Tuesday, September 22, 2015

காதலும் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வதும் - தேனம்மை அம்மா செல்வது எல்லாம் உண்மை தானா

டேட்டிங், லிவிங் டுகெதர், கம்பானியன்ஷிப் – ஆன்மநேயக் காதலா.

இந்த தலைப்பை தொடும் போது எல்லோரும் அமெரிக்காவையும் இன்னமும் சில வெளி நாடுகளை உதாரணம் காட்டி பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

அப்படி உதாரணமாக காட்டுகிறேன் என்று தவறான தகவல்களையும் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியாது, ஆனால் அமெரிக்காவில் எப்படி என்று தெரியும் ஆகையாக தவறான தவறுகளை சுட்டுவோம்.

முதலில் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் பிறந்த குழந்தைக்கு இவன் தான் தகப்பன் என்று மரபணு சோதனை மூலம் எளிதாக காட்டிவிடலாம்.

திருமணம் செய்துகொண்டு அப்பாவாக இருக்க முடியாது என்று ஆண் சொல்லும் பட்சத்தில் குழந்தைக்கான உதவி தொகையை அவன் குழந்தையின் 18 வயது வரை கட்டாயம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அப்படி அவன் கொடுக்க முடியாது என்ற நிலைவரும் போது அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் பிடித்து அனுப நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். அமெரிக்காவில் எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டு வேலை செய்தாலும் தேடி கண்டுபிடித்து பணத்தை பிடுங்கி அனுப்பிவிடுவார்கள் அரசாங்கத்தினர்கள். எந்த விதிவிலக்கும் கிடையவே கிடையாது.

ஆகையால் காதலிக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி இந்த காரியத்தில் தெளிவாக இருப்பார்கள்.

பெண்ணின் விருப்பம் இல்லாமல் கட்டிய கணவனே ஆனாலும் தொடமுடியாது, அப்படி ஏதும் நடந்தால் நேராக கம்பி எண்ண வேண்டியது தான். அதற்கு பிறகு இருண்ட வாழ்க்கையில் விரக்தி அடைந்து தத்துவம் பேசிக்கொண்டு திரிய வேண்டியது தான்.

இவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் இந்த அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. 18 வயது ஆனதும் அவர்கள் வீட்டை விட்டு போகிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் விரட்டி அடித்துவிடுவார்கள், அம்மாவும் சேர்ந்து தான்.

இல்லை இதே ஊரில் தான் கல்லூரி இருக்கிறதே என்று சொன்னாலும் இல்லை தனியா வீடு பார்த்துகொள் என்று தண்ணி தெளித்து விட்டுவிடுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் முதல் போதும் என்று ஆகும் வரை குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் ஒரு கூட்டம். அதில் நன்றாக படிப்பவர்களும் உண்டு.

 நன்றாக படித்தவர்கள் நல்ல வேலைகளாக பெற்றுக்கொண்டு ஊர் இடம் மாற்றம் என்று மாறி செல்வார்கள். காதல் குடி சோம்பல் என்று இருக்கும் கூட்டம் பாதியில் படிப்பை முறித்துக்கொண்டு வேலைக்கு செல்லும். படிக்கின்றேன் என்று சொல்லி வாங்கிய கடனை கட்டும் வரை ஒன்றுக்கு இரண்டு என்று வேலை பார்த்து அடைப்பார்கள். அப்படி அடைத்து முடித்ததும் திரும்பவும் எந்த இடத்தில் படிப்பை விட்டார்களோ அந்த இடத்திலே விட்டதில் இருந்து தொடங்குவார்கள், கொஞ்சம் இடைவெளி விட்டாலும் இவர்களுக்கு பட்டம் கிடைக்கும் பிறகு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை குடும்பம் என்று ஆகி கடைசியில் இந்த வசதியில் தமது கனவு வாழ்கை பலிக்க போவது இல்லை ஆகையால் இந்த திருமணம் வேண்டாம் என்று உதரித்தள்ளும் மக்களும் அதிகம். திருமணத்தை உதரலாம் ஆனால் குழந்தையை என்ன செய்வது. அந்த பிள்ளைகளை வளர்க்க முடியாமல் அவர்களது வாழ்க்கையை வீணடிப்பார்கள்.

