Wednesday, June 22, 2016

பாசக - மோடி, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை எப்படி விரயம் செய்கிறது பாருங்கள்

சர்வ தேச யோக தினமாம் நேற்று அந்த தினத்தை ஒட்டி நாடு முழுதும் அந்த ஒற்றை நாளில் கோடான கோடி மக்கள் இந்தியாவில் யோகா செய்வதாக வெளி நாடுகளுக்கு கணக்கு காட்ட எண்ணி. பெரு நகரங்கள் மற்றும் மாவட்ட தலை நகர்கள் வரை பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி நெடுநாள் பயிற்சி கொடுத்து நேற்று மைதானங்கள் முழுதும் அரங்காக அமைத்து கூட்டம் கூட்டமாக கூடி படம் எடுத்து வெளி நாடுகள் பர்க்கும் படி வெளியிட்டுள்ளார்கள் பாசகவினர்கள்.

இதில் அரியானாவில் நடந்த கூட்டத்தில் மட்டும் 30,000 மக்கள் பங்கு கொண்டதாக தினமலரில் செய்தி வெளியாக இருக்கிறது. ஆக இரு மனிதனுக்கு ஒரு யோக விரிப்பு என்றால் அங்கே குறைந்தது 30,000 விரிப்புகள் பயன் படுத்து இருக்க வேண்டும்.

ஒரு விரிப்பு சுமார் 200 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட 60 கோடி வெறும் விரிப்புகளுக்கு மட்டும், மேலும் மோடியை தவிர மற்ற அனைவரும் சீருடை அணிந்து இருப்பதையும் படங்களில் நம்மால் காண முடியும். இரு உடை 500 ரூபாய்க்கள் என்று வைத்துக்கொண்டால் கூட 15 கோடி ஆகுகின்றது.

இந்த 30,000 மக்களும் வெறும் மாணவர்கள் இல்லை வேலை பார்ப்பவர்களும் கூட 80% என்று வைத்துக்கொண்டால் கூட 24,000 ஆவர்.

அனேகமாக மோடியுடன் யோகம் செய்யப்போகும் மனிதர்கள் கட்டாயம் சாலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அது பாசக தூக்கிப்பிடிக்கும் வர்க நிலைகளுக்கு நேர் எதிரானது. ஆக ஒன்று அரசு உயரதிகாரிகளாக இருக்க வேண்டும் அல்லது அதாணி குழுமத்தின் உயர் சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

 நேற்றோ திங்கள் கிழமை வேலை நாள், இந்த 24,000 பேருக்கு எவ்வளவு ஒரு நாளைய சம்பளம் இருக்கும், தலைக்கு மாதம் 30,000 என்று குறைந்த பட்ச்சம் வைத்துக்கொண்டால் கூட ஒருவருக்கு 1000 ஒரு நாளைக்கு ஆகும் ஆக 30 கோடி.

இத்தனை மக்களுக்கும் என்ன அந்த இடத்திற்கு சொந்த செலவிலா கூட்டிக்கொண்டு வந்து இருப்பார்கள், பாதுகாப்பு காரணங்கள் காட்டி சிறப்பு வாகனங்களில் வந்து இருப்பார்கள். ஒருவர் அரசு வாகங்களில் பயணிக்க இப்போது குறைந்தது 5 ரூபாய் ஆகுகின்றது. இதுவோ சர்வதேச யோக தினமாச்சே, படம் எடுப்பவர்களோ, படத்தை பார்ப்பவர்களோ வெளிநாட்டு காரர்கள். அவர்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்றால் பென்சு நிறுவனமோ அல்லது அவர்களுக்கு ஈடான நிறுவனத்தின் வண்டியில் வந்து இறங்கியதாக காட்டினால் தான் வெளி நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்றது பாசகவின் துவக நிலை தொண்டருக்கு கூட தெரியும். ஆக குறைந்தது இரு வரை கூட்டி வரும் செலவு அனேகமாக 250 ரூபாய் என்று குறைந்த பட்சமாக வைத்துக்கொண்டாலும் 7.5 கோடி என்று வருகின்றது.

