Sunday, March 16, 2008

இயக்குனர் பாலசந்தரின் இரசிகர்கள் என்னை மன்னிப்பாராக.

பொய் என்று ஒரு திரைபடத்தை பாலசந்தர் கொடுத்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்த படத்தில் தனது வழக்கமான காதல் கதையை வித்தியாசமான பின்னனியில் கொடுத்திருந்தார். தனக்குள் ஆசையும் வெளியில் விருப்பமும் இல்லாதது போல் இருந்துவிட்டு பிறகு காதலனிடமே உனது காதலுக்கு விலையாக காதலையே தரவேண்டும் என்று கதை பயணிக்கும்.

தனது வழக்கமான திரைகதையில் வருவதை போல் இரசிகர்கள் ஒன்று நினைக்க மற்றொன்று அங்கே நடைபெற்று முடியும் விதமாக கதையை முடித்தும் இருந்தார் . அனேகமாக படத்தை பார்த்த அனைத்து இளகிய மனம் கொண்டோரும் பாலசந்தரை சபித்தும் திட்டி தீர்த்தும் இருக்ககூடும்.

நேர்மைக்கு வள்ளுவனார், அவர் ஒரு அரசியல்வாதி. கம்பன், கல்லூரி முடித்தும் விடலையாகவே இருக்கும் இளைஞன். தனது திறமைக்கு கிடைக்காத மதிப்பும் மரியாதையும் தனது தந்தையின் பெயரால் கிடைப்பதை விரும்பாதவன். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பிணக்கில் கதை நகரும் போது சாலை விபத்து ஒன்று நடக்கிறது.

அந்த விபத்தில் வள்ளுவனாரின் தனிப்பட்ட வாழ்க்கையில்லும் அரசியல் வாழ்க்கையிலும் புயல் வீச துவங்குகிறது. விதியில் விளையாட்டால் ஓட துவங்கிய கம்பன் இலங்கையில் வந்து மறைவு வாழ்க்கையை மெற்கொள்ள, அங்கே மறுபடியும் விடலை விளையாட்டாய் காதல் கொள்கிறான் கம்பன்.

இது வரையில் படம் ஒரு சாதாரண படமாகத்தான் செல்லும். ஆனால் காதல் தொடங்க அவனுக்கு உதவியாக ஒரு தந்தையையும் , பின்னர் விதியும் என்று இரண்டு கதை பாத்திரங்கள் வரும். இதிலே தந்தையாக வரும் பாத்திரம் ஏன் என்று ஒரு விளக்கம் கூட வரும் ஆனால் விதி பாத்திரம் ஏன் என்று விளக்கம் இல்லாமலே போகும். இவர்கள் இருவரும் கதையில் வந்ததும், இவர்களை சுற்றியே கதை அதன் பிறகு நகரும்.

இதுவரையில் வந்த தெளிவான திரைக்கதை இதன் பின்னர் குழம்பும் குழப்பம் மக்களை தலை சுற்ற வைக்கும். இந்த குழப்பம் ஏன் எதற்கு என்று மக்கள் சிந்திக்கும் முன்னே மக்களால் தாங்க முடியாத ஒரு முடிவை சுமத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார் பாலசந்தர் இந்த பொய்யை சொல்லி.

வித்தியாசமான கதையும், இது வரையில் இல்லாத வசனங்களை அதுவும் பெண் பாத்திரங்கள் பேசுவதாகவும். இது வரையில் கதைகளிலும் கட்டுரைகளிலும் எடுக்காத ஒரு முடிவாக பெண் பாத்திரங்கள் எடுப்பதாக முடியும் வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த பாலசந்தர், இந்த படத்தையும் ஒரு வித்தியாசமான படமாக கொடுக்கத்தான் அந்த இரண்டு பத்திரங்களையும் கதையில் தேவையே இல்லாமல் சேர்தார் போலும் என்று தோன்றும் முதல் பார்வையில்.

மரணம் வருகிறது என்று சொல்வோமே தமிழில் அந்த மரணத்திற்கு ஒரு ஆசை. கொஞ்ச நாள் விடுப்பில் செல்ல வேண்டும் என்று. அதுவும் இந்த விடுப்பில் மக்கள் ஏன் வாழ்க்கையை விட்டு மரித்து செல்ல இவ்வளவு தயங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ள் வேண்டும் என்று.