தேனம்மை அம்மா சொன்னது போல் டார்மில் மருத்துவமனை போல் வரிசையாக படுக்கை ஒரே அறையில் இல்லை. தனி தனி அறைகள் இருக்கும் ஆனால் ஓர் அறையில் இருவர் தங்கி இருப்பது டார்ம்.

1000 டாலர்கள் இருந்தால் தாராளமாக குடுத்தனம் நடத்தலாம், இந்த காசு அவர்களுக்கு சொர்கத்தை காட்டும் அந்த காதலில், பிறகு குழந்தை பிறந்ததும் ஆகின்ற செலவுக்கு அரசை அனுகி பணம் வேண்டும் என்று கேட்கும் போது பல் இளிக்கும் இவர்களது பொருளாதாரம்.

இந்த மாதிரியான ஏராளமான முன் உதாரணங்களை பார்த்தவர்கள் இவர்கள், ஆகையால் ஒன்றாக தங்குவது காதலிப்பது பிறகு திருமணம் செய்துகொள்வது என்ற காரியங்களில் இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் திருமணத்திற்கும் அவளது முன்னாள் காதலுக்கும்(இன்னும் மற்ற பிர) எந்த சம்பந்தமும் இல்லை என்றது பெரும்பாலான அமெரிக்கர்களின் கோட்பாடு. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவளுடன் வாழவேண்டும் என்று மட்டுமே தெளிவாக இருக்கிறார்கள்.

எந்த வயதில் ஒத்துவரவில்லை என்று நினைக்கிறார்களோ அந்த நிமிடத்தில் இருந்து அவளுக்கு விடுதலை அந்த திருமண பந்ததில் இருந்து.

70, 80 ஆகியும் இன்னமும் முதல் திருமண பந்தத்துடன் இருக்கும் மக்களையும் பார்த்து இருக்கின்றேன், 6 மாத கைகுழைத்தயுடன் நீதிமன்ற வாசலை நாடும் பெண்களையும் பார்த்து இருக்கின்றேன்.

இந்த வாழ்கை முறையில் ஏதாவது ஒன்றாவது சாத்தியமா இந்தியாவில் பிறகு ஏன் இவர்களை பார்த்து இந்தியர்கள் பின்பற்றுகிறார்கள்.

முன்னாள் காதலன் தனது காதலியை பார்த்து நலமா என்று இன்னாள் கணவன் முன் கேட்டாலே போதும் அடி உதை என்ற கொடுமை கொலைவரையில் செல்கிறது பிறகு எதற்கு இந்த அரைகுறை பின்பற்றுதல். விட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே.........

Thursday, September 17, 2015

வல்லரசு இந்தியாவின் உண்மை நிலை - நடுத்தர வர்கம் என்றால் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.......

ஓடும் வண்டியில் இருந்து விழுந்த பெண்

நடுத்தர வர்கம் என்றால் எவ்வளவு இளக்காரம் பார்த்தீர்களா, சாகப்போவது ஒன்றும் அரசு நடத்தும் அமைச்சர்களது சொந்தம் ஒன்றும் இல்லையே

எவனோ ஒருவனை பெற்று எடுத்தவர் தானே அல்லது வெறுமனே எவனோ ஒருவர் தானே தான் இல்லையே என்ற அகந்தை.

இதிலே நல்ல அரசு, வல்ல அரசு, என்ற பேச்சு எல்லாம் வேறு. போய் முதல்ல வேலைய பாருங்கப்பா பிறகு பேசுங்கள்.