யோகம் செய்ய வந்தவர்கள் வந்தும் யோகம் துவங்கி முடித்துவிட்டு செல்பவர்கள் இல்லை, வந்து களைப்பு தெரியாமல் இருக்க காலை சிற்றுண்டி, மற்றும் கிளம்பும் முன் உணவு என்று கொடுத்துதான் அனுப்பி இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் இந்த 3 மணி நேர தயாரிப்பில் வெளி நாட்டு மக்கள் பார்க்கும் காட்சிகளில் யோகம் செய்பவர்கள் எல்லாம் களைத்து போய் அல்லவா காட்சியளிப்பார்கள்.

அதனால் ஒருவருக்கு 250+250 என்று உயர் தர சைவ உணவு சரவணபவன் விலைக்கு வைத்தால் கூட 15 கோடி பணம் வருகின்றது.

வந்த அத்துனை மக்களும் சுத்தமான குடி நீர்ரும் மேலும் களைப்பு தீர்க்கும் பானங்களும் கொடுத்து இருக்க வேண்டும். அவைகளும் அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் நீர் மொந்தைகளாக இருந்தால் தான் இந்தியாவிற்கு மதிப்பு. ஒரு மொந்தை அமெரிக்க நிறுவனங்களால் விற்க்கப்படுவது குறைந்தது 35 ரூபாய்கள், ஒருவருக்கு வந்ததும் குடிக்க, பிறகு யோகத்து முன் பின் உணவுக்கு என்று வைத்துக்கொண்டால் கூட 4 மொந்தைகளாவது தேவை. ஆக 4.2 கோடியாவது செலவாகி இருக்க வேண்டும்.

இந்த யோகம் செய்யும் நிகழ்ச்சியில் மக்கள் வேர்க்க விருவிருக்க இருந்தால் பார்ப்பவர்கள் யோகம் செய்வது கடினம் என்று நினைத்து விளம்பரத்தை நம்பாமல் போய்விடுவார்கள் ஆக அத்தனை மக்களின் களைப்பு தீர்க்க ஒரு சின்ன அறைக்கு 1.5 டன் குளிரூட்டும் இயந்தரம் தேவை. இந்த வெட்ட வெளிக்கு இது போல் 10 மடங்கு இருந்தால் தான் கொஞ்சமாவது குளிர் உறைக்கும் ஆக  ஒருவருக்கு 1500 டன் குளிரூட்டும் சாதணம் தேவை.

குறைந்தது 4 மணி நேரமாவது இந்த சாதணம் ஓடியாக் வேண்டும், இயந்தர வாடகை, கொண்டு வர, போக, மின்சாரம் என்று வைத்துக்கொண்டால் கூட குறைந்தது ஒரு 30 கோடியாவது அகி இருக்கும்.

யார் யாரை எல்லாம் கூட்டி வருவது என்ற கணக்கு எடுக்க, பாசக அனுதாபிகளாக பார்த்து பிடிக்க என்ற செலவு ஒரு 30 கோடி ஆகி இருக்கும்.

இந்த மக்கள் அனைவருக்கும் புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டைக்கு தலைக்கு 100 முதல் 200 வரை செலவாக இருக்கும் ஆக மொத்தம் 6 கோடி ஆகி இருக்கும்.

இப்படி சர்வதேச யோக தினத்தில் கலந்து கொண்டார்கள் என்ற சான்றிதழும் நினைவு பரிசையும் கட்டாயம் வழங்கி இருப்பார்கள். ஒருவருக்கு குறைந்தது 500 என்று வைத்துக்கொண்டால் கூட 15 கோடி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி இரு பாசகவின் பிரச்சார கூட்டம் இதில் வந்தவர்களை எப்படி வெறுமனே என்று அனுப்புவது ஆக பாசகவின் விளக்க புத்தகம் முதல் யோகத்தின் பக்கவிளைவுகள் வரை கத்துக்குட்டிகள் வரை எழுதிய இந்தி மற்றும் சமசுகிரித புத்தகங்களை வினியோகம் ஆகி இருக்கும் அது ஒரு 15 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

ஆக குறைந்த பட்ச கணக்கா பார்த்தோமானால்

1) விரிப்பு 15 கோடி
2) வேலை பார்க்காமல் யோகம் பார்க்க கொடுத்த சம்பளம் 30 கோடி
3) போக்குவரத்து செலவு 7.5 கோடி
4) உயர்தர உணவு செலவு 15 கோடி
5) குடி நீர் மற்றும் களைப்பாரும் பானம் 4.2 கோடி
6) குளிரூட்டு செலவு 30 கோடி
7) பாசக அனுதாபிகளை கண்டுபிடிக்க ஆன செலவு 30 கோடி
8) புகைபடத்துடன் அடையாள அட்டை செலவு 6 கோடி
9) சான்றிதழ் மற்றும் பரிசு செலவு 15 கோடி
10) பாசக பிரச்சார நூல்கள் செலவு 15 கோடி

ஆக மொத்த குறைந்த பட்ச செலவு  167.7, ஏன் 170 கோடி என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு இடத்தில் நடந்த செலவு .

