Monday, January 30, 2017

பீட்டா - இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் அமைப்பு

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என்று வகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டும் வந்துள்ளது.

திடீர் என ஒருவர் காலையில் நடையாக சிங்கத்தை கூட்டிக்கொண்டு வந்தால் தெருவில் நடக்கும் மற்ற நபர்கள் என்ன செய்வார்கள் அலரி அடித்து உயிருக்கு பயந்து ஓட மாட்டார்கள்.

அடடா சிங்கம் வந்து இருக்கிறதே என்று அதை அழைத்து வந்தவரை மேடையிலே ஏற்றி பாராட்டு விழாவா நடத்துவார்கள்.

தோடு நிற்பார்களா, காவல் துறை நீதிமன்றம் என்று என்ன என்ன பாதுகாப்புகளை நிறுவி காத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் செய்வார்கள் மக்கள்.

இது இந்தியாவிலோ தமிழகத்தில் மட்டும் என்று இல்லை, உலகில் நாகரீகமே எட்டிப்பார்க்காத காட்டில் வாழும் மக்களாக இருந்தாலும் இது பொருந்தும்.

இப்படி அலரவைக்கும் விலங்கள் பட்டியலில் வீட்டில் வளர்க்கும் காளைகளை சேர்த்தது எந்த விதத்தில் ஞாயம்.

எந்த ஊரில் எந்த நாட்டில் இப்படி ஒரு தகாக செயலை செய்து இருக்கிறார்கள். இதன் நீழ்ச்சியாக் நாளை வீட்டில் வளர்க்க்கும் கோழி, வாத்து, ஆடு, அன்னம், முயல், மையில், குருவி, நாய், தொட்டியில் வளர்க்கும் மீன், பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன், எல்லாவற்றையும் வீட்டில் வளர்க்க தடை என்றும் அப்படி உங்களுக்கு வளர்க்க வேண்டும் என்றால் எங்கள் கடைகளில் விற்கும் அவைகளை வாங்கி. அவைகளுக்கு என்று நாங்கள் தயாரிக்கும் பிரத்தியோக உணவு, உடை, தங்கும் வீடு, புணர இன்னும் ஒர் சோடி என்று எல்லாவற்றையும் எங்களிடம் வாங்கி பலன் பெருங்கள்.

 நீங்கள் அப்படி வாங்கும் நாயோ பூனையோ இல்லை மீனோ குட்டிப்போட்டால் அது எங்களுக்கு தான் சொந்தம், ஏன் என்றால் நீங்கள் வாங்கும் போது வெறும் தாய்க்கு தான் பணம் கொடுத்தீர்கள், குட்டிக்கும் சேர்ந்து அல்ல என்றும் முழங்குவார்கள் இந்த பீட்டா அமைப்பாளர்கள்.

ஏன் அமெரிகாவில் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் பட்டியலில் சிங்கத்தை சேர்த்து ஒரு சட்டத்தை இயற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தானே பீட்டா. சரி பீட்டா இந்தியாவினால் முடியாது அது இராதாராசனின் வேலையும் இல்லை, பீட்டா அமெரிக்க செய்ய வேண்டியது தானே......உடனே இராதாராசன் செல்வார், பீட்டா என்ன செய்யனும் என்று நீ எல்லாம் சொல்லக்கூடாது என்று முழங்குவார்......

அது எப்படி அமெரிக்காவில் செயல்படும் ஒரு நிறுவனம் வியாபார நிறுவனம் போல் அதன் கிளையை இந்தியாவில் துவங்குகின்றது அந்த நிறுவனம் இந்தியர்கள் என்ன என்ன விலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று எப்படி ஒரு வெளி நாட்டு நிறுவனம் வரையறுக்க முடியும்.

ஒரு உதாரணத்திற்கு சொல்வோம், பாக்கிட்தானம் நாளை இந்தியர்கள் அதுவும் தென்னிதியர்கள் அதிகம் உண்ணும் அரிசி உணவை காட்டில் உண்ணும் உணவு என்று ஒரு பட்டியலை உருவாக்கி அதை தென்னிதியர்கள் உண்ணக்கூடாது என்று இந்தியாவில் ஒரு சட்டம் இயற்ற முடியும் என்றால் பாசக சும்மா பேச்சுகாவது ஒத்துக்கொள்ளுமா என்ன.

எங்களுக்கு பாக்கிட்தானமும் ஒன்று தான் அமெரிகாவும் ஒன்று தான் வெளி நாடு என்றாலோ அல்லது எதிரி நாடு என்றாலோ அது பாக்கிட்தானம் என்ற வரையரை எல்லாம் எங்களுக்கு இல்லை இல்லவே இல்லை.

அப்படி பாக்கிட்தானம் இந்தியாவில் சட்டம் இயற்றமுடியும் என்று பாசக நினைக்குமானால் நாம் மேலும் இது பற்றி விவாதிக்கலாம். இல்லை என்றால் பீட்டா செய்து இருப்பது தேச துரோகம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல் பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும் விதத்திலும் ஒற்றுமைக்கு ஊருவிளைவிக்கு விதத்திலும் நடந்திருக்கிறது.

ஆக இந்த குற்றங்களுக்கு பரிகாரமாக இனி தென்னிந்திய மாநிலங்களில் அவர்கள் இனி மனிதர்களை காக்கும் இயக்கமாக இன்னும் 20 ஆண்டுகளுக்கு பணியாற்ற நீதிமன்றம் ஆணையிடவேண்டும் என்று விழைவோமாக.

மனிதர்கள் எல்லாம் எனது கண்ணுக்கு தெரியாது என்று சொன்ன விலங்கு ஆர்வலர்கள் தென்னகத்து மக்களுக்கு சேவைகள் செய்யட்டும் அப்படியே முடிந்தால் வீட்டு விலங்குகளுக்கும் சேவை செய்யட்டும்.

Saturday, January 28, 2017

அந்த 7 நாட்களும் அந்த 50 நாட்களும் - புரியாத மாதிரி நடிக்கும் பாசகவும்

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு யார் காரணம் ஆராய்கிறார்கள் - வாழ்த்துகள்

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு யார் காரணம். வித்திட்டது யார், வழி நடத்தியது யார். ஏன் கலவரத்தில் முடிந்தது.

சல்லிக்கட்டு மட்டும் தான் இப்போ தமிழத்தில் பிரச்சனையா மற்றபடி என்ன பாலாறும் தேனாறுமா ஓடுது. பிறகு ஏன் சல்லிக்கட்டுக்கு இத்தனை போராட்டம். அப்போ உண்மையில் எந்த அடிப்படையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. அதைவிட இதை கூட்டியவர்கள் யார்....

களத்தில் இருந்து வந்த அனைவரும் வன்முறையா அப்படினா என்னமா என்று கேட்கும் அளவிற்கு இருந்த போராட்டம் கலவரமாக அதுவும் கூட்டம் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் வன்முறை முளைக்க இந்த சல்லிக்கட்டு போராட்ட கூட்டம் எப்படி காரணமாக இருந்தது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

மாணவர்கள் போராடினால் - நக்சல் பாரிகள்
இளைஞர்கள் போராடினால் - தனி தமிழக போராளிகள், இசுலாமிய தீவிரவாதம்
அரசியல் கட்சிகள் போராடினால் - தேச விரோத சக்திகள்

இப்படி தான் இது வரையில் போராட்டங்கள் வகைப்படுத்த பட்டுள்ளது.

