Delivery Man (2013)
மிசுகின் பிசாசு போல் இந்த படமும் உங்களுக்கு பிடிக்கலாம் - Delivery Man
பொதுவாக பிற நாட்டுக்கதைகளோ அல்லது நாவல்களோ சரிதிரங்களோ நமக்கு மிகவும் பிடித்தால் அதை தமிழில் எழுதுவதும் படமாக எடுப்பதும் வழக்கதில் இருக்கும் ஒன்று தான்.
போகின்ற போக்கில் அது என்னுடைய சொந்த கற்பனை என்றும் அந்த படைப்பாளிகள் வாதிடுவதும் உண்டு.
இந்த வகை செய்கைகளை ஒரே அடியாக அப்படியே எடுத்து போட்டுக்கொண்டு விட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. அந்த வகைகளில் மிகவும் எளிதாக அப்படியே தமிழ் வசனங்களை மட்டும் பேசுவதை போல் வந்த படங்களும் கதைகளும் உண்டு, மானே தேனே பொன் மானே என்று போட்டு கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் என்றும் வருவது உண்டு.
அந்த வகையில் குற்றம் 23 Delivery Man இல் இருந்து மானே தேனே பொன் மானே என்று வந்த வகை.
எப்படி கதையை மாற்றி இருக்கிறார்கள் என்று மட்டும் பார்ப்போம்.
ஆங்கிலத்தில் நாயகன் ஒரு அப்பாவி மனிதர் வீர சாகசங்கள் செய்யவில்லை என்றாலும் குடும்பம் பாசம் நேசம் என்று வரும் எதார்மகாக வரும் பாத்திரம் அதாவது குற்றம் 23ல் வரும் நாயகியை போல்.
ஆங்கிலத்தில் நாயகி ஒரு கட்டுக்கோப்பான ஒரு காவல் அதிகாரி, அழகாகவும் மிடுக்காகவும் அதே சமயத்தில் ஒரு பாசமும் பொருப்பும் மிக்க ஒரு பெண்மணி அதாவது குற்றம் 23ல் வரும் நாயகன் போல்.
தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக தான் செய்த்த செலவுகளுக்கு கடப்பாரை வட்டிக்கு வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் நாயகனை கொலை செய்ய வரும் கூட்டம் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கின்றோம் பணத்தை திருப்பி கொடு இல்லை உனது குடும்பத்தையே கொன்று உங்களது தொழிலையும் சொத்துகளையும் எடுத்துக்கொள்வோம் என்று வரும். அதாவது குற்றம் 23ல் பணம் கொடு இல்லை என்றால் உண்மையை சொல்லி உன்னை சின்னா பின்னமாக்கிவிடுவோம் என்று சொல்வது/செய்வதும் போல்.
தனது பண நெருக்கடியை சமாளிக்க தொடர்ந்து தனது உயிரணுக்களை நன்கொடைகாக கொடுப்பதும் பணம் பெறுவதுமாக இருக்கும் ஆங்கில நாயகனுக்கு starbucks என்று புனைப்பெயர். குற்றம் 23ல் 23 என்று புனை பெயர்.
ஆங்கிலத்தில் தனது உயிரணுக்களால் பிறந்த பிள்ளைகள் தனது தந்தை யார் என்று மருத்துவ மனையை மிரட்டி தெரிந்து கொள்ளும் முயற்சியில் புனைப்பெயர் மட்டும்மே கண்டுபிடிக்கிறார்கள், பிறகு அது யார் என்று உண்மை பெயரையும் ஆளையும் தேடி நீதிமன்றம் போய் போராடுகிறார்கள். குற்றம் 23ல் வில்லம் மருத்துவமனைக்கு தெரியாமல் அவைகளை திருடுகிறார்.
ஆங்கிலத்தில் தனது பிள்ளைகளை படிப்படியாக அடையாளம் கண்டுக்கொண்டு நெகிழ்ந்து அவர்களின் வாழ்கையை உயர்த்த ஒரு தகப்பனாக எப்படி எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் பங்களிக்க முடியும் என்று யோசித்து செயல்படும் மிகவும் நெகிழ்ச்சியான இனிமையான அனைவரும் உணர்ச்சி வயப்படும் அழகில் எடுத்து இருப்பார்கள், குற்றம் 23ல் ஒரு சப்பை காரணத்தை சொல்லி அவனது குழந்தைகளை வில்லன் கொல்வான்.
தமிழில் இப்படி நடக்கும் கொலைகள் ஏதோ ஒரு அவசர கதில் வந்த இடை சொருகலாக இருப்பதாக விமர்சனம் எழுதும் அனைவருக்கும் விளக்கம் இது தான், வலிந்து கதையையும் சம்பவங்களையும் மாற்ற முடியாமல் அந்த கதையில் காப்பாற்றினால் இந்த கதையில் கொல் என்று கண்மூடி தனமாக எழுதியதின் விளைவுகள் அவைகள்.
ஆங்கிலத்தில் நாயகனின் தந்தையின் பொருப்பு மிக்க செயல்களும் வில்லன்களிடம் இருந்து மகனை காப்பாற்ற தான் வளர்த்த தொழிலில் உள்ள பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்து பணம் மட்டுமே வாழ்கை இல்லை அது வாழ்கையின் ஒரு பகுதி தான் என்று சொல்லும் சம்பவங்கள் குற்றம் 23ல் காணோம்.
ஆங்கிலத்தில் அது வரை நாயகனின் குழந்தையை சுமந்தாலும் இப்படி இளிச்சவாயனாக இருக்கும் இவனையா மணம்புரிவது என்று இருக்கும் நாயகி நாயகனின் அம்மாவின் கடைசியாசையை எப்படி நிறைவேற்றினான் என்று தந்தை சொல்லும் அவனின் மறைந்த பக்கங்களின் செய்கைகளில் நெகிழ்ந்து போய் என்னையும் அப்படி பார்த்துகொள்வாய என்று கேட்கும் காட்சிகளை குற்றம் 23ல் வெறுமனே வீடு புகுந்து நான் கட்டிக்கொள்கின்றேன் என்று மாற்றியுள்ளார்கள்.
மற்றபடி குற்றம் 23ல் சொல்லிக்கொள்ளும் படி எந்த தனித்துவமும் இல்லை.
என்ன கதையும் திரைக்கதையும் துவக்கதில் இருந்து கடைசிவரை பறக்கின்றது அவ்வளவு தான். இன்னும் இது போல் ஆங்கிலத்தில் அழகான ஆழமான குடும்பக்கதைகள் நிறைய உண்டு அவைகளையும் இதே போல் 360 டிகிரிக்கு மாற்றி மானே தேனே பொன் மானே போட்டு படம் எடுங்கள் ஐயா நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த ஆங்கில கதையை அப்படி தமிழில் எடுத்தால் 2 நாள் கூட ஓடாது என்றது உறுதி, நமக்கு எல்லாம் குடும்பம் என்றால் அது தமிழ் தொடரில் காட்டுவது போல் குடுபத்தில் அடுத்தவருக்கு குழிப்பறித்தல் மட்டுமே ஆனால் ஆங்கிலத்திலோ மிகவும் அழகான ஆழமான குடும்ப கதைகளை தேடித்தேடி படமெடுக்கிறார்கள்.