இந்த படத்தின் பெயரை பார்த்ததில் இருந்தே ஏதோ ஒரு வித்தியாசமான படம் என்று தான் தோன்றியது. படத்தை பார்க்கும் போது, ஆரம்பத்தில் இருந்தே ஏதோ இரு சாயல் தெரிகின்றதே என்று இருந்தது ஆனால் உறுதியாக தெரியவில்லை.
படம் மெல்ல அதன் உச்சத்தை நோக்கி நகரும் போது, அதுவும் அந்த காதலி வெடிகுண்டு விபத்தில் இறந்த பிறகு திரைக்கதையும் கதையும் யாருக்கும் புரியாமல் அலையும் அந்த வேளையில் தான் புரியவே ஆரம்பித்தது.
கிலிக்கு படத்தின் கதை ஒரு நகைச்சுவை வகையை சேர்ந்தது. அதாவது ஒரு பெரிய செய்தியை அங்கே மிகவும் நகைப்பாகவும் அதே சமயத்தில் அனைவருக்கும் உறைக்கும் விதமாகவும் சொல்லி இருப்பார்கள்.
கிலிக்கு படத்தின் கதை இது தான். கதையின் நாயகன் ஒரு கட்டிட கலை வல்லுனர். அவர் ஒரு நகர மேம்பாட்டு திட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் எதிர்பார்க்கும் பணி உயர்வோ சம்பள உயர்வோ இல்லாமல் அவதிக்கு உள்ளாகிறார். அந்த நிலையில் பக்கத்து வீட்டு பிள்ளை இவரது பிள்ளைகளை அவனது உல்லாச பொருட்களை காண்பித்து வெறுப்பேத்தும் காட்சியில் நாயகனின் வறுமை நிலைகளை எடுத்து காட்டி இருப்பார்கள்.
அந்த நிலையில் என்ன செய்வது என்றே தெரியாமல் எரிச்சலில் தொலைக்காட்சியில் படம் பார்க்க நினைகையில் தொலை கட்டுப்படுத்தி (Remote Control) இவரை வேலை பார்க்காமல் படுத்தும். வேறு ஒரு தொகட்டுப்படுத்தியை வாங்க கடைக்கு செல்லும் போது அவருக்கு ஒரு மாய கட்டுப்படுத்தியாக அந்த தொகட்டுப்படுத்தி கிடைக்கும். அதை வைத்துக்கொண்டும் எதை வேண்டும் என்றாலும் கட்டுப்படுத்தலாம் என்று சொல்லி கொடுப்பார்கள்.
அந்த கருவியை வைத்துக்கொண்டு நாயகன் தனது வாழ்க்கையின் வளமான பகுதி எங்கே எங்கே என்று தேடித்தேடி பார்ப்பான். அந்த செயலில் தனது முழு வாழ்க்கையும் தொலைப்பான். அளவுக்கு அதிமாக குண்டாகியதும். அவனது மனைவி அவனை விட்டு மணமுறிவு பெற்று சென்றதும் கூட அவனுக்கு தெரியாமல் போகும்.
இந்த ஓட்டத்தின் உச்சமாக அவனது பிள்ளையின் திருமண விழா வைபத்தில் திடீர் என வருவான் நாயகன். அப்பொழுது அவனது மகளை அவனுக்கு அடையாளம் தெரியாமல் அவள் தான் மகனின் மணமகளா என கேட்ப்பான். அந்த சம்பவத்தில் அவள் அப்பா என்று நாயகனை அழைப்பதாக என்னி பார்க்கையில் தனது மனைவியின் இரண்டாவது கணவனை தான் அழைத்தேன் என்று மகள் சொல்ல நெஞ்சுகு போகும் ஒரு நரம்பு தெரித்து மாரடைப்புக்கு ஆளாவான்.
அந்த கால கட்டத்தில் 36 மணி நேரம் கழித்தி மருத்துவமனையில் விழித்து பார்க்கும் போது, மகள் 36 மணி நேரமும் இவனுடன் அங்கே அருகிலேயே அமர்ந்து இருந்ததாக மகன் சொல்ல. மகளை பார்த்து நாயகன் கேட்ப்பான் அப்பா என்று அவனை அல்லவா சொன்னாய் என்று.
மகள் சொல்வாள், அவர் என்னை வளர்த்தவர் அவர், நீங்கள் என்னை பெற்றெடுத்தவர் நீங்கள். எங்களை வீட்டு நீங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் நீங்கள் எனக்கு தந்தை இல்லை என்று ஆகிவிடாது. நீங்களும் தான் எனக்கு அப்பா, எனக்கு 2 அப்பா என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு தூங்க செல்வாள் அந்த பெண்.