நல்லவேளை சல்லிக்கட்டுகாக போராடும் அனைவரும் கருப்பு பண ஆட்கள் என்று சொல்லாமல் விட்டார்களே என்று மனதளவில் ஆருதல் அடைவோம்.

போராட்டம் என்றால் கொடிபிப்பார்கள், கோசம் போடுவார்கள் அதை தொடர்ந்து கல்லெறிவார்கள். பிறகு காவல் துறை அவர்களை சிறைபிடிக்கும், அடைக்கும் நீதிமன்றத்தில் அவர்கள் விடுவிப்பார்கள். பொது சொத்துக்கு விளைவித்த சேதத்தை போராட்ட குழுக்களிடம் வசூலிக்க நீதிமன்றம் ஆணையிடும். இது தான் காலம் காலமாக நடக்கும் போராட்டத்தின் இயல்பு.

ஆனால் மெரினாவில் நடந்தது என்ன, கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்து இருப்பதும் கோசங்களை எழுப்புவதுமாக இருந்தார்கள். ஆனால் தடுப்புகளை தாண்டி வந்து சாலை மறியலில் கூட ஈடுபடவில்லை.

மேலும் தினமும் புதியவர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருந்தார்கள், அதுவும் பெண்களும் குழந்தைகளும் என்று தினமும் ஒரு திருவிழா போல் கலந்துகொண்டதை பெருமையாக கருதவும் பேசவும் செய்தார்கள்.

தமிழக அரசும் இந்திய அரசும் இந்த போராட்டத்தை பார்த்து ஏதோ தசரா பண்டிகை நடப்பது போல பார்த்து ஏளனமாக சிரித்தது. அதிலே டெல்லி போகிறேன், புதிய சட்டம் இயற்ற போகிறேன் எல்லோரும் வீட்டிற்கு போய் ஓய்வு எடுங்கள் என்று அறிக்கைகள் வேறு.

போராட்டகுழுவில் யார் தலைவர்கள் என்று தெரியவில்லை பேச்சு வார்த்தை நடத்த என்று ஒரு குற்றசாட்டு. இல்லை என்றால் அமையாக கலைந்து போய் இருக்கும் என்று ஆரூடம் வேறு இப்போது காவல்துறை சார்பில் சொல்கிறார்கள்.

இந்த பசப்பு வார்த்தைகளை நம்பி போராட்ட ஒத்துழைப்பு குழுவை காட்டிக்கொடுப்பார்கள் என்றும் நம்புகிறார்கள். இந்த நல்லவர்களை நம்பி நம்மவர்களை காட்டி கொடுத்துவிடாதீர்கள் நண்பர்களே வேரறுத்துவிடுவார்கள்.

உண்மையில் போராட்டதிற்கு என்ன காரணம், 50 நாட்கள் மக்களை தெருத்தெருவாக அலையவிட்டார்களே அது தான் காரணம்.

அதோடு நில்லாமல் தினம் தினம் அவதிபடும் மக்களை பார்த்து கள்ளபணம் வைத்து இருப்பவர்கள், கருப்புபணம் வைத்து இருப்பவர்கள் என்றி எள்ளி சிரித்தார்கள் அந்த 50 நாட்களை முடக்கியவர்கள்.

இந்த 50 நாட்களில் எத்தனை விதமான மக்களை தினம் மக்கள் சந்தித்து இருக்க கூடும். பாராபட்சம் இல்லாமல் அன்றாட கட்சி மக்கள் முதல் மாத சம்பளம் பெறும் மக்கள் வரை ஆண் பெண் இளைஞர்கள் மாணவர்கள் என்று வரிசையில் நின்ற மக்கள் அதுவும் மணிக்கணக்கில் நின்றவர்கள் எல்லாம் என்ன மௌனமாகவா நின்றுக்கொண்டு பணம் எடுத்தது தாமே என்று விட்டிற்கு சென்ன்றார்கள் என்று நம்பும் அந்த 50 நாட்கள் அரசை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

அந்த 50 நாட்களில் எவ்வளவு கேவலமாக மைய அரசு வார்த்தைகளை வீசியது அதுவும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளான நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை என்னமோ இவர்கள் வீட்டில் பிச்சைக்கு வந்து நிற்கும் மக்களாக நினைத்து என்ன என்ன பேசினார்கள்.

அந்த கோமாளிதனத்தின் உச்சம் வங்கியில் செலுத்திய உங்களது பணம் வெளியே எடுக்காதீர்கள் அதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் காசை எடுத்து இறையுங்கள் என்று புனித பிரச்சாரம் வேறு என்று தொடர்ந்து வெறுப்பேற்றினார்கள்.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பேடியம் என்று அறிவிப்புகளை காட்டி காட்டி வெறுபேற்றினார்கள். அது மட்டும் இல்லாது எல்லா தொகாவும் மக்களை கூட்டி வைத்துக்கொண்டு மக்கள் தேசத்துக்காக அவர்களது சொந்த காசை இறைத்தால் தான் என்ன குறைந்துவிடப்போகிறார்கள் என்று எள்ளி நகையாடினார்கள்.

 நாங்கள் நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை நாங்கள் நிங்கள் இருந்தால் எனக்கு என்ன செத்தால் எனக்கு என்ன, அந்த 50 நாட்கள் மட்டும் இல்லை இன்னும் அந்த 2 1/2 வருடம் கூட கொடுப்போம். வந்து வரிசையில் நில் என்றால் நிற்கனும் கை எழுத்து போடு என்றால் போடனும் இல்லை என்றால் பிறகு என்ன ஆகும் என்று தெரிந்துதிருக்கும் என்று நினைக்கின்றோம் என்று வசனங்களை டெல்லியில் இருந்து இந்தியில் ஒலி பரப்பினார்கள்.

அந்த 50 நாட்களில் சந்தித்த அனைவரிடம் இருக்கும் மனப்போராட்டம் பகிரப்பட்டது, என்னையா இது இப்படி எதேச்சதிர்காரம் செய்கிறார்கள் என்ற வெறுப்பு அனைவரது மனதிலும் புழுங்கிக்கிடந்தது.

தமிழகத்தில் பண்டிகை என்றால் அது தீபாவளியும் பொங்கலும் தான் மற்றவைகளை பற்றி அதிகம் கவலைபடுவது பாசகவினர்கள் தான்.

அந்த 50 நாட்களின் விளைவாக பொங்கல் இல்லை என்று ஆனது, 1000 ரூபாய் நோட்டில் வேர்கடலை சாப்பிடும் கூட்டம் எல்லாம் எளியவர்களை பார்த்து பொங்கல் கொண்டாட முடியலையாம் என்று நகைத்து ஏளனமாக பேசியது. என்ன தேச நலனுக்காக பண்டிகைய கொண்டாடாம இருங்கள் என்று தான் சொல்லவில்லை மற்றபடி அனைத்தையும் செய்த்தது அந்த திமிர் பிடிச்ச அரசு.

அது வரை பொருமை காத்தவனுக்கு என்னடா ஏதாவது செய்ஞ்சே ஆகனும் என்று தோன்றவே அந்த 7 நாட்களை அரங்கேற்றினார்கள் மாணவர்களும் இளைஞர்களும்.

