திட்டமிடும் போதே சென்று அவர்கள் எழுதவும் வரையவும் வைத்துள்ள எழுது கோல்களை மறைத்து வைத்துவிட்டதால் அந்த மாதிரி எதுவுமே நாட்டில் இல்லை. அப்படி அங்கே இல்லாத ஒன்றை இங்கே இப்போது கடலில் நடப்பதாகவும். அந்த குழுவில் இருக்கும் அனைவரும் நீச்சல் தெரியாது என்றும் அதனால் அந்த கருவிகளை எடுத்து மறைத்து வைத்து வேலைகளை முடக்க முடியவில்லை என்றும். அதனால் நீங்கள் அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள்.

நீதியரசரோ உடனே சட்டென்று சுசாவை பார்த்து, நீங்கள் இந்த சுற்றுப்புற ஆர்வலர்களை நாளை அந்த பாலம் வழியே கூட்டிச்சென்று அந்த பாலம் அருகாமையில் இருக்கும் அடையாள கல்லில் உட்காரவைத்து விட்டு வாங்கள். அவர்களும் இரவோடு இரவாக கருவிகளை மறைத்து வைத்துவிட்டு காத்திருக்கட்டும். பிறகு காலையில் மறுபடியும் நீங்கள் அந்த பாலத்தில் சென்று அவர்களை கூட்டி வந்துவிடுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

இந்த கட்டளையை கேட்ட ஆர்வலர்கள் யாவரும் அமெரிகாவுக்கும் ஆப்பிகாவிலும் மாநாட்டுக்கு செல்ல இருப்பதால் அடுத்த யுகத்தில் சென்று வேலையை கட்டாயம் முடித்து வருவதாக உறுதிகூறி கையொப்பம் மிட்டுள்ளார்கள். சுசாவோ, அப்படி பாலம் வழியே கூட்டி செல்லவேண்டும் என்றால் முதலில் நீதியரசர்கள் ஈழத்து தகராரை சரி செய்யவேண்டும் என்றும். பிறகு அந்த பாலத்திற்கு இனையாக இன்னும் 6 பாலங்களை நாட்டில் இருக்கும் குரங்குகளையும் அணில்களையும் அழைத்துக்கொண்டு தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்றும். அப்படி கட்டும் அனைத்து பாலம்களுக்கும் அடிவரம் ஏதும் இல்லாமல் மிதக்கும் வண்ணமாக கட்டி தரவேண்டியது தமிழக அரசின் கடமை என்றும். இப்படி நீங்கள் உத்தரவு இட மறுத்தால் என்ன ஆகும் என்று திருச்ச வேலுவை கேட்டுப்பார்க்கவு என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார் சுசா.

சுசா சொன்ன செய்திகளால் என்ன செய்வது என்று தெரியாத நீதியரசர்கள், சும்மா தடைவிதிக்க சொன்னால் கூட பரவாயில்லை இன்னமும் 6 பாலங்கள் வேண்டும் என்றல்லவா உத்தரவிட்டு சென்றுள்ளார் என்று, வழக்கு கூடும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வழக்கை தள்ளிவைத்துக்கொண்டே செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவுகின்ற இந்த சூழலில். ஒரு வேளை மொத்தமாக தடைவித்து மேலும் ஒரு 6 பாலங்கள் கட்டவேண்டும் என்று உத்தரவிட்டல் என்ன செய்வது என்றும் தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாகவும் செய்திகள் வருகின்ற நிலையில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மக்களும் குழம்பியுள்ளார்கள்.