Saturday, September 5, 2015

எச்சு ராசா அவிழ்த்துவிடும் புளுகு மூட்டை - உலக தமிழர்கள் இணக்கமாக வாழ முடியாது

இந்தியாவை விட்டு வெளியே வந்தாகிவிட்டது என்றால் வேண்டி கேட்க்காமலே இந்தி பேசும் மக்கள் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள்.

இந்தி போசும் இந்தியர்களில் இரண்டு இரகம் உண்டு. ஒன்று இந்தி உனக்கு தெரியாதா, நீ இந்தியனா, இந்தியாவின் தேசிய மொழி அது தெரியாத நீ எல்லாம் ஒரு இந்தியன் என்று சொல்லுபவர்.

இரண்டாம் இரகம் வெள்ளைகாரன் பேசுவதை விட அழகாகவும் ஆழமாகவும் பேசுவதில் நாமே வல்லவர் என்று காட்டுபவர்களும் உண்டு.

இதிலே அழகாக ஆங்கிலம் பேசிக்காட்டுபவர்கள் தான் அதிகம். வெள்ளைகார உடை, நடை, அதே பார், பீர் மற்றும் ஆங்கிலம் என்று அதிகாலை வரை அசத்தும் இந்தி பேசும் இந்தியர்களை எச்சு ராசா பார்த்தது தான் உண்டா.

இந்தி பேசும் மக்களின் பழக்க வழக்கம் வேறு தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வேறு. என்ன தான் வாடா போடா என்று பழகினாலும், அவர்களிடம் புழக்கம் அவ்வளவு தான். தமிழர்களாக கூடுவதும், தமிழ்ச்சங்களில் சந்திபதும், தங்களுக்கு என்று ஒரு நெருங்கிய வட்டம் அமைத்து அவர்களுக்குள் பழகுவதே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

தமிழருவி மணியன் ஒரு முறை மேடைகளில் சொன்னார், வெள்ளை காரனை போல் எவ்வளவு தான் அழகு ஆங்கிலம் பேசினாலும், அவர்கள் பயன்படுத்தும் உடை நறுமணம் போல் எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் அவன் உங்களை அவர்களாக பார்ப்பதும் இல்லை சேர்த்துகொள்ளுவதும் இல்லை.

இது அப்பட்டமான உண்மை, அது இந்தி பேசும் இந்தியர்களுக்கும் பொருந்தும், இந்தி பேசுபவர் இந்தி பேசுபவர்கள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான்.

உண்மை இப்படி இருக்க.புரியாத இந்தியில் தான் உலகத்தாரோடு பேசுவேன் என்றும், அட எங்களுக்கு புரியல்லயா என்றால் 'திருநெல்வேலி மாணவி கிட்ட கூட ஆசிரியர் தினத்தன்று பேசிய மோடி இந்தியில தான் பேசினாரு, அந்த மாணவியோ அல்லது அதை எழுதிய பத்திரிக்கையோ புரியாத மொழியில் ஏன் பேசினார் என்று கேட்கவே இல்லையே' என்று அல்லவா சொல்கிறார்.

இத்தனைக்கும் அந்த மாணவிக்கு இந்தி தெரியாது, இருந்தும் இவர்களுக்கு சொல்லி புரியபோவது ஒன்றும் இல்லை என்று இருந்துவிட்டார் போலும் அந்த மாணவி.

Friday, September 4, 2015

ஐ நாவில் இந்தி ஆங்கிலமா - மோடி இனி வெளி நாடுகளில் இந்தியில் தான் பேச போகிறார் எப்பொழுதும்

ஐ நாவில் பேசுவது அங்கு இருக்கும் மக்களுக்கு புரிவதற்காக பேச வேண்டியது. அங்கே வரும் பல நாட்டு மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசவேண்டிய கோரிக்கைகளை எதற்காக இந்தியில் பேச வேண்டும். என்ன அதாணியும் அம்பாணியுமா கேட்டு குறை தீர்க்க போகிறார்கள். இதற்கு ஆகும் செலவை இந்தியாவே செலவு செய்யும் என்ற உறுதிமொழி வேறு.

