Sunday, February 16, 2014

இளையராசாவுக்கு இசை கற்றுக்கொடுக்க வரும் அமுதவன்

இவரின் இளையராசா பற்றிய விமர்சனங்களை படித்தோமானால் அதில் தெரித்து வழியும் வயிற்றெறிச்சல் நன்றாக தெரியும்.

உதாரணமாக கீழே உள்ளவைகளை காணலாம்.

"
அடுத்து வருபவர்களும், புதிதாக வருபவர்களும் - தங்களுக்கென்று ஏதாவது வித்தியாசம் செய்து காட்டவேண்டாமா? இளையராஜா என்ன செய்கிறார் இந்த இடையிசையில் ‘முழுமை பெற்ற ஒரு இசைத்துணுக்கு’ ஒலிப்பதை மாற்ற எண்ணி சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு வயலின் கீற்று, ஒரு கிடாரின் சிறு இசை…இன்னமும் வெவ்வேறு வாத்தியங்களில் சின்னச்சின்ன இசை இழைகள் என்று கோர்த்து வாசிக்கவைத்து ‘எப்படியோ ஒரு வழியாக’ சரணத்துக்குக் கூட்டி வருகிறார். மறுபடி அடுத்த சரணத்தில் இதையே இன்னும் அங்கே கொஞ்சம் மாற்றி இங்கே கொஞ்சம் மாற்றி என்று வித்தைகள் செய்து பாடலை முடிக்கிறார்.
ரிசல்ட் என்னவென்றால் கேட்பதற்கு பழைய வழக்கமான பாடல்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பாடல்போல் ஒலிக்கிறது. தோன்றுகிறது.
பின்னர் இதே பாணியைத் தம்முடைய பாணியாகவும் அவர் ஆக்கிக்கொண்டுவிட்டார்.
பாடல் வித்தியாசமாக ஒலிக்கிறது சரி; பிரச்சினை என்னவென்றால், இந்த இசைத்துணுக்குகள் கோர்வையாக இல்லாத காரணத்தினால் எந்த வாத்தியக்காரர்களாலும் தனித்தனி இழைகளாக வாசிக்கப்பட்ட இந்த இசைத்துணுக்குகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கமுடியாது.
ஏன் இளையராஜாவுக்கே அந்த இசைத் துணுக்குகள் ஞாபகமிருக்க வாய்ப்புகள் இல்லை. அவர் ‘எழுதிக்கொடுத்துவிடுகிறார்’ என்கிறார்களே அது இதைத்தான்.
இதனை ‘எழுதிக்கொடுக்காமல்’ அந்தக் கடவுளே வந்தாலும் வாசிக்கமுடியாது. அதனால்தான் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற வேண்டுமென்றால் மிக அதிகமான பயிற்சிகள் நடைபெற வேண்டியுள்ளது. நிறைய ஒத்திகை திரும்பத் திரும்ப பார்க்கவேண்டியுள்ளது.
ரிகர்சல்……………மீண்டும் மீண்டும் ரிகர்சல் என்பார்கள்!"
 

மொத்தத்தில் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள், இராசாவின் பாடலில் ஒரு ஓட்டம் இல்லாமல் அங்கே இங்கே என்று தட்டு தடுமாறி அடுத்த சரணத்திற்கு வருகிறது என்று மனதார பொய் சொல்கிறார்.

இராசாவின் இரசிகர்களுக்கு தெரியும் அவரது இசையில் படத்தின் பின்னணி இசையை கூட மனப்பாடமாக அறிய படுத்தியவர் இராசா.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் நகுருதனா திரனன என்று எத்தனை படங்களில் இலவகமாக அமைத்துவைத்துள்ளார் இராசா. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த இசை தலைமுறைகளையும் தாண்டி இந்த தலைமுறைகளும் இந்த துணுக்கு இசையை கேட்டதும் அதன் சாரம் என்ன என்று நொடியில் சிரிக்கும் வண்ணமாக இருப்பதை இவர் பார்த்திருக்க மாட்டார் போலும்.

எதோ கங்கை அமரன் சொன்னார் என்று அவரது வார்த்தைகளால் இராசாவை குறைசொல்வதில் இவருக்கு ஒரு பெருமை பாவம்.

எந்த எந்த பாடல்களை எப்படி தழுவினார்கள் என்று கங்கை அமரன் இல்லை இராசாவே பெரிய பட்டியலை கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாது அவருடைய மிகவும் பிரபலமான பாடலை எப்படி எல்லாம் மாற்றி பாடலாம் என்று சமீபத்திய வெளி நாட்டு கச்சேரிகளில் விளக்கியும் காட்டியுள்ளார். வாய்பு கிடைச்சாசு இனி முடிந்த அளவுக்கு குத்தி கிழி என்று கொலைவெறியுடன் அவர் தாக்கிய பதிவு தான் இந்த பதிவு.

அமுதவனுக்கு மட்டும் அல்ல அவை போல நினைக்கும் மற்றவர்களுக்கும் சொல்லுவோம். நீங்கள் என்ன தான் சேற்றை வாரி இறைத்தாலும், இராசாவின் புகழ் மறைக்க முடியாக ஒன்று. அவர்களு நீங்களும் நாங்களும் விளம்பரம் ஓட்ட வேண்டியது இல்லை. அவரது படைபுகள் அவரை என்றைக்கும் அடையாளம் காட்டும்.

எங்களுக்கு இராசாவையும் தெரியும், மெல்லிசை மன்னரையும் தெரியும், கருப்பு வெள்ளை காலத்து பாடல்களில் இருந்து சமீபத்திய பாடல்கள் வரை தேடித்தேடி இரசிகின்றோம்.

இனிமேலாவது மெல்லிசை மன்னருக்கு இசைகற்றுக்கொடுப்பதை நிறுத்திவிட்டு வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள். வயிறு எரிந்து தீஞ்ச வாசனை தாங்கவில்லை ஆளைவிடுங்கப்பா................