இந்த முயற்சியை முறியடிக்கு முகமாக தமிழக அரசு இன்னமும் ஒரு வழக்கை தொடுக்க இருக்கிறது. அதிலே இராமர் இந்தியாவின் எந்த எந்த பகுதிகெல்லாம் சென்றார் என்றும். அப்படி அவர் சம்பந்தமாக எழுதப்பட்ட அத்தை நூல்களில் சொல்லி இருக்கும் அத்தனை இடங்களிலும் எந்த எந்த இடங்கள் பாதுகாக்க படவேண்டிய இடங்கள் எவைகள் என்று கண்டறிந்து நீதி மன்றம் சொல்லவேண்டும் என்றும். அப்படி அறிவிக்க படுகின்ற அத்தனை இடங்களையும் முறையாக வேலி இட்டு இனிமேல் யாரும் எந்த சேதமும் விளைவித்துவிடாமல் இருப்பதற்கு அமைச்சர் பாலுவின் தலைமையில் இரு குழுவமைத்து அமெரிக்கா, ருசியா, ஆத்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள அறிவாய்ந்த அனுபவம் மிக்க பெறியாளர்களை டன் கணக்கில் டாலர்களையும் பவுண்டுகளையும் கொட்டி எப்படி பட்டவேளிகளை அமைக்கவேண்டும் என்ற ஒரு திட்டத்தை தயாரிக்க வைக்கவேண்டும் என்றும். அந்த திட்டம் தயாரிப்பதற்குள் எங்களது ஆட்சி முடிந்துவிடும் என்றும் அதனால் இந்த திட்டங்களை முடிக்கும் வரையி கழக ஆட்சியை கால வரையின்றி நீடிக்கவேண்டும் என்றும் வழக்கில் அறிப்பத்தாக ஊள்ளார்கள். மேலும் இராமன் வென்ற பூமியான இலங்கையை அங்கே உள்ள மனிதர்களை எல்லாம் அகற்றிவிட்டு இனி எந்த ஒரு மனிதனும் அங்கே செல்லாமல் இருக்கம் படி உடனடியாக வேலிகள் அமைக்கவேண்டும் என்றும் அதற்கு அங்கே சேது கால்வாய்கால கொண்டு வந்த கருவிகளை பயன் படுத்த போவதாவும். அதற்கு உதவும் வித்தத்தில் இந்திய முப்படைகளையும் உடனே இலங்கை அனுப்பவேண்டும் என்று கேட்க்கவுள்ளார்கள் என்றும் தெரிகிறது. மேலும் இந்த வேலைகள் அனைத்தும் முடியும் வரையில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் கட்டிடமோ ஏன் கழிப்பிடம் கூட கட்டகூடாது என்றும். அப்படி அனுமதித்தால் நீங்கள் தடைவித்தித்து அளித்த தீர்ப்பு பொருளில்லாமல் போகும் என்றும் தெரிவிதுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

தமிழகம் எந்த காலத்திலும் தொழிலும், வளத்திலும் முன்னேறக்கூடாது என்று கல்கத்தா முதலாலிகளிம், இன்னமும் சுசா வடக்கில் சுயேட்சையாக வடக்கில் நின்று செயித்தகாலத்தி கடன் கொடுத்த பிடிக்கடை முதலாளிகள் வரை இப்படி ஒரு முன்னேறம் தமிழகம் பெறப்போவதை கண்டு சுசாவை கண்டுகொள்வதற்காக தேடுவதாகவும். சுசாவோ அண்டார்டிக்காவிலோ இன்னனும் எங்க்கு எல்லாம் மனிதர்கள் சென்று பார்க்கமுடியாத இடங்க்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் சென்று பாடம் எடுப்பதாக சொல்லி ஓடிவிட்டார் என்று அறிந்த அந்த முதலாலிகள், பேசாமல் இப்படி ஒரு திட்டத்தை நாங்களே தயாரித்து நிறைவேற்றி இருந்தால் இராமனின் பெயரால் இன்னமும் ஒரு யுகத்திற்கு தொழில் நடத்தி இருக்கலாம் எல்லவற்றையும் கெடுத்தானே இந்த சுசா என்று கண்கானிக்க அவரவர் தரப்பில் ஆட்களை விட்டு சென்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இப்படி கனவு கண்டு பயந்து எழுந்த சுசா, இராமா இராமா எதையும் தாங்கும் இதயத்தையும். உதையும் தாங்கும் உடலையும் கொடப்பா என்று வேண்டிக்கொண்டு வழக்கு பொதிகளை எடுத்துகொண்டு நீதிமன்ற வளாகம் சென்றார். வாங்கிய எலும்பு துண்டுக்கு குறைக்கவில்லை என்றால், எலும்பு போட்டவன் எலும்பை அல்லவா எடுத்துவிடுவான். வழக்கு என்ன முடிவுக்கு செல்கிறது என்று பார்ப்போம்.