 நாமும் தெரியாமல் தான் கேட்போம், ஐ நாவில் பேச போகின்ற நபருக்கு ஆங்கிலம் தெரியாதா இல்லை அங்கே கேட்க வரும் மக்களுக்கு இந்தி தெரியுமா, பின் ஏன் இந்த வீண் வேலை.

தென்னவர்களுக்கு தெரியாத இந்தியில் இந்தியாவில் மத்திய அரசு ஆட்சியில் இருப்பவர்கள் பேசுவதே புரிந்து கொள்ள பெரு நகரங்களை விட்டால் மற்ற இடங்களில் தடுமாற்றமே. அப்படி இருக்க இந்தியா சொல்வது உலகுக்கு புரியவே கூடாது என்ற எண்ணம் போலும்.

உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம் ஐ நாவில் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் என்றால் தமிழில் பேசுங்கள் உலகில் அதிக நாடுகளில் உள்ள மக்களுக்கு புரியும். தென்னகத்து மொழிகள் கூடாது என்ற காழ்ப்பு இருந்தால் இனி பிரன்சு மொழியில் ஐ நாவில் உரையாற்றுங்கள் நாங்களும் பிரன்சு படிக்கின்றோம் நீங்களும் படிப்பீர்கள்.

சந்தையை உலகமயம் ஆக்கியது போல் மொழியையும் உலகமயம் ஆக்கிவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளலாம்.

இல்லை நீங்கள் தமிழ் படித்து தமிழிலே ஐ நாவில் உரையாற்றினாலும் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

அப்படி இந்திய மொழியில் தான் பேச வேண்டும் என்று சொன்னால் சங்கதத்தில் பேசுங்களேன் உலகின் முதல் மொழி இந்திய மொழிக்கு எல்லாம் தாய்.... அதை விடுத்து ஐ நாவில் போய் ஏன் இந்த வீண் வம்பு.

Wednesday, September 2, 2015

அன்புமணி போடப்போகும் முதல் கையெழுத்து இதில் தான் - மோடிக்கே சவால் விடப்போகிறார்

அன்புமணிக்கு இப்பவே முதல்வர் ஆகி என்ன என்ன எல்லாம் செய்யவேண்டும் என்று கை துருதுருவென இருக்கும் போல் இருக்கிறது.

பாவம் அவரும் கற்பனையிலே எத்தனை நாளைக்கு தான் காலம் தள்ளுவார். அதனால் அவர் ஆசைபடி முதல்வர் ஆனதும் என்ன என்ன செய்யலாம் என்று அவருக்கு நாம் மாதிரிகளை இப்பவே கொடுத்து பரிச்சையில் நிச்சயம் 90% மதிபெண்கள் எடுப்பார் என்று சொல்வோம்.

மதுவில் துவங்கிய அவரது பிரச்சாரம் அனேகமாக அனைத்துகட்சிகளும் அந்த மதுவிளக்கு உத்தரவை இப்பவே கையெழுத்து இட்டு தேதிமட்டும் இடாமல் கோட்டைக்கு போன உடனே தேதி போட்டு கொடுத்துவிடலாம் என்று அலைய வைத்த பெருமைக்கு உரிய நண்பர் அன்புமணி அடுத்த நடவடிக்கை என்ன என்று நாமே சொல்வோம்.

ஒரு வேளை அன்புமணி முதல்வர் ஆனதும் தமிழகத்து பட்டேல்கள் நாங்கள் பிரம்மாவின் புணித பாகத்தில் இருந்து பிறந்து வந்தவர்கள் எல்லாம் இல்லை சாதாரண மக்கள் போல் தாமும் என்று நேற்றைய கனவில் தான் எங்களுக்கு தெய்வம் வந்து சொன்னது அதனால் எங்களை அந்த சாதாரண மக்கள் பட்டியலில் சேர்த்து எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் இல்லை என்றால் ஆட்சியை விட்டு போங்கள் என்று சொல்வார்கள்.