இது ஆராய்ந்து செய்து கண்டுபிடிக்க வேண்டியதாம் தொகாவில் விவாத்திற்கு வரும் பாசக மக்களும் நடு நிலை என்று சொல்லிக்கொள்ளும் மக்களும். கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா.

சந்தேகம் இருந்தால் இன்னும் ஒரு அந்த 50 நாட்களை மைய அரசால் கொண்டுவர சொல்லிப்பாருங்களேன், தமிழகம் மட்டும் இல்லை மற்ற மானிலங்களிலும் இதே போராட்டம் வெடிக்கும்.

போய் வேற எந்த முதளாலிய வாழவைக்க இந்த மக்களை சாக அடிச்சு அவன் உழைத்து சம்பாத்தித்த பணத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று கொள்கை வகுங்கள் பாசகவினர்களே.........

Wednesday, January 25, 2017

நல்லவேளை இந்த காவலர்கள் மருத்துவர்கள் ஆகவில்லை - ஒரு வேளை ஆகி இருந்தால்

வேறு யார சொல்லப்போரோம், காவலர்கள் தான் (Police). என்ன ஒரு அறிவுக்குக்கொழுந்து இவர்கள்.

மருத்துவரிடம் பாம்பு கடிச்சுதுன்னு ஒருவரை தூக்கிகொண்டு வந்தா, கடிச்ச இடத்தையும் அதன் சுற்றி இருக்கும் இடத்தில் இருந்து நச்சு பராவாத வண்ணம் தடுப்பை நிறுத்தி. நெஞ்சுக்கு நச்சு வராமலும், நாளங்களில் இரத்தம் உறையாமலும் வைத்தியம் செய்து இருப்பார்கள் மருத்துவர்கள்.

ஒரு வேளை இந்த காவலர்கள் மருத்துவர்களாக இருதிருந்தால், என்ன செய்து இருப்பார்கள். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

காலில் பாம்பு கொத்தியது என்று சொன்னதும், தலையில் நச்சு ஏறப்பபோகிறது என்று மண்டையில் அடித்து உடைத்து இருப்பார்கள்.

அது மட்டுமா, நெஞ்சில் நச்சு தாக்கப்போகிறது என்று நெஞ்சை பிளந்து இருப்பார்கள்.

மற்றும் பாம்பு கொத்தாத கால் மற்றும் கைகளில் நச்சு தாக்கப்போகிறது என்று அடித்து அடித்து இரத்த ஓட்டத்தையே நிறுத்தி இனி எப்படி நச்சு ஏறும் என்றும் வடிவேலு பாணியில் சொல்லி இருப்பார்கள்.

திருவல்லிகேணியில் வன்முறை வந்தால் (அது நீங்களாக உருவாக்கியது என்று ஐ நா சபை வரை நிறுபிக்க சாட்சிகள் உண்டு). திருவல்லிகேணையையும் மற்ற இடங்களையும் துண்டித்து நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் உயிரை காப்பாற்றும் காவல் என்று பொருள்.

அதைவிடுத்து மெரினாவில் 6 நாட்களாக இருந்த அப்பாவி இளைஞர்களை தடி கொண்டு தாக்கினால் அதற்கு ஒரே பொருள் தான், உங்களின் சுற்றமோ நட்போ அங்கு இல்லை என்றது மட்டும் தான்.

சட்டத்தின் மேலும் சட்ட அமைபின் மேலும் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் எனது சகோதரிகளும், அம்மாக்களும், சிறார்களும் சிறுமிகளும் நம்பிக்கையுடன் அங்கு வந்து அமர்ந்திருப்பார்கள். போராட்டம் செய்திருப்பார்கள்.

இந்த அறப்போர் இந்தியனுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை அதை வேறுபாடில்லாமல் செயலாக்க நினைத்த என் மக்களை என்ன திமிர் கொண்டு தாக்கினீர்கள் காவலர்களே.

ஒரே ஒரு திமிர் தான், தன்னுடைய சொந்தமும் நட்பும் இதில் இல்லை என்று தான் என்று முடிவாகவே சொல்லமுடியும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

அங்கு போராடிய பெண்கள் உங்களின் நண்பர்கள் உரவினர்கள் சொந்தங்களின் வயதை ஒத்தவர்கள் இல்லை.

இந்த பெண்கள் தங்களை பாதுகாத்துகொள்ளவும் அவர்களை பாதுகாக்க ஆண்கள் முன்னால் வருவதும் என்று வரும் அந்த போராட்டகாரர்களை பார்க்க உங்கள் உரவுகள் நினைவுக்கு வரவில்லை.

இதை எல்லாம் தாண்டி எங்களது இடத்தில் இருக்கும் மாணவர்களை அடிக்காதீர்கள் என்று மூதாட்டி முதல் பெண்கள் அனைவரும் வந்ததை குடும்ப பிரச்சனையில் உரவுக்கு உரவு கெடாமல் இருக்க நமது தாய்மார்கள் குறுக்கே நிற்கு படலம் உங்கள் கண்களுக்கு முன்னால் வரவில்லை.

என்ன கொடுத்துவிடப்போகிறார்கள் அந்த ஆசை வார்த்தைகளை வீசியவர்கள். விலை உயர்ந்த வண்டி பார்ப்பவர்கள் வாய்பிளக்கும் ஒரு வண்டி, இருக்க ஒய்யாரமாய் ஒரு வீடு. மனையாளின் கழுத்தில் கூண்விழும் படி தங்கம். இவை அனைத்தும் நீர் வாங்கலாம் இந்த காரியத்திற்கு பலனாய்.

ஆனால் உனக்கு பிறகு அதை அனுபவிக்க யார் இருக்க போகிறார், நீ முடியும் முன்னே உனது கண்ணெதிரிலேயே அத்தனையும் அழியக்காண்பாய்.

எப்படி தெரியுமா என் வீட்டு பெண்களும் யுவதிகளும் உயிருக்கு பயந்து ஓடிய அந்த காட்சியை போல். ஒன்று செய்துவிட  முடியாமல் நின்றானே அந்த இளைஞனை போல் நீயும் இருக்க காண்பாய்.

 நாணயத்தில் ஒரு பக்கம் இல்லை என்றால் அந்த நாணயமே மதிப்பிழக்கிறது அதுபோல் பால் வேறுபாடில்லாமல் ஆணுக்கு சளைத்தவள் இல்ல பெண் என்று வந்தவளை குலை நடுந்த ஓட்டியவர்களே நீங்களும் உங்களது மக்களும் என்ன செவ்வாய் கிரகணத்திலா போய் வாழப்போகிறீர்கள்.

அவனவன் விதைத்தை அவனவன் அறுவடை செய்வான், நல்லவைகளை விதை நல்லவைகளாகவே அறுவடை செய், மற்றதை பற்றி உனக்கு கவலை ஏன் என்று சென்ற யுவன் யுவதிகளையும் கர்பினி பெண்களையும் கொடுமை செய்த்த நீங்கள் எல்லாம் என்ன நல்ல சாவா அடைய போகிறீர்கள் நஞ்சுண்டவர்களே.

