Tuesday, May 18, 2010

New in Town - அமெரிக்காவில் தற்பொழுது வேலைவாய்ப்பு நிலையை சொல்லும் படம்

அதிக செலவு இல்லாமல், பெரிய பெரிய சாகசங்கள் எல்லாம் இல்லாமல் நாவல் படிப்பது போல் ஒரு கதை. அதை அருமையாக மனித நேயத்தோடும் வேலைகள் வெறும் வேலைகள் இல்லை அவைகள் சமூகத்தின் வாழ்க்கை என்று மீண்டும் ஒரு முறை சுய நல முதலாளிகளின் முகத்தில் அறைந்தார்போல் சொல்லும் படம்.

மையாமியில் இருக்கும் பெருநிறுவனத்தில் மின்னசோட்ட மாகானத்தில் இருக்கும் ஒரு சிறிய உணவு தயாரிக்குக் ஆலையை கவனிக்க நாயகியை அனுப்புகிறது நிர்வாகம்.

என்ன என்ன எல்லாம் செய்யமுடியுமோ அவைகளை எல்லம் செய்து அதிக இலாபம் ஈட்டி காட்டவேண்டும் என்ற கட்டளைகளோடு வருகிறாள் அந்த நாயகி.

அந்த ஆலை இருப்பதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமம், அந்த கிராமத்தில் இந்த ஆலையை தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு எதுவும் கிடையாது. நீண்ட நாட்களாக அந்த ஊரில் இருக்கும் அந்த ஆலையை நம்பி பல குடும்பங்கள் வாழ்கிறது.

வந்த நாளில் இருந்து இவளுக்கு அங்கே எதிர்பு கிளம்புகிறது. வருகின்ற ஒவ்வொரு எதிர்புகளையும் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளில் சமாளிக்கிறாள். இவளால் இந்த ஆலை இழுத்து மூடப்படுவடு உறுதி என்ரு தெரிந்தும் அவளுடன் நல்ல உறவையே அனைவரும் கொள்கிறார்கள்.

முதல்கட்டமாக ஒரு இயந்திரத்தை நிறுவி கொஞ்ச ஆட்களை வேலையில் இருந்து தூக்கலாம் என்று நிர்வாகம் நினைக்கும் போது இவளாகவே அந்த நடவடிக்கைகளை தள்ளி போடுகிறாள். பின்னாளில் அந்த ஆலையை உடனடியாக மூடிவிடுவது என்று நிர்வாகம் தீர்மாணிக்க, அந்த நடவடிக்கைகளை நிறுத்தும் எண்ணத்துடன் மையாமி பறக்கிறாள்.

அங்கே நிர்வாகத்துடன் இவள் சண்டைக்கு நிற்கும்போது தலைமை செயலாக அதிகாரியாக உணக்கு இதில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி அவளது வாயை அடைக்கிறார்கள். பிறகு மனதில் வரும் வேதணைகளை முழுங்கியவண்ணம் ஊர் திரும்பும் தருவாயில் அவளது செயலர் பெண்மணி, இவள் இல்லாத நேரத்தில் யாரை எல்லாம் வேலை நீக்கம் செய்ய போகிறார்கள் என்று பார்த்து அதிர்ந்து போய் இவளது வருகைக்கு காத்து இருந்து மனமார திட்டிவிட்டு போகிறாள்.

அப்போது கேட்ப்பாளே ஒரு கேள்வி, இந்த பயங்கர நடவடிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு உன்னால் எப்படி இவ்வளவுகாலம் பேசி சிறித்து பழகமுடிகிறது. உன்ன்னை எல்லாம் என்ன என்று சொல்ல்வது என்று சொல்லிவிட்டு இவளுக்காக இவள்விரும்பி சாப்பிடுவாளே என்று அவளுக்காக தாயாரித்த ஒரு தயிர் உணவை கொடுத்துவிட்டு போவாள்.

இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் இருக்கும் அவளுக்கு நட்டத்தை காரணம் காட்டும் இந்த ஆலைக்கு தான் உண்ணும் இந்த தயிர் உணவை தயாரித்து மக்களிடம் பிரபலபடுத்திவிட்டால் அதால் வரும் இலாபத்தை காட்டி இந்த ஆலையை மூடுவதில் இருந்து தடுக்கலாம் என்று அனைவரையும் அழைத்து பேச. முதலில் பட்டும் படாமலும் பேசும் தொழிலாளர்கள், கடைசியில் நமது வேலை போகாமல் இருக்க இவள் இவ்வளவு செய்கிறாள் நாம் என்ன செய்தோம் என்று ஈடுபட, ஆலையும் காப்பாற்றபடுகிறது அவர்களும் காப்பாற்ற படுகிறார்கள் என்று கதை பயணிக்கும்.

நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் வரும் பிணக்குகளை அழகாக காட்டியதுடன் நில்லாது, நல்ல நிர்வாகம் வேலைகளை வேலைகளாக மட்டும் பார்க்காமல் வேலையாட்களின் வாழ்க்கையாக பார்க்கவேண்டும் என்று அருமையாக சொல்லும் படம். என்ன சொல்லி என்ன அமெரிக்க முதலாளிகளுக்கு இப்போது காசு பைதியம் தலைக்கு ஏறிய போதையாக இருக்கிறது. பார்ப்போம் எப்படி எல்லாம் இன்னமும் சுரண்டுகிறார்கள் என்று......

மின்சார கனவு படம் 11 வருடம் கழித்து ஆங்கிலத்தில் My Best friend's Girl ஆக வந்துள்ளது

மின்சார கனவு, அனேகமாக அனைவரும் இந்த படத்தை பார்த்து இருப்பார்கள். பாடல்கள் காட்சி அமைப்புகள் என்று ஏராளமான தொழில் நுட்ப கூட்டணியில் உருவான படம் இது. 2009ல் வெளிவந்த ஆங்கிலபடம் My Best Friend's Girl இது போலவே அப்படியே அச்சு அசலாக வந்துள்ளது.

காதல் கத்திரிக்காய் கொத்தமல்லி என்று சுற்றாதவள் நாயகி. நாயகனோ ஒரு பெண்ணை பார்த்தால் பார்த்த பார்வையிலேயே இரவு கேளிக்கைகளுக்கு அழைக்கும் அளவிற்கு கவரகூடிய திறமை பெற்றவன்.

இந்த தகுதிகளுடன் இருக்கும் நாயகனுக்கு சாப்பாடிற்கு சம்பாதிக்க ஒரு தொழில் இருந்தாலும், தனது முழு திறமைகளையும் காட்டும் விதாமாக இளம் பெண்கள் ஆண்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகிய பிறகும் காதலிக் மறுக்கும் பெண்களை 10 இரவுக்குள் அவளது ஆண்களிடம் நீதாண்டா மனிதன் இவன் எல்லாம் மனிதனா என்று சொல்லி சொன்ன கையோடு திருமணத்திற்கும் ஏற்பாடாகும்.

இத்த தொழிலில் காதலர்கள் இவனை வேலைக்கு அமர்த்தி அவரவர் காதலிகளின் மனதில் காதல் வரும் படி செய்ய பணிப்பார்கள். அப்படி வரும் அனைவரது காதலையும் உத்திரவாதத்துடன் முடித்துகொடும் இவனுக்கு ஒரு உற்ற நண்பன் வீட்டில் ஒன்றாத தங்கி இருப்பான்.

இவனுக்கு காதல் கத்திரிக்காய் கொத்தமல்லி என்று இருப்பவள்மேல் கொள்ளை ஆசை ஆனால் அவளோ இவனோடு சுற்றுவதும் எங்கே சென்றாலும் தனக்கு பாதுகாப்பாகவும் செலவு செய்பவனாகவும் அவனை பயன்படுத்திக்கொண்டு அலைகழிப்பாள்.

இவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் இடையில் ஒரு தெரு அளவிற்கு இடைவெளியில் மாடியில் அலுவக அறை வைத்திருப்பார்கள்.

பொருத்து பொருத்து பார்த்து, கடைசியில் அந்த பொறுக்கி நாயகனிடம் போய் என்னுடைய ஆளுக்கு என்மேல் காதல் வரும்படி செய் என்று பணிப்பான். இவனும் தனது வேலைகளை துவங்குவான். இப்படி மெல்ல துவங்கும் இவனது செயல்களில் 4 இரவுகளில் இவன் அந்த பெண்ணின் காதலில் விழுவான்.

10 நாட்களில் சுத்தமாக வேலையை முடிப்பவனாச்சே நீ இப்ப மட்டும் என்ன இவ்வளவு நாள் ஆகியும் ஒன்னும் ஆகல என்று நண்பனுக்கு ஒரே தவிப்பு. அப்படி இப்படி என்று நண்பனுக்கு தெரியவர இருவரும் காய்விட்டுக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.

நண்பனின் காதலியை அபகரித்துவிட்டோமே என்று அவளை துறக்கும் முடிவுக்கு வருகிறான் அந்த பொறுக்கி நாயகன். அப்படி பிரியும் போது அந்த கூட்டத்திலேயே யார் யார் எல்லாம் தன்னிடம் பணம் கொடுத்து காதலிகளை அனுப்பினார்கள் என்று பட்டியலிட்டு காட்டி நாயகியை
பிரிகிறான்.