இது வரையில் பொருளும் புகழும் மட்டுமே வாழ்க்கை என்ற சிந்தையில் இருந்தவனுக்கு முதல் முறையாக குடும்பம் தான் வாழ்க்கை. மற்றவைகள் எல்லாம் பிறகு தான் என்றும், தன்னை இந்த நிலையில் விட்டு விட்டு தனது மகன் தேனிலவுக்கு செல்லப்போவது இல்லை, நாளை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி செல்லும் மகனை. தடுத்து நிறுத்தி நீ தேன்னிலவுக்கு செல் என்று கொட்டும் மழையில் உயிர் போக நாகயன் சொல்வதாக அங்கே காட்சி முடியும்.
படத்தில் அது வரையில் வந்த நகைசுவைகளை, நாயகன் தனது தந்தை இறப்பதற்கு முன் நாயகனை பார்க்கவருவதும். அவனது தந்தை பேச முற்படுகையில் முகத்தில் அடித்தாற்போல் பதில் பேசி முகத்தை கூட பார்க்காமல் பேசி அனுப்பும் மகனின் நிலைக்கு வறுந்தி இறக்கும் அந்த தந்தையை கதையை பின்னோக்கி சென்று பார்க்கும் நாயகனின் வலியும்.
தனது பெயர் புகழ் என்று இருந்தவன் தனது மகன் கட்டிய கட்டிடத்தை பார்த்து வியந்து. அவனது திறனை இத்தணை நாட்க்கள் அறியாமல் இருந்தோமே என்று நெகிழும் கட்டத்திலும். பிறகு உச்சக்கட்டத்தில் வரும் அத்தணை காட்சிகளும் பார்ப்பவர்களை நாயகனோடு சேர்த்து வருந்த வைக்கும் அளவிற்கு படம் இருக்கும்.
இப்போது வாரணம் ஆயிரம் கதைக்கு வருவோம், கிலிக்கில் வரும் நாயகனின் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அப்படியே காட்டி இருப்பார் கௌதம் கம்பனாக்கமாக. அப்படியே ஈ அடிச்சான் பிரதியாக இல்லாமல் இந்திய வழியில் கொடுத்து இருக்கிறார்.
மேலும் கிலிக்கில் நாயகன் ஆடும் நகைப்பு ஆட்டங்களை மகனின் பாத்திரமாகவும், நெகிழ்ச்சி மிக்க பாத்திரத்தை வயதான தந்தையாகவும் உருவாக்கியுள்ளதை கிலிக்கு படம் பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்துவும் அந்த கிலிக்கு படத்தின் உச்சதில் வரும் அந்த அசத்தலான காட்சியில் தனது பெற்றோரின் படுக்கை அறையில் நுழைந்து அவர்களது படுக்கையில் ஒரு சிறுவனைப்போல் குதித்து தனது பெற்றோர்களை எழுப்பி எப்ப எல்லாம் உங்களுக்கு என்னோடு சாப்பிட தோன்றுகின்றதோ அப்போதெல்லாம் வாருங்கள். எப்போதெல்லாம் வெளியே செல்ல வேண்டுமோ சொல்லுங்கள் என்று மீண்டவனாக சொல்லும் காட்சிகளை அப்படியே இளையவனின் பாத்திரத்தின் வசனங்களில் காணலாம்.
கிலிக்கு படத்தின் சாயல் கொஞ்சமும் தெரிந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக கதை அமைத்து இருபது தெரிகின்றது. அதுவும் கிலிக்கு படத்தின் திரைகதை தீர்ந்ததுன் பிறகு எப்படி படத்தை முடிப்பது என்ற திணரல் அவருக்கு. அந்த திணரலில் தான் படம் காசுமீருக்கும் டெல்லிக்கும் அமெரிக்காவுக்கும் என்று கதை பிய்ந்து தொங்குகிறது. சம்பந்தமே இல்லாம்லும் படத்தில் ஒட்டாமலும் வரும் அந்த கோர்வைகள் கிலிக்கில் இல்லை அந்த கதையோடும் அது பொருந்தாது என்று அப்பட்டமாக காட்டுகிறது.
பச்சைகிளி முத்துசரம் டிரெய்டு(Derailed) படத்தின் அட்டை ஈ அடிச்சான் பிரதி என்று சொன்னோம். அதனால் இந்த முறை அந்த பெயர் வாங்காமல் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஆனாலும் பூனை வெளியில் வந்து விட்டதே கௌதம். அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.