சொர்கமும் நரகமும் சாவிற்கு பின்னாளில் என்று நம்பிக்கொண்டு இருக்கும் காவலர்களே இன்னும் கொஞ்ச நாளில் நடந்தது என்ன என்ற நிகழ்வில் உங்களையும் நீங்கள் போற்றி வளர்த்த உரவுகளையும் நாங்கள் கட்டாயம் காண்போம்.

அப்பவும் உன்னை போல் அவர்களின் மேல் எனது உரவுகள் அமிலத்தை உன் போல் அடுத்தவன் விட்டெரியும் காசுக்காக உமிழும் என்று நம்பாதே, கருணையே காட்டுவார்கள்.

ஏன் தெரியுமா அவனுக்கும் அவளுக்கும் தான் தனது அடுத்தவன் என்று பிரித்து பார்க்க தெரியாதே, தெரிந்து இருந்தால் உன்னோடும் உனது கள்ள கூட்டோடும் அவன் வாட்சப்பில் இருந்திருப்பானே சென்று தப்பிருப்பானே, தனது சகோதரிகளை காத்து வீரன் என்று உன் போல் அவர்கள் முன் காட்டி இருப்பானே.

 நல்லவன் ஞாயம் தெரிந்தவன் மன சாட்சிக்கு பயந்தவன் இவர்கள் எல்லாம் ஏமாளிகள் என்று நீ நினைத்துக்கொள். இவன் செய்ய மறந்ததை கடவுள் அவனுக்காக செய்வான், அவன் அவள் கடவுளின் செயலை கவனிக்கும் பட்ச்சத்தில்............

உனக்காக கடவுளை வேண்டுவோம் இந்த தரம் கெட்ட தகப்பனின் தவறுக்கு ஒன்று அறியா அவனது குழந்தைகளி தண்டித்துவிடாதே என்று.

ஆனால் விதி வலியது நியூட்டன் சொன்னது போல் வினைக்கு எதிர்வினை உண்டு..... பொருத்து இருந்து பார்ப்போம் எனது விதியையும் உனது விதியையும்.

இங்கு காவலர்கள் என்று சொன்னது குளீரூட்ட அறையில் அமர்ந்து இப்போ தீ வை, பிறகு எல்லா மாவடங்களிலும் தடியடி நடத்து என்று சொன்ன அந்த மூளைகார அறிவாளையை தான் வெறி நாய் போல் மக்களின் மேல் விழுந்து பிடுங்கிய காவலர்களை அல்ல.

Saturday, January 21, 2017

பீட்டாவை நாம் முதலில் தடை செய்வோம்

எரியரத பிடுங்கினால் கொதிப்பது நிற்கும் என்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மைய அரசு பீட்டாவை தடை செய்யும் முன் இன்று முதல் தமிழகத்தில் பீட்டாவை நாம் தடை செய்வோம்.

அடுத்த நாட்டில் வசூலாகும் பணத்தை வைத்துக்கொண்டு இந்தியாவில் வழக்கு நடத்த பீட்டாவின் அதிகாரிகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

இந்தியாவில் வசூலாகும் பணத்தை கொண்டு தான் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் பீட்டா அமைப்பினர்.

பீட்டாவின் இணைய தளத்தில் அவர்களுக்கு யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்ற விபரங்கள் இல்லை. இருப்பினும் வீகன் உணவை அவர்களிடம் இருந்து வாங்க விளம்பர படுத்தியுள்ளார்கள்.

இனி தமிழகத்தில் யாரும் அந்த தளத்தில் இருந்து உணவுகளை வாங்குவதை நிறுத்துவதில் இருந்து தொடங்குவோ.

 நாளை முதல் டீ குடிக்க கடைக்கு சென்றால் கூட பீட்டா(செர்சி) பால் டீ என்றால் வேண்டாம் என்று சொல்லுங்கள்.

தமிழகத்தில் பீட்டாவில் இணைந்து இருக்கும் எந்த ஒரு நடிகரின் நடிகைகளின் படங்களை புரக்கணியுங்கள். அது எப்பேர்பட்ட நாயகன் நாயகியாக இருந்தாலும் சரி என்று சபதம் எடுங்கள்.

உணவகங்களில் நாட்டு கோழி(தமிழகத்தில் வளர்த்தது என்று கேளுங்கள்) பிரியாணி கடைகளில் நாட்டுக்கோழி பிரியாணி என்று ஒரு தனி இரகம் உண்டு என்று அனேகர்களுக்கு தெரியும்.

உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஊரில் விளைவிக்கப்பட்டதை ஊக்கப்படுத்துங்கள்.

குளிர் பாணங்களில் எவர் எவர் எல்லாம் பீட்டாவிற்கு நன்கொடை கொடுத்தார்கள் என்று தெரிந்துக்கொண்டு அவைகளை வாங்குவதை நிறுத்துங்கள்.

காலப்போக்கில் இது non-supporter of Peta என்ற அறிவிப்புடன் வர துவங்கும்.

நமக்காக விளைவிக்கும் விவசாயிகளையும் அவர்களை சார்ந்தவர்களையும் இப்படி தான் இனிமேல் மீட்டு எடுக்க வேண்டும்.

பீட்டாவையும் ஒழித்தால் போல் ஆச்சு நமது மக்களையும் மீட்டு எடுத்தார் போலும் ஆச்சு என்று துவங்குங்கள்.

பிறகு பாருங்கள் பீட்டாவில் இருந்து உங்களிடம் காவடி ஏந்தி வருவார்க, தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்காதீர்கள். அவர்களுக்கு உதவுவது பாம்புக்கு பால்வார்ப்பதற்கு சமம். சமயம் பார்த்து நம்மளையே கொல்ல வரும்.............

இன்றில் இருந்து செயல்பட துவங்குங்கள், நம்மால் முடியாதது இல்லை. இது ஒரு வகையில் சுதேசி இயக்கப்போராட்டமாக நாம் செயல்படுத்த துவங்க வேண்டும்.

பீட்டாவை ஆதரித்தால் உங்களுக்கு சொர்கமே கிடைக்கும் என்று சொன்னால் கூட அதற்கு நான் நரகத்திற்கே போகிறேன் கூட வரியான்னு கேளுங்கள்.......

Friday, January 20, 2017

பீட்டா - பாசகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் பூர்வா சோசிபுரா வாழ்க

பூர்வா, இனி மெல்ல மோடி என்ற சொல் மறைந்து நாடுமுழுவது  பூர்வா பூர்வா என்று தான் முழங்கும்.

உலகின் இரண்டாம் பெரிய மக்களாட்ச்சி, மூத்த குடி, உலகிற்கு எழுத படிக்க  பழக என்று வேதங்களில் சொல்லும் அத்தனையையும் கற்றுக்கொடுத்த நாடு இந்தியா என்று உலகம் முழுவதும் பேசி வந்த மோடியை மெல்ல கழட்டி விட்டு விட்டு இனி அமெரிக்காவின் நேரடி முதளாலி பூர்வா சோசிப்புரா தான் இனி இந்திய நாட்டையும் ஏன் உலகையும் ஆள வல்லவர்.

நேருவிற்கு பிறகு முழு பலத்துடன் பாராளுமன்றம் சென்ற பாசக மண்டியிட்டது இந்த அமெரிக்கரின் காலடியில் தான்.

இந்த பெண்மணியின் உத்தவரவுக்காக காத்து இருக்கும் 56 இன்சு மார்பகன் நாளை என்ன செய்வாரோ தெரியவில்லை.