பிறகு நடந்தவைகளை கேள்விபட்ட நண்பன் இந்த பொறுக்கி நண்பரின் காதலுக்கு பச்சைகொடி காட்டுகிறான், அவர்களும் சேர்கிறார்கள்.

எதுவும் நாவலை வைத்து எடுத்தார்களா என்று தெரியவில்லை, அப்படியே மின்சார கனவின் கதை. பிரபு தேவா பொறுக்கி நாயகன், அரவிட்ந்த சாமி அவனது நணபனாக, கசோல் பாத்திரத்தில் அந்த காதல் கத்திரிகாய் கொத்தமல்லி நாயகி. எப்போதும் பொறுக்கி நாயகன் ஒரு பாட்டைகொண்டு தான் தனது லீலைகள் துவங்குவான் தமிழில் அப்பப்போ பாடல் வருவது போல்............

அங்காடிதெரு - The perfect Crimeம்

அங்காடிதெரு படத்தை பார்க்க ஆரம்பிக்கும் போதே இந்த படத்தை போல் எதோ பார்த்த நினைவாகவே இருந்தது. இசுபானிசு(Spanish) மொழியில் The Perfect Crime என்று நினைவுக்கு வந்தது.

இந்த படத்தை வசந்த பாலன் அப்படியே ஒன்றும் ஈ அடிச்சான் பிரத்தி எல்லாம் எடுக்கவில்லை. கதைகளம், மற்றும் மூன்றாம் தர நாடுகளில் வாழும் அடிமட்ட தெழிலாளிகள் எல்லா எந்த அளவிற்கு முதலாளிகளால் அடிமை படுத்தப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள் என்ற கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.

இன்னமும் துள்ளியமாக சொல்லவேண்டும் என்றால், துணிக்கடை, அதிலே ஒரு கொலை, கொலைக்கு பிறகு மன உளைச்சளால் பைத்தியமாக பிதற்றி திரியுதல், துணிக்கடைக்குள் உல்லாசமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு பாடல் பாடுதல், மற்றும் அதே அங்காடிதெருவில் ஒரு சிறு வியாபாரம் துவங்குதல் என்ற அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டார்.

இந்த சம்பவங்களை கதையில் வைத்துக்கொண்டு தமிழகத்து பாத்திரங்களும் இடங்களையும் புகுத்தி திரைக்கதை அமைத்துள்ளார். நாயகியின் தங்கை பாத்திரங்கள் வரை எதையுமே விட்டு வைக்கவில்லை. நல்ல கற்பனை மனிதருக்கு.

முதல் காட்சியில் அங்கே 25 ஆயிரம் அமெரிக்கன் டாலருக்கு விற்று காட்டுவான் நாயகன், தமிழில் 12 ஆயிரம் உரூபாய்க்கு விற்றுக்கொடுப்பான்.

தமிழில் காட்சிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு குள்ள உருவ பிச்சைகாரர் பாத்திரத்தை வைத்திருப்பார் பாலன். அது இந்த படத்தில் நாயகனை மிரட்டும் பெண்ணின் உருவ அமைப்பையும் விட்டு விடக்கூடாது என்று வைத்துக்கொண்டார் போலும்.

நாயகியின் தந்தை ஒன்றுக்கும் உதவாதவர் என்று மூல படத்தில் காட்டியதை போலே காட்டியும் உள்ளார். மூல படத்தில் நாயகியின் தந்தையை நாயகன் விளையாட்டு மைதானம் அழைத்து சென்றாலும் அங்கேயும் நடப்பது அறியா தூக்கம் தூங்குவார்.

நாயகியின் தங்கை நாயகனை பார்க்கும்போது 13 வயதான அவள் தான் கர்பமாக இருப்பதாக சொல்லும் வசனங்களுக்கு இங்கே பூப்பெய்தியதாக சொல்லியுள்ளார் பாலன்.

விற்பனையிலும் மட்டும் அல்ல பெண்களை கவரும் செயலும் தான் ஒரு வல்லவன் என்று நிரூபிக்கிம் நாயகன் கடையில் தான் அகப்பட்ட பெண்ணிடம் இருந்து தப்பிக்க படும் பாடுகளை பார்க்கும் போது மிகவும் பாவமாக இருக்கும். அந்த மூல படம் ஒரு நகைச்சுவை படம். ஆனால் தமிழிலோ உணர்கள் கொட்டும் படமாக ஆக்கியுள்ளார் வசந்த பாலன்.

இப்படி எத்தனையோ ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு படங்கள். அருமையாக அவரது கற்பனையை புகுத்தி உள்ளார்.

The Perfect Crimeமும் நல்ல படம் தான் ஆனால் வயத்து வந்தோருக்கான படம், நல்ல நகச்சுவை அந்த படத்தில். பார்த்து கருத்து சொல்லுங்கள்.