காந்தி சுதந்திர போராட்டம் நடத்தாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்து இருக்கும், காலத்தின் கட்டாயம் அது என்று துவங்கி ஏன் காந்தி கொல்லப்பட வேண்டும் என்ற விளக்கத்தை கொடுக்க என்று பயணித்த கட்டுரையை ஆவலுடன் படித்தேன்.
என்ன காரணத்தை சொல்கிறார்கள் என்று படித்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த கட்டுரை கிட்ட தட்ட தினமலரில் செய்திகளை வாசிப்பது போல் இருந்தது. தினமலரில் இப்படி தான் செய்திகளை எழுதுவார்கள். தலைப்பை மட்டுமே படித்தால் போதும், உள்ளே செய்தியில் தலைப்பு சம்பவம் எங்கே நடந்தது என்றதை முதல் பத்தியிலும், எந்த ஊரில் நடந்தது என்றதை இரண்டாம் பத்தியிலும் எழுதுவார்கள். இவைகளை தவிர வேறு எந்த விபரத்தையும் உள் செய்திகளில் தெரிந்துக்கொள்ள முடியாது. ஆக தலைப்பை வாசித்து விட்டால் மேலே தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை தினமலரில்.
அப்படி மேலே விபரங்கள் தேவைபடின் மற்ற இதழ்களில் தேடித்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அது போல தான் இந்த கட்டுரையும் இருந்தது.
வரலாறில் நமக்கு தெரியாத ஒரு செய்தியையோ அல்லது இது வரை தெரிவிக்காத ஒரு மாற்று பார்வையோ என்றும் கூட நினைத்து தான் படிக்க நினைத்தேன். எல்லா கொலைகாரர்களும் அவர்கள் செய்த கொலை மிகவும் ஞாயமான செயல் என்றும். கொலையுண்ட நபர் அதற்கு தகுதியானவர் என்று தான் கூறி வருகிறார்கள்.
ஆதிரத்திலும் அவசரத்திலும் செய்துவிட்டு பின்னாளில் அவைகளுக்குகாக வருந்தியவர்களை தவிர மற்ற அனைவரின் வாக்குமூலமும் கோட்சேவின் வாக்குமூலமும் ஒன்றே. என்ன கோட்சே கொன்றது காந்தியை என்ற ஒரு வித்தியாசத்தை தவிர.
காந்தி என்று வேண்டாம் மற்ற யாராக இருந்தாலும் அவரை கொல்லும் உரிமையை சட்டம் ஒருவருக்கும் கொடுக்கவில்லை.
சரி கோட்சே தான் சரியான ஒரு காரணத்தை கூற முடியவில்லை, கோட்சேவின் செயல் சரியே என எழுதும் இந்த பதிவரின் பார்வையாவது என்ன என்று எழுதி இருக்கலாம் அதுவும் இல்லை. கிட்ட தட்ட நகைப்புக்கு என்று சொல்வது போல், "அதோ போரானே அவன் சுத்த மோசம்" என்பார்கள். உனக்கு அவனை தெரியுமா என்றால் இல்ல எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தர் சொன்னார் மோசம்னு அதான் சொன்னேன் என்பார்கள். அதை போல் எழுதுகிறார் இந்த பதிவரும்.
கோட்சே காந்தியின் மீது வைக்கும் குற்ற சாட்டு இது தான், இந்து முசுலீம் கலவரத்தில் காந்தி முசுலீம்களுக்கு ஆதரவாக பேசினார் செயல்பட்டார் மற்றும் இந்து விழாக்களில் குறானை படிக்க செய்தார் அதனால் கோவில்களின் புனிதம் கெட்டுவிட்டதாகவும். இப்படியே விட்டால் முசுலீம்கள் நாட்டில் ஆதிகம் செலுத்துவார்கள் என்று அஞ்சியதாகவும், இவைகள் எல்லாம் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் காந்தி இல்லாமல் போனால் இது நடக்காது என்று எண்ணியதாகவும் அதனால் கொன்றதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் கோட்சே என்று எழுதியுள்ளார் அந்த பதிவர்.
கோட்சேவின் வாக்குமூலத்திலும் சரி , இந்த பதிவரின் பதிவிலும் சரி கலவரத்திற்கு யார் காரணம் என்றோ அல்லது எப்படி அந்த கலவரத்தை புத்திசாலி தனமாக துவங்கிவிட்டு ஊரை இரண்டாக்கி வேடிக்கை பார்த்த அந்த கூட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக மட்டும் இல்லை பரிதாபமாகவும் இருக்கிறது.