50 நாள் தானே கேட்டேன் என்ற பெருமகன் பூர்வாவின் ஆணைக்காக காத்து கிடக்கிறார் போலும்(இங்கே ஓ பன்னீரின் நினைவு வந்தால் கம்பெனி பொருப்பாகாது).

இந்த அமெரிக்ககாரியின் ஆணைக்கு இணங்க இந்தியர்கள் கடமை பட்டவர்கள் போலும்.

இங்கே எல்லையிலே இராணுவ வீரர் என்று எல்லாம் பேசக்கூடாது ஏன் என்றாலும் அவரும் பூர்வாவின் ஆணைக்காக சுடலாமா வேண்டாமா என்று காத்துக்கொண்டு தான் இருக்கிறார்.

தமிழச்சிகளுக்கு இங்கே என்ன வேலை சென்று சமையல் செய்து தொகாவில் தொடர் பார்ப்பதை விட்டு விட்டு, மனசுக்குள் பூர்வா சோசிபுரா என்ற நினைப்பா.........

சல்லிக்கட்டு - கௌரி மாலிகுக்கு தெரியுமா இல்லை உங்களக்கு தெரியுமா - இந்தியா டுடே



உங்களை யாருயா நல்ல பால் குடிக்க சொன்னது, நீ பால் குடிக்கிறியோ இல்லையோ எங்களுக்கு பணம் வந்தா சரி தான்.

நீ இருந்தா என்ன செத்தா என்ன, எனக்கு வர வரும்படிய ஏன் சிதைகிறே, நாங்க நல்லபடியா காசுவாங்கி பிழைப்பது(எச்சகளை நாயா, பட்டுத்தி, ஆடிகாருல வலம் வருவது) உங்களுக்கு பிடிக்கலியா.

தமிழன் என்ன திங்கனுன்னு வடக்க கடை வச்சிருக்க நான் தான் முடிவு செய்யனும் தமிழன் இல்லை.

எங்க சிப்பா பார்த்து நீங்கள் ஆசைபடவில்லை, இல்லை இந்திப்பாடல் கேட்டு மயங்கவில்லை, இல்லை எங்கள் மானிலத்தில் வேலைக்கு வரவில்லை, பிறகு ஏன், அடங்கி நட, இல்லை அலங்கானல்லூரில் 250 பேரை சிறை வைத்தது போல் மொத்த தமிழகத்தையும் சிறையில் வைப்போம் முடிந்தால் மோதிப்பார்.

உங்களுக்கு கௌரி மாலிக்கு என்றால் யார் என்று தெரியவில்லை முட்டாள் தனமாக மொதுகிறீர்கள், பின்னாள் வருத்தப்படுவீர்கள். சாக்கிறதை சொல்லிப்புட்டேன்

தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி, தமிழகம் என்றால் இந்தியா, ஆனால் இந்தியாவுக்குள் தமிழகத்தை பிரித்துதாள ஒரு பகுதியினர் துணிந்துவிட்டனர். தேச துரோகி என்று வைத்துக்கொள்ளுங்களேன் . ஆனால் மற்ற இந்தியர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றார்கள், கௌரி மாலிக்கை ஆதரிக்கிறார்களா இல்லை இந்தியனாக இருக்க போகிறீர்களா.... சொல்லுங்கள் இந்தியர்களே........

பீட்டா இந்த சல்லிக்கட்டுக்கு தடை வாங்கினது சரிதான் - பாருங்க மாடுகள் என்ன துன்பப்படுதுன்னு

 இந்த சல்லிக்கட்டின் தடைய நீக்க தான் இத்தனை போராட்டமா.... போங்கப்பா போய் வேற வேலை வெட்டி எதாவது இருந்தா பாருங்க. பீட்டா அதனுடைய தர்மத்தில் என்றைக்கும் நிலையாக மாறாத நிலையில் நீடிக்கும் ஒரு லாப நோக்கு இல்லாத சீவகாருண்ய அமைப்பு தான் சொன்னா நம்ப மாட்டேன்னுகிறீங்களே...... பவிகளா உங்களை தகாக வார்த்தைகள் சொல்லி சுசா திட்டுவது எல்லாம் சரிதான் நல்லா வேணும் உங்களுக்கு தமிழர்களே.......



Saturday, January 14, 2017

பைதியம்(Mental) லூசு(loose) சுப்பிரமணி சாமியையை எப்படி CIAல சேர்த்துகொண்டானுக

உளவாளி சுப்பிரமணி சாமியை எப்படி சிஐயேவில் உளவாளியாக சேர்த்துக்கொண்டார்கள் என்று எப்பொழுதும் வியந்ததுண்டு.

சிஐயே மட்டும் இல்லை உலகில் என்ன என்ன உளவு நிறுவனங்கள் இருக்கின்றதோ அத்தனை உளவு நிறுவனங்களின் சார்பிலும் இந்தியர்களுக்கு எதிராக தூண்டி விடவும் வெறி நாய் தாக்குவது போல் தாக்க வேண்டும் என்றாலும் அவைகள் நாடுவது இந்த சுப்பிரமணி சாமியை தான்.

அறிவார்ந்த வேலைகளை எல்லாம் முடிக்க இந்த உளவாளி சுசாவை அவர்கள் பயன் படுத்துவது இல்லை. காரணம் இவரது தைரியம் அப்படி, 10 சின்ன பிள்ளைகள் சேர்ந்து ஒரே ஒருவனை குழுவாக தாக்கும் போது அதில் ஒருவன் மட்டும் மிக அதிகமாக பேசியே மிரட்டுவான். அந்த ஒருவன் எந்த ஒரு செய்கையையும் தானாக செய்ய தைரியம் இல்லாத கோழையாக இருப்பான்.

ஆனால் கூட்டம் கூடிவிட்டாலோ அதுவும் மாட்டியவனுக்கு நிச்சயம் அடி உண்டு என்றும் மேலும் திருப்பி அடிக்கவோ நாளை பின்ன அம்மா அப்பாவை கூட்டி வந்து தாக்க மாட்டான் என்று தெரிவிட்டால் போது. இந்த கோழை வீரனாக மாறி ஆடுமே ஒரு ஆட்டம் அந்த தைரியம் இந்த உளவாளியின் தைரியம்.

தமிழகத்துக்கு நலனான ஞாயமான காரியம் எதையும் இவரால் செய்யமுடியாது.

அன்றைக்கு மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது இராசிவ்காந்தியை கொலை செய்ததை தவிர வேறு எதுவும் சாதிக்காத கோழை இவர். இவ்வளவு ஏன் இவரை நம்பி கட்சிக்கு வந்த சந்திரலேகாவை தாக்கிய பின்பும் அவருக்கு ஞாயம் வாங்கி கொடுப்பதை விட்டு விட்டு தாக்கியவரிடம் பேரம் பேசி தரகு செய்த உத்தம மனிதர் இவர்.

இப்படிபட்ட எந்த தனி தன்மையும் கொள்கையும் இல்லாத ஒரு தொடை நடுங்கி மனம் பிழன்றவர் பிதற்றுபவரை எப்படி முன்னணி உளவு நிறுவனங்கள்: வேலைக்கு அமர்த்தி வேலை எல்லாம் வாங்குகின்றது என்று வியப்பாகத்தான் இருந்தது முதலில்.