பிரதமர் இல்லாத இடத்தில் இதைவிட ஒரு 20 கோடி குறைவாக ஆகி இருக்கும் 150 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

இந்தியாவில் 29 மாநிலம் மற்றும் 7 தனி மாநிலம்.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள், உத்திரபிரதேசத்தி 72 மாவட்டங்கள், ஆக ஒரு சராசரியாக எடுத்தால் ஒரு மா நிலத்தில் 35 மாவட்டங்கள் என்று வைத்துகொண்டால் கூட மொத்தல் இந்தியா முழுவதும் 1050 மா நிலங்கள். ஆக மொத்தம் 150*1050 = 157500 கோடி செலவானதாக வருகின்றது.

இந்த பணம் அதாணியின் வீட்டில் இருந்து வந்தது இல்லை, வரிகட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சாதாரண மனிதனின் வரிப்பணம்.

பாசகவின் பிரச்சாரத்திற்கு ஏன் இந்த 1,58,000 கோடி மக்களின் வரிப்பணம் செலவு செய்ய வேண்டும் அதுவும் இந்த ஒரு நாள் கூத்திற்கு. இது இந்தியாவில் ஆன செலவு மட்டும்.

இது போக வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகத்தில் செய்த செலவை இந்த கணக்கில் சேர்க்கவில்லை.அதையும் சேர்த்தால் இந்த செலவு இரு மடங்காக வரும்.

இப்படி பாசகவின் பிரச்சாரத்திற்காக சாதாரண மக்களின் வரிப்பணம் எவ்வளவு தான் செய்வார்கள் இந்த மோடியும் அவர்களது கூட்டமும். யார் இதை எல்லாம் கேள்வி கேட்பது.

ஒரு வேளை விசயகாந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் ஒற்றை காலிலே ஒரு உதைவிட்டு கேள்வி கேட்டு இருப்பார், பாவம் அவருக்கு அந்த வாய்ய்பு இல்லை என்ன செய்ய..........

இந்த ஒன்றே கண்ணை கட்டுதே இன்னும் மிச்சம் இருக்கும் காலம் எல்லாம் எப்படி போகபோகுதோ...........அனுபவிங்க மக்கா அனுபவிங்க........


Saturday, June 18, 2016

துப்பு கெட்ட இந்தியும் அதை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

இந்த இந்தியின் வீச்சு தமிழர்கள் மட்டும் இல்லை உலகில் உள்ள அனைவரும் தானாக முன் வந்து இந்தி கற்றுக்கொண்டால் தான் தனது வாழ் நாளின் பலனை அடைந்தாக நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டதாக மோடியின் அரசு பரப்பிக்கொண்டு இருக்கும் இந்த நாளில் இந்தியின் துப்பு என்ன என்று பார்த்துவிடுவோம்.

சமீப காலமாக தொகா முதல் நாள் இதழ்கள் வரை சொத்த பரத்து என்றும் மூத்திர திட்டம் என்றும் அடிக்கடி வருவதை பார்த்து இருப்போம்.

என்ன தான் இந்தியில் சொத்த என்றால் தூய்மை என்ற பொருள் இருந்தாலும், மூத்திர என்ற சொல் சிறு முதலீடுக்கான வங்கியாக இருந்தாலும் தமிழில் அந்த சொற்கள் இழி சொற்களாக பயன்படுவது இந்தியை மார்தட்டும் மதவாதிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு கூடவா தெரியாது.

