Tuesday, April 27, 2010

வேலைநிறுத்தப் போராட்டம்: மக்களுக்கு ஜெயலலிதா நன்றி -- ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பி தேம்பி அழுததாம்.....

http://www.dinamani.com/edition/story.aspx?Title=வேலைநிறுத்தப்+போராட்டம்:+மக்களுக்கு+ஜெயலலிதா+நன்றி&artid=233618&SectionID=178&MainSectionID=178&SEO=&SectionName=Tamils

ஒரு முறை திமுக விட்ட வேலை நிறுத்த அழைப்பை முறியடிக்க உச்ச நீதிமன்றம் வரையில் சென்று அதுவும் இரவோடு இரவாக ஞாயிற்று கிழமையில் நீதிபதியின் வீட்டிற்கே சென்று வாங்கி வந்து பெருமை பேசியவர் தான் இன்றைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அந்த போராட்டம் எதற்கு என்ன என்ற விபரங்களுக்குள் எல்லாம் செல்வது தேவை இல்லாதது.

அந்த போராட்டம் நிறுத்துவதற்கு சொன்ன காரணங்கள் என்ன என்ன

1) வயதான நோயாளிகள் மருத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
2) தின கூலிகள் சம்பாத்தியம் பாதிக்கப்படுகிறது.
3) பள்ளி மாணவ மாணவியரின் படிப்பு பாத்திப்புக்கு உள்ளாகிறது.
4) அத்தியா அவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.

இப்படி என்ன பிற காரணங்கள் எல்லாம் சொல்லலாமோ அத்தனையையும் கண்ணீரும் கம்பலையுமாக அன்று சொல்லிவிட்டு. இன்றைக்கு வெற்றி வெற்றி என்று அறிக்கை விடுகிறாரே இந்த போராட்டத்தில் இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் நடந்ததா அம்மையாரே சொல்லுங்கள்.

எப்படி இந்த அவதிகள் எல்லாம் இல்லாமல் இந்த அறப்போராட்டத்தை நடத்தினீர்கள் என்று சொன்னால் நாளை அறப்போராட்டம் நடத்தும் அனைவரும் அந்த முறையை கையாள வசதியாக இருக்கும். நீங்களும் தேவை இல்லாமல் நீதிபதிகளின் வீடு தேடி தெல்லிக்கும் ஐதராபாத்துக்கும் அலைய வேண்டாம் பாருங்கள். அதுவும் சனி ஞாயிறுகளில்.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், ஆடு நனையுதேன்னு ஒரு ஓனாய் தேம்பித்தேம்பி அழுததாம். என்ன கருணை உள்ளம் அந்த ஓனாய் என்று பார்த்தவர்கள் சொன்னார்களாம்.........

நடத்துங்க நடத்துங்க மக்களுக்கு மறதி இருக்கிற வரையில் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் பேசலாம்..................அனேகமா அந்த முதியவர் இந்த தன்னலம் அற்ற தீயாக காரியத்திற்கு பாராட்டு தெரிவித்து உலகத்தில எவன் எவனோ போராட்டம் நடத்துறான் இந்த மாதிரி எல்லாம் ஞாயமா தர்மமா நீதியா அறபோராட்டம் நடத்தமுடியுமான்னு பதிவர் பட்டிமன்றம் நடத்துவார்............

Tuesday, April 20, 2010

இந்தியா இனி பாக்கிட்த்தானுடன் எப்பவும் பேசவும் பேசக்கூடாது - எந்த பாக்கிட்த்தானியரும் இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது.

ஈழத்து பெண்மணி பார்வதி அம்மாளுக்கு இந்தியா வருவத்தற்கு அனுமதி இல்லை. அது தான் சரி என்று உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் வாதிடுகிறார்கள்.

என்ன காரணம் அவர் புலி தலைவரின் தாயார், வந்தால் கண்ணீர் பேட்டி எல்லாம் கொடுப்பார். நல்ல வேளை புலி தலைவரின் உடல் கிடைக்கவில்லை, இல்லை என்றால் மணிமண்டபம் எல்லாம் கட்டுவார்கள் என்றும் எல்லார் எழுதுகிறார்கள்.