பிறகு தான் புரிந்தது உளவு நிறுவனங்கள் எதிரிகளை மிரட்டவும் பணியவைக்கவும் அவர்களின் மேல் வெறி நாய்களை ஏவி கொடுமைபடுத்தி பணிய வைப்பார்கள். இந்த வெறி நாய் நுட்பத்திலும் மனித உருவில் இருக்கு வெறி நாயின் தாக்குதல் மிகவும் வன்மமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்றதில் ஆச்சர்யம் இல்லை.

இந்த வகை வெறி நாயாக சுப்பிரமணி சாமி இந்தியாவிற்கு எதிரான நாடுகளின் உளவு நிறுவனங்களின் சார்பில் இந்தியர்களை வெறி நாய் தாக்குதல் நடத்துபவர் இவர். இவரின் சமீபத்திய சல்லிக்கட்டு செய்திகளில் சொல்லும் செய்திகள் செர்சி மாட்டு கம்பெனியின் சார்பில் இந்தியர்களின் மீது தாக்குதல் தடத்துது இந்த மனம்பிழன்ற உளவாளி கொலையாளி.

சரி இந்த வெறி நாயை என்ன செய்வது உங்கள் நகராட்சி பக்கம் வந்தால் உங்கள் நகராட்சி நாய்பிடிக்கும் துறைக்கு தகவல் கொடுக்கவும். அவர்களிடம் இது மனித உருவில் திரியும் வெறி நாய் என்று விளக்கி சொல்லவும். சில நேரங்களில் ஓனாய்கள் போல் தன் இனத்தையே உண்டு ருசிக்கும் கொடூர குணம் கொண்டது என்று எச்சரியுங்கள்.

Wednesday, January 11, 2017

நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு மோடி கொடுக்கப்போகும் அல்வா - வங்கிகளில் இனி இப்படி தான் உங்கள் பணத்தை கொடுப்பார்கள்

பணமில்லா பரிவர்த்தனை, வங்கியில் செலுத்திய பணத்தில் கருப்பு பணம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் வரி கட்டி இருக்க வேண்டும் இல்லை என்றால் குறைந்தது பாசக அரசு அமைத்த பிறகாவது வரி கட்டி இருக்க வேண்டும். இன்னமும் பணமில்ல பரிவர்த்தனையில் நீங்கள் எதையுமே வாங்காதால் என்று என்ன என்ன கணக்குகள் எல்லாம் மோடி வித்தை சாலங்கள் காட்ட முடியுமோ அத்தனையும் காட்டி விட்டு கடைசியில் உங்களுக்கும் இப்படி தான் அல்வா கொடுப்பார்.



அப்போ வங்கியில போட்ட பணம் எல்லாம் எடுக்க முடியாதா என்றா கேட்குறீர்கள் அது தான் தொகாவுக்கு தொகா பாசக மக்கள் சொல்கிறார்களே உங்களுக்கு எதுக்கு கையில பணம். பணம் எடுக்கனும்னா இனி மனு போட்டு அவுங்க அவசியம் கொடுக்கலாமா இல்லையா என்று ஆராய்ந்து பிறகு தீர்மானித்து ஆலோசித்து சொல்வார்கள். காத்து இருக்க வேண்டியது தான் மக்களே.

பாரத மாதாகீ சே........

எல்லையில குளிரிலும் மழையில் நிற்கும் இராணுவ வீரர் என்ன கையில பணமா வச்சுகிட்டு நிக்குறாரு சொல்லுங்க மக்களே, சொல்லுங்க. அது போல நீங்களும் நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் கொஞ்ச நாளைக்கு தான் இந்த சங்கடம் எல்லாம், பிறகு பாருங்க சொர்கமாக பிறக்க போகும் புதிய இந்தியாவை............

Tuesday, January 10, 2017

மோடியின் அல்வா படலம் ஆரம்பம் - அம்பாணியில் இருந்து துவங்குகிறார்

பணமில்லா பரிவத்தனை என்றதும், தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை அண்ணாச்சி கடைபோல் வைத்து இருப்பவருக்கு ஒரு கண்ணாவது போகனும் என்ற பொறாமையை சாதாரண மக்களின் மனதில் தூவி. தாளம் போடும் விதம் எல்லாம் ஆட வைத்தார் மோடி.

இந்த அழகில் எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களின் மானம் கப்பல் ஏறியது தான் மிச்சம்.

50 நாளுக்கு பிறகு சொர்க பூமியாக இந்தியா மாறும் என்று அன்று ஊட்டிய போதையில் நாட்டுக்காக நின்றால் என்ன என்று பொது மக்களையே கேட்க்க வைத்தார் என்றால் அவர் ஏற்றிய அந்த பொறாமை தீ எந்த அளவிற்கு மக்களின் மனதில் பற்றிக்கொண்டு எரிகின்றது என்று அவதானிக்க முடிகின்றது.

50 நாளின் முடிவில் பணமில்லா பரிவர்த்தனை என்றதும் மீண்டும் மக்கள் அப்பாடி இனிமே அண்ணாச்சி தனது வரவு செலவுகளை எல்லாம் அரசுக்கு கணக்கு காட்டியாகனும் என்று தங்களுக்குள் இரகசியாமக பாசகவுடன் இணைத்து சிரித்துக்கொண்டார்கள்.

ஒருவரும் எதிர்பார்க்கா வண்ணம் பெட்ரோல் வங்கிகளில் பணமில்லா பரிவர்த்தனைகள் செய்தால் எங்களுக்கு 1.15% விகிதம் சேவை வரியை வசூலிக்க போவதாக வங்கிகள் தெரிவித்தபடியால் நாங்கள் பணமில்லா பரிவர்த்தனையை நிறுத்திக்கொள்கின்றோம் என்று அறிவித்தார்கள்.

உடனே தடாலடியாக மைய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்ற உத்திரவாதத்துடன் பணமில்லா பரிவர்த்தனை தொடரும் என்று சுமூகமாக முடித்து வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தாமல் பணமில்லா பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கமாக 0.75% தள்ளுபடியும், பணமில்லா பரிவத்தையால் ஏற்படும் கூடுதல் பண சுமையை யார் ஏற்பது என்று ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன நடக்கும் பணமில்லா பரிவர்த்தனை நாட்டுக்கா செய்யும் பெட்ரோல் நிறுவனத்தின் சுமையை குறைப்பதற்காக சும்மனாச்சும் கொஞ்சூண்டு 2762 கோடி ரூபாயை மட்டும் பெட்ரோல் கம்பெனிக்கு நட்ட ஈடாக ஆண்டு தோரும் அரசு வழங்கும் என்று பட்சட்டில் தெரிவிப்பார்கள்.

மக்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையான 0.75% தள்ளுபடி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பட்சட்டு படித்து முடித்த நிமிடத்தில் இருந்து நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என்று மோடி அடவுகட்டி மறுபடியும் கூத்தாடுவார்.