இதை தேடி வரும் மரணத்திற்கு அதன் விடுப்பு முடியும் வரையில் உடன் இருந்து மரணம் வாழ்க்கையை பற்றியும் ஏன் மனிதன் அதை விட்டு விலக இவ்வளவு தயக்கம் காட்டுகிறான் என்றும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்க ஒரு மனிதனை தேர்ந்தெடுகிறது.

அப்படி மரணம் தேர்ந்தெடுக்கும் மனிதன் மிகவும் நேர்மையானவர். ஒரு பெரும் பணக்காரரும் கூட. பொதுவாக வசதி வாய்ப்புகள் இருந்தும் நல்லவனாகவும் நேர்மையாளனாகவும் இருப்பவனே உண்மையான நல்லவன் என்று அவரை தேர்தெடுக்கிறது மரணம்.

வருகின்ற அவரது பிறந்த நாள் விழாதான் அவரது கடைசி நாள் என்றும், அது வரையில் விட்டு வைக்க எனக்கு வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள உதவ வேண்டும் என்று கேட்டு வரும் மரணம் ஒரு அழகிய வசிகரனின் உடலை எடுத்துக்கொண்டு அவனது உருவில் வரும். அந்த இளைஞன் தான் இந்த மனிதன் இளைய மகளின் மனதை கவர்ந்தவனாக வருபவன்.

மரணத்திற்கும் அவருக்கும் இடையிலான ஒப்பந்தமோ அல்லது இந்த மனிதனாக வந்து இருப்பது மரணம் என்று யாருக்கவது தெரிவித்தால் அந்த கணமே உயிரை கொண்டு போய்விடுவேண் என்று ஒரு ஒப்பந்தம்.

அன்று முதல் அந்த மனிதனுடனே வளைய வருகிறது அந்த மரணம். நிறுவனத்தின் இரகசிய ஆலோசனையிலும் இடம் பெறும்போது சந்தேகம் வலுக்கிறது அவரது நிறுவனத்தினருக்கு. அவர்களில் ஒரு இளைஞன் இவருக்கு மருமகனாக வர இருப்பவன். வசீகரமான தோற்றம், ஆழ்ந்த சிந்தனை, சின்ன வயதிலே எத்தனை முதிர்ந்த அறிவு என்று வியந்த இவருக்கு பணம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வான் அவன் என்ற விவரம் தெரியும் போதும்.

மூத்த மகள் தந்தையிடம், அம்மாவிற்கு பிறகு உடன் இருந்தே கவனித்தும் கூட என் மீது இல்லாத அக்கறை இளையவளிடம் ஏன் என்று புரியாமல் கேட்கும் போதும் சரி. மனதை கவர்ந்தவனின் உருவில் வந்து இருக்கும் மரணம் வேர்கடலை சட்டினியில் ஆரம்பித்து வாழ்க்கையின் சுவையை ஒன்றோன்றாக சுவைத்து பிறகு பாலுணர்வையும் கண்ட பிறகு அந்த இளையவளையும் தன்னுடன் அழைத்து செல்ல போவதாக அறிவித்த போது துடித்து போன அவர். காதலுக்கும் பாலுணர்வும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருந்தாலும் வெவ்வேறு என்று விளக்கம் சொல்லி புரிய வைப்பதும் என்று மிகவும் அழகான காட்சிகளை காண முடியும் அந்த படத்தில்.

படத்தின் பெயர் "மீட் சோ பிளாக்கு" Meet Joe Black. முதல் காட்சியில் வீட்டில் இருந்து நிறுவனதிற்கு பறந்து செல்லும் தந்தை மகளை அப்படியே மகள் பணியாற்றும் மருத்துவ மனையில் இறக்கி விடுவதாக அழைத்து செல்லும் போது, திருமணமே செய்து கொள்ள போவதாக இல்லையா என்று மகளிடம் கேட்க அவளோ மனதில் இன்னமும் அந்த எண்ணம் எல்லாம் வரவில்லை என்று சொல்ல. காதலும், அதன் அவசியமும் எப்படி தேர்ந்தெடுப்பது என்று தந்தை சொல்லும் விபரங்களைத்தான் பொய் திரையில் மகனிடம் காதலிக்க சொல்லித்தருவாத வரும் காட்சியின் வசனங்கள்.

நேர்மை தவறா அரசியவாதியாக வரும் வள்ளுவனார் இந்த பணக்காரரின் பாத்திரம். உடன் துடிப்பான வசீகரமான இளைஞனாக வரும் சோ பாத்திரம் கம்பன். சோ காதலை உணரும் கதை பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டார் போலும்.

அதே சாலை விபத்தில் மாறும் திரைக்கதையும் மரணம் மனிதனாக வரும் காட்சிகளும்.