இவர்களது இந்த கருத்து உண்மையாக இருந்தால், இது வரை 3 சமர்களில் எத்தனை ஆயிரம் இந்தியர்களை கொன்று குவித்து இருக்கிறது பாக்கிட்த்தானம்.

அதோடு நின்றதா, இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்து ஆட்சியாளர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப அல்லவா பார்த்தது.

எந்த நீதியின் அடிப்படையில் பாக்கிட்த்தானியர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

எந்த நீதியின் அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்திடம் கொஞ்சு குலாவுகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று எல்லோரும் தன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் அத்துவானி எந்த நடத்தையின் அடிப்படையில் பாக்கிட்த்தானம் சென்று முகமது அலி சின்னா நல்லவரு வல்லவரு என்று பேசி வந்தார்.

எந்த அடிப்படையில் இந்தியா இன்னமும் பாக்கிட்த்தானத்தோடு கிரிகெட்டு விளையாடுகிறது.

எந்த அடிப்படையில் இந்தியா மும்பை குண்டு வெடிப்பில் மாட்டிக்கொண்டவர்களை பற்றிய தகவல் வேண்டும் என்று பாக்கிட்த்தானத்திடம் கெஞ்சி நிற்கின்றது.

இந்தியாவின் உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் எந்த அடிப்படையில் இந்த செயல்களை எல்லாம் கேள்வி கேட்க்காமலும் விமர்சனம் செய்யாமலும் இருக்கிறார்கள்.

அப்போ உண்மை தமிழர்களும் உண்மை இந்தியர்களும் சொல்வது என்ன நாடு நாசமாக போனாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் தமிழர்கள் மரியாதையாகவோ பெருமையாகவோ இருந்துவிடக்கூடாது என்று சொல்கிறார்களா.

நாட்டில் மடிந்த இத்தனை ஆயிரம் மக்களின் மேல் வராத இறக்கம் அதுவும் காங்கிரசு தலைவரின் மேல் (பசக தான் உயிர், மோடி ஒருவர் தான் தலைவன்.......) வருகிறது என்றால் என்ன பொருள். தமிழர்களுக்கு எதிரி வேறு எங்கும் இல்லை, இன்றைக்கு தமிழகத்தில் வாழும் அரசியல்வாதிகளும் உண்மை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த உண்மை தமிழ்ர்களும் தான்.

இது எல்லாம் ஒரு நாடு அதில் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள். என்ன கொடுமை சரவணா......

நயவஞ்சகம் என்ற வார்த்தைக்கு மொத்த பொருளும் இந்த உண்மை தமிழர்கள் தான் போலும். எப்படி எல்லாம் வசதிக்கு தகுந்தார்போல் அவர்களுக்கு நாக்கு பிறழ்கிறது பாருங்கள். நேரத்திற்கு ஒரு பேச்சு, நிமிடத்திற்கு ஒரு கொள்கை.

காந்தி, புத்தர் பிறந்த நாட்டின் நிலைமை இது. இதிலே உலகத்தை பார்த்து நீங்கள் எல்லாம் எப்படி வாழ வேண்டும் தெரியுமா என்று மொட்டை அடித்துக்கொண்டு அமெரிக்கா ஆப்ரிக்கா என்று சென்று கண்ணா கோபாலா, குருவாயுருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் என்று பாடியும் ஆடியும் பாடம் நடத்துகிறார்கள்.

நாங்கள் எல்லாம் இந்தியர்கள் என்று இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெருமையாக இந்தியர்கள் வெளி நாடுகளில் வசிக்க போகிறார்கள். நாங்கள் எல்லாம் இந்தியர்கள் எங்கள் ஊரில் நாங்கள் எல்லாம் இப்படி அப்படி என்று எல்லாம் இனி எப்படி பேச போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆயிரமாயிரம் இந்தியார்களை கொன்று குவித்த மக்களையும் நாட்டையும் மன்னிக்கும் எண்ணம் கொண்ட நாட்டிற்கு இந்த மூதாட்டியினர் மீது கருணை பிறக்கவில்லை என்றால் அந்த நாட்டில் வேறு என்ன நம்பிக்கை தான் மக்கள் கொள்ளமுடியும்..................