பிறகு என்ன பாசகவினர் வீதிக்கு வீதி தொகாவுக்கு தொகா எல்லையில இராணுவவீரன் எந்த கேள்வியும் கேட்க்காம குளிரிலும் மழையிலும் நிக்கல என்று சொல்லி பாரத மாதாகி சேன்னு சொல்லி மெய் சிலிர்ப்பார்கள். அந்த நடிகர்களின் (இங்கே S.V.சேகரின் நினைவு உங்களுக்கு வரவே கூடாது) பேச்சை கேட்கும் பொறாமை போதை ஏறியவர்கள் ஆமாம் எங்களுக்கு மாத சம்பளத்தில் இன்னமும் இவ்வளவு பாக்கி இருக்கிறது அதையும் பிடிங்கி அதாணியும் அம்பாணிக்கும் கொடுங்கள் என்று சொல்லி மறுபடியும் பழக்க தோசத்தில் வங்கி வாசலில் சென்று வரிசையில் நிற்பார்கள்.

அரசாங்க குறிப்பேட்டில் சொல்வதை வைத்து சொன்னால் வெறும் 4 கோடி மக்கள் கட்டும் வருமான வரியையும் மிச்சம் இருக்கும் மக்கள் கட்டும் விற்பனை வரியையும் எடுத்து அம்பாணிக்கும் அதாணிக்கும் ஒரே ஒரு துறையில் கூடுதலாக 2762 கோடி ரூபாய்க்கள் கொடுக்க முடியும் என்றால், இன்னமும் மிச்சம் இருக்கும் வர்த்தகங்களை இதே கணக்கு காட்டி எத்தனை இலட்சம் கோடிகளை மோடி அள்ளிவிடப்போகிறார் என்று சிதம்பரம் போன்ற ஆட்கள் தெளிவு படுத்தினால் எளிமையாக இருக்கும்.

விளக்குவார்களா பொருத்து இருந்து பார்ப்போம்.

பின் குறிப்பு:
தினசரி இந்தியாவின் கச்சா எண்ணை உபயோகம் 3,660,000 பேரல்கள், ஒரு பேரலில் கிட்டத்தட்ட 117 லிட்டர் பெட்ரோலும் டீசலும் கிடைக்கும். ஒரு லிட்டர் பெட்ரோல் டீசலின் சராசரி விலை 58 ரூபாய் என்ற தோராய கணக்கின் படி 1.15% அதிக சேவை வரி என்று கணக்கிட்டால் இந்த ஆண்டிற்கு 2762 கோடி கிடைக்கும்.

Thursday, January 5, 2017

நேற்று ஈழ மக்கள் இன்று தமிழ் மக்கள் நாளை இந்தியாவின் அனைத்து நடுத்தர மக்களும்

பாசக வெற்றி பெற்றதும் இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் சொன்னோம், ஆனால் ஏதோ காழ்ப்பில் சொல்கின்றோம் என்று எங்களுக்கு எதிராக அடவு கட்டி ஆடினார்கள் மோடியின் பால் பற்றுக்கொண்ட பாசக அல்லாதவர்கள்.

ஈழத்தில் அவர்களின் சொந்த உழைப்பில் பெற்ற செல்வங்களையும் உடைமைகளையும் மதம், மொழி இனம் என்ற பெயரால் அரசு பிடுங்க துவங்கியதில் இருந்து, எதிர்த்து கேட்பவர்களும் போராட்டம் செய்பவர்களையும் வீடு திரும்பாமல் அரச பயங்கரவாதம் நிகழ்த்தியது 30 ஆண்டுகளாக. மிச்சம் சொச்சம் இருப்பவர்களும் வதை முகாம்களில் இருக்கிறார்களா அல்லது என்ன ஆனார்கள் என்றும் கூட தெரியாத அறியமுடியாத அளவிற்க்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் இலங்கையின் இன வெறி பிடித்த அரசு.

அதே பாணியில் இன்று தமிழகத்தில் உங்களது சொந்த சம்பாத்தியத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி வங்கியில் வைத்துக்கொண்டு அப்புரம் பிறகு அப்படி இப்படி என்று போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு.

ஈழம் போல் அது எப்படி எங்கள் சொந்த பணத்தை நீங்கள் பிடிங்கி வைத்துக்கொள்வது என்று போராட சென்ற மக்களை இலங்கை அரசு வதம் செய்ததை போல் தமிழகத்தில் வதம் செய்துள்ளார்கள் காவலர்கள்.

அதுவும் யார் உங்கள் தலைவன் என்று தேடி பிடித்து அடித்து நொருக்கி இனி ஒருவன் மோடி அரசை விமர்சித்து போராட்டம் செய்வான் என்று பார்த்திருக்கிறார்கள்.

வெளியோட்டமாக பார்த்தால் நாட்டுக்காக எடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து ஏன் போராட்டம் செய்கிறார்கள் என்று மோடி மயக்கத்தில் இருக்கும் பாசக அல்லாதவர்கள் கேட்க்கக்கூடும் ( நாங்கள் பாசகவினரிடம் இந்த ஞாய தர்மத்தை எல்லாம் எதிர்பார்ப்பது இல்லை).

அன்று வெள்ளையன் அவன் வசதிக்கு கொண்டு வந்த சட்டங்கள் எல்லாம் எங்களுக்கு எதிராகவும் உரிமையை பரிப்பதாகவும் இருக்கிறது என்று நாடே போராட்டம் செய்தது. அந்த சுதந்திர போராட்டம் ஞாயம் என்றால் இந்த போராட்டங்களும் ஞாயமே.

வெள்ளையன் சட்டம் கொண்டு வந்தால் அது ஏகாதிபத்தியம் இன்றைக்கு மோடி அரசு கொண்டு வந்தால் நாட்டுப்பற்று என்னயா உங்களது வாதம்.

தமிழக அரசு ஒரு பொம்மை அரசு என்று அனைவருக்கும் தெரியும், சுயமாக முடிவெடுக்கவோ அல்லது எது சரி எது தவறு என்று நடவடிக்கை எடுக்கவோ எந்த வித உரிமையும் தைரியமும் இல்லாத பொம்மை அரசு தமிழக அரசு.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மைய அரசு அதிகாரிகளின் துணைக்கொண்டு அசுர தாக்கு தாக்கி இருக்கிறார்கள் போராட்டகாரர்களை.

இனிமேல் இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் தான் போலும்.

மெல்ல மெல்ல நடுத்தர மற்றும் ஏழை எளியர்களை மேலும் மோசமான பொருளாதாரத்திற்கு தள்ளி நடுத்தெருவில் நிற்கவைக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்தால் 15 இலட்ச ரூவாய் பணமும் வீட்டில் ஒருவருக்கு வேலையும் என்று சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி ஓட்டளித்தது மட்டும் நில்லாது தினம் தினம் வக்காளத்து வாங்கிய நல்லவர்களே அனுபவிங்க மக்கா அனுபவிங்க.........

பின் குறிப்பு: இந்த போராட்டம் குறித்து தமிழிசையோ இல்லை எச்சி இராசாவோ எதுவும் பேச மாட்டார்கள் ஏன் என்று உங்களுக்கே தெரியும். வாழ்க "சாதார்ண் சன் துக்க யோச்சனா ஆயோக்"

மெட்ராசு கபே (Madras Cafe ) அடுத்து பூனா கபேன்னும் படம் இப்படி எடுப்பார் சாம் ஆபிரகாம் -- பாவம் மோடி 

Wednesday, January 4, 2017

மோடிக்கு ஆதரவாக புளுகும் ஆனந்த விகடன்

இந்த வார விகடனில் சோ கார்த்திகேயன் என்ற பெயரில் ஒரு புளுகு வந்துள்ளது.