சோ பிளாக் போட்டுவரும் அதே ஆடை அலங்காரங்களை அப்படியே பிரகாசு இராசுக்கு போட்டு விட்டு அழகு பார்த்ததும். சோ பிளாக்கை காட்டி நிறுவனித்தில் சர்ச்சைகள் வருவதும், பிறகு இருவரும் சேர்ந்து அதை சமாளிப்பதும், கம்பனால் வள்ளுவனார் அரசியல் வாழ்க்கைக்கு வரும்
நெருக்கடி.

இப்படி முழு திரைக்கதையும் பிரித்து சொல்லிவிடலாம். இவ்வளவும் செய்த மரணம் காதலியாக நினைத்தவளின் மனது நோகாமல் இருக்க உடலுடன் தந்தையை அவரிடம் இருந்து விரித்து செல்லும் கால் காதலனை மீட்டு கொடுத்துவிட்டு போன முடிவையும் கொடுத்து இருக்கலாம். அப்படி இருந்தால், இந்த இரண்டாவது தந்தையும், விதியின் தோன்றலும் எதற்கு என்று நாம் அனைவரும் கேட்ப்போம் அல்லவா..

விதிப்பாத்திரம் பேசும் மொழிகள், இளையவளை பார்க்க மருத்துவமனைக்கு போன மரணத்தி விமர்சிக்கும் வரதானோளிடம் வரும் வசனங்களையுக் ஒத்துபோவதை பார்க்க முடியும்.அனந்து அவர்களின் பிரிவு உங்களுக்கு இவ்வளவு ஒரு பெரிய இழப்பு என்று நாங்கள் இது வரையில் நினைக்கவில்லை ஆனால் இனிமேல் கட்டாயம் நினைப்போம்.

4 comments:

Anonymous said...

Panimalar,
Please do not attempt writing critiques and reviews.You stink.After all you are a dumb bitch and a cjeap dravidian tamil swine.

')) said...

வாங்க அனானி நண்பரே, கருத்து சொல்ல முடியவில்லை என்றால் சும்ம இருந்துவிட்டு போகவேண்டியது தானே, ஏன் இந்த வசைபாடு நண்பரே.

')) said...

பனிமலர்,

நல்லாவே விமர்சனம்/அலசல் பண்ணி இருக்கீங்க ! பாராட்டுக்கள்.

நம்ம அனானி நண்பருக்கு ஏன் இவ்வளவு கோபம், ஒரு சாதாரண மேட்டருக்கு, அதான் புரியல !!!

எ.அ.பாலா

')) said...

வாங்க எ.அ.பாலா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பாலசந்தரின் மீது எனக்கு எப்பவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒரு நல்ல படைப்பாளி என்ற முறையில். அதே சமயத்தில் ஒரு சில படங்களை தவிற அவரது மற்ற படங்களில் ஒரு விதமான எதிர்மறையான கருத்தையே விதைத்து செல்வார். அதனால் அவர் மீது எனக்கு எப்பவும் கோபமே. உதாரணமாக அவரது படங்களில் வரும் புரட்சிகர பெண் பாத்திரங்கள், காலத்திற்கு மீறிய வசனங்களை சாதாரணமாக அடிக்கு நூறு பேசுவார்கள். கேட்கவே ஆகா ஓகோ என்று இருக்கும். ஆனால் கடைசியில் அந்த புரட்சி பெண் பாத்திரம், இப்படி எல்லாம் பேசியதாலும் நடந்து கொண்டதனாலும் பட்ட மரமாக, தனி மரமாக அம்போ என்று முடிப்பதாகத்தான் கதைகளை முடிப்பார். இவ்வளவும் சொல்லி எச்சரிக்கிறாரா என்றால் இல்லை என்று தான் சொல்வார் ஆனால் தொடர்ந்து இது போல் தான் படங்களை கொடுத்துள்ளார். அதனால் அவர் மேல் எனக்கும் எப்பவும் கோபம் உண்டு.

பெயரை கூட சொல்ல தைரியம் இல்லாத அந்த நபரின் விமர்சனங்களை எல்லாம் வெளியிட வேண்டும் என்று இல்லை தான். இருந்தாலும், தான் யார் என்று சொல்ல தைரியம் இல்லாதவன் எல்லாம் என்னை மிரட்டுவது தான் வேடிக்கையாக இருந்தது, அது தான் வெளியிட்டேன் அந்த தொடை நடுங்கியின் இலட்சனம் மக்கள் அறியட்டுமே என்று.