இந்த திட்டங்களின் பெயர்களை தமிழ்படுத்தி சவகர் வேலை வாய்ப்பு திட்டம் போல் கொடுத்தால் சொல்லவும் நினைவில் கொள்ளவும் எளிதாகவும் அறுவறுப்பின்மையாகவும் இருக்கும். ஆனால் இவர்களோ என்ன ஆனா;லும் மூத்திர திட்டம் சொத்த பரத்திட்டம் என்று தான் சொல்வோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இந்த ஆணவ செயல்களை பார்க்கும் போது அடடே இந்த மதவாதிகளின் இந்திப்பற்று அசைக்க முடியாததாக உள்ளதே நம்மை போல் என்று எண்ணும் வேளையில் டிசிடல் இந்தியா என்று இந்தியில் எழுதி பெருமை படுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த டிசிடல் இந்தியாவை எப்படி எல்லாம் பயன் படுத்தலாம் என்றும் அதை நடத்துவது கிருட்ணா என்றும் விளம்பரபடுத்துகிறார்கள் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை.

ஒரு டிசிடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்தி வார்த்தையை கொடுத்து சொல்ல துப்பு இல்லாத இவர்கள் மங்கி பாத்து (குரங்கு குளியல்) என்றும், சொத்த பரத்து என்றும், மூத்திர திட்டம் என்றும் ஆட்டம் போடுகிறது. எங்களை கேட்டால் என் இந்தியா அது எண் இந்தியா என்று அழகு தமிழில் சொல்வோம் சொல்லுங்கள் பார்ப்போம் இந்தியில்.

ஆமாம் அது தான் சொத்த பரத்தாச்சே அப்புரம் எப்படி விளையும் புதிய சொற்கள். இப்படியே ஆங்கிலத்தில் உள்ள அத்தனை வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு இந்தியில் பேச வசதியாக இருக்கும்.

Wednesday, June 15, 2016

அமெரிக்கர்கள் எல்லாம் இந்தியில் தான் இனி இந்தியாவுடன் பேசவேண்டும் - தமிழிசை

தமிழகத்தை தவிர மற்ற அனைத்து மாநிலங்களுடன் வணிகம் செய்ய வேண்டும் என்றால் இனி அமெரிக்கர்கள் எல்லாம் இந்தியில் தான் பேச வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் இனி மேற்பட்டு துவங்கப்படும் புதிய தொழிழ்களுக்கான ஒப்பந்தங்கள் முதல் உத்தரவுகள் வரை இனி சமசுகிரிதத்தில் தான் பரிவத்னைகள் நடக்க வேண்டும்.

இந்தியில் எழுதினால் அமெரிக்கர்களுக்கு படிக்க கடினமாக இருக்கும். ஆனால் சமசுகிரிதமோ எந்த மொழியில் வேண்டுமாலும் எழுதிக்கொள்ளலாம். அமெரிக்கர்களுக்கு படிக்க வசதியாக ஆங்கில எழுத்திலேயே சமசுகிரிதத்தில் எல்லா பரிவர்த்தனைகளையும் வழங்கினால் எங்களுக்கும் அமெரிக்கர்கள் மட்டும் இல்லை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுலபமாக இருந்து இருக்கும்.

என்ன தமிழக மக்கள் மட்டும் முடியாது என்று இப்போது சொல்வார்கள். ஆனால் அதே தமிழ் எழுத்திலேயே சமசுகிரிதத்தில் எழுதி கொடுத்தால் தமிழ் என்று படித்துவிட்டு போகிறார்கள்.

சில தமிழக தலைவர்கள் சொல்வதை போல் இந்தியோ சமசுகிரிதமோ திணிக்க விடமாட்டோம் என்று இவர்கள் யார் சொல்வதற்கு. நாங்கள் தான் இந்தியாவை ஆளும் ஆட்சியினர். நாங்கள் என்ன எல்லாம் நினைக்கிறோமோ அவைகள் அனைத்தும் செய்வோம் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறோம் என்றும் முழங்கியுள்ளார் தமிழிசை.

தமிழகம் மட்டும் இல்லை இனி உலகம் முழுவதும் இந்தியிலும் சமசுகிரிதத்திலும் தான் எல்லோரும் பேச வேண்டும் என்றது பாசகவின் ஆணை என்றும் விளக்கி சொல்லியுள்ளார் தமிழிசை.

Monday, June 13, 2016

இறைவி - திரைவிமர்சனம்

இந்த படத்தின் விமர்சனங்களை பார்த்ததில் இருந்த்து ஏன் இந்த படத்திற்கு இவ்வளவு திட்டு என்று பார்க்க வேண்டும் என்று இருந்தது.