"
விரைவில் வரலாம்! 
அமெரிக்காவில் அனைவரிடமும் 10 டாலர் (இந்திய மதிப்பில் 670 ரூபாய்) மட்டுமே கையில் இருக்கும். மற்றபடி அனைவரிடமும் 2 அல்லது 3 கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பர். அமெரிக்காவில் கையில் இருந்து காசு எடுப்பதே தேவையில்லை. பெரும்பாலும் அனைத்துப் பரிவர்த்தனையும் கார்டு மூலமாகத்தான் நடைபெறும். இப்பொழுது இதுவரை இருந்த கறுப்புப் பணத்தை ஒரு வழியாகக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், மீண்டும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பணமில்லா பரிவர்த்தனை மிகப் பெரிய அளவில் உதவும். இதற்காக ரூ.10,000க்கு மேல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் பணத்துக்குப் பதிலாக கார்டாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை விரைவில் வரலாம். அதை நோக்கியே மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டே உள்ளன. ஒரு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த பிறகு கூடிய விரைவிலோ அல்லது ஒரு சில ஆண்டுகளில் இந்த நடைமுறையும் நிச்சயம் வரலாம்" என்றார்.

மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினையடுத்து தினம் தினம் ஏதாவது ஒரு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இவையனைத்தும் பணமில்லா பரிவர்த்தனையின் நோக்கிய பயணமே. அரசின் அறிவிப்புக்கு முன்னர்  பணமில்லா பரிவர்த்தனைக்கு கொஞ்சம், கொஞ்சமாக நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வதே நல்லது."

அமெரிக்காவின் சில்லரை வணிகத்தில் பெரும் பங்கு வகிக்கும்  வால்மார்ட் அனைவருக்கும் தெரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சில்லரை மற்றும் மொத்த வியபாரமாக இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் வர்த்தம்புரிந்து வருகின்றது.

ஒவ்வொரு சிறு ஊரிலும் 2 அல்லது 3 கடைகள் இருக்கும். ஒவ்வொரு பெரு நகரங்களுல் 10 முதல் 20 கடைகள் வரையிலும் இருக்கும்.

மிதமான கடைகளில் கூட ஒரு நாளைக்கு சுமாராக 10,000 டாலர்கள் வரை வியாபாரம் நடக்கும். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 20 முதல் 25 மக்கள் பொருட்களை விற்றுக்கொடுப்பார்கள்.

ஒவ்வொரு கவுண்டரிலும் துவக்கமாக 200 டாலர் வரை சில்லரை வைத்து இருப்பார்கள். ஒவ்வொரு கவுண்டரிலும் அதிகபட்சம் 2 மணி நேரம் தான் ஒரே ஆள் நின்று வியபாரம் செய்ய முடியும். அந்த இரண்டு மணி நேரத்தில் குறைந்தது ஒரு முறையாவது சில்லரை கொடுக்க பணம் இல்லை என்று கேட்டு பெற வேண்டி இருக்கும். மிகவும் கூட்டமாக இருக்கும் மாத 15 மற்றும் 30 தேதிகளுல் 2 மணி நேரத்தில் 2 அல்லது 3 முறை கூட அதிக சில்லரை தேவை இருக்கும்.

வால்மார்ட்டில் குறைந்தது $60 முதல் $400 வரை ஒருவர் வாங்கக்கூடும். அப்படி வாங்குபவர்களில் 60% முதல் 75% சதவிகிதம் பணமாகவும் 25% விகிதம் கடனட்டை அல்லது வேறு அட்டைகளின் மூலமும் வாங்குகிறார்கள்.

இது பழங்காலத்தில் நடந்தது அல்ல, தற்பொழுது நடந்துக்கொண்டு இருக்கும் நடைமுறை. அது மட்டும் அல்லாது. சிறு வணிகர்களான இந்தியர்கள் மற்றும் இதர நாட்டின் குறுவியபாரிகள். பணமாக கொடுத்தால் 5% முதல் 10% வரை தள்ளுபடி என்றும் $10க்கு கீழ் கடனட்டையில் பரிவர்த்தனைகள் கிடையாது என்றும் கைவிரிப்பார்கள்.

அமெரிக்காவில் இப்படி என்றால் ஐரோப்பாவின் நிலையோ இன்னும் வினோதம்.

ஐரோப்பாவில் யூரோ இருக்க அமெரிக்க டாலர் இருக்கிறதா என்று கேட்ப்பார்கள் அதுவும் சுற்றுலா இடங்களில் நம்மிடம் வந்து வியபாரம் பேசும் சிறு வணிகர்கள் அமெரிக்க டாலரிலே விலை பேசி விற்பார்கள்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலும் வார சம்பளம் பெருபவர்கள். அவரகளது வார சம்பளம் $400 முதல் $500 வரை இருக்கலாம். இந்த $1000 முதல் $1500 வரை வாங்குபவர்களின் வாழ்க்கை வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டு வாடகை மற்றும் உணவுக்கு உடைக்கு என்று போக மிக சொற்பமான பணமே மிஞ்சும்.

இவர்களது சம்பளம் மற்றும் செலவும் கணக்கில் எடுத்து பார்த்து இவர்களுக்கு யாரும் கடனட்டை கொடுக்க முன்வருவது இல்லை. காரணம் ஏறாளமான கடனை முதல் தவனையிலே வாங்கிவிட்டு கட்டமுடியவில்லை என்று மஞ்சள் கடுதாசி கொடுப்பர்கள் என்று கடனட்டை நிறுவனம் அஞ்சும்.

சில தேவைகளுக்கு அட்டை இல்லை என்றால் வேலை ஆகாது என்று வருங்கால் இவர்களுக்கு என்று முன்கட்டிய கடனட்டைகள் கிடைக்கும். அதில் நாம் பணம் போட்டுவிட்டு பிறகு தான் பயன் படுத்த முடியும். இந்த முறை அட்டையை பயன் படுத்துவோர் பெரும்பாலும் முன் கட்டணம் செலுத்தும் போது பாதி நேரம் அவகளின் வங்கி கணக்கில் பணம் இருக்காது, முறைத்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் செல்வார்கள் அந்த இயலாதவர்கள்.

 நிலைமை இப்படி இருக்க, விகடனில் கார்த்திகேயனோ அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக குடியிருந்து மக்களின் பணபரிவர்த்தனைகளை நேரில் பார்த்தவர் போல் எழுதுகிறார் உண்மைக்கு புறம்பாக.

அமெரிக்காவின் வங்கிகளிலும் வாசலிலும் பணத்திற்காக தினமும் ஒரு பெருங்கூட்டம் வந்து போவதையும் இவர் அறியார்.

மோடியின் போதை இவர்க்கு தலை கால் புரியாத அளவிற்கு ஏறியுள்ளது இந்த போதை இறங்கும் வரை என்ன சொன்னாலும் குடிகாரன் கணக்காக உளருவார். என்ன அமெரிக்காவுல மைகேல் சாக்சன் கூப்டாக, ஜப்பான்ல சாக்கிசன் கூப்டாக என்று எத்தனை நாளை புளுக போகிறீர்கள் கார்த்திகேயன் வையராக்களே.............புளுகு மூட்டைகளா.......