அப்படி எதிர்காலத்தில் தமிழகத்தில் சாதி சண்டைகள் தலையெடுக்காமல் இருக்க என்ன திட்டம் அன்புமணி வைத்துள்ளார் என்று சொல்லி அந்த உத்தரவில் கையெழுத்து போடட்டுமே யார் வேண்டாம் என்று சொன்னது.

குசராத்து பாணியில் பாரதம் என்று முழங்கும் மோடிக்கே தமிழக பாணியில் பாரதம் என்று சவால்விடலாமே, அதை விடுத்து செத்த பாம்பையே மீண்டும் அடிப்பான் ஏன் அன்புமணி...........

Tuesday, September 1, 2015

பட்டேல் பிரிவினர்கள் போராடுவது இதற்கு தான் வேறு எதுவும் இல்லை -- 1000 மடங்கு கூலி வயிற்றெரிச்சல்

தான் எவ்வளது தான் சம்பாதித்தாலும் அடுத்தவன் என்னைவிட எவ்வளவு பெற்றுள்ளான் என்று தான் உலகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது பட்டேல்களின் போராட்டம்.

உள்விவகாரங்களுக்குள் செல்லும் முன் முதலில் பட்டேல்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியினையும் சொல்வோம், எதற்கு இதற்கு தான்.

இது நாள் வரை பிரம்மாவின் புணிதமான பகுதியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லியும் நம்பியும் மற்றவர்களையும் நம்பவேண்டும் என்றும் வற்புறுத்தியும் வந்தவர்கள் வரலாற்றிலே முதல் முறையாக அவர்களாகவே முன் வந்து நாங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் புண்ணிய பிறப்பு எல்லாம் இல்லை மற்றவர்கள் போல் சாதாரண மனிதர்கள் தான் என்று தைரியாமாக சொன்னதோடு இல்லாமல் எல்லா மாநிலத்தில் இருக்கும் பட்டேல்களையும் அப்படியே சொல்லவைப்போம் என்று சொன்னதற்கு தான் இந்த நன்றி. இவர்களை தொடர்ந்த அனைத்து மக்களும் தங்களது புணித வேடங்களை இவர்களை போல் துணிந்து களைவார்கள் என்று எதிர்பார்ப்போமாக.

 நமக்கு எல்லாம் நினைவில் இருக்கும் ஒரு 15 - 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள வேலைக்காரியை வேலைக்கு அமைத்து இருப்பார்கள். காலை மாலை என்று இரண்டு வேளைகளும் அம்மா செய்யும் வேலைகளை அம்மாவுக்கு பதில் இவள் செய்து முடிப்பாள்.

இந்த வேலைகளுக்கு அந்த வேலைக்காரிக்கு மாதம் 25 அல்லது 40 ரூபாய்க்கள் கொடுப்பார்கள், அது இல்லாமல் காலையும் மாலையும் உணவுடன் காப்பி என்று சிலருக்கு கொடுப்பது உண்டு.

இன்றைக்கும் அதே வேலைக்காரிகள் கிடைக்கிறார்கள் ஆனால் மாதம் அவர்களுக்கு கொடுக்கும் தொகை எவ்வளவு 2000 முதல் 4000 வரை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதுமட்டும் இல்லாது, இந்த இந்த வேலைகள் மட்டும் தான் செய்வேன். இவ்வளவு நேரம் தான் செய்வேன். இது இது கொடுக்க வேண்டும் இல்லை என்றால் வர மாட்டேன் என்ற கட்டுபாடுகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது.

20 ஆண்டுகளில் கிட்ட தட்ட வேலைகாரிகளின் சம்பாத்தியம் 1000 மடங்கு அதிகரித்துவிட்டது. அப்படி கொட்டி கொடுக்க அந்த வேலைக்காரி என்ன பட்டப்படிப்பு ஏதாவது படித்துவிட்டு இந்த வேலைக்கு வருகிறாளா என்ன எதற்கு இவ்வளவு கொட்டிக்கொடுக்கனும் என்ற கேள்வி பிறப்பது இயல்பு.