அஞ்சலி தனது காணொலிகளில் சொல்வதை போல் அவருக்கு அழகாக அமைந்த்து இருக்கிறது. கண்களில் மீண்டும் அதே நடிப்பு, கண்களோடு சேர்ந்து குரலும் போட்டி போடுகிறது. என்ன உச்சரிப்பு தான் பல இடங்களில் எகிறுகிறது.

இசை என்று ஒரு படம் சூரியா எழுதியதாக சொல்லிக்கொள்ளும் படம், அந்த படத்தில் விழுந்த அடிக்கு பிறகு அவரது வாழ்க்கை என்னவாகிறது என்று உண்மையை சொல்லும் படியாக கதை திரைக்கதை அமைந்து இருப்பது அவரது கொட்ட நேரம் போலும்.

காலம் காலமாக விசுவாசம் என்ற பெயரில் கொடுக்கப்படும் பலிகடா பாத்திரம் சேதுபதிக்கு. கோபம், காமம், இளைஞருக்கே உள்ள குருட்டு தைரியம், பிறகு வாழ்க்கையை தேடும் சாதாரண மனிதனின் மனது என்று அருமையான பாத்திரம்.

இளம் வயதில் தவறான உந்துதல்களை கொண்டு வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் இளைஞனின் கதை பாபி சிம்காவுக்கு. ஒரு பக்கம் ஞாயம் பேசிக்கொண்டே அடுத்தப்பக்கம் திருட்டு கொலை கொள்ளை என்று ஒன்றையும் விட்டு வைக்கா இளைஞனாக. அருமையான பாத்திர படைப்பு.

மத்த இரண்டு பெண் பாத்திரங்கள் அப்படி ஒன்றும் மனதில் நிற்கவில்லை காரணம், காரணம் வலுவாக இல்லை என்றது மட்டும் தான்.

மலர்விழி பாத்திரத்தை பார்த்து உமிழாத விமர்சகர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர்கள் உமிழ வேண்டியது படத்தையோ இயக்குனர்களையோ அல்ல இந்த போக்கை துவக்கி தூக்கி பிடிக்கும் ஆண்வர்க சிந்தனையை அல்லவா. உண்மையில் பெண்களின் நிலை என்ன.......

water என்ற ஒரு படம் அதில் ஒரு வசனம் வரும் ஏன் இப்படி பெண்களை கொண்டுவந்து இந்த விதவை காப்பகத்தில் விடுகிறார்கள் தெரியுமா, வெறும் காசு. இன்னும் கொஞ்சம் காசு செலவாகும் அவ்வளவு தான் அதற்கு பயந்து இப்படி செய்கிறார்கள் என்று வரும் அந்த வசனம்.

அது போல பெண்களின் சுதந்திரம் அவளுக்கு மணமாகும் வரை தான் என்று தெளிவாக காட்டியுள்ளார்கள். அது ஆணுக்கும் பொருந்தும் எந்த வித்தியாசமும் இல்லை.தனது ஆசை கனவுகள், கொள்கைகள் என்று இருக்கும்  ஆணுக்கு மணமானதும் அவளின் ஆசையே தனது என்று இருக்கும் ஆண்களே அதிகம் அதில் அவன் தொலைக்கும் முதல் இழப்பு அவனுடைய தாய். அதில் தொடங்கும் இழப்பு ஒரு நல்ல வாழ்கையாக அமையலாம் இல்லை கடைசியில் பைத்தியம் பிடித்தும் அலையலாம்.....

இது தான் பெரும்பாலான ஆண்களின் நிலை இருந்தாலும் அவைகள் எல்லாம் வெளிச்சத்திற்கு வருவதில்லை இந்த 3 பெண்களின் கதையை போல். இருப்பினும் கதையும் திரைகதையும் அருமையாக அமைந்துள்ளது கார்த்திக்கு வாழ்த்துக்கள்.

BOWFINGER பார்த்து ஜிகிர்தண்டா என்று எடுத்தது போல் தான் இனி இருக்கும் என்று நினைத்தேன் இல்லை நிறைய கதைகள் இருக்கிறது என்று காட்டியுள்ளார்.

இசை படத்திற்கு நன்றாக அமைத்துள்ளது. என்ன அந்த கடற்கறை பாடல் அப்படியே அந்தியிலே வானம் பாடல் சாயலில் வருகிறது ஒரு வேளை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து இருப்பார்கள் போலும்.