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுப்பு - மீண்டும் உண்மை தமிழர்களின் போலி நாட்டுபற்று

பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே என்று உலக்குச் சொன்ன தமிழனின் நிலையை பார்த்தீர்களா.

இதிலே நல்லவேளை திருப்பி அனுப்பினார்கள் என்று ஒரு வயது முதியவர் எழுதுகிறார். நாட்டுக்கு இது தான் நல்லதாம் எந்த நாட்டுக்கு என்று தான் தெரியவில்லை.

தனக்கு கொடுக்கப்பட்ட 7 நிமிடங்களில் உலகின் பார்வையை இந்தியா மீதும் இந்து மதத்தின் மீதும் திருப்பினார் விவேகானந்தர்.

இனி வருட கணக்கில் பேசினால் கூட இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகில் ஒருவரும் திரும்பி பார்க்கப்போவது இல்லை.

இந்த இதயமில்லா நாட்டின் வஞ்சக வார்த்தைகளில் வெறும் அலங்காரமும் பகட்டும் தான் இருக்கிறது என்று உலகம் நன்கு அறிந்துள்ளது. அமெரிக்க பெண்மணிக்கு தெரிந்து இருக்கிறது ஈழத்தில் நடப்பது நடந்தது என்ன என்று. ஆனால் அங்கேயே அருக்கில் ஒரு 200 மைல் தொலைவில் வசிக்கும் உண்மை தமிழர்களுக்கு தெரியவில்லை பாவம்.

கீழே விழும் இலையை பார்த்து இன்றைக்கு வந்த இலை பார்த்து சிரித்ததாம். அது போல் இருக்கிறது இந்த முதியவரின் பேச்சு. நாளைக்கு உங்கள் காலம் வரும் போது இதே போல் இரு காரணம் சொல்வார்கள் பார்க்கலாம் அன்றைக்கு என்ன என்ன எல்லாம் சொல்கிறீர்கள் நீங்களும் உங்கள் கூட்டமும்.

இந்த வெட்கம் கெட்ட செயலுக்கு பாராட்டு பத்திரம் வேற. இந்து மதம் கற்றுக்கொடுத்த பாடம் போலும்.

நாளைக்கு உங்களது பிள்ளைகள் உங்களது கண்முன்னே இப்படி போகும் போது பார்த்து ஆனந்த படுங்கள் இதே போல் இறக்கம் அற்ற மனிதனே.

Wednesday, April 14, 2010

வசந்தத்தின் வரவேற்பு













Tuesday, April 13, 2010

அவள் பெயர் தமிழரசி - திரைவிமர்சனம். (லேவ் டால்சுடாயின் புத்துயிர்ப்பு)

இந்த படத்தின் காட்சி பிம்பங்களை பார்த்ததும் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். படத்தை பார்க்க துவங்கியதும், வாழ வழியில்லா கூத்துகாரர்களையும் அந்த பணக்கார சிறுவனையும் இணைத்துக்காட்டும் போதே படம் விவகாரமாகத்தான் இருக்கும் என்று விளங்கியது.

கதை சிறுபருவம் முதல் காளையர் பருவம் வரையில் வரும் வரையில் புத்துயிர்ப்பின் சாயல் இல்லை. ஏதோ ஒரு கிராமத்து கதை என்று தான் இருந்தேன். பிறகு அந்த நிகழ்வுக்கு பிறகு கதையில் அடிக்கும் புயலும். அந்த புயலில் நாயகியின் வளர்ந்து வந்த வாழ்க்கை தொலந்து போவதும். நல்ல நெறி, நல்ல வாழ்க்கை என்று இருந்தவளை வலுக்கட்டாயமாக புழுதியில் தூக்கி எறிவதாக டால்சுடாய் சொன்ன அந்த புத்துயிர்ப்பின் சாயல் இங்கு இருந்து தான் வெளிப்படுகிறது.

புத்துயிர்ப்பின் கதை இது தான், ஒரு பெரும் பணக்காரன் தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமியுடன் வித்தியாசம் பார்க்காமல் பழகுவான். இங்கே இந்த சிறுவன் அந்த கூத்தாடிகளுடன் பழகுவது போல். பிறகு பால்ய பருவம் கடந்து காளையானதும் பணக்கார திமிரிலே அத்தனை நாட்கள் பழகிய தோழியை வன்புணர்வான். அதற்கு அவனது வயது ஒரு காரணம் என்று சொல்லிக்கொள்வான்.