ஆள்கிடைப்பது இல்லை என்ற ஒரு பெரும் காரணம் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றது மட்டுமே உண்மை. அப்போ இந்த வேலை செய்தவர்கள் எல்லாம் என்ன தான் ஆனார்கள் என்ற கேள்வியும் பிறக்கும்.

20 ஆண்டுக்கு முன் வீட்டு வேலை பார்த்த அந்த வேலைகாரிகள் தங்களது பிள்ளைகளும் இந்த மாதிரி ஆகிவிடக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள். அவர்களும் படித்துவிட்டு இன்றைக்கு அலுவலகங்களில் வேலைகளில் இருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த வீட்டு வேலை தான் தெரியும் என்று இருந்த மக்கள் குறையவே அதிகவிலை கொடுத்து இருக்கும் மக்களை வேலைக்கு அமர்த்தும் செயல்கள் தொடங்கியது.

இப்போது பட்டேல் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேலைகாரிகள் அதே 25 - 40 ரூபாய்க்கு வேலைக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் பட்டேல்கள் செய்யும் வர்த்தகம் மட்டும் வானலாவி நிற்க வேண்டும் மற்ற மக்கள் இன்னமும் அவர்களுக்கு எடுபிடியாக அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இங்கு அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வேலைகாரி என்று குறிப்பிடேனே தவிர கேவலபடுத்தும் எண்ணத்தோடு அல்ல, யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்.

இங்கு சொன்ன வேலைகாரி என்றதை, விவசாய கூலி, கூலி வண்டி, ரிக்சா வண்டி, மூட்டை தூக்கும் தொழிளாலி என்று அடிமட்டத்தில் இருக்கும் அத்தனை கடுமையான வேலைகளை செய்பவர்கள் என்று மாற்றிகொண்டாலும் ஒரே கருத்து வருவதை அவதானிக்கமுடியும்.

பட்டேல்களுக்கு இந்த சமூக மாற்றம் முன்னேற்றம் பிடிக்கவில்லை. இப்படியே போனால் என்னை பல்லாகில் எவர் தூக்கிக்கொண்டு செல்வார்கள் என்ற கவலை அவர்களுக்கு. பல்லாக்கு தூக்க இன்றைக்கும் ஆள் இருக்கிறார்கள் ஆனால் அதே பழைய 25 - 40 ரூபாய்களுக்கு இல்லை ஒரு 1000 மடங்கு கொடுங்கள் தூக்குவார்கள், இந்த 1000ம் தான் அவர்களுக்கு பிரச்சனை வேறு ஒன்றும் அல்ல.........

இந்த 1000 மடங்கு வயிற்றெரிச்சலில் தங்கள் கட்டிக்காத்த பிரம்மாவின் புணிதமான இடத்து பிறப்பு என்றதை கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவர்களது வயிற்று எரிச்சல் எந்த அளவுக்கு இருக்கும் என்று................

இது வெறும் டிரைலர் மட்டும் தான் முழுப்படம் இனிமே தான் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும், பார்ப்போம் பாசக அரசு இன்னமும் என்ன என்ன கோமாளிதனமாக செயல்களில் ஈடுபடுகிறது என்று பார்ப்போம்.

அந்த பக்கம் ஊழல்களை வெளியிட்டால் சாதி வெறியை ஊற்றி நாட்டையே எரித்துவிட பார்க்கிறது ஆளும் பாசக. வேண்டும் உங்களுக்கு. இந்த அரசுதான் வேண்டும் என்று தேர்ந்து எடுத்தவர்கள் தாமே நீங்கள் எல்லாம் அனுபவி ராசா அனுபவி.....

ஒரு வேளை கொமாரசாமி இங்கே தான் கணக்கு பாடம் படித்து இருப்பரோ


ஒரு வேளை கொமாரசாமி இங்கே தான் கணக்கு பாடம் படித்து இருப்பரோ