சரி அந்த காலத்தில் இந்த விதமான தகவல்களை சேகரிப்பதும் தெரிந்துகொள்வதும் கடினம் தான். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் ஆன பிறகும் இந்து முசுலீம் கலவரம் யார் தொடங்கினார்கள் எதற்காக தொடங்கினார்கள், அந்த கலவரத்தால் குளிர் காய்ந்தவர்கள் காய்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் யார் என்று இதுவரை எந்த கட்டுரையிலும் செய்தியிலும் வரலாற்று ஆசிரியர்களும் சொல்ல கேட்டது இல்லை.
இந்த ஒரு கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் நாட்டில் இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் போது எல்லாம் கையாளுவது எளிதாக இருக்கும். மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் மாட்டார்கள்.
நம்மால் வெகு சமீபத்தில் நடந்த குசராத்து கலவரத்திற்கு காரணம் யார் என்று கூட கண்டுபிடிக்கவோ அல்லது அப்படியே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தாலும் நிரூப்பிகவோ அல்லது அப்படி தூண்டியவர்களை தண்டிக்கவோ முடியுமா என்ன......
காந்தியை கொன்றதிற்கு இது தான் காரணமாக இருக்க முடியும். அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் நடந்த மதகலவரம் வரை காந்தியின் தலையீட்டால் நிறுத்தியும் கட்டுப்படுத்தபட்டும் வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.
இந்த கலவரம் குசராத்தில் வந்தபோது எப்படி ஒரு இன சுத்திகரிப்பு வேலை நடந்ததோ அதே சுத்திகரிப்பை நடத்த எண்ணி தான் காந்தியின் காலத்திலும் கலவரங்கள் தூண்டிவிடபட்டது. ஆனால் அந்த எண்ணம் ஈடேராமல் தடுத்தது காந்தியே. உயிர்போகும் விளிம்பு வரை உண்ணா நோம்பு மேற்கொண்டு நிறுத்தியதை நாடே அறியும்.
அப்படி இந்தியாவில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இதுபோல பாக்கிட்தானத்திற்கு சென்று முறையிட இருப்பதாக காந்தியின் திட்டம் இருந்தது. இந்த நிலையில் காந்தி சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் என்ன நோக்கமாக இருக்கும்.
எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்து முசுலீம் கலவரம் முடக்கப்பட்டுவிட கூடாது என்ற காரணத்தை தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.
நிலவரம் இப்படி இருக்க கோட்சேவோ காந்தியால் அரசியலில் வெற்றிகொள்ள முடியாதவர் என்றும் அவரால் ஒன்றும் விளையபோவது இல்லை என்றும், இப்படி எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பவரை கொல்வது நாட்டிற்கும் மதத்திற்கும் நல்லது என்று வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த பதிவர் எழுதியுள்ளார்.
எந்த ஒரு தலைவரையும் நமக்கு பிடித்து ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான் ஆனால் அதே சமயத்தில் நமக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு காரணத்தை ஞாயபடுத்த அவர்களை கையால் ஆகாதவர் போல் சித்தரிப்பது எந்த விதத்திலும் சரியான செயல் இல்லை. கோட்சே ஒரு மத, இன, சாதி வெறியர் என்றதை இன்னமும் அதிகமாக ஆதாரங்களை கொண்டு நிருவ வேண்டியதில்லை. அவருடைய வாக்குமூலமே அதற்கு தகுந்த சாட்சியாக எடுத்துகொள்ளலாம்.
பிசேபி கட்சியின் சித்தாந்தங்கள் தான் பிடிக்கிறது, அடுத்தவர்கள் மகிழ்சியாக இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த கட்சியினர். அவர்களை போல் வயிற்றெறிச்சல் கொண்டவர் தான் நானும் என்று இந்த பதிவர் நேர்மையாக் ஒத்துக்கொண்டு போகலாம் அதைவிடுத்து ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக அழுது தள்ளி இருக்கிறார் இந்த பதிவர், பாவம் மனிதர்,இதற்கு நம்பள்கி ஆதரவு வேறு என்ன கொடுமை சரவணா......

பிசேபி கட்சியின் சித்தாந்தங்கள் தான் பிடிக்கிறது, அடுத்தவர்கள் மகிழ்சியாக இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அந்த கட்சியினர். அவர்களை போல் வயிற்றெறிச்சல் கொண்டவர் தான் நானும் என்று இந்த பதிவர் நேர்மையாக் ஒத்துக்கொண்டு போகலாம் அதைவிடுத்து ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையாக அழுது தள்ளி இருக்கிறார் இந்த பதிவர், பாவம் மனிதர்,