இங்கே தமிழரசி பிரிந்து சென்றுவிடக்கூடாது என்று படிக்க செல்லவிருக்கும் அவளை வன்புண்ருகிறான் நாயகன்.

புத்துயிர்ப்பில் அவனது பிள்ளையை கையில் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்தில் இராணுவ வண்டியில் வந்திருக்கும் நாயகனின் முகம் பார்த்து அவனது குழந்தை இது என்று காட்டிவிட வேண்டும் என்று அவள் படும் பாட்டையும், அந்த வண்டி நகரும் வரை அவன் இவளை கவனிக்காமலே இருந்தும். கூட்டத்தில் பார்க்காமல் இருந்திருப்பான் என்று வண்டி நடை மேடையை விட்டு நகரத்துடங்கியதும் வண்டியுன் ஓடி கால்களில் செறுப்பு கூட இல்லாமல் அந்த குளிரில் அந்த இளம் தளிரை அள்ளிக்கொண்டு ஓடியதை படிக்கும் போது மனதை அப்படி ஒரு பிசை பிசைந்து எடுக்கும் பாருங்கள். அந்த காட்சி எல்லாம் வர போகிறது என்று பார்த்தால். குழந்தையை கலைத்துவிட்டேன் என்று முடித்து விட்டார்.

பிறகு புத்துயிர்பில் தனது 40 வயதுகளில் அவளை தேடி அவளது வாழ்க்கையை அழித்தற்கு எப்படியாவது பிராயசித்தம் தேடவேண்டும் என்று கடந்து அலைவான். அவளையும் தேடி கண்டு பிடிப்பான். கடைசி வரையில் இவனது பிராயசித்திற்கு அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள். எப்படி பட்ட சமயத்தில் தெரியுமா, தனக்கு மரண தண்டனை கிடைக்க போகின்ற தருவாயில். அவளை அவனின் செல்வாக்கை கொண்டு காப்பாற்றி விடுகிறேன். அதோடு மட்டும் அல்லாது உன்னோடு சேர்ந்து வாழ்கிறேன் என்று சொன்ன பிறகும் முடியாது என்பாள். காரணம், இப்போது கூட எனது வாழ்க்கை நன்றாக இருக்கனும் என்று நினைக்காமல் உனது பாவத்திற்கு பிராயசித்தம் என்று நீ தேடுவதால் என்று மறுப்பாள்.

டால்சுடாய், அந்த பெண் பாத்திரத்தின் மூலம் பெண்களுக்கு முதலில் மரியாதை அதற்கு பிறகு தான் வாழ்க்கை செல்வம் என்று ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து கதை சொன்னார்.

அதே கருவை கொண்டு வந்த இந்த படத்தில், தனது கௌரவத்தை எல்லாம் தொலைத்து வன்புணர்ந்தவன் வாழ்க்கை தந்தாள் பிடிச்சுக்கோ. இதை விட்டால் உனக்கு வேறு கதி எல்லாம் இல்லை என்று மிகவும் சந்தர்ப்பவாத இனமாக பெண்களின் வாழ்க்கையை கீதா காட்டியுள்ளார். அதும் ஒரு பெண் இயக்குனராக இருந்துக்கொண்டு.

தமிழ் எழுத்தாளர் இலட்சுமியின் இரசிகை போல இருக்கு. அவர் தான் ஆண்களுக்கு அப்படி ஒரு சப்பைகட்டு கட்டுவார் பாருங்கள் அப்படி ஒரு கட்டு.

படத்தின் ஆருதல் விசை ஆண்டனியின் இசை. எப்படிம் குத்து பாட்டும் ஆட்டமுமாக இருக்கும் அந்த கலைஞருக்குள் இவ்வளவு கிராமிய இசையா. பாடல்களைவிட பின்னனி இசை மிகவும் அருமை.

அவள் பெயர் தமிழரசி அழுக்கு பட வரிசையில் அடுத்த படம் அவ்வளவு தான் ஒன்றும் வித்தியாசம் இல்லை.