இப்படி அழுத்தமான கதா பாத்திரபடைப்புகளை பார்த்து வெகு நாட்கள் ஆகுகின்றது. கார்த்திக் ஒரு நல்ல எழுத்திலும் ஒரு நல்ல இடத்தை கட்டாயம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்ப்போமாக.

படத்தின் ஒரே நெருடல் பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் அவளுக்கு பெண்மையோ தாய்மையோ இருக்ககூடாது என்று காட்டுவது தான் வேதணையாக் இருக்கிறது. அமெரிக்காவில் துவங்கி இன்றைக்கு உலகு எங்கிலும் தாக்கம் ஏற்படுத்திவரும் இந்த கலாச்சாரத்தை தூக்கிபிடிப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது மற்றபடு படம் நன்றாக வந்துளது வாழ்த்துகள் கார்த்திக் சுப்பு.

Friday, June 10, 2016

இலங்கையை போல் இந்தியாவையும் இனரீதியில் பிளவு படுத்தும் வேலையில் பாசக தீவிரம்

பாசக ஆட்சிக்கு வந்தால் நாடு முன்னேறும் என்று மக்களும் மக்களுக்காக சொன்னவர்களும் இந்த செய்திக்கு என்ன சொல்ல போகிறார்கள். அது அந்த துறவி பரச்சியின் தனிப்பட்ட கருத்து என்று தானே.

அப்படியே நீதிமன்றம் சென்றாலும் கோத்ரா வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பேசவும்.

ஆக மொத்தத்தில் பாசகவை தேர்ந்து எடுத்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று சொன்னோமோ அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அழகாக பாசக செய்துக்காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

பார்க்கும் மக்களுக்கு தான் கண் இல்லை, மனமும் இல்லை. பாசகவை நம்பி நாசமாக போங்கள் மக்களே......


Thursday, June 2, 2016

இளையராசாவும் - கங்கை அமரனும் - தேசிய விருதும் - S.A.இராச்சுகுமாரும்

2016ஆம் ஆண்டுக்கான இசையமைபாளர் விருத்துக்கு பின்னணி இசைக்கு மட்டும் விருது வழங்கியதை ஏற்க மறுத்த இராசா அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

அந்த விளக்கத்துக்கு பதில் அளித்த கங்கை அமரன் ஏன் பாடலுக்கு விருது இல்லை என்றதை மிகவும் விளக்கமாக பாமரனுக்கும் புரியும் படி பாடியும் பாலை போட சொல்லியும் விளக்கிய பிறகு அந்த நிருபரும் ஆமாம் இல்ல என்று சொன்னார் மற்றவர்களுக்கும் அப்படி தான்.

இந்த பாடல் பழைய பாடலின் மறுபதிவு என்ற குற்ற சாட்டிற்கு பிறகு வருவோம் அதற்கு முன் இராசா சொன்ன விளக்கதிற்கு வருவோம்.

புதுகவிதை என்ற ஒரு படம் இராசாவின் இசையில் வந்தது, அந்த படத்தில் 2 பாடல்கள் மிகவும் பிரபலம்.

1)    வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே
2)    வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே

இதில் வெள்ளை புறா பாட்டு படத்தின் அடி நாதமாக படம் எங்கிலும் ஒலிக்கும் எத்தனை இடங்களில் தெரியுமா

1)    புதுகவிதை என்று தமிழில் எழுத்து வருவதில் இருந்து இயக்கம் முத்துராமன் என்று முடியும் வரை முற்றிலும் மாறுப்பட்ட கோர்வை இசையுடன் இந்த பாடல் 2 நிமிடங்களுக்கு மிகாமல் துவக்கத்திலே வருகின்றது

2)    என் நெஞ்சில நீங்க  நெருப்பு வச்சிட்டீங்க என்று சொல்லும் போது துவங்குது அந்த பாடல் பின்னணி

3)    இரவு வீட்டிற்கு வந்த பிறகு ஆனந்தை காப்பாற்றியதை நினைத்து பார்க்கும் போது மறுபடியும் அந்த பாடல் பின்னணியில் வருகிறது

4)    காலையில் எரிந்த வீட்டை திரும்ப கட்டிக்கொண்டு இருக்கையில் கோவிலுக்கு சொல்லும் வழியில் சென்று கடக்கும் போது மீண்டும் அதே பாடல் பின்னணியில்

5)    பாடல் வரும் இடம்

6)    பாடல் முடிந்ததும் ஒரு இடத்தில் தொடர்ச்சியாக

7)    அடுத்த 5 நிமிடத்தில் காத்து இருந்து சந்தித்ததில் இருவரும் உணர்ச்சி பொங்க பேசும் போது (மிகவும் அழுத்தமாகவும் சோக நடையில் ஒலிக்கும்)

8)    அதை அடுத்த தொடர்ச்சியில் அப்படியே துள்ளும் இசையாக நினைவில் அசை போடுவதாக தொடரும், அதன் தொடர்ச்சியாக அந்த மெட்டின் இன்னொரு வடிவமாக வரும்

9)    ஒருவரை ஒருவர் தேடி ஊட்டிக்கும் கோவைக்கும் அலைந்து இருவரும் சந்திக்கும் போது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, அதன் தொடர்ச்சியாக இந்த மெட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் தொடரும்

10)    நீண்ட இடைவெளி விட்டு கல்யாண குழப்பம் வரும் அதில் என்ன முடிவு எடுப்பது என்று உமா தடுமாறும் இடத்தில் அழுத்தமாகவும் புதிராகவும் கொஞ்சம் வேகமகாகவும் பயணிக்கும்

11)    வேறு ஒருவருடன் திருமணம் நடக்கிறது, அந்த இடத்தில் வழக்கமாக வரும் திருமண இசை மட்டும் ஒலிக்கும் ஆனால் பார்ப்பவர்கள் மனதில் அப்படி ஒரு அமைதி மையான அமைதியாய் அதையே பின்னணியிலும் தொடர்ந்து ஒரு 3 நிமிட இடைவெளிக்கு பிறகு மிகவும் சோகமாக அதே பாடல் முழுமையாக

12)    பின்னர் ஒரு 15 நிமிட இடைவெளிக்கு பிறகு நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ஆனந்தும் உமாவும் நேருக்கு நேர் சந்தித்துகொள்கிறார்கள், அப்போது குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியில் குழந்தைகள் காட்சியில் இருக்கும் வரை ஒரு மையான அமைதியாய் விட்டுவிட்டு பிறகு அதே அசல் பாடலின் துவக்கத்தை அப்படியே பின்னணியாக

13)    பிறகு இருவரும் சந்தித்த பிறகு குழந்தையை பார்த்ததும் ஏதும் பேசாமல் உமா கிளம்பும் போது மிகவும் இதமாக அதே பாடல் பின்னணியாக

14)    பின்னர் மறுபடியும் உமாவை பார்க்க முடியுமா என்று யோசிக்கு போது மறுபடியும் இதமாக அதே பாடல் பின்னணியில்

15)    இருவரும் சந்தித்து ஒருவரை இருவர் விசாரித்துக்கொண்டு நான் போகலாமா என்று கேட்டுவிட்டு பிரியும் போது மீண்டும் அதே பாடல் பின்னணி

16)    உமாவிற்கு உண்மை தெரிந்ததும் பின்னணியில் மறுபடியும் அதே பாடல்

17)    ஏன் பொய் சொன்னீங்க என்று கேட்கும் போது மறுபடியும் அதே பாடல் பின்னணி

18)    அடுத்த முறை என்னை நீங்க பாக்கும் போது நீங்க உங்க மனைவியோடு தான் என்ன பார்க்கனும் சொல்லிட்டு கிளம்பும் போது மீண்டும் அதே பாடல்

19)    பின்னர் ஆனந்துக்கு உண்மை தெரிந்ததும் மிகவும் சோகமாக அதே பாடல் பின்னணியில்

20)    அதே காட்சியில் மீண்டும் ஒரு முறை அதே பாடல் அமைதியாக அழுத்தமாக

21)    உமா வேற யாரையாவது திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கடிதத்தில் சொல்லும் போது மிகவும் வித்தியாசமாக அதே பாடல்

22)    கடைசியில் இருவரும் ஒன்றாக இணைந்த பிறகு மீண்டும் அதே புத்துணர்ச்சியில் அதேபாடலோடு படம் முடிகின்றது

இந்த 22 இடங்களில் முழுப்பாடலாக 2 முறையும், எழுத்து போடும் போது என்று முழுப்பாடலாக மொத்தம் 3  முறை ஒலிக்கின்றது. கிட்டதட்ட 15 நிமிடங்கள் மூன்று விதமாக

மீதம் இருக்கும் 19 இடங்களில் 1 நிமிடம் முதல் 2 1/2 நிமிடங்கள் வரை பின்னணியாக இந்த பாடல்கள் தோன்றுகிறது. கிட்டதட்ட ஒரு 20 நிமிடங்களுக்கு.

மொத்த படமும் 2 மணி 19 நிமிடங்கள் அதில் கிட்ட தட்ட 35 நிமிடங்கள் ஒரே பாடலை வித விதமாக பல கலவைகளாக ஒலிக்கவிட்டு இருப்பார்.

இதில் இன்னும் ஒரு விசேசமும் உண்டு இந்த பாடலோ அல்லது பின்னணியோ ஒலிக்கும் போது ஆனந்தும் உமாவும் அல்லது இவர்களில் ஒருவர் மட்டும் என்றும் இருக்கும் போது மட்டும் வரும் . அப்படியே மற்றவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் காட்சியை விட்டு அகலும் வரை வேறு இசையை ஒலிக்க விட்டு விட்டு அகன்ற பின் இந்த பாடல் ஒலிக்கும். கிட்ட தட்ட அந்த இரண்டு பாத்திரங்களுக்கு மட்டும் தனியான ஒரு இசையாக இந்த பாடல் படம் முழுவதும் ஒலிக்கும் .

புதுகவிதையை பொருத்த அளவில் இந்த பாடலையும் அந்த படத்தை இரண்டாக பிரித்து பார்க்கவே முடியாததாக இருக்கும். பின்னணியும் பாடலும் இந்த படத்திற்கு ஒன்றே இராசா விளக்கம் கொடுத்தது போல்.

இது அனேகமான படங்களுக்கு அப்படியே பொருந்தும் இராசாவின் இசையமைப்பில். இந்த கலவையை பிரிக்கவே முடியாம தவிப்பார்கள் தொலைகாட்சியில் இவரது படங்களை ஒளிபரப்பும் போது.
அப்படியே வெட்டி ஒட்டி ஒளிபரப்பினாலும் எங்கே என்ன வெட்டினார்கள் என்று பார்க்கும் இரசிகர்கள் அழகாக சொல்வார்கள்.

இளையராசவின் விளக்கத்துக்கு மேல நாம் எதுவும் புதிதாக சொல்வதற்கு இல்லை, இருந்தாலும் ஒற்றை வரியில் அவர் கொடுத்த விளக்கத்திற்கு சாதாரண மக்களுக்கு புரியும் விதமாக சொன்னால் என்ன என்ற எண்ணத்தில் தோன்றியது இந்த பதிவு.

கரகாட்டகாரன் என்று ஒரு படம் வந்தது. அந்த படம் கங்கை அமரனின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் என்று வந்தது.

படங்களை அலசுவோர் என்று இல்லை சாதாரண மக்களே சொல்வார்கள் படம் பார்க்க கிட்ட தட்ட தில்லாணா மோகனாம்பாள் மாதிரியே இருகுதே என்று.

இத்தனை படங்களை பார்த்து இசையமைக்கிற இளையராசாவுக்கு தெரியாது இது அந்த படத்தின் தழுவல் மறுபதிவு என்று.

அட அந்த படத்தை இப்படியும் கூட அழகாக கொடுக்கலாமா என்று வியந்ததின் பலன் தான் படத்தின் அத்தனை பாடல்களும் முத்தான பாடல்களாக அமைத்து தன் பங்கிற்கு மெருகேற்றி கொடுத்தார்.

அன்றைக்கு என்று இல்லை இன்றைக்கு வரை இளையராசா தவறாக வெளியில் அமரனின் திறமையை பற்றி பேசியது இல்லை. அன்றைக்கு காட்சிக்கு காட்சி விளக்கி சொல்லி இருக்கலாமே இராசா அமரன் பாடிக்காட்டியது போல் . ஏன் செய்யவில்லை

அது தான் இராசா, கொடுக்கும் இடத்தில் இருப்பவர், மற்றவர்கள் மற்றவர் தான் என்றைக்கும் இராசா ஆகிவிடமுடியாது............

அது சரி S.A.இராச்சுகுமாருக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம், இருக்கே ஒரே பாடலை ஒரு படத்தில் 22 முறை இராசா வாசிச்சு காட்டும் போது ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு S.A.இராச்சுகுமார்  போட்ட மட்டும் லாலாலான்னு கிண்டல் பண்